என் மலர்
சினிமா செய்திகள்
- என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பொரங்கி எனும் பகுதில் இன்று நடைபெற்று வருகிறது.
- இந்த விழாவில் ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நாயகனாகவும், திரையுலகில் சாதனையாளராகவும் இருந்தவர் என்.டி.ராமாராவ். இவர் தமிழக முதல்- அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர். இவருடைய நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடத்திட்டமிட்டு இதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் நடிகர் பால கிருஷ்ணா செய்து வந்தார்.

300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள என்.டி.ஆர். மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றதோடு, தயாரிப்பாளராகவும் சினிமா இயக்குனராகவும் புகழ் பெற்று விளங்கினார். 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த என்.டி.ஆர்., 1983 முதல் 1989 வரையிலும் பின்னர் 1994 முதல் 1995 வரையிலும் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்-மந்திரியாக செயல்பட்டார். 1984 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலின் போது முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக என்.டி.ஆர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சில தினங்களுக்கு முன்பு என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருப்பதாக பாலகிருஷ்ணா அறிவித்திருந்தார். இந்நிலையில் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பொரங்கி எனும் பகுதில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் ரஜினிகாந்த், என்.டி.ராமாராவ் மருமகனும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திர பாபு நாயுடு மற்றும் நடிகரும் என்.டி.ராமாராவின் மகனுமாகிய பாலகிருஷ்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். மேலும் நடிகர் ரஜினிகாந்த் என்.டி.ஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடிகர் ஆர்.கே.சுரேஷ் குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம், முதலீட்டாளர்களிடம் முதலீடாக பெற்ற ரூ.2,438 கோடி ரூபாயை மோசடி செய்ததாக பொளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்கே சுரேஷ்
இந்த வழக்கில் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர் உள்பட 13 பேரை கைது செய்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளனர். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசையம்மாள், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் மற்றும் 22 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாயில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆர்கே சுரேஷ்
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ரூசோ அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் ஆர்.கே.சுரேஷ் குறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
- இந்தி நடிகை ஜியாகான் கடந்த 2013-ம் ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
- ஜியாகான் கொலை செய்யப்பட்டதாக அவரது தாய் ராபியா மும்பை ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்தி நடிகை ஜியாகான் கடந்த 2013-ம் ஆண்டு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். ஜியாகான் கொலை செய்யப்பட்டதாக அவரது தாய் ராபியா மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

சூரஜ் பஞ்சோலி - ஜியாகான்
ஜியாகான் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலரும் நடிகருமான சூரத் பஞ்சோலி மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இவ்வழக்கு மும்பையில் உள்ள சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஜியாகான் - சூரஜ் பஞ்சோலி
இந்நிலையில் ஜியாகான் மரண வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதில் சூரத் பஞ்சோலியை விடுதலை செய்வதாக கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. போதுமான ஆதாரம் இல்லாததால் சூரத் பஞ்சோலி விடுவிக்கப்படுவதாகவும், அவர் குற்றம் செய்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் அறிவித்தது.
- மீண்டும் தொடங்கிய தனுஷின் 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு.. அனுமதி வழங்கிய ஆட்சியர் தென்காசி அருகே நடைபெற்று வந்த தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பை நிறுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
- தற்போது அதே இடத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கேப்டன் மில்லர்
இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பகுதியில் 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது, குண்டு சத்தம் கேட்டதால் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய அனுமதி பெற்றார்களா என்று விசாரித்தார்.

கேப்டன் மில்லர்
ஆனால் படக்குழு வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார். அதன்படி 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

கேப்டன் மில்லர்
இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' படக்குழுவினர் முறையான அனுமதி வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் சான்றிதழை சமர்ப்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு இன்று அதே இடத்தில் தொடங்கியுள்ளது.
- தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.
- சமந்தா தற்போது நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர் வெளியாகியுள்ளது.
தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவரி, நான் ஈ, கத்தி, தங்கமகன், தெறி, 24 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்த சிட்டாடல் வெப் தொடர் வெளியாகியுள்ளது.

சமந்தா - ராம் சரண்
இந்நிலையில் சமந்தாவின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ராம் சரண் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அன்பான சமந்தா, உங்களையும் உங்களுடைய பணியையும் நினைத்தால் பெருமையாக இருக்கிறது. நீங்கள் நல்ல உடல் ஆரோகியத்துடன் இருக்க வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் சிட்டாலுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
Dearest @Samanthaprabhu2! Extremely proud of you and your amazing work. Wishing you great health and success. Happy Birthday and good luck with #Citadel
— Ram Charan (@AlwaysRamCharan) April 28, 2023
- விஜய் ஆண்டனி தற்போது 'பிச்சைக்காரன் -2' படத்தை இயக்கி நடித்துள்ளார்.
- இப்படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார்.

பிச்சைக்காரன் -2
இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், 'பிச்சைக்காரன் -2' படத்தின் ரிலீஸ் மற்றும் டிரைலர் அறிவிப்பை விஜய் ஆண்டனி சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். அதன்படி இப்படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்றும் திரைப்படம் வருகிற மே 19ம் தேதி வெளியாகும் எனவும் வெளியிட்டுள்ளார்.
Trailer tomorrow at 11 AM?
— vijayantony (@vijayantony) April 28, 2023
Releasing Worldwide on May 19?#BLOCKBUSTER ?#Pichaikkaran2 #bichagadu2 pic.twitter.com/Xc0TjFQWzx
- பிரபல ஹாலிவுட் நடிகையான கிம் கர்தாஷியனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
- அவரை போல முக அமைப்பு வேண்டும் என்ற ஆசையில் சில ரசிகர்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
பிரபல ஹாலிவுட் நடிகையான கிம் கர்தாஷியனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரை போல முக அமைப்பு வேண்டும் என்ற ஆசையில் அவரது சில ரசிகர்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

கிறிஸ்டினா ஆஸ்டன் கோர்கானி
கிறிஸ்டினா ஆஸ்டன் கோர்கானி என்ற மாடல் அழகி கிம் கர்தாஷியன் போல மாறுவதற்கு ஆசைப்பட்டு பல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை செய்து கொண்ட நிலையில் இவர் கடந்த 26-ந் தேதி மரணமடைந்தார். 34 வயதான கிறிஸ்டினா ஆஸ்டன் கோர்கானி மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தவறான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் அவரது இறப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் கிறிஸ்டினாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர். தற்போது கிறிஸ்டினாவின் குடும்பத்தினர் அவரது நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக சமூக வலைத்தளங்களில் நிதி திரட்டி வருகின்றனர்.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -2.
- இப்படத்தில் நடிகர் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் -2. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.

பொன்னியின் செல்வன் படம் பார்க்க வந்த கார்த்தி - அடிப்பட்ட ரசிகர்
முதல் காட்சியான காலை 9 மணி காட்சியை பொன்னியின் செல்வன் -2 படக்குழு ரசிகர்களுடன் வெவ்வேறு திரையரங்குகளில் பார்த்தனர். இந்நிலையில், சென்னை, காசி திரையரங்கிற்கு இப்படம் பார்க்க நடிகர் கார்த்தி வந்திருந்தார். படம் முடிந்து வெளிவரும் போது ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்து வந்ததால் திரையரங்கின் முகப்பு கண்ணாடி உடைந்து ரசிகர் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கார்த்தியின் மக்கள் நல மன்றம் சார்பாக உடைந்த திரையரங்கின் கண்ணாடி சரி செய்து தரப்படும் என்று காசி திரையரங்க நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ் சினிமாவின் ஆளுமையாக விளங்கியவர் இயக்குனர் கே.பாலசந்தர்.
- இவர் இயக்கிய படங்கள் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாக்களின் ஆளுமையாக விளங்கியவர் இயக்குனர் கே.பாலசந்தர். இவர் நினைவாக சென்னையில் நினைவு சதுக்கம் ஒன்று அமைக்க சென்னை மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் 55 தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. அதில் மறைந்த பிரபல இயக்குனர் கே.பாலசந்தர் நினைவாக மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் காவிரி மருத்துவமனை அருகில் ஆயிரம் சதுரடி அளவில் உள்ள போக்குவரத்து இடத்திற்கு கே.பாலசந்தர் சதுக்கம் அல்லது கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு சென்னை மாநகராட்சி மூலமாக அவ்வை சண்முகம் சாலைக்கு வி.பி.ராமன் பெயரும் மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு மறைந்த பிரபல பாடகர் டி.எம்.சவுந்தர ராஜன் பெயரும் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த திரையுலக நட்சத்திரங்கள் மீது அன்பைப் பொழியும் வகையில் நடிகைகளுக்கு கோவில் கட்டி வருகின்றனர்.
- குஷ்பு, நிதி அகர்வால் மற்றும் ஹன்சிகா ஆகியோருக்கு ஏற்கனவே கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த திரையுலக நட்சத்திரங்கள் மீது அன்பைப் பொழியும் வகையில் நடிகைகளுக்கு கோவில் கட்டி வருகின்றனர். குஷ்பு, நிதி அகர்வால் மற்றும் ஹன்சிகா ஆகியோருக்கு ஏற்கனவே கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. தீவிர ரசிகர்களால் கோவில் கட்டி வழிபடும் இந்த வழக்கம் ஆந்திராவிலும் தற்போது ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டம் ஆலப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் தெனாலி சந்தீப். கார் டிரைவரான இவர் சமந்தாவின் தீவிர ரசிகர். அவருக்காக தனது வீட்டில் ஒரு பகுதியில் கோவில் கட்டி உள்ளார். கோவிலின் மையப் பகுதியில் சமந்தாவின் மார்பளவு சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்.சமந்தாவின் பிறந்த நாளான இன்று கோவிலை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

சமந்தாவிற்கு ரசிகர் கட்டிய கோவில்
இந்த கோவிலை சமந்தாவின் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பார்வையிட்டு வருகின்றனர். சமந்தா கோவிலில் வைக்கப்பட்டுள்ள அவரது சிலை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவில் கட்டியுள்ள தெனாலி சந்தீப் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சமந்தாவிற்காக திருப்பதி, சென்னை, வேளாங்கண்ணி, கடப்பா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சர்வ மத பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, நடிகை சமந்தா சினிமாவில் அறிமுகமானது முதல் நான் அவரது ரசிகனாக இருந்து வருகிறேன். அவரது உணர்வு மற்றும் கருணை, அறக்கட்டளை மூலம் பல குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவி செய்துள்ளார். இது என்னை ஊக்கப்படுத்தியது.

சமந்தா சிலை
2 பிள்ளைகளின் தந்தையான நான், சமந்தாவுக்கு கோவில் கட்ட வேண்டும் என்று சொன்னபோது முதலில் யாரும் நம்பவில்லை. நான் இப்படி பணத்தை வீணடிப்பதாகவும், எனக்கு பைத்தியம் பிடித்திருக்கலாம் என்று எனது ஊர்மக்கள் சிலர் நினைத்தார்கள். அவர்களின் கருத்துக்கள் என்னை பாதிக்கவில்லை.
சமந்தாவுக்கு கோவில் கட்ட எனது குடும்பம் மிகவும் உறுதுணையாக இருந்தது. அவர்கள் என்னை ஒருமுறை கூட கேலி செய்யவில்லை. கோவில் கட்டுவதை நிறுத்த வேண்டும் என கூறவில்லை. கோவில் திறப்பு விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்தேன். இது தற்போது சமந்தா கோவிலை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- மலையாள திரையுலகில் போதை பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார் கிளம்பியது.
- இதனால் மலையாள படப்பிடிப்பு உள்ளிட்ட சினிமா தொழில் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
மலையாள திரையுலகில் போதை பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார் கிளம்பியது. இதனால் மலையாள படப்பிடிப்பு உள்ளிட்ட சினிமா தொழில் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாக மலையாள திரையுலகின் இளம் நடிகர்கள் ஷான் நிகாம், ஸ்ரீநாத் பாசி ஆகியோருக்கு தயாரிப்பாளர் சங்கம் சினிமாவில் நடிக்க தடை விதித்தது. மேலும் மலையாள திரையுலகில் போதைக்கு அடிமையானவர்கள் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிப்போம் எனவும் மலையாள சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்தனர்.
இந்த நிலையில் கேரளாவில் போதை பொருள் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் கேரள சினிமா உலகில் சில தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் என 10 பேர் பற்றிய தகவல் கிடைத்து இருப்பதாகவும், அவர்கள் பற்றிய பட்டியலை தயாரித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கு சினிமா பிரமுகர்களிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர். என்றாலும் போதை பொருள் சப்ளை செய்வோரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான்.
- இவர் இசையில் இன்று ’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் வெளியானது.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழி மீதான தனது பற்றை அவ்வப்போது பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார். கடந்தாண்டு நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல என்றும் கூறியிருந்தார்.

ஏ.ஆர்.ரகுமான்
இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில், ழ என்ற செங்கோலுடன், நடனமாடும் வகையில் வரையப்பட்ட தமிழன்னையின் ஓவியம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், "இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்" என்ற பாரதிதாசனின் வரியும் இடம் பெற்றிருந்தது.

ஏ.ஆர்.ரகுமான் -சாய்ரா பானு
சில தினங்களுக்கு முன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டனர். அப்போது அவரது மனைவி கூட்டத்தினரின் முன் பேச தயாரான போது இந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்கள் ப்ளீஸ் என்று ஏ.ஆர்.ரகுமான் அன்பு கட்டளை விடுத்தார். இதன்பின் பேசிய அவரது மனைவி, மன்னிக்கவும், தமிழில் சரளமாக பேச எனக்கு வராது. அதனால், தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்று கூறிவிட்டு ஆங்கிலத்தில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

ஏ.ஆர்.ரகுமான் -சாய்ரா பானு
இந்நிலையில், நடிகை கஸ்தூரி, "என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க? " என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான், "காதலுக்கு மரியாதை" என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
காதலுக்கு மரியாதை?? https://t.co/8tip3P6Rwx
— A.R.Rahman (@arrahman) April 27, 2023






