search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜய் பட நடிகை இலியானா கர்ப்பம்? குழப்பத்தில் ரசிகர்கள்
    X

    இலியானா

    விஜய் பட நடிகை இலியானா கர்ப்பம்? குழப்பத்தில் ரசிகர்கள்

    • விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் இலியானா.
    • இலியானா தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

    தமிழில் நண்பன் படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் இலியானா டிகுரூஸ். இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். நண்பன் படத்தில் இருக்கானா இடுப்பிருக்கானா என்ற பாடலுக்கு இடுப்பை ஆட்டி ரசிகர்களை கவர்ந்த இலியானா, அதன்பின்னர் உடல் எடை கூடி இருந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.



    சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் இலியானா, தற்போது பதிவிட்டிருக்கும் புகைப்படம் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், விரைவில், என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என பதிவிட்டு, சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் அடங்கிய வாசகம் இடம்பெற்ற குழந்தையின் உடையையும் வெளியிட்டுள்ளார்.


    இலியானா அறிவிப்பு


    அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், தனது காதலர் யாரென்ற விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை என்பதால் பலரும் குழப்பத்தில் உள்ளனர். இலியானாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×