என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படத்தின் வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாக வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.


    பொன்னியின் செல்வன்-2

    பொன்னியின் செல்வன்-2

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் -2 படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வெளியான இரண்டு நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருவதாக கூறப்படுகிறது. 

    • பிரபல நடிகரும் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா விஜயவாடாவில் நடைபெற்றது.
    • இதில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    பிரபல நடிகரும் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா விஜயவாடாவில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆந்திரா முன்னாள் முதல்-மந்த்ரி சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் பாலகிருஷ்ணா, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




    விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இவ்வளவு பெரிய விழாவில் கலந்து கொண்டு தெலுங்கு பேசி நீண்ட நாட்களாகி விட்டது. நான் ஏதாவது தவறாக பேசினால் மன்னித்துவிடுங்கள். எதை சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்பதை ஞானம் சொல்கிறது. ஆனால் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று அவை சொல்கிறது. எதைச் சொல்லக் கூடாது என்பதை அனுபவம் சொல்கிறது.



    உங்களையெல்லாம் இப்படிப் பார்த்தா எனக்கு அரசியல் பேசணும்னு தோணுது. ஆனால், வேண்டாம் ரஜினி... என்று அனுபவம் தடுக்கிறது. நான் பார்த்த முதல் படம் என்டிஆர் நடித்த பாதாள பைரவி. அந்த படம் என் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது. எனது முதல் படத்திலேயே இது பைரவி வீடுதானா என்ற டயலாக் வரும். நான் துணை நடிகராகவும், வில்லனாகவும் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் ஒரு இயக்குனர் என்னை ஹீரோவாக வைத்து படம் எடுப்பதாக கூறினார்.


     



    ஆனால், அப்போது கதாநாயகனாக நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. கதையை ஒரு முறை கேளுங்கள் என்று அந்த இயக்குனர். மேலும் படத்தின் பெயர் பைரவி என்று கூறினார். அந்தப் பெயரை கேட்டதுமே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். லவகுசா படத்தின் வெற்றிக்காக என்.டி.ஆர் சென்னை வந்தபோது தூரத்தில் இருந்து அவரை பார்த்தேன். அப்போது எனக்கு 13 வயது. நடிகர் பாலகிருஷ்ணா கண்களாலே பார்த்து கொன்று விடுகிறார். அவர் காரை எட்டி உதைத்தால் 30 அடி தூரம் செல்லும்.



    அதனால் நான், ஷாருக்கான், அமிதாப் பச்சன், சல்மான் கான் என யார் செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதேநேரம் பாலகிருஷ்ணா செய்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் பாலகிருஷ்ணாவை, என்டிஆராகவே மக்கள் பார்க்கின்றனர். அவருக்கு கோபம் அதிகம். ஆனால் இலகிய மனம் கொண்டவர். அவர் திரை உலகிலும், அரசியல் வாழ்விலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.



    எனது நெருங்கிய நண்பரும், அரசியல் தலைவருமான சந்திரபாபு நாயுடு இருக்கும் போது, அரசியல் பற்றி பேசாமல் இருப்பது சரியல்ல. எனக்கு அவரை 30 வருடங்களாக தெரியும். சந்திரபாபு நாயுடுவை எனது நண்பர் மோகன்பாபு அறிமுகப்படுத்தினார். அப்போது சந்திரபாபு விரைவில் பெரிய தலைவராக வருவார் என்றும் மோகன் பாபு என்னிடம் அடிக்கடி கூறுவார். 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. அவருக்கு இந்திய அரசியல் மட்டுமின்றி உலக அரசியலும் தெரியும்.



    ஐதராபாத்தை ஹைடெக் நகரமாக சந்திரபாபு உருவாக்கினார். ஐ.டி. என்றால் என்ன என்று கூட தெரியாத காலத்திலேயே அவர் ஐ.டி.யை ஐதராபாத்திற்கு கொண்டு வந்தார். தற்போது லட்சக்கணக்கானோர் ஐ.டி துறையில் பணியாற்றி வருகின்றனர். தொழிலதிபர்கள் பில் கேட்ஸ் உள்ளிட்டவர்கள் சந்திரபாபுவை பாராட்டினர். 22 அண்டுகளுக்கு பிறகு நான் ஐதராபாத்தை சுற்றிப் பார்த்தேன். நான் ஐதராபாத்தில் இருக்கிறேனா அல்லது நியூயார்க்கில் இருக்கிறேனா என்று தோன்றியது. சந்திர பாபுவின் 2047 தொலைக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டால், நாட்டிலேயே ஆந்திரா முதன்மை மாநிலமாக மாறும். ஆந்திராவின் நிலை எங்கேயோ போய்விடும் என்று கூறினார்.

    • நடிகர் அஜித் தனது ஓய்வு நேரங்களில் பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
    • இவர் தற்போது நேபாளத்தையொட்டி இருக்கும் பகுதியில் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

    நடிகர் அஜித் பைக் மூலம் இந்தியாவைச் சுற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில் முதல்கட்டமாக இமயமலையில் கடந்த ஆண்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். பனி படர்ந்த பல்வேறு பகுதிகளில் பைக்கில் நண்பர்களுடன் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

    தற்போது அஜித்தின் 62-வது திரைப்படம் தொடக்க வேலையில் இருப்பதால் 2-ம் கட்ட பைக் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். நேபாளத்தையொட்டி இருக்கும் பகுதியில் இந்தப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். சாலை மார்க்கமாக அவர் செல்லும்போது அவரை அடையாளம் கண்டுகொண்டு காரில் வந்த சிலர் அவரை பின் தொடர்ந்து சென்றனர்.

    அப்போது தன்னைப் பின் தொடர்ந்து வருவதைக் கவனித்த அஜித்தும் தன் பைக்கை நிறுத்தி விட்டு அவர்களிடம் விசாரித்தார். போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசையைத் தெரிவிக்கவே, தயங்காமல் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    கமல்ஹாசன் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு கமல், மணிரத்னம் இயக்கத்தில் 'கேஎச்234' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கமல் ஜோடியாக நடிக்க திரிஷா பெயர் அடிபட்டது. ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் திரிஷா நடித்து இருந்தார். எனவே திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.


    மணிரத்னம் -கமல்ஹாசன்

    இதைத்தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் 'கேஎச்234' படத்தின் கதாநாயகி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் கமல்ஹாசனோடு பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஜோடியாக நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


    வித்யா பாலன் -கமல்ஹாசன்

    நடிகை வித்யா பாலன், அஜித் நடிப்பில் வெளியான 'நேர்க்கொண்ட பார்வை' திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மணிரத்னம் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் -2. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.


    பொன்னியின் செல்வன் -2

    'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தை வெளிநாட்டு ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விக்ரமின் பதிவு சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது, 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் புரோமோஷனின் போது ஐஸ்வர்யா ராயுடன் ஜாலியாக விளையாடிய வீடியோவை நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கும் திரைப்படம் 'பிச்சைக்காரன் -2'.
    • இப்படம் வருகிற மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார்.


    பிச்சைக்காரன் -2

    இப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. இதைத்தொடர்ந்து 'பிச்சைக்காரன் -2' படத்தின் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

    'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வருகிற மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    • தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி.
    • இவர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்.

    தமிழ் சினிமாவின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி (55) புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்.

    அஜித் நடித்த ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, வரலாறு என பல படங்களை சக்ரவர்த்தி தயாரித்துள்ளார். மேலும், விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார்.


    எஸ்.எஸ்.சக்ரவர்த்தி

    இறுதியாக விமல் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த விலங்கு என்ற இணைய தொடரில் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி காவல் அதிகாரியாக நடித்திருந்தார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு காலமானார்.


    எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வைரமுத்து

    எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. இவரது மறைவிற்கு கவிஞர் வைரமுத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக வைரமுத்து தனது சமூக வலைதளத்தில்  "நண்பா!

    நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி!

    மறைந்துவிட்டாயா?

    அஜித்தை வைத்து நீ தயாரித்த

    வாலி, முகவரி, சிட்டிசன்

    ரெட், வில்லன், ஆஞ்சநேயா

    வரலாறு ஆகிய 7படங்களுக்கும்

    என்னையே எழுத வைத்தாயே

    தமிழ்க் காதலா!

    காசோலைகள்

    வந்த இடத்திலிருந்து

    சாவோலையா?

    கலங்குகிறேன்;

    கலையுலகம் உன் பேர்சொல்லும்" என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வரும்பவர் ரிஷப் ஷெட்டி.
    • இவர் இயக்கத்தில் காந்தாரா -2 விரைவில் உருவாகவுள்ளது.

    நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது.


    பஞ்சுருளியிடம் ஆசிப்பெற்ற ரிஷப் ஷெட்டி

    கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இப்படத்தை பலரும் பாராட்டினர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இயக்குனர் ரிஷப் ஷெட்டி நிஜ காந்தாராவான பஞ்சுருளி தெய்வத்தை நேரில் சென்று வணங்கி ஆசி பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    • என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா ஆந்திராவில் நேற்று நடைபெற்றது.
    • இந்த விழாவில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நாயகனாகவும், திரையுலகில் சாதனையாளராகவும் இருந்தவர் என்.டி.ராமாராவ். இவர் தமிழக முதல்- அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர். இவருடைய நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடத்திட்டமிட்டு இதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் நடிகர் பால கிருஷ்ணா செய்து வந்தார்.


    300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள என்.டி.ஆர். மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றதோடு, தயாரிப்பாளராகவும் சினிமா இயக்குனராகவும் புகழ் பெற்று விளங்கினார். 1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த என்.டி.ஆர்., 1983 முதல் 1989 வரையிலும் பின்னர் 1994 முதல் 1995 வரையிலும் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்-மந்திரியாக செயல்பட்டார். 1984 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலின் போது முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக என்.டி.ஆர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


    இதையடுத்து, என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள பொரங்கி எனும் பகுதில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் ரஜினிகாந்த், என்.டி.ராமாராவ் மருமகனும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திர பாபு நாயுடு மற்றும் நடிகரும் என்.டி.ராமாராவின் மகனுமாகிய பாலகிருஷ்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.


    இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, பாலய்யா ஒரு தட்டு தட்டினால் ஜீப் பறக்கும். அதை ரஜினிகாந்தோ, அமிதாப் பச்சனோ, ஷாருக்கானோ, சல்மான்கானோ செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாலய்யா செய்தால் தான் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஏனென்றால் மக்கள் அவரை பாலய்யாவாக மட்டும் பார்க்கவில்லை; என்.டி.ராமாராவாக பார்க்கிறார்கள் என்று பேசினார்.

    • நடிகர் விஜய் நேற்று 22 மாவட்டங்களை சார்ந்த நிர்வாகிகளை சந்தித்தார்.
    • இந்த சந்திப்பில் புதியதாக சில நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்கு மேலாக விலையில்லா விருந்தகம் நடத்தும் திருச்சி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களை சார்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளை சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் நேரில் சந்தித்தார். அப்போது நிர்வாகிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்த நடிகர் விஜய் இந்த உதவியை செய்ய மேலும் பணம் வேண்டும் என்றால் தன்னிடம் கேளுங்கள் உதவி செய்கிறேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.


    விஜய்

    அடுத்தடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள திட்டமிட இருப்பதாகவும், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் ரசிகர்களிடம் விஜய் கேட்டுக்கொண்டார். சுமார் 2 மணி நேரம் நடந்த சந்திப்பில், புதியதாக சில நலத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என விஜய் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.


    ரசிகர்களை சந்தித்த விஜய்

    இந்த நிகழ்ச்சில் ரசிகர் ஒருவர் தனது நெஞ்சில் ஆட்டோகிராப் கேட்டு அதை பச்சை குத்த போகிறேன் என்று கூறிய போது அது தவறு இந்த தவறை செய்யாதீர்கள் என்று தவிர்த்து வெள்ளை காகிதத்தில் ஆட்ரோகிராப் போட்டு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் விஜய். மேலும் தொடர்ந்து மக்கள் பணிகளை செய்ய அவர் அறிவுறுத்தியதாகவும் வழக்கம்போல் கூட்டத்திற்கு வரும் இன்னோவா காரில் வராமல் எளிமையான காரில் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு ரசிகர்களிடையே பெறும் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் ஜோதிகா.
    • இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.


    தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா அவ்வப்போது உடற்பயிற்சி தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.



    இந்நிலையில், தற்போது வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஜோதிகா தனது இணையப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் தலைக்கீழாக நின்று ஒர்க்கவுட் செய்வதை பார்த்து ரசிகர்கள் பலரும் வியந்து போய் 'வாவ்' என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சக்ரவர்த்தி உயிர் பிரிந்தது.
    • விமல் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த விலங்கு என்ற இணைய தொடரில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார்.

    பிரபல திரைப்பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி (55) புற்றுநோய் பாதிப்பு காரணமாக காலமானார்.

    ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு என அஜித் நடிப்பில் மொத்தம் 9 படங்களை சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.

    கடந்த 8 மாதங்களுக்கு மேலாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவு அவரது உயிர் பிரிந்தது.

    விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி தயாரித்துள்ளார்.

    இறுதியாக விமல் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த விலங்கு என்ற இணைய தொடரில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார்.

    எஸ்.எஸ்.சக்ரவர்த்தியின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது. எஸ்.எஸ்.சக்ரவர்த்தி மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ×