என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் ஜெனித்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சைத்ரா'.
- இப்படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
பொட்டு, கா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஜெனித்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சைத்ரா'. மார்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரபாகரன் மெய்யப்பன் இசையமைக்கும் இப்படத்திற்கு சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 24 மணிநேரத்தில் நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

'சைத்ரா' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பூஜா ஹெக்டே, சல்மான்கானுடன் 'கிசி கா பாய் கிசி கா ஜான்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
- இந்த படத்தில் நடிக்கும் போதே சல்மான் கானுடன் பூஜா டேட்டிங் செய்வதாக பலவாறு வதந்திகள் பரவி வந்தன.
நடிகை பூஜா ஹெக்டே, சல்மான்கானுடன் 'கிசி கா பாய் கிசி கா ஜான்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் நடிக்கும் போதே சல்மான் கானுடன் பூஜா டேட்டிங் செய்வதாக பலவாறு வதந்திகள் பரவி வந்தன. இதற்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்த பூஜா நேற்று இது குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, நான் ரன்வீர் சிங்குடன் நடித்த சர்க்கஸ் திரைப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தேன். ஆனால் அது தோல்வியில் முடிந்ததை நினைத்து நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன்.

சல்மான் கான் -பூஜா ஹெக்டே
தற்போது சல்மான் கானுடன் நடித்த படம் இப்போதே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கூடவே எங்கள் இருவரை பற்றியும் கிசுகிசுக்களும் சேர்ந்து பரவி வருகிறது. ஆனால் நான் இப்போதும் தனியாகத்தான் இருக்கிறேன். தனியாக இருக்கத்தான் விரும்புகிறேன். சல்மான் கானுடன் என்னை டேட்டிங் செய்வதாக வந்த செய்திகளை நானும் படித்தேன். ஆனால் அது உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்.
- பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் குஷ்பு.
- இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
தமிழ் திரையுலகிற்கு 1988-ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த குஷ்பு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

டோனி - குஷ்பு மாமியார்
இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியல் வாதியாகவும் வலம் வருகிறார். சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை குஷ்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியை சந்துள்ளார்.

டோனி - குஷ்பு மாமியார்
மேலும், தனது மாமியார் டோனிக்கு முத்தமிட்ட புகைப்படத்தையும் பகிர்ந்து, "ஹீரோக்கள் உருவாக்கப்படவில்லை, அவர்கள் பிறக்கிறார்கள். அதை டோனி நிரூபித்துள்ளார். எங்கள் சிஎஸ்கே தலை டோனியை பாராட்ட வார்த்தைகள் இன்றி இருக்கிறேன். அவர் என் மாமியாரை சந்தித்தார். அவருக்கு 88 வயது. நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் அவர்களுடைய வாழ்க்கையில் சேர்த்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘விடுதலை’.
- இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'விடுதலை' திரைப்படத்தை பார்த்த இயக்குனர் சீனுராமசாமி படக்குழுவை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஒரு திரைப்படம் கவனம் பெறுவதில் வணிகம் தாண்டி கலாபூர்வமான ஒரு நன்மை இருக்கிறது. அந்த நன்மை என்பதுதான் இங்கு சிறப்பானது. அது நண்பர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் நிகழ்ந்திருக்கிறது. அது தம்பி சூரியை சிறந்த நடிகனாக, நாயகனாக தந்திருக்கிறது. வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு திரைப்படம் கவனம் பெறுவதில்
— Seenu Ramasamy (@seenuramasamy) April 15, 2023
வணிகம் தாண்டி கலாபூர்வமான
ஒரு நன்மை இருக்கிறது.
அந்த நன்மை என்பதுதான் இங்கு சிறப்பானது.
அது நண்பர்
வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் நிகழ்ந்திருக்கிறது
அது தம்பி@sooriofficial -யை
சிறந்த நடிகனாக, நாயகனாக தந்திருக்கிறது.
வாழ்த்துகள்.
? ❤️ pic.twitter.com/SYImfcYsDj
- காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அவள் பெயர் ரஜ்னி’.
- இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அவள் பெயர் ரஜ்னி'. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

அவள் பெயர் ரஜ்னி
நவரசா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 4 மியூசிக்ஸ் இசையமைக்கின்றனர். ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இன்வெஸ்டிகேசன் திரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

அவள் பெயர் ரஜ்னி
இந்நிலையில், 'அவள் பெயர் ரஜ்னி' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஒரு பரபரப்பான விசாரணை, அதன் பின்னால் அவிழும் பல முடிச்சுகள் என எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதத்தில் உருவாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருபவர் சோனுசூட்.
- இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.
'அருந்ததி' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் சோனுசூட் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். இதனால் நூற்றுக்கணக்கானோர் உதவிகள் கேட்டு அவரை தேடி செல்கின்றனர். சமூக வலைதளங்கள் மூலமும் ஆயிரக்கணக்கான மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அரிசியில் ரசிகர்கள் வரைந்த சோனுசூட் உருவம்
அவர்களுக்கு உதவி செய்வதற்காக குழு ஒன்றையும் அமைத்துள்ளார். அவரை போற்றும் விதமாக மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் அவரது ரசிகர்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் 2,500 கிலோ அரிசியை கொண்டு அவரது உருவத்தை வரைந்துள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வரைந்த அவரது உருவப்படத்தை சோனுசூட் தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், '2,500 கிலோ... 1 ஏக்கர் நிலம், எல்லையில்லா அன்பு' என்று பதிவிட்டு இருக்கிறார்.
- தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்கரா.
- இவர் தற்போது சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்தை இயக்கி வருகிறார்.
2010-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதன்பின்னர் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தை இயக்கியதன் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றார்.

மாதவனுக்கு விருந்தளித்த சுதா கொங்கரா
தற்போது இப்படத்தின் இந்தி ரீமேக் பணிகள் நடைபெற்று வருகிறது. இவருக்கு சமீபத்தில் கையில் காயம் ஏற்பட்டு ஒய்வெடுத்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் மாதவனுக்கு ஒன்பது வகையான உணவுடன் விருந்தளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து தெரிவித்துள்ளார். இதற்கு சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படத்தில் மாதவன் நடிக்கவுள்ளாரா..? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Two decades of friendship with vankai annam, vadiyalu, podi, sambhar, Vatha kozhambu, thayir sadham , pendalam pachchadi and best dessert ever Ratnagiri Alfonso mangoes courtesy Maddy! @ActorMadhavan
— Sudha Kongara (@Sudha_Kongara) April 14, 2023
#foodlove #comfortfood#foodies pic.twitter.com/hNwhsdup4y
- பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு.
- இவர் சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்', 'மிஸ்டர் லோக்கல்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு. இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஐ போன் ஒன்று வாங்கியுள்ளார். கடந்த 9-ஆம் தேதி இரவு சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஷாலு ஷம்மு நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்து சூளைமேட்டில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். அடுத்த நாள் எழுந்து பார்க்கும் போது செல்போன் காணாமல் போனதை அறிந்த ஷாலு ஷம்மு நட்சத்திர விடுதிக்கு சென்று தேடியும் கிடைக்காததால் இது தொடர்பாக பட்டினபாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்தார்.

மேலும், ஐபோன் காணாமல் போன விவகாரத்தில் தன்னுடன் இருந்த நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'சூர்யா -42'.
- இப்படத்தின் டைட்டில் நாளை வெளியாகவுள்ளது.
'சிறுத்தை', 'வீரம்', 'விஸ்வாசம்', 'அண்ணாத்த' உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

சூர்யா 42
இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூர்யா 42
இதையடுத்து இப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி நாளை காலை 9.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு மாஸான வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் விவேக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘13’.
- இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்த செல்ஃபி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

13
இதைத்தொடர்ந்து தற்போது இவர்கள் இவருவர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் '13'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்கியுள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள '13' திரைப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

13 போஸ்டர்
இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, '13' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனை நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
— G.V.Prakash Kumar (@gvprakash) April 14, 2023
- ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் ‘தீராக்காதல்’.
- இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.
இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் 'தீராக் காதல்'.இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

தீராக்காதல் போஸ்டர்
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 'தீராக்காதல்' படக்குழு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரில் படம் விரைவில் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
May your life be filled with everlasting love ??✨ that you deserve! Team #TheeraKaadhal wishes everyone a Happy Tamil New Year! ?#தீராக்காதல் ???
— Lyca Productions (@LycaProductions) April 14, 2023
? @rohinv_v ? @Actor_Jai @aishu_dil @SshivadaOffcl @VriddhiVishal ? @Music_Siddhu ? @NRAVIVARMAN ✂️?️ @editor_prasanna ?️… pic.twitter.com/ZjySZpXKYi
- இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் 'கே.ஜி.எப் -2'
- இப்படத்தின் அடுத்த பாகத்திற்கான பணியில் இயக்குனர் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'கேஜிஎப்-2'. இதில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் பல முன்னணி ரசிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

கே.ஜி.எப்
இந்நிலையில், 'கேஜிஎப்-2' திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவுற்றுள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. அந்த பதிவில், 'கேஜிஎப் 2 மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் நம்மை கலைத்துவமிக்க பயணத்தில் அழைத்து சென்றது. ரெக்கார்டுகளை தகர்த்தது. பார்வையாளர்களின் இதயங்களை வென்றது' என குறிப்பிட்டுள்ளது.

கே.ஜி.எப்
மேலும், இதோடு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவின் 36-வது நொடியில் '1978-81 வரை ராக்கி எங்கே இருந்தார்?' என அடுத்த பாகத்திற்கு ஹிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
இயக்குனர் பிரசாந்த் நீல் 'கேஜிஎப் -3' திரைக்கதை பணியில் ஈடுப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






