ஏகே 62: அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

துணிவு படத்தை தொடர்ந்து அஜித் ‘ஏகே 62’ படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிப்பட்டுள்ளது.
அஜித்
அஜித்
Published on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ஏகே62-வது படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக லைகா நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பின்னர் தயாரிப்பு நிறுவனம் கதையில் சில மாற்றங்களை செய்ய சொன்னதாகவும் இதற்கு ஒப்புக்கொள்ளாத விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

அஜித்
அஜித்

அஜித்

அதன்பின்னர் 'ஏகே 62' படத்தை மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், நாளை அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் தலைப்பும் படத்தின் இயக்குனர் மற்றும் பிற அறிவிப்புகள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com