என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • புதுவை வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலையொட்டிய சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • இதில் ரோஜா பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

    புதுவை வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலையொட்டிய சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா கடந்த 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் புஷ்கரணி விழாவில் 9-ம் நாள் விழா இன்று நடந்தது.

    புஷ்கரணியில் நேற்று மாலை நடந்த கங்கா ஆரத்தியில் நடிகையும், ஆந்திர மந்திரியுமான ரோஜா பங்கேற்று தரிசனம் செய்தார்.

    அதன்பின்னர் பேசிய ரோஜா, பெரிய நடிகர்களில் பேசி பேசியே ஜீரோ ஆனவர் நடிகர் ரஜினிகாந்த். இதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும். என்.டி. ராமாராவ் மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார் என்று ரஜினிகாந்த் சொன்னது தவறு. ரஜினிகாந்த் ஏதோ தெரியாமல் தவறாக பேசுகிறார் என்று எண்ணினேன். ஆனால் அவர் தெரிந்தேதான் பேசி உள்ளார்.

    ரஜினிகாந்த் பேசியதை பார்த்து ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள என்.டி.ஆர். அபிமானிகள், மக்கள் அனைவரும் கோபத்தில் உள்ளனர். என்.டி.ஆரை கொலை செய்ய யார் திட்டம் போட்டாரோ அவரையே நல்லவர் என்று ரஜினிகாந்த் பேசுவது தவறு. அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் இல்லாத ரஜினிகாந்த் அழைத்தார் என்பதற்காக சந்திரபாபு நாயுடு வீட்டில் சாப்பிட்டு அவர் கொடுத்த ஸ்கிரிப்ட்டை படித்துள்ளார்.

    ஆந்திர அரசியலை பற்றி தெரியாத ரஜினிகாந்த் ஐடியாவே இல்லாமல் பேசி தற்போது ஜீரோவாகி உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு நடிகர்கள் போகும் போது அந்த மாநிலங்களை பற்றி தெரிந்து பேச வேண்டும். இல்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும். ரஜினிகாந்த் தான் பேசியது குறித்து தெளிவாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும்.

    ஜெகன்மோகன் ரெட்டி மாதிரி ஒரு முதல்-மந்திரியை எங்குமே பார்க்க முடியாது. ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை செய்துள்ளார். மாணவர்கள் இடைநிற்றல் கூடாது என்பதற்காக கல்வி உதவி தொகைகளை அதிக அளவில் வழங்கி உள்ளார். இலவச கல்வியை ஆந்திர அரசே கொடுக்கிறது.

    சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பவன்கல்யாண், ரஜினிகாந்த் ஆகியோர் தனித்தனியாக வந்தாலும் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை அசைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

    ரோஜா ஆந்திராவில் ரஜினியை தாக்கி பேசி இருந்தார். இந்நிலையில் புதுவையில் மீண்டும் அவரை தாக்கி பேசியுள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
    • இதில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

    தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு சங்கங்களில் முக்கியமானதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். 


    அதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.




    இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நலம் காக்கும் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி வெற்றி பெற்றுள்ளார். தலைவர் பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி.மன்னனை விட 150 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 2-வது முறையாக தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்க பொருளாளராக முரளி அணியை சேர்ந்த சந்திரபிரகாஷ் ஜெயினும் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தேர்தல் மூலம் 2 துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சரத்குமார்.
    • இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சரத்குமார், தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு வெளியான ருத்ரன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.




    பொன்னியின் செல்வன், ருத்ரன் திரைப்படங்களின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் சரத்குமார் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் பத்திரிகை ஊடக நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார். 




    இதில் சரத்குமார் பேசியதாவது, நான் இப்போது பேசுவது பெரிய பழுவேட்டரையர் பேசுவது போல் உள்ளது என்கிறார்கள், மகிழ்ச்சி. நான் எப்போதும் நல்ல தமிழ் தான் பேசி வருகிறேன். கலை உலகத்தில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தேன், ஆனால் இப்போது தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளேன். கலை தான் என் தொழில். 


    பத்திரிகை நண்பர்கள் எப்போதும் என்னிடம் உரிமையுடன் எதையும் பரிமாறி வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இப்போதைய தலைமுறைக்கும் நம்மை தெரிய வேண்டுமென நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் பட புரமோசனில் நான் கலந்துகொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். என்னை அழைத்திருந்தார்கள் ஆனால் நான் சென்னையில் இல்லாததனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மணிரத்னம் மிகச்சிறந்த பாத்திரம் தந்திருந்தார், இப்போது படம் எல்லோரிடத்திலும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. பொன்னியின் செல்வன் வாய்ப்பு தந்ததற்கு மணிரத்னத்திற்கு லைகா புரடக்சன் சுபாஸ்கரன் இருவருக்கும் நன்றி. இன்றைய தலைமுறைக்கு என்னை எடுத்து சென்ற வாரிசு படத்திற்காக வம்சி மற்றும் விஜய்க்கு நன்றி. ருத்ரன் வில்லன் பாத்திரம் என்றபோது தயங்கினேன் ஆனால் இப்போதைய ரசிகர்கள் வில்லனாக நடிப்பவர்களை அதே போன்று பார்ப்பதில்லை, அந்த கதாப்பாத்திரத்தை எப்படி செய்துள்ளனர் என்றே பார்க்கிறார்கள். அதனால் தைரியமாக நடித்தேன். அடி வாங்கும் சாதாரண வில்லனாக நடிக்க மாட்டேன். 




    நான் நாயகனாக நடித்த காலத்தை விட இப்போது அதிகப்படம் நடித்து வருகிறேன். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன். தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும். அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது, விரைவில் அதற்காக தனியாக பத்திரிக்கை நண்பர்களைச் சந்திப்பேன். 2026-ல் ஒரு மாஸான அறிவிப்பு வரும். எப்போதும் உங்கள் ஆதரவு எனக்கு இருந்துள்ளது. அந்த ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி என்றார்.

    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.




    இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று குறிப்பிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.
    • இப்படத்தின் வெற்றிக்காக விக்ரம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

    பொன்னியின் செல்வன் கடந்த ஆண்டு இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.




    இதன் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.




    இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு விக்ரம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். என்னை மகிழ்வித்த உங்களுடைய அளவில்லா அன்புக்கும் ஆதரவுக்கும் பல கோடி நன்றிகள். வீர வேல்! வெற்றி வேல்! - ஆதித்த கரிகாலன். என்று குறிப்பிட்டுள்ளார்.

    • லைகா நிறுவனம் தயாரிக்கும் அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.
    • இதனை படத்தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்திற்கு விடாமுயற்சி என்று படக்குழு தலைப்பிட்டுள்ளது.

     

    இதனை படத்தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். அஜித் குமார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பதை அடுத்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    மாமன்னன்

    மாமன்னன்

    இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்ட்டி வருகின்றனர்.

    • விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
    • விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தின் அப்டேட்டை நடிகர் ஜீவா ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

    வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்-லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பிறகு விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்திருக்கின்றனர்.



    இந்நிலையில் தளபதி 68 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் எனக்கூறி விஜய் ரசிகர்களுக்கு நடிகர் ஜீவா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் நடிகர் விஜய் இணையவுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தளபதி 68 அப்டேட் கொடுங்க என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஜீவா,விரைவில் என்று பதிவிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • துணிவு படத்தை தொடர்ந்து அஜித் ‘ஏகே 62’ படத்தில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிப்பட்டுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ஏகே62-வது படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக லைகா நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் தயாரிப்பு நிறுவனம் கதையில் சில மாற்றங்களை செய்ய சொன்னதாகவும் இதற்கு ஒப்புக்கொள்ளாத விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலப்பட்டதாகவும் தகவல் வெளியானது.


    அஜித்

    அஜித்

    அதன்பின்னர் 'ஏகே 62' படத்தை மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், நாளை அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் தலைப்பும் படத்தின் இயக்குனர் மற்றும் பிற அறிவிப்புகள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு சென்னை அடையாறில் நடைபெற்று வருகிறது.
    • இதில் தனது வாக்குகளை நடிகர் ரஜினிகாந்த் பதிவு செய்தார்.

    தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு சங்கங்களில் முக்கியமானதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.


    வாக்களித்த ரஜினி
    வாக்களித்த ரஜினி

    காலை முதல் தொடங்கிய தேர்தலில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அடையாறு மையத்துக்கு நேரில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார். ராதிகா சரத்குமார், ஏ.ஆர்.முருகதாஸ், சசிகுமார் உள்ளிட்டோரும் வாக்களித்தனர். மேலும் நடிகர் கமல்ஹாசன் மதியம் வாக்களிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தேர்தல் மூலம் தலைவர், 2 துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
    • இப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. முதல் பாகம் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.


    பொன்னியின் செல்வன் -2

    பொன்னியின் செல்வன் -2

    இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் நேற்று முன்தினம் உலகமுழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அரசு அனுமதி இல்லாததால் காலை 9 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்கின. படம் வெளியாகி தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.


    பொன்னியின் செல்வன் -2

    பொன்னியின் செல்வன் -2


    இந்த நிலையில், படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக வீடியோ வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன், ரவிகுமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

    மெரினா, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, வேலைக்காரன், டாக்டர், டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன், ரவிகுமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.


    சிவகார்த்திகேயன்

    சிவகார்த்திகேயன்

    இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பது, என் அன்பு சகோதர சகோதரிகளே, நான் டுவிட்டரில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன். நான் விரைவில் திரும்பி வருவேன். என் படங்கள் குறித்த அப்டேட்களை என் குழுவினர் இங்கு பதிவிடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

    ×