என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    போர்டு நிறுவனத்தின் புதிய எப் 150 லைட்னிங் பிக்கப் டிரக் முதல் நாள் முன்பதிவில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.

    போர்டு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பிக்கப் டிரக் மாடலை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் எப் 150 பிக்கப் டிரக் முன்பதிவு துவங்கிய 24 மணி நேரத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருக்கிறது.

    இந்த தகவலை போர்டு நிறுவன  தலைமை செயல் அதிகாரி ஜிம் பேர்லி தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். அமெரிக்க சந்தையில் எப் 150 லைட்னிங் மாடல் விலை 39,974 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

     போர்டு எப் 150 லைட்னிங்

    இந்த மாடலில் 115 முதல் 150 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதனுடன் சூப்பர் பாஸ்ட் டிசி சார்ஜர் வழங்கப்படுகிறது. இது 87 கிலோமீட்டர்கள் பயணிப்பதற்கான சார்ஜ் செய்ய 10 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. இதன் பேட்டரியை 15 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 41 நிமிடங்கள் ஆகும். 
    டெஸ்லா நிறுவனத்தின் ரோட்ஸ்டர் மாடல் அதிவேகமாக 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.


    டெஸ்லா எலெக்ட்ரிக் மாடல்கள் அதிவேகமாக செல்லும் திறன் கொண்டிருக்கின்றன. இதிலும் டெஸ்லா ரோட்ஸ்டர் மாடல் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ரோட்ஸ்டர் மாடலின் டிசைன் மேம்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

     டெஸ்லா ரோட்ஸ்டர்

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ரோட்ஸ்டர் மாடலின் ஸ்பேஸ் எக்ஸ் பேக்கேஜ் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 1.1 நொடிகளில் எட்டிவிடும் என கூறப்படுகிறது. இது உண்மையில் சாத்தியமாகும் பட்சத்தில் இத்தகைய வேகத்தில் செல்லும் உலகின் முதல் கார் என்ற பெருமையை ரோட்ஸ்டர் பெறும்.

    முன்னதாக டெஸ்லா நிறுவனம் தனது ரோட்ஸ்டர் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 1.9 நொடிகளில் எட்டிவிடும் என தெரிவித்து இருந்தது. எனினும், 1.1 நொடிகளில் இந்த வேகத்தை எட்டும் பட்சத்தில் இது உலகின் அதிவேகமான கார் என்ற பெருமையை பெறும். 
    தமிழகத்தில் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான மருத்துவ உபகரணங்களை ஹூண்டாய் பவுன்டேஷன் நிதி வழங்கியுள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுன்டேஷன் சார்பில் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் கேர்ஸ் 3.0 திட்டத்தின் கீழ் மாநில அரசாங்கத்திற்கு ரூ. 10 கோடி வழங்கப்படுகிறது. நாட்டில் கொரோனா தொற்றை எதிர்க்கும் நோக்கில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     ஹூண்டாய்

    நிவாரண உதவி தொகையில் ரூ. 5 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. இந்த தொகை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ. 5 கோடி கொண்டு பிபிஐ கிட் உள்பட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட இருக்கின்றன. 

    கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின் போதும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுன்டேஷன் சார்பில் ரூ. 10 கோடி மதிப்பிலான நிவாரண உதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  
    நிசான் நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 75 ஆயிரம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


    நிசான் இந்தியா நிறுவனம் கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 75 ஆயிரம் வரையிலான சலுகைகளை வழங்குகிறது. இவற்றில் ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 50 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது.

    எனினும், கூடுதல் பலன்கள் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அதிக சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் மே 31 வரை வழங்கப்படுகிறது. சலுகை பலன்கள் ஒவ்வொரு நகரம் மறஅறும் விற்பனையாளருக்கு ஏற்ப மாறுபடும்.

     நிசான் கிக்ஸ்

    இந்திய சந்தையில் நிசான் கிக்ஸ் மாடல் மொத்தம் எட்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் இரண்டு பெட்ரோல் என்ஜின் - 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மறஅறும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 154 பிஹெச்பி, 254 என்எம் டார்க் மற்றும் 105 பிஹெச்பி, 142 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. நிசான் கிக்ஸ் மாடல் துவக்க விலை ரூ. 9.50 லட்சம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14.65 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் ஆக்சிஜன் ஆன் வீல்ஸ் திட்டத்தின் மூலம் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படுகிறது.

    மஹிந்திரா நிறுவனம் இம்மாத துவக்கத்தில் ஆக்சிஜன் ஆன் வீல்ஸ் (O2W) திட்டத்தை ஏழு நகரங்களில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த திட்டம் சென்னை நகருக்கும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் மஹிந்திரா நிறுவனம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருத்துவமனை மற்றும் இதர மருத்துவ நிறுவனங்களுக்கு சென்றடைய உதவுகிறது.

    தற்போது 100-க்கும் அதிகமான மஹிந்திரா வாகனங்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை மும்பை, பூனே, நாஷிக், நாக்பூர், ஐதராபாத், பஞ்சாப் மற்றும் டெல்லி-என்சிஆர் போன்ற நகரங்களில் இயக்கப்பட்டு வருகிறது. மஹிந்திரா பொலிரோ பிக்கப் டிர்க் வாகனங்கள் இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. 

     மஹிந்திரா ஆக்சிஜன் ஆன் வீல்ஸ்

    இதுவரை சுமார் 1000-க்கும் அதிக ட்ரிப்களின் மூலம் 23 ஆயிரம் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன. O2W சேவைகளை பெற பயனர்கள் மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் குழுவை தொடர்பு கொள்ள வேண்டும். இதற்கான எண்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

    முன்னதாக மஹிந்திரா தனது வாகனங்களுக்கான வாரண்டி சலுகை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. இத்துடன் மே மாதத்திற்கான சலுகை மற்றும் தள்ளுபடியை மஹிந்திரா அறிவித்து இருக்கிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜிம்னி புது வேரியண்ட் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஜிம்னி 5 கதவுகள் கொண்ட வேரியண்ட் உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆப் ரோடு எஸ்யுவி மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாக இருக்கிறது. இந்த நிலையில், புதிய ஜிம்னி 5 கதவுகள் கொண்ட மாடலின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

     மாருதி சுசுகி ஜிம்னி

    ஜிம்னி 5 கதவுகள் கொண்ட மாடலில் முற்றிலும் புதிய டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. ஐரோப்பிய சந்தைகளில் புதிய புகை விதிகள் அமலானதை தொடர்ந்து ஜிம்னி மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக புது மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட டர்போ சார்ஜிங் யூனிட் வழங்கப்படலாம். 

    தற்போது சுசுகி 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்தை சர்வதேச சந்தையில் வழங்கி வருகிறது. எனினும், இதே என்ஜின் புதிய ஜிம்னி மாடலிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 42 ஆண்டுகள் பழைய கார் மாடல் ஏல விற்பனைக்கு வந்தடைந்து இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் W123 மாடல் அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த மாடல் 12.6 லட்சம் கிலோமீட்டர்கள் ஓடியிருக்கிறது. எனினும், இந்த கார் எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இயங்குகிறது. இது 42 ஆண்டுகள் பழைய மாடல் ஆகும்.

     மெர்சிடிஸ் பென்ஸ் W123

    மெர்சிடிஸ் W123 உலகின் தலைசிறந்த மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. 42 ஆண்டுகள் பழைய மாடல் என்பதால், இது 12,58,507 கிலோமீட்டர்கள் ஓடியிருக்கிறது. தோற்றத்தில் இந்த மாடல் ஷோரூமில் காட்சிக்கு வைக்கப்படும் கார் போன்றே காட்சியளிக்கிறது. 

    1979 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் மாடலில் செல்ப்-லெவலிங் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே சரி செய்யப்பட்டது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், சிடி பிளேயர், எலெக்ட்ரிக் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், சன்ரூப், குரூயிஸ் கண்ட்ரோல் போன்றவை வழங்கப்பட்டு இருக்கிறது.
    இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் அதிகம் விற்பனையான மாடல்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

    இந்திய சந்தையில் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் மாருதி சுசுகி பலேனோ மாடல் ஏப்ரல் மாத விற்பனையில் முதலிடம் பிடித்து இருக்கிறது. பலேனோ மாடலை தொடர்ந்து டாடா அல்ட்ரோஸ், ஹூண்டாய் ஐ20, டொயோட்டா கிளான்சா மற்றும் வோக்ஸ்வேகன் போலோ போன்ற மாடல்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

     மாருதி சுசுகி பலேனோ

    மாருதி சுசுகி பலேனோ மாடல் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16,384 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதை தொடர்ந்து டாடா அல்ட்ரோஸ் மாடல் 6649 யூனிட்களும், ஹூண்டாய் ஐ20 மாடல் 5002 யூனிட்களும், டொயோட்டா கிளான்சா மாடல் 2182 யூனிட்களும், வோக்ஸ்வேகன் போலோ மாடல் 1197 யூனிட்களும் விற்பனையாகி இருக்கின்றன.

    இந்தியாவில் வோக்ஸ்வேகன் போலோ மாடல் துவக்க விலை ரூ. 6,16,500 என்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9,99,000 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளரான சிம்பிள் எனர்ஜி விரைவில் தனது பிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யும் நிறுவனமான சிம்பிள் எனர்ஜி, இந்திய சந்தையில் தனது மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. மார்க் 2 எனும் குறியீட்டு பெயர் கொண்ட பிளாக்ஷிப் மாடல் நீண்ட தூரம் செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகமாகிறது.

     சிம்பிள் எனர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பல்வேறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என சிம்பிள் எனர்ஜி தெரிவித்து இருக்கிறது. மார்க் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1.1 லட்சத்தில் துவங்கி ரூ. 1.2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    முதற்கட்டமாக மார்க் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெங்களூரூவில் அறிமுகம் செய்யப்பட்டு பின் சென்னை, ஐதராபாத் மற்றும் இதர தென்னிந்திய நகரங்களில் விற்பனைக்கு வருகிறது.
    ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு காப்புரிமை பெற்று இருக்கிறது.


    ஹோண்டா நிறுவனம் PCX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கான இந்திய காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. காப்புரிமை கடந்த மாதம் விண்ணப்பிக்கப்பட்டது. அந்த வகையில் ஹோண்டாவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

     ஹோண்டா PCX

    முன்னதாக 2016 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் ஹோண்டா PCX ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதே ஸ்கூட்டர் 20177 டோக்கியோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய PCX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு பேட்டரி பேக்குகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 41 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனுடன் வரும் ஏசி மோட்டார் 18 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன பிரிவில் களமிறங்கியது. டிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், விற்பனை சில நகரங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது.

     டிவிஎஸ் ஐ கியூப்

    சமீபத்தில் இதன் விற்பனை டெல்லிக்கு நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த மாடலின் விற்பனை இந்தியா முழுக்க 20 நகரங்களுக்கு நீட்டிக்கப்பட இருக்கிறது. இதில் மும்பை, சென்னை, பூனே, ஐதராபாத், ஆமதாபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

    விரைவில் மற்ற நகரங்கள் பட்டியலை டிவிஎஸ் வெளியிட இருக்கிறது. இந்தியா முழுக்க 20 நகரங்களில் ஐகியூப் விற்பனை நடைபெற இருப்பதாக டிவிஎஸ் நிறுவன இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார்.
    ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட மாடல்கள் இந்தியாவில் சிறப்பு சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகிறது.

    ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது 2020 மோட்டார்சைக்கிள் மாடல்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. அதன்படி பேட் பாய் 107, பேட் பாய் 114, லோ ரைடர் மற்றும் லோ ரைடர் எஸ் போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

     ஹார்லி டேவிட்சன் மோட்டார்சைக்கிள்

    தள்ளுபடி செய்யப்பட்ட புது விலை பட்டியல்

    பேட் பாய் 107 ரூ. 14,49,000
    பேட் பாய் 114 ரூ. 19,09,000
    லோ ரைடர் ரூ. 11,25,000
    லோ ரைடர் எஸ் ரூ. 11,75,000

    இந்த சிறப்பு விலை MY2020 மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இந்த சலுகைகள் மிக குறைந்த யூனிட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.  

    இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் MY2021 மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. ஐயன் 883, பார்டி எய்ட், சாப்டெயில் ஸ்டான்டர்டு, ஸ்டிரீட் பாப், பேட் பாப் 114, பேன் அமெரிக்கா 1250, பேன் அமெரிக்கா 1250 ஸ்பெஷல், பேட் பாய் 114, ஹெரிடேஜ் கிளாசிக், எலெக்ட்ரா கிளைட் ஸ்டான்டர்டு, ரோட் கிங், ஸ்டிரீட் கிளைட் ஸ்பெஷல் மற்றும் ரோட் கிளைட் ஸ்பெஷல் போன்ற மாடல்கள் இதுவரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    ×