என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கார்ப்பரேட் அலுவல ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியாற்றுவர் என ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது சென்னை ஆலை உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி மே 13 துவங்கி மே 16 ஆம் தேதி வரை ஆலை பணிகளை நிறுத்துகிறது. இந்த காலக்கட்டத்தில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது.

     ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்

    சென்னையில் திருவொட்டியூர், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் போன்ற பகுதிகளில் மூன்று ஆலைகளை ராயல் என்பீல்டு இயக்கி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக விற்பனை மையங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ராயல் என்பீல்டு தகவல் தெரிவித்து வருகிறது. 

    சென்னை மற்றும் குர்கிராம் பகுதிகளில் செயல்படும் ராயல் என்பீல்டு அலுவலகங்கள் மற்றும் கார்ப்பரேட் அலுவலக ஊழியர்கள் மறு அறிவிப்பு வெளியாகும் வரை தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றுவர் என ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.
    கியா இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு வழங்கிய இலவச சர்வீஸ் சேவை பயனற்று போவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    கியா இந்தியா நிறுவனம் இலவச சர்வீஸ் சேவையை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து இருக்கிறது. கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக இலவச சர்வீஸ் சேவை பயனற்று போவதை தடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை கியா இந்தியா வெளியிட்டு இருக்கிறது.

     கியா கார்

    ஊழியர்களை பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுக்க அனைத்து கியா விற்பனையாளர்களும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. இதன் காரணமாக சர்வீஸ் மையங்கள் மிக குறைந்த பணியாளர்களுடன் செயல்பட்டு வருவகிறது. சில சர்வீஸ் மையங்கள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளன.

    ஊரடங்கு காரணமாக இலவச சர்வீஸ் சேவை கொண்ட வாகனங்களை சர்வீஸ் மையங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு சிரம் அற்ற சேவையை வழங்கும் நோக்கில் இலவச சர்வீஸ் சேவை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து இருக்கிறது.
    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் எஸ்யுவி மாடல்களை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பிரீமியம் வாகனங்களை பல்வேறு விலை பட்டியலில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. அதன்படி XUV500 விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட இருப்பதாக மஹிந்திரா அறிவித்து இருக்கிறது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மஹிந்திரா தனது XUV500 மாடலை 2024 வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடல் முற்றிலும் புது பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது சங்யோங் டிவோலி பிளாட்பார்மில் அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

     மஹிந்திரா XUV500

    டிவோலி பிளாட்பார்ம் அதிநவீன தரத்திற்கு மேம்படுத்தப்பட இருக்கிறது. டிவோலி பிளாட்பார்மை மேம்படுத்த மஹிந்திரா புதிய XUV700 மாடலை பயன்படுத்த இருக்கிறது. புதிய XUV500 மாடல் S301 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தற்போதைய XUV500 மாடலை விட அளவில் 300 எம்எம் சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

    மஹிந்திராவின் புதிய XUV500 இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் எம்ஜி ஆஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 
    யமஹா நிறுவனம் தனது உற்பத்தி ஆலை பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது.


    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஆலை பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. இதனால் காஞ்சிபுரம் மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தின் சூரஜ்பூர் ஆலை பணிகள் மே 15 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட இருக்கிறது.

     யமஹா மோட்டார்சைக்கிள்

    உற்பத்தி பணிகள் இம்மாத இறுதி வரை நிறுத்தப்பட இருக்கிறது. நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து ஆலை பணிகள் நிறுத்தப்படுவதாக யமஹா தெரிவித்து உள்ளது. கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் பகுதி அலுவலக பணிகளை மேற்கொள்வோர் தொடர்ந்து வீட்டில் இருந்தபடி பணியாற்றுவர்.

    தற்போதைய சூழலில் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மட்டுமே நிறுவனத்திற்கு முக்கியமான ஒன்று. வினியோகஸ்தர்கள் மற்றும் டீலர்களுடன் இணைந்து பணியாற்றி, இதன் மூலம் ஏற்படும் பாதிப்பை முடிந்தளவு குறைக்க யமஹா முயற்சித்து வருகிறது என யமஹா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனம் தனது ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகளை அதிகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் தனது ஆலைகளை மே 16 ஆம் தேதி வரை மூடுவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலை மே 1 துவங்கி மே 9 வரை மூடப்படுவதாக மாருதி சுசுகி இருந்தது. இந்த காலக்கட்டத்தில், ஆலையில் கார் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவதோடு, ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறும் என மாருதி சுசுகி தெரிவித்தது.

     மாருதி சுசுகி கார்

    தற்போது ஆலையில் உற்பத்தி பணிகளை மே 16 ஆம் தேதி வரை நிறுத்தி, இந்த காலக்கட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த மாருதி சுசுகி திட்டமிட்டு இருக்கிறது. இதற்கென மாருதி சுசுகி நிறுவனம் என்சிஆர் பகுதியை சேர்ந்த இரு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.

    கடந்த மாதம் வாகனங்கள் விற்பனையில் சரிவடைந்த போதும் மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளராக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் அதிகம் விற்பனையான பத்து கார்களில் ஏழு மாருதி சுசுகி மாடல்கள் இடம்பெற்று இருந்தன.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்கள் விலையையும் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 1.8 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு ஏற்கனவே அமலாகி விட்டது. ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டின் புது விலை விவரங்களை விரைவில் டாடா மோட்டார்ஸ் அறிவிக்க
    இருக்கிறது.

     டாடா கார்

    கடந்த சில நாட்களாக பல்வேறு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் தங்களது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.  முன்னதாக மாருதி சுசுகி, ஹூண்டாய், டொயோட்டா, போர்டு, பிஎம்டபிள்யூ, எம்ஜி மோட்டார்ஸ் மற்றும் வால்வோ உள்ளிட்ட நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்தன.

    உதிரிபாகங்கள் விலை உயர்வு, ஒட்டுமொத்த உற்பத்தியை சார்ந்த மூல பொருட்கள் விலை உயர்வு காரணமாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வியாபார பிரிவு தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார். மே 7 மற்றும் அதற்கும் முன் புது டாடா கார் வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு பழைய விலையே பொருந்தும்.
    வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது 2021 டிகுவான் ஆல்ஸ்பேஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசர் படத்தை வெளியிட்டு இருக்கிறது.


    2021 வோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசர் வெளியாகி உள்ளது. இந்தியாவில் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், சர்வதேச சந்தையில் இந்த மாடல் மூன்று ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது பேஸ்லிபிட் மாடல் அறிமுகமாகிறது.

     வோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் டீசர்

    டீசர் புகைப்படத்தின் படி புது டிகுவான் ஆல்ஸ்பேஸ் பேஸ்லிப்ட் மாடலின் பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் அதிக மாற்றங்கள் செய்யப்படாது என தெரியவந்துள்ளது. இந்த மாடலில் புது எல்இடி ஹெட்லைட்கள், வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் IQ லைட்டிங் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    இத்துடன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் பேஸ்லிப்ட் மாடலில் புது அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. பூட் பகுதியை கைகள் இன்றி திறந்து மூடும் வசதியும் வழங்கப்படுகிறது. இவற்றுடன் புதிய கண்ட்ரோல் சிஸ்டம், அதிநவீன டிரைவர் அசிஸ்டண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. 
    ரெவோல்ட் நிறுவனம் தனது ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மாடல்கள் முன்பதிவை நிறுத்தி இருக்கிறது.


    ரெவோல்ட் நிறுவனம் இந்தியாவில் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களின் முன்பதிவை மீண்டும் நிறுத்தி இருக்கிறது. இரு மாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து முன்பதிவு நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் அறிமுகமான முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களாக ஆர்வி300 மற்றும் ஆர்வி400 இருக்கின்றன. இரு மாடல்களும் முதற்கட்டமாக சென்னை, டெல்லி, பூனே, ஆமதாபாத், ஐதராபாத் மற்றும் மும்பை போன்ற நகரங்களில் கிடைக்கின்றன.

    ரெவோல்ட்

    இரு மாடல்களும் மை ரெவோல்ட் சந்தா முறை மற்றும் ஒரு முறை கட்டணம் செலுத்தும் முறை என இருவிதங்களில் கிடைக்கிறது. ரெவோல்ட் ஆர்வி300 முன்பதிவு கட்டணம் ரூ. 7199 ஆகும். இதன் விலை ரூ. 94,999 ஆகும். 

    ரெவோல்ட் ஆர்வி400 முன்பதிவு கட்டணம் ரூ. 7,999 ஆகும். இதன் விலை ரூ. 1.19 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    மாருதி சுசுகி நிறுவனம் ஏப்ரல் மாதம் 1,59,955 யூனிட்களை உற்பத்தி செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மாருதி சுசுகி நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் 1,59,955 யூனிட்களை உற்பத்தி செய்து இருக்கிறது. இதில் 1,12,488 மினி மற்றும் சப் காம்பேக்ட் வாகனங்கள் அடங்கும். இது ஆல்டோ, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், ஸ்விப்ட், டிசையப், இக்னிஸ், பலேனோ, செலரியோ போன்ற மாடல்களை கொண்டது ஆகும்.

     மாருதி சுசுகி கார்

    மார்ச் 2021 மாதத்துடன் ஒப்பிடும் போது கடந்த மாதம் 9 சதவீதம் குறைவான வாகனங்களை உற்பத்தி செய்து இருக்கிறது. மிட்-சைஸ் மாடலான சியாஸ் கடந்த மாதம் 2194 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. யுடிலிட்டி வாகனங்கள் பிரிவில் ஈகோ, எர்டிகா, எக்ஸ்எல் 6, எஸ் கிராஸ், விடாரா பிரெஸ்ஸா மற்றும் ஜிப்சி போன்ற மாடல்கள் 42,903 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டன.

    கடந்த மாதம் மட்டும் 1,57,585 பயணிகள் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் மாருதி நிறுவனம் தனது ஆலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மே 1 முதல் மே 9 வரை மூடுவதாக அறிவித்தது. இதுதவிர பல்வேறு சலுகைகளையும் வழங்குகிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் மே மாதத்திற்கான சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது.

    இந்தியாவில் செயல்படும் தேர்வு செய்யப்பட்ட மாருதி சுசுகி விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை, தள்ளுபடி உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.

    மாருதி சுசுகி ஸ்விப்ட் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் LXi வேரியண்டிற்கு ரூ. 20 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. விட்டாரா பிரெஸ்ஸா ZXi மற்றும் ZXi+ வேரியண்டிற்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், LXi மற்றும் VXi வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     மாருதி சுசுகி கார்

    மாருதி சுசுகி ஆல்டோ மாடலுக்கு ரூ. 17 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், எஸ் பிரெஸ்ஸோ மாடலுக்கு ரூ. 14 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. டிசையர் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ 8 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    மாருதி சுசுகி வேகன் ஆர் மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், சிஎன்ஜி மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஈகோ மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், செலரியோ மற்றும் எர்டிகா மாடல்களுக்கு முறையே ரூ. 15ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 
    ஆடம்பர எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக உருவெடுக்கும் பணிகளில் பென்ட்லி ஈடுபட்டு வருகிறது.


    பென்ட்லி நிறுவனம் 2025 வாக்கில் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இன்டெர்னல் கம்பஷன் என்ஜின்களை மாற்றி முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாற இருக்கிறது. புது எலெக்ட்ரிக் எஸ்யுவி மூலம் முழுமையான ஆடம்பர எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாறுகிறது.

     பென்ட்லி கார்

    முழுமையான எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை உற்பத்தி செய்ய பென்ட்லி நிறுவனம் ஆடி நிறுவனத்துடன் கூட்டணி அமைக்கிறது. பென்ட்லியின் புது எலெக்ட்ரிக் எஸ்யுவி வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஆர்டெமிஸ் பிளாட்பார்மை பயன்படுத்த இருக்கிறது.

    புது எலெக்ட்ரிக் மாடல்கள் வழக்கமான மாடல்களை விட அதிக எடை கொண்டிருக்கும் என பென்ட்லி தெரிவித்து இருக்கிறது. முழுமையான எலெக்ட்ரிக் மாடல் மட்டுமின்றி பிளையிங் ஸ்பர் மற்றும் கான்டினென்டல் ஜிடி மாடல்களின் பிளக் இன் ஹைப்ரிட் வெர்ஷன்களை உருவாக்கும் பணிகளில் பென்ட்லி ஈடுபட்டு வருகிறது.

    2018 ஆம் ஆண்டில் இருந்து முதல் முறையாக வால்வோ இந்தியா தனது கார் மாடல்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.


    வால்வோ கார் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வில் S90, XC40, XC60 மற்றும் XC90 போன்ற மாடல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாடல்களுக்கான விலை உயர்வு மே 3 ஆம் தேதி முதல் அமலாகிறது. 

    உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பது, கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவது போன்ற காரணங்களால் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 2018 முதல் வாகனங்கள் விலையை வால்வோ உயர்த்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

     வால்வோ கார்

    வால்வோ கார்கள் புது விலை விவரம்

    - வால்வோ S90 D4 இன்ஸ்க்ரிப்ஷன் ரூ. 60,90,000
    - வால்வோ XC40 T4 R டிசைன் ரூ. 41,25,000
    - வால்வோ XC60 D5 இன்ஸ்க்ரிப்ஷன் ரூ. 60,90,000
    - வால்வோ XC90 D5 இன்ஸ்க்ரிப்ஷன் ரூ. 88,90,000

    வால்வோ சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய S60 செடான் மாடல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 45.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆக இருக்கிறது.
    ×