என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    நிசான் கிக்ஸ்
    X
    நிசான் கிக்ஸ்

    கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 75 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிப்பு

    நிசான் நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 75 ஆயிரம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


    நிசான் இந்தியா நிறுவனம் கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 75 ஆயிரம் வரையிலான சலுகைகளை வழங்குகிறது. இவற்றில் ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 50 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 5 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகிறது.

    எனினும், கூடுதல் பலன்கள் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அதிக சிபில் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் மே 31 வரை வழங்கப்படுகிறது. சலுகை பலன்கள் ஒவ்வொரு நகரம் மறஅறும் விற்பனையாளருக்கு ஏற்ப மாறுபடும்.

     நிசான் கிக்ஸ்

    இந்திய சந்தையில் நிசான் கிக்ஸ் மாடல் மொத்தம் எட்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல் இரண்டு பெட்ரோல் என்ஜின் - 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மறஅறும் 1.5 லிட்டர் பெட்ரோல் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 154 பிஹெச்பி, 254 என்எம் டார்க் மற்றும் 105 பிஹெச்பி, 142 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. நிசான் கிக்ஸ் மாடல் துவக்க விலை ரூ. 9.50 லட்சம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14.65 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×