ஒரு ஏக்கர் நிலத்தில் செய்யப்பட்ட சாதனை.. மிரள வைத்த சோனுசூட் ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருபவர் சோனுசூட். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.
சோனுசூட்
சோனுசூட்
Published on

'அருந்ததி' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் சோனுசூட் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். அவர் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். இதனால் நூற்றுக்கணக்கானோர் உதவிகள் கேட்டு அவரை தேடி செல்கின்றனர். சமூக வலைதளங்கள் மூலமும் ஆயிரக்கணக்கான மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அரிசியில் ரசிகர்கள் வரைந்த சோனுசூட் உருவம்

அவர்களுக்கு உதவி செய்வதற்காக குழு ஒன்றையும் அமைத்துள்ளார். அவரை போற்றும் விதமாக மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் அவரது ரசிகர்கள் ஒரு ஏக்கர் நிலத்தில் 2,500 கிலோ அரிசியை கொண்டு அவரது உருவத்தை வரைந்துள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வரைந்த அவரது உருவப்படத்தை சோனுசூட் தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், '2,500 கிலோ... 1 ஏக்கர் நிலம், எல்லையில்லா அன்பு' என்று பதிவிட்டு இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com