என் மலர்
நீங்கள் தேடியது "ponniyin Selvan"
- விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.
- இப்படத்தின் வெற்றிக்காக விக்ரம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் கடந்த ஆண்டு இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இதன் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு விக்ரம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். என்னை மகிழ்வித்த உங்களுடைய அளவில்லா அன்புக்கும் ஆதரவுக்கும் பல கோடி நன்றிகள். வீர வேல்! வெற்றி வேல்! - ஆதித்த கரிகாலன். என்று குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல..
— Vikram (@chiyaan) April 30, 2023
மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல்.
என்னை மகிழ்வித்த உங்களுடைய அளவில்லா அன்புக்கும் ஆதரவுக்கும் பல கோடி நன்றிகள். ?
வீர வேல்!
வெற்றி வேல்!
- ஆதித்த கரிகாலன்#ps2 #PonniyinSelvan2 pic.twitter.com/oSCjDG2iEg
- மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.
- இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பொன்னியின் செல்வன் கடந்த ஆண்டு இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்று. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்த 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இதன் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் பிடிஎஸ் வீடியோவை திரிஷா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
From the 2021 archives…
— Trish (@trishtrashers) May 1, 2023
Part 1 of #bts #ps ?
Would I do this all over again?
Your guess is as good as mine?❤️? pic.twitter.com/L2bdxMZtL2