என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
    • இப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.


    இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் காலை 9 மணிக்கு வெளியானது. இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் காட்சியை இப்படத்தில் நடித்த நட்சத்திரங்களான கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம், ஜெயராம் ஆகியோர் வெவ்வேறு திரையரங்குகளில் பார்த்து வருகின்றனர்


    அதன்படி, நடிகர்கள் ஜெயம் ரவி, வெற்றி திரையரங்கிலும் கார்த்தி, காசி திரையரங்கிலும் ஜெயராம் வடபழநி திரையரங்கிலும் ரசிகர்களுடன் 'பொன்னியின் செல்வன்-2' திரைப்படத்தை பார்த்துள்ளனர். அப்போது ரசிகர்கள் இவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு.
    • இவர் தற்போது கஸ்டடி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.


    கஸ்டடி

    'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    வெங்கட் பிரபு -யுவன் ஷங்கர் ராஜா

    இந்நிலையில், 'கஸ்டடி' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, துபாயில் இப்படத்தின் பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார். இது குறித்து வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில், "திரைத்துறையில் 16 வருடங்கள், தற்போது துபாயில் எனது ஹீரோ யுவன் ஷங்கர் ராஜாவுடன் 'கஸ்டடி' பின்னணி இசை பணியில் ஈடுப்பட்டுள்ளேன். மன்னிக்கவும் பிரேம் ஜி. அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.


    • கர்நாடக மாநிலத்தின் சிவமோகா நகரில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.
    • இதில், பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்திவிட்டு, கர்நாடக மாநில கீதத்தை பாட சொன்னார்.

    கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கர்நாடக மாநிலத்தின் சிவமோகா நகரில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உள்பட பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.

    தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்கும் நோக்கில் இந்த பிரசார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரசார கூட்டம் தொடங்கிய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை அடுத்து அனைவரும் எழுந்து நின்றனர். திடீரென குறுக்கிட்ட பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்திவிட்டு, கர்நாடக மாநில கீதத்தை பாட சொன்னார். தமிழர்களின் ஆதரவை பெற நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதுமட்டுமல்லாமல், தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதற்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கர்நாடகா மேடையில்

    தமிழ்த்தாய் வாழ்த்து

    பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு

    இடிவிழுந்த மண்குடமாய்

    இதயம் நொறுங்கியது

    ஒலிபரப்பாமல்

    இருந்திருக்கலாம்;

    பாதியில் நிறுத்தியது

    ஆதிமொழிக்கு அவமானம்

    கன்னடத்துக்குள்

    தமிழும் இருக்கிறது;

    திராவிடத்திற்குள்

    கன்னடமும் இருக்கிறது

    மறக்க வேண்டாம். " என்று பதிவிட்டுள்ளார்.


    • தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு தென்காசி அருகே நடைபெற்று வருகிறது.
    • எவ்வித அனுமதியும் பெறாமல் படப்பிடிப்பு நடத்தப்படுவதாக கூறி சமீபத்தில் படப்பிடிப்பை நிறுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பகுதியில் 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது குண்டு சத்தம் கேட்டதால் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய அனுமதி பெற்றார்களா என்று விசாரித்தார்.


    ஆனால் படக்குழு வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார். அதன்படி 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.


    இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' படக்குழுவினர் முறையான அனுமதி வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழை சமர்ப்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு நாளை அதே இடத்தில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.

    • விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

    திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


    சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. 'மார்க் ஆண்டனி' படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டைம் டிராவலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டீசரில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘விடுதலை’.
    • இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'விடுதலை-1'. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.


    விடுதலை போஸ்டர்

    இந்நிலையில், 'விடுதலை' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நாளை (ஏப்ரல் 28) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் ஒடிடி வெர்ஷனில் திரையரங்கில் வெளியான வெர்ஷனில் இடம்பெறாத சில பிரத்யேக காட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதனை ஓடிடி தளம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா.
    • இவர் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனாவார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் தயாரிப்பாளர்களாக மாறி தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகின்றனர். இந்த பட்டியலில் தற்போது நடிர் ஜீவாவும் இணைந்துள்ளார்.


    அதாவது, சூப்பர்குட் ஸ்டுடியோ என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பு தொழிலில் ஜீவா இறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீவா தயாரிக்கும் முதல் படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கவுள்ளதாகவும் இதில் கதாநாயகனாக ஜீவா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    மேலும், காமெடி ஜானரில் உருவாகவுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளாராம். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜேஷ் - ஜீவா கூட்டணியில் கடந்த 2009-ஆம் ஆண்டு 'சிவா மனசுல சக்தி' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    நடிகர் ஜீவாவின் தந்தை ஆர்.பி.சவுத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் அஜித் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
    • இவர் தற்போது நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார் சைக்கிள் பயணம் சென்றார்.


    அஜித்

    இதைத்தொடர்ந்து, 'துணிவு' படப்பிடிப்பிற்கு நடுவே இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது. தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்த நடிகர் அஜித் தனது இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்திற்கு பரஸ்பர மரியாதை பயணம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.


    சமையல் செய்யும் அஜித்

    இந்நிலையில், நடிகர் அஜித் நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது ரசிகர் ஒருவருடன் இவர் எடுத்த செல்பி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதைத்தொடர்ந்து தான் தங்கியிருந்த ஓட்டல் ஒன்றில் சமையல் கலைஞராக மாறி அவர் சமையல் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அஜித் ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். மேலும், இவர் அடுத்த மாதம் 6-ம் தேதி சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -2.
    • பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் -2. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில் பொன்னியின் செல்வன் -2 படம் குறித்து நடிகர் சரத்குமார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. அதில், "பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்கி, தமிழ்த்திரைத்துறை மற்றும் தமிழ் சமூகத்திற்கு உலகளாவிய பெருமை சேர்த்த இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கும், சுபாஸ்கரன் அவர்களுக்கும், சக நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், #PS1 திரைப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கி கொண்டாடிய ரசிக பெருமக்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடக சகோதர, சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவிக்கிறேன்.


    நாளை வெளிவரவிருக்கும் #PS2 திரைப்படத்தில் திரையரங்கம் அதிரும் அளவிற்கு நீங்கள் தரும் வரவேற்பும், கொண்டாட்டமும், சோழ சாம்ராஜ்யத்தின் புகழை மேலும் கண்டங்கள் தாண்டி பரப்புவதற்கான உந்துதலை தரும்படி கொண்டாடி கண்டு மகிழுங்கள். சோழ சாம்ராஜ்யத்தின் தன அதிகாரி பெரிய பழுவேட்டரையர்" என்று பதிவிட்டுள்ளார். 


    • குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் மாஸ்டர் மகேந்திரன் நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

    நாட்டாமை, கோயம்பத்தூர் மாப்பிள்ளை, காதலா காதலா, மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் மகேந்திரன். அதன்பின்னர் விழா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் கதாநாயகனாக நடித்திருந்த ரிப்பப்பரி திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

    விஜய்யின் ரசிகர்
    விஜய்யின் ரசிகர்


    இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வீடியோவில் பெட்ரோல் பங்க்கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி நபர் மகேந்திரனிடம் தான் விஜய்யின் தீவிர ரசிகர் என்றும் அவரை இதுவரை பார்த்ததில்லை என்றும் எப்படியாவது பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு பதிலளித்த மகேந்திரன், இந்த வீடியோவை பார்த்து விஜய் அண்ணா அழைத்தால் ஹேப்பி என்று தெரிவித்தார்.


    விஜய் ரசிகருடன் மாஸ்டர் மகேந்திரன்
    விஜய் ரசிகருடன் மாஸ்டர் மகேந்திரன்


    மேலும் அவருடைய செல்போன் பேக் கேசில் "அன்புக்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால் நாங்கள் கண்ட முதல் அர்த்தம் தளபதி" என்ற வாசகத்துடன் விஜய்யின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -2.
    • பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் நாளை (ஏப்ரல் 28ம் தேதி) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பொன்னியின் செல்வன்

    இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.


    பொன்னியின் செல்வன்

    இதில் நடிகர் ஜெயம்ரவி பேசியதாவது, நாளை பொன்னியின் செல்வன் -2 ரிலீஸாக போகிறது. இது அதற்கான சந்திப்பா என்று நினைக்கும் போது எனக்கு அப்படி தோன்றவில்லை. இவ்வளவு பெரிய படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்துக் கொண்டு வந்திருக்கிறோம். 150 நாட்களில் இரண்டு பாகங்களை எடுப்பது சாதாரண விஷயம் இல்லை.


    பொன்னியின் செல்வன்

    அது ஏன் சாத்தியப்பட்டது என்றால் மணி சார் என்ற ஒரு குரு. அவருக்காக நாங்கள் செய்த விஷயம் தான். கை தேர்ந்த நடிகர்களை ஒருங்கிணைத்து அவர் செய்தது பெரிய விஷயம். அதனால் தான் இந்த மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. இதை தாண்டி மக்கள் கொடுத்த வரவேற்பு அதை என்றும் மறக்க முடியாது. படத்தை தாண்டிய ஒரு உணர்வாக பொன்னியின் செல்வன் மாறியுள்ளது என்று கூறினார்.

    • நடிகை சமந்தா தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.
    • இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்து பலரும் தங்கள் கவலையைத் தெரிவித்தார்கள். தற்போது ரசிகர் ஒருவர் நடிகை சமந்தாவிற்கு கோவில் கட்டியிருக்கிறார்.


    சமந்தாவிற்கு கோவில் கட்டிய ரசிகர்

    பாபட்லா பகுதியில் வசிக்கும் சந்தீப் என்பவர் சமந்தாவின் தீவிரமான ரசிகர். அவர் சமந்தா நோய்வாய்ப்பட்டிருப்பது தெரிந்து திருப்பதி, சென்னை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குப் பாதயாத்திரை சென்று வந்தார். அப்போது சமந்தா குணமடைந்தால் கோவில் கட்டுவதாக வேண்டிக்கொண்டார்.

    இந்த வேண்டுதல் போலவே சமந்தா ஓரளவுக்கு நோயின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்திருக்கிறார். வேண்டியபடியே சந்தீப் தனது வீட்டின் ஒரு பகுதியில் சமந்தாவுக்குக் கோவில் கட்டியிருக்கிறார். சுற்றுச்சுவர் கட்டி முடித்து சமந்தாவின் சிலையையும் வடிவமைத்து விட்டார். நாளை (ஏப்ரல் 28) சமந்தாவின் பிறந்த நாளன்று கோவிலைத் திறக்க இருக்கிறார்.

    ×