என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சூது கவ்வும் -2’.
    • இப்படத்தில் நடிகர் சிவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    கடந்த 2013-ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் 'சூது கவ்வும்'. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக்செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    சூது கவ்வும்

    இதனைத் தொடர்ந்து 'சூது கவ்வும் 2' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார்.


    சூது கவ்வும் -2

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் 'சூது கவ்வும் -2 நாடும் நாட்டு மக்களும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


    • நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘தங்கலான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    தங்கலான்

    இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்ததாகவும் 25 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் சமீபத்தில் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார்.


    தங்கலான்

    இதையடுத்து இப்படத்தின் புதிய அப்டேட் விக்ரம் பிறந்த நாளான இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.




    • சூர்யா தற்போது நடிக்கும் திரைப்படம் ‘கங்குவா’.
    • இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடிக்கும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    கங்குவா

    தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து நேற்று 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.


    கங்குவா போஸ்டர்

    இந்நிலையில், ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த மோஷன் போஸ்டர் ஒரே நாளில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 'கங்குவா' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


    • ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ருத்ரன்.
    • இப்படம் முதல் நாளில் ரூ.3.5 கோடி வசூலை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

    ராகவா லாரன்ஸ் தற்போது நடித்துள்ள படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    ருத்ரன்

    இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது. அதன்படி, முதல் நாள் வசூல் உலகளவில் சுமார் ரூ.3.5 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், வரும் நாட்களில் நல்ல வசூலை பெறும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், ருத்ரன் திரைப்படத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் 'ருத்ரன் திரைப்படம் குறித்து நல்ல விமர்சனங்களை கேட்டு வருகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.


    • நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘தசரா’.
    • இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அண்மையில் இவர் நடித்த 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும் நடிப்பும் பேசப்பட்டது. தற்போது  தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.


    கீர்த்தி சுரேஷ் -சமந்தா பதிவு

    இவர் நடித்த தசரா திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது சமந்தா குறித்த கேள்விக்கு, "நான் வியந்து பார்க்கும் ஒரு நபர் சமந்தா. நான் பார்த்ததில் மிகவும் வலிமையான மனம் கொண்டவர். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அவரை யாராலும் தடுக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த பதிவை பகிர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு நன்றி தெரிவித்துள்ளார் சமந்தா.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
    • இப்படத்தின் ஆந்தம் பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று வெளியிட்டார்.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பொன்னியின் செல்வன் -2 ஆந்தம் வெளியீட்டு விழா

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படமாகும். இன்று முதல் இந்தப் படத்தின் புரொமோஷன் பணி தொடங்கியுள்ளது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரொமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.

    இதைத்தொடர்ந்து, இப்படத்தின் ஆந்தம் பாடலை நேற்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியதாவது, "நான் இதுவரை கல்லூரிக்குச் சென்றதேயில்லை. இப்போது கல்லூரிக்கு வந்திருக்கிறேன். நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம். எதிர்கால இந்தியாவாக இருக்கப்போகும் இங்குள்ள கூட்டத்தைப் பார்த்து பயப்படுகிறேன்.


    பொன்னியின் செல்வன் -2 ஆந்தம் வெளியீட்டு விழா

    பொன்னியின் செல்வன் 2' படத்தின் பிண்ணனி இசையை 3, 4 வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டோம். எனக்கு இசையில் கொஞ்சம் மாற்றம் தேவைப்படும். சிலது மணிரத்னத்திற்குப் பிடிக்காது. ஆகவே கலந்து பேசி பின்னணி இசையை உருவாக்கியிருக்கிறோம். பின்னணி இசைக்காக லண்டன், துபாய், பாம்பே, சென்னை என பல இடங்களில் வேலைபார்த்திருக்கிறோம். இந்த ஆந்தம் உருவாக்கியதற்கு எந்த காரணமும் இல்லை மணிரத்னம் இதை இயக்கும்படியாக கூறினார். அதனால் இந்த ஆந்தமை உருவாக்கினோம்" என்று கூறினார்.

    • இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ருத்ரன்’.
    • இப்படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ராகவா லாரன்ஸ் தற்போது நடித்துள்ள படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    ருத்ரன்

    இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில், 'ருத்ரன்' படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் சுமார் ரூ.3.5 கோடியை கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும், வரும் நாட்களில் நல்ல வசூலை பெறும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • ’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் ஆந்தம் பாடல் நேற்று வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பொன்னியின் செல்வன் -2 படக்குழு

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படமாகும். இன்று முதல் இந்தப் படத்தின் புரொமோஷன் தொடங்குகிறது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரொமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.


    பொன்னியின் செல்வன் -2 படக்குழு

    இதைத்தொடர்ந்து, இப்படத்தின் ஆந்தம் பாடலை நேற்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். இந்நிலையில், புரொமோஷன் நிகழ்ச்சிக்காக 'பொன்னியின் செல்வன் -2' படக்குழு தனி விமானத்தில் கோயம்புத்தூர் சென்றுள்ளனர். இதனை நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், 'கோயம்புத்தூர்!! இதோ வர்ரோங்கண்ணா!!' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


    • தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் போசானி கிருஷ்ணா முரளி.
    • இவர் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் போசானி கிருஷ்ணா முரளி தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர். இவர் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ஆந்திர மாநில திரைப்பட மேம்பாட்டு கழக தலைவராக அரசு இவரை நியமித்தது.


    போசானி கிருஷ்ணா முரளி

    இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து புனேயில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு ஹைதராபாத் திரும்பினார். அப்போது போசானி கிருஷ்ணா முரளிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

    இதன் பின்னர், குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். போசானி கிருஷ்ணா முரளி ஏற்கனவே இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். தற்போது மூன்றாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சில விருதுகளையும் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பொன்னியின் செல்வன் -2

    இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படமாகும். இன்று முதல் இந்தப் படத்தின் புரொமோஷன் தொடங்குகிறது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரொமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.


    பொன்னியின் செல்வன் -2

    இதைத்தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன் -2' படத்திற்காக பிரத்யேகமாக ஆந்தம் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. சிவா ஆனந்த் எழுதியுள்ள இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது  ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.



    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் -2'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    ஷங்கர்

    இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தைவான் நாட்டில் படப்பிடிப்பை முடித்த ஷங்கர் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக தென் அமெரிக்க சென்றார். அங்கு தற்போது படப்பிடிப்பு நிறைவடையவுள்ளதாக  அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.



    • இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 42.
    • இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.


    சூர்யா -42

    இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    கங்குவா போஸ்டர்

    இதையடுத்து இப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி இன்று காலை 9.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்திற்கு 'கங்குவா' என படக்குழு தலைப்பு வைத்து இது தொடர்பான டீசரையும் வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டால் உற்சாகமடைந்த ரசிகர்கள் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

    மேலும், 'கங்குவா' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    ×