என் மலர்
சினிமா செய்திகள்
- மலையாள திரையுலகின் முன்னணி காமெடி நடிகர் மாமுகோயா.
- இவர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார்.
மலையாள சினிமாவின் மூத்த நடிகரான மாமுகோயா நாடக கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். பின்னர் திரைத்துறையில் காமெடி நடிகராக பிரபலமடைந்தார். 450 படங்களுக்கு மேல் நடித்துள்ள மாமுக்கோயா இரண்டு முறை மாநில அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் கால்பந்து போட்டியின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட 76 வயதான மாமுகோயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு வாண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், இவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து நேற்று நடிகர் மாமுகோயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் அவரது சொந்த ஊரான கோழிக்கோடு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு இன்று அரக்கிணறு முஜாகித் மசூதியில் தொழுகைக்கு பிறகு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இப்படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது.
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. 'மார்க் ஆண்டனி' படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யை சந்தித்த மார்க் ஆண்டனி படக்குழு
இதை தொடர்ந்து மார்க் ஆண்டனி படத்தின் டீசரை விஜய்யிடம் காண்பிக்க படக்குழுவினர் அனுமதி கேட்டு தொடர்புக் கொண்டபோது விஜய் உடனே அழைப்பு விடுத்துள்ளார். அந்த சந்திப்பின் போது "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் டீசரை கண்டு மகிழ்ந்த விஜய் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி உள்ளார். இதற்காக நன்றி தெரிவித்த விஷாலிடம், "நண்பனுக்காக இதை செய்யமாட்டேனா" என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பின்னர் விஜய் அவர்களுக்கு மார்க் ஆண்டனி படக்குழுவினர்கள் பூங்கொத்து வழங்கினார்கள், மேலும் விஜய் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதையும் விஷால் வழங்கினார். தனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை "துப்பறிவாளன் 2" மூலம் தொடங்கியுள்ளதாக விஜய்யிடம் கூறிய விஷால், தொடர்ந்து திரைப்படங்களை இயக்க உள்ளதாகவும் தங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். அப்போது "நீ வா நண்பா நான் இருக்கிறேன் சேர்ந்து பயணிப்போம்" என்று விஜய் கூறி உற்சாகப்படுத்தியுள்ளார்.

இச்சந்திப்பின் போது "மார்க் ஆண்டனி" திரைப்படத்தின் தயாரிப்பாளர் "மினி ஸ்டூடியோஸ் " வினோத் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Happy to have met my dearest Brother & Hero @actorvijay
— Vishal (@VishalKOfficial) April 27, 2023
Thank you so much for watching my teaser….
Always proud to be your fan, GB pic.twitter.com/2jmKM4h4jz
- இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
- இப்படத்தின் மோஷன் போஸ்டரை லோகேஷ் கனகராஜ் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதிஷ் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கிறார்.

வித்தைக்காரன்
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். வித்தைக்காரன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
All the best and congrats @Venki_dir one of my associate director and I wish him great success with his debut film ?congrats @actorsathish bro and the entire team ?https://t.co/r774f9S8YV@actorsathish #SimranGupta @WCF2021 @vijaywcf @Venki_Dir @Vbrcomposer @iamyuvakarthick… pic.twitter.com/OslBUfSaBh
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 27, 2023
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் நள்ளிரவு, அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படவில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் நாளை (ஏப்ரல் 28ம் தேதி) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் -2
இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் நள்ளிரவு, அதிகாலை சிறப்பு காட்சிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நள்ளிரவு காட்சிகளிலும் அதிகாலை காட்சிகளிலும் அசம்பாவிதங்கள், பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொன்னியின் செல்வன்-2 படத்தின் இரு காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 9 மணி முதல் தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் -2 காட்சிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
- இப்படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது.
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

மார்க் ஆண்டனி
சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. 'மார்க் ஆண்டனி' படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த டீசரை நடிகர் விஜய் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விஷால் சமூக வலைத்தளத்தில் தளபதிவிஜய்ஃபார்மார்கஆண்டனி (ThalapathiVijayForMarkAntony) என்ற ஹாஷ்டாக்கை மட்டும் பதிவிட்டிருப்பதால் இந்த டீசரை விஜய் வெளியாட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பதிவுகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
— Vishal (@VishalKOfficial) April 27, 2023
- நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ‘ ருத்ரன்’ திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
- இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடாத பாட்டெல்லாம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகினார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

ருத்ரன்
இந்நிலையில் ருத்ரன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடாத பாட்டெல்லாம் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சத்திய பிரகாஷ் , நித்ய ஸ்ரீ குரலில் வெளியான இந்த பாடலை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான 'சாகுந்தலம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். ஆனால் இதுவரை ரூ.10 கோடி மட்டுமே வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சமூக வலைத்தளத்தில் சமந்தாவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சிட்டிபாபு, சாகுந்தலம் படத்தோடு சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது. அவரது நோய் எல்லாம் நாடகம். அனுதாபத்துடன் தனது படங்களுக்கு விளம்பரம் பெற முயற்சிக்கிறார். கதாநாயகி அந்தஸ்தை இழந்து விட்டார். சகுந்தலை கதாபாத்திரத்துக்கு பொருத்தமில்லாத அவரை எப்படி தேர்வு செய்தார்கள். படத்தை ஓடவைக்க சமந்தா தனது உடல்நிலையை காரணம் காட்டி மலிவான விளம்பரங்கள் செய்கிறார் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

சமந்தா - சிட்டிபாபு
இவரின் இந்த கருத்துக்கு சமந்தா பதிலடி கொடுத்திருந்தார். சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், "காது மடலில் எதற்காக ஒருவருக்கு அதிக முடி வளர்கிறது என்று கூகுளில் தேடினேன். அதற்கு அதிகமான ஹார்மோன் சுரப்பதுதான் காரணம் என்று வந்தது. இது யார் என்பது உங்களுக்கு தெரியும்'' என்று குறிப்பிட்டு சிட்டிபாபுவை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு சிட்டி பாபு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார். அதில், எனது பெயர் குறிப்பிடப்படாததால் சமந்தாவின் பெயரையும் குறிப்பிடவில்லை. என் காதில் உள்ள முடியைப் பற்றி பேசாமல், என் வார்த்தைகளில் உள்ள நேர்மையைப் பற்றி பேசினால் நன்றாக இருந்திருக்கும். நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும் என கூறியுள்ளார்.
- இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கி வரும் திரைப்படம் தண்டகாரண்யம்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
2012-ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியிருந்தார். தொடர்ந்து சர்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.

இதனிடையே நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பா.இரஞ்சித், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருந்தார்.

தற்போது பா.இரஞ்சித் மீண்டும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கும் புதிய படத்தை தயாரித்துள்ளார். தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு பிரதிப் கலிராஜா ஒளிப்பதிவு மேற்கொள்ள இசையை ஜஸ்டீன் பிரபாகரன் கவனிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தண்டகாரண்யம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் அதியன் ஆதிரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
Nanbar #Dinesh @KalaiActor macha in #Thandakaaranyam directed by @AthiraiAthiyan thozhar produced by @beemji sir #Schedulewrap @Riythvika @actorshabeer @officialneelam
— Bala saravanan actor (@Bala_actor) April 26, 2023
மாபெரும் மகிழ்ச்சி ????????????❤️❤️❤️ pic.twitter.com/6tkGtdisZ1
- விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குட் நைட்'.
- இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
'ஜெய் பீம்' மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'குட் நைட்'. இப்படத்தை அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் நாயகியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். இதில் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள், ரேச்சல் ரெபாக்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

குட்நைட்
ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

குட்நைட் போஸ்டர்
இந்நிலையில், 'குட் நைட்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'ஃபர்ஹானா' திரைப்படம் மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ்.
- இவர் இசையமைப்பது மட்டுமல்லாமல் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அடியே
மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த மோஷன் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -2.
- இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கடந்த ஆண்டும் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வருகிற 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் -2
இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன்-2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
- இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'.
- இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தஸ்தா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆர். கலைவாணன் படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். புதுமுகங்கள் நடிப்பில் கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

டைனோசர்ஸ் இசை வெளியீட்டு விழா
'டைனோசர்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் எம்.ஆர்.மாதவன் பேசியதாவது, சினிமா கண்டிப்பாக அனைவரையும் எட்டி உதைக்கும் நாம் தான் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்தப்படம் பல கதாநாயகர்களிடம் சென்றது ஆனால் கார்த்திக் இப்படத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். பல நண்பர்களின் முயற்சியால் தான் நான் இங்கு வந்தேன். தயாரிப்பாளர் ஸ்ரீனி சார் எனக்கு தந்தை போன்றவர். நான் கேட்ட அனைத்தும் செய்து கொடுத்தார். நான் வாழ்நாள் வரை அவரை மறக்க மாட்டேன். 143 தயாரிப்பாளரை நான் அணுகியுள்ளேன். ஆனால், இவர்தான் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார்.

டைனோசர்ஸ் இசை வெளியீட்டு விழா
என்னை இந்த தயாரிப்பாளரிடம் அழைத்துச் சென்றது இயக்குனர் எச். வினோத் தான் அவருக்கு மிகவும் நன்றி. கதாநாயகன் உதய் கார்த்திக் பெரிய நடிகர்களான அஜித், விஜய் போன்று நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரவு பகல் பாராமல் பணி செய்துள்ளார். ரமணா சார் மிகவும் எளிமையானவர் அவரது எளிமை மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கதாநாயகி தமிழ் பேசும் நடிகையாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தேன் அது போல அவர் அழகாக நடித்துள்ளார். ஸ்ரீனி நடிப்பு இந்த படத்தில் சிறப்பாகப் பேசப்படும்.

டைனோசர்ஸ் இசை வெளியீட்டு விழா
ஒளிப்பதிவாளர் என்னுடைய பாதி வேலையை அவரே செய்தார். இந்தப் படத்திற்கு இசையமைத்த போபோ சசி அதிக மெனக்கெடலுடன் உழைத்துள்ளார். இயக்குனர் மிஷ்கின் சாருடன் இணைந்து பணி செய்ய நீண்ட நாட்களாக முயற்சி செய்தேன் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் இங்கு அவர் வந்ததற்கு நன்றி. நடிகர் அருண் விஜய் சார் மற்றும் விஜய் குமார் சாருக்கு நன்றி. இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குச் சிறந்த பொழுதுப்போக்காக இருக்கும் நான் கலைப்படம் பண்ணவில்லை கலாய் படம் பண்ணியுள்ளேன். என் வளர்ச்சிக்கு முழுமுதல் காரணமாக இருக்கும் என் அம்மாவிற்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும். அனைவருக்கும் நன்றி என்று பேசினார்.






