என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • வனிதா விஜயகுமார் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
    • பீட்டர் பால் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த வனிதா விஜயகுமார், விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். அதன்பின்னர் பல படங்களில் நடித்திருந்த வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் கவனத்தை ஈர்த்தார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகர் அருண் விஜய்யின் அக்காவும் ஆவார்.


    பீட்டர் பால் - வனிதா விஜயகுமார்

    பீட்டர் பால் - வனிதா விஜயகுமார்

    இவர் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். தன்னை முறையாக விவாகரத்து செய்துக் கொள்ளாமல் வனிதாவை, பீட்டர் பால் திருமணம் செய்து கொண்டதாக கூறி பீட்டர் பாலின் மனைவி புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து சில நாட்களிலே வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்தனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் பீட்டர் பால் உடல்நலகுறைவால் காலமானார். இவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. மேலும் பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் வனிதாவின் 3-வது கணவர் என்று குறிப்பிட்டு செய்திகள் வெளியிட்டனர்.


    வனிதா விஜயகுமார் பதிவு

    வனிதா விஜயகுமார் பதிவு

    இந்நிலையில் வனிதா விஜயகுமார், நான் மறைந்த பீட்டர் பாலை சட்டப்படி திருமணம் செய்யவில்லை என்றும் நான் அவரது மனைவி இல்லை, அவர் என் கணவர் இல்லை என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பது, நீண்ட யோசனைகளுக்கு பிறகு ஊடகங்கள், மீடியாக்கள் மற்றும் நியூஸ் சேனல்களுக்கு சில விஷயங்களை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.


    பீட்டர் பால் - வனிதா விஜயகுமார்

    பீட்டர் பால் - வனிதா விஜயகுமார்

    நான் மறைந்த பீட்டர் பாலை சட்டப்படி திருமணம் செய்யவில்லை. நாங்கள் 2020ஆம் ஆண்டு இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம், அதே ஆண்டு எங்கள் உறவு முடிவுக்கு வந்துவிட்டது. நான் அவரது மனைவி இல்லை, அவர் என் கணவர் இல்லை. பீட்டர் எனது கணவர் என்று குறிப்பிடுவதை நிறுத்துங்கள். நான் எனது வாழ்க்கையை இப்போதுதான் மகிழ்ச்சியாகவும் முழுமையாகவும் வாழ்ந்து வருகிறேன். இதுபோன்ற செய்திகளை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள். இது என்னுடைய பணிவான வேண்டுகோள் என்று பதிவிட்டுள்ளார்.

    • விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’.
    • இப்படம் வருகிற மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.


    இராவண கோட்டம்

    இராவண கோட்டம்

    `இராவண கோட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சாந்தனு பேசியதாவது, நடிகர் ஷாந்தனு பேசியதாவது, இப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் என் தந்தை எனக்கு என்ன செய்ய வேண்டும் நினைப்பாரோ அதே போல் நான் முன்னேறத் தேவையான அனைத்தையும் செய்தார். அவருக்கு மிகப்பெரும் நன்றி.  இந்தப்படம் சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படமாக இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. 


    இராவண கோட்டம் படக்குழு

    இராவண கோட்டம் படக்குழு

    இந்தப் படத்தில் நடிகரைத் தாண்டி, தயாரிப்பு பணிகளும் நான் பார்க்க வேண்டி இருந்தது, தயாரிப்பு மிகக் கடினமான வேலை மிகவும் சிரமப்பட்டேன், படக்குழுவிற்கு நிறைய அனுபவம் இருந்தது, அனைவரும் இப்படத்திற்காகப் பல நாட்கள் தூங்காமல் வேலை செய்தனர். அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நான்கு வருடங்கள் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். படம் பார்த்த பிறகு எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது.


    இராவண கோட்டம் படக்குழு

    இராவண கோட்டம் படக்குழு


    கிராமத்துப் பையனாக நடிக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தேன் ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, காலில் இரத்தம் வர நடித்தேன் எந்த படத்திலும் நான் இதைச் செய்ததில்லை. நான் மட்டும் இல்லை அனைவரும் இது போல கஷ்டப்பட்டு தான் நடித்தனர். இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். இது ஒரு தரமான படைப்பாக இருக்கும். அனைவரும் எங்கள் உழைப்பிற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி என்றார்.

    • ஏஐஆர், இந்தியாவில் பிரைம் வீடியோவில் மே 12 அன்று வெளியாகிறது.
    • ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏஐஆர் வெளியாகிறது.

    அமேசான் ஸ்டுடியோஸ், ஸ்கைடேன்ஸ் ஸ்போர்ட்ஸ், ஆர்டிஸ்ட்ஸ் ஈக்விட்டி மற்றும் மாண்டலே பிக்சர்ஸ் தயாரித்துள்ள விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்ற ஏஐஆர் (AIR)திரைப்படம் ஏப்ரல் 5 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.



    விருது பெற்ற இயக்குனர் பென் அஃப்லெக் வழங்கும் AIR, ஏர் ஜோர்டான் பிராண்டுக்காக விளையாட்டு மற்றும் கலாச்சார உலகில் புரட்சியை ஏற்படுத்திய அப்போதைய புதுமுக வீரர் மைக்கேல் ஜோர்டானுக்கும் நைக்கின் கூடைப்பந்து பிரிவிற்கும் இடையே உள்ள நம்பமுடியாத கூட்டாண்மையை ஏஐஆர் வெளிப்படுத்துகிறது.



    அனைத்தையும் இழந்த நிலையில் இருக்கும் ஒரு விளையாட்டுக்குழு மேற்கொள்ளும் சவாலான பங்கேற்பு, தன் மகனின் மகத்தான திறமையின் மதிப்பை அறிந்த ஒரு தாயின் சமரசமற்ற பார்வை மற்றும் சிறப்பான நிலையை எட்டப் போகும் ஒரு கூடைப்பந்து வீரரின் சிறப்பு ஆகியவற்றை விமர்சிக்கிறது.



    இதில் நைக் நிர்வாகி சோனி வக்காரோவாக மாட்டாமன் மேவரிக் நடிக்கிறார், நைக்கின் இணை நிறுவனர் பில் நைட்டாக அஃப்லெக் நடித்துள்ளனர், ராப் ஸ்ட்ராஸராக ஜேசன் பேட்மேன், டேவிட் பால்க்காக கிறிஸ் மெசினா, பீட்டர் மூராக மேத்யூ மஹர், ஜார்ஜ் ராவெலிங்காக மார்லன் வயன்ஸ், ஹோவர்ட் ஒயிட், வயோலாவாக கிறிஸ் டக்கர் டேவிஸ் டெலோரிஸ் ஜோர்டானாகவும், குஸ்டாஃப் ஸ்கார்ஸ்கார்ட் ஹார்ஸ்ட் டாஸ்லராகவும் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் ஏஐஆர், இந்தியாவில் பிரைம் வீடியோவில் மே 12 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக திரையிடப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆர்யா மற்றும் கவுதம் கார்த்தி க்இணைந்து மனு ஆனந்த் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளனர்.
    • இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மனு ஆனந்த் தற்போது பிரின்ஸ் பிக்சர் தயாரிப்பில் புதிய திரைப்படத்தை இயக்கிறார். இப்படத்தில் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    மிஸ்டர்.எக்ஸ்

    மிஸ்டர்.எக்ஸ்

    இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு மிஸ்டர்.எக்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகவுள்ளது. மேலும் இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    • இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சூது கவ்வும் -2’.
    • இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    கடந்த 2013-ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் 'சூது கவ்வும்'. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக்செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    சூது கவ்வும் 2

    சூது கவ்வும் 2

    இதனைத் தொடர்ந்து 'சூது கவ்வும் 2' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார். திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அந்த போஸ்டரில், 'சூது கவ்வும் -2 நாடும் நாட்டு மக்களும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


    சூது கவ்வும் 2 மோஷன் போஸ்டர்

    சூது கவ்வும் 2 மோஷன் போஸ்டர்

    இந்நிலையில் சூது கவ்வும்-2 படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனை பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.
    • இப்படத்தை பார்த்த பிறகு நடிகர் கமல் செய்தியாளர்களை சந்தித்தார்.

    கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.


    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    இதைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' 2-ம் பாகம் கடந்த ஏப்ரல் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


    மணிரத்னம் - கமல்

    மணிரத்னம் - கமல்

    அதே சமயம் இந்த படத்தில் கல்கி எழுதிய கதையில் மணிரத்னம் சில மாற்றங்களைச் செய்திருப்பது குறித்து நாவல் வாசகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சினிமாவிற்கு தேவையான திரைக்கதையை உருவாக்கவே அந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக படக்குழு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.


    மணிரத்னம் - தேவி ஸ்ரீ பிரசாத் - கமல்
    மணிரத்னம் - தேவி ஸ்ரீ பிரசாத் - கமல்

    இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் 'பொன்னியின் செல்வன்-2' திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர், "கருத்து வேறுபாடுகள் அனைத்து படைப்புகளிலும் இருக்கும். எல்லா படங்களுக்கும் மாற்று கருத்துக்கள் வரும். அது இந்த படத்தில் இருந்தாலும் கூட, மக்கள் இதனை பெருமளவில் ஆதரிக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமையையும், தமிழரின் பெருமையையும் போற்றும் ஒரு படத்தை எடுப்பதற்கே ஒரு தனி துணிச்சல் வேண்டும். அதை எடுத்து முடித்திருக்கும் வீரனாக இருக்கும் மணிரத்னத்தையும், அவருக்கு உறுதுணையாக இருந்த நட்சத்திர பட்டாளத்தயும் பாராட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் டேனி.
    • இவர் நடித்திருந்த செங்களம் வெப் தொடர் சமீபத்தில் வெளியானது.

    தமிழ் திரையுலகில் பொல்லாதவன், பையா, ரௌத்திரம் படத்தில் நடித்த டேனி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அதன்பின்னர் மியாவ், மரகத நாணயம், ரங்கூன், இரண்டாம் குத்து, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் பாராட்டுக்களை பெற்றார். இவர் நடித்திருந்த செங்களம் வெப் தொடர் சமீபத்தில் வெளியானது.



    இந்நிலையில் நடிகர் டேனி, நடிப்பு பயிற்சி பட்டறையின் மூலம் பல நடிகர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ், ராதா ரவி, சீமான், வெற்றிமாறன், தம்பி ராமையா உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து அதன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த நடிப்பு பயிற்சி பட்டறை வருகிற மே 19, 20, 21ம் தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. டேனியின் நடிப்பு பயிற்சி பட்டறைக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.200 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்


    பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.100 வசூல் குவித்ததாக அறிவித்திருந்த நிலையில் இப்படத்தின் வசூல் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வெளியான உலகம் முழுவதும் நான்கு நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’.
    • இப்படம் வருகிற மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.


    இராவண கோட்டம்,

    இராவண கோட்டம்,

    `இராவண கோட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார். இப்படம் வருகிற மே 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.


    இராவண கோட்டம்

    இராவண கோட்டம்

    இந்நிலையில் இராவண கோட்டம் படத்தில் இடம்பெற்றுள்ள 'அத்தனபேர் மத்தியில' பாடலை நடிகர் ஜெயம் ரவி சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.
    • இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    பொன்னியின் செல்வன் கடந்த ஆண்டு இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

    இதன் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் பிடிஎஸ் வீடியோவை திரிஷா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • அஜித்தின் ஏகே62 படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.
    • இப்படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது.

    மகிழ்த்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு 'விடாமுயற்சி' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது. நடிகர் அஜித்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த படம் பின்னர் மகிழ் திருமேனி வசம் சென்றது. 




    விடமுயற்சியின் கீழ் 'முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையாது' என குறிப்பிடபட்டு உள்ளது. படத்தின் கதை மற்றும் நடிகர்கள் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் தயாரிப்பு செலவு 220 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன் நிறுவனம் மகிழ் திருமேனிக்கு இதுவரை ஒரு படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட இரண்டு மடங்கு அதிக தொகையை இந்த படத்திற்காக கொடுப்பதாக தகவல் கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கலக தலைவன்' படம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிட்தக்கது.

    • விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'இராவண கோட்டம்'.
    • இப்படம் வருகிற மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்'. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.




    `இராவண கோட்டம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார். இப்படம் வருகிற மே 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.




    இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அத்தன பேர் மத்தியில' பாடலை நடிகர் ஜெயம் ரவி சமூக வலைத்தளத்தின் வாயிலாக இன்று மாலை 5.00 மணிக்கு வெளியிடுகிறார். இதனை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்த்துள்ளது.

    ×