என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    மஹிந்திரா நிறுவனம் விரைவில் பொலிரோ பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.


    2021 மஹிந்திரா பொலிரோ பேஸ்லிப்ட் மாடல் விற்பனையகம் வந்தடைந்தது. தற்போதைய புகைப்படங்களின் படி 2021 மஹிந்திரா பொலிரோ மாடல் டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. புது நிறம் தவிர இந்த எஸ்யுவி மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    அதன்படி புது பொலிரோ மாடலில் ஒரே என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளில் அப்டேட் செய்யப்படாத மாடல்களில் ஒன்றாக மஹிந்திரா பொலிரோ இருக்கிறது. இந்த ரக்கட் எஸ்யுவி கணிசமான அளவு விற்பனையாகி வருகிறது.

     மஹிந்திரா பொலிரோ

    புது மாடலில் ஒரே ஹெட்லேம்ப் யூனிட், புது கிரில், பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டூயல் டோன் பினிஷ் இந்த காரின் முக்கிய அப்டேட் ஆக இருக்கிறது. இந்த எஸ்யுவி பேன்ஸி ஷேட் ரெட், பம்ப்பர் சேடின் கிரே நிறம் கொண்டிருக்கிறது. இதன் ரியர் வியூ மிரர்கள் பிளாக் பினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மஹிந்திரா பொலிரோ மாடல் பி4, பி6 மற்றும் பி6 (ஒ) என மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து வேரியண்ட்களும் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 
    ஸ்கோடா நிறுவனம் தனது புதிய தலைமுறை பேபியா மாடலை விரைவில் சர்வதேச சந்தையில் வெளியிட இருக்கிறது.

     
    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் புதிய தலைமுறை பேபியா மாடலை நாளை (மே 4) சர்வதேச சந்தையில் வெளியிடுகிறது. இது விற்பனைக்கு வரும் நான்காம் தலைமுறை பேபியா மாடல் ஆகும். இதன் முதல் தலைமுறை மாடல் 22 ஆண்டுகளுக்கு முன் வெளியானது.

     ஸ்கோடா பேபியா

    புது தலைமுறை பேபியா மாடல் வோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB A0 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இது முந்தைய மாடலை விட 111 எம்எம் நீளமாகவும், 48 எம்எம் அகலமாகவும் இருக்கிறது. மேலும் இந்த கார் கூடுதலாக 50 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டிருக்கிறது.

    புதிய பேபியா மாடலில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ, 1.0 லிட்டர் டிஎஸ்ஐ ஆப்ஷன் வழங்கப்படலாம். வரும் வாரங்களில் அறிமுகமாக இருக்கும் ஸ்கோடா பேபியா ஆண்டு இறுதியில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. புதிய பேபியா மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏப்ரல் மாத ஏற்றுமதியில் 592 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.


    இந்தியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதன் காரணமாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் 1,26,570 யூனிட்களை உள்நாட்டில் விற்பனை செய்து இருக்கிறது.

     பஜாஜ் மோட்டார்சைக்கிள்

    ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த மாதம் மட்டும் 2,21,603 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 592 சதவீதம் அதிகம் ஆகும். ஒட்டுமொத்த ஏற்றுமதியை எடுத்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. 

    இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் 2020 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2021 மார்ச் மாதத்தில் 1,81,393 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரலில் பஜாஜ் ஆட்டோ 30.22 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 

    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புது செல்டோஸ் மாடல் பல்வேறு புது அம்சங்களுடன் வெளியாக இருக்கிறது.


    2021 கியா செல்டோஸ் மாடல் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த எஸ்யுவி மாடல் ஒட்டுமொத்த ஸ்டைலிங், டிசைன், என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என கூறப்படுகிறது.

    எனினும், சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு புது அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்திய சந்தையில் கியா அறிமுகம் செய்த முதல் மாடல் கியா செல்டோஸ் தான். இது 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கியா எஸ்பி கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது.

     கியா செல்டோஸ்

    பின் 2019 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அசத்தலான அம்சங்கள், தலைசிறந்த என்ஜின், கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கியா செல்டோஸ் அறிமுகமானது. அறிமுகமான சிறு காலக்கட்டத்திலேயே இது அந்த பிரிவில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இடம்பெற்றது.

    தற்போது கியா நிறுவனம் 2021 செல்டோஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அந்த வரிசையில் தற்போது இந்த மாடல் இந்தியா வர இருக்கிறது. 2021 செல்டோஸ் மாடல் கியா நிறுவனத்தின் புது லோகோ கொண்டிருக்கும் என தெரிகிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் கார் சர்வதேச பந்தய களத்தில் சோதனை செய்யப்படுகிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது EQS மாடலை அறிமுகம் செய்தது. பல்வேறு அதிநவீன அம்சங்கள் நிறைந்த புது EQS குறைந்த ரைடு உயரம், பிரம்மாண்ட மஞ்சள் நிற ஏஎம்ஜி பிராண்டிங் கொண்டுள்ளது. EQS மாடல் மெர்சிடிஸ் நிறுவனத்தின் பிஸ்போக் பிளாட்பார்ம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் மாடல் ஆகும். 

     மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி EQS

    வெளியீட்டை தொடர்ந்து இந்த மாடல் நர்பர்கிரிங் களத்தில் சோதனை செய்யப்படுகிறது. பென்ஸ் நிறுவனத்தின் EQE, EQE எஸ்யுவி மற்றும் EQS எஸ்யுவி மாடல்களும் இதே பிளாட்பார்மில் உருவாகின்றன. இந்த கார் மணிக்கு 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

    இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 770 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இது 334 பிஹெச்பி பவர், 458 என்எம் டார்க் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தியை துவங்குகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் ஹரியானாவில் செயல்படும் தனது உற்பத்தி ஆலையில் வாகன உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது. எனினும், ஆலையை மூடாமல் நோயாளிகளுக்கு பயன்தரும் வகையில் ஆக்சிஜன் உற்பத்தியை துவங்குகிறது. இதே பணிகளை குஜராத் ஆலையிலும் மேற்கொள்ள இருப்பதாக மாருதி தெரிவித்து இருக்கிறது.

     மாருதி சுசுகி

    `கார் உற்பததி பணிகளின் போது மாருதி சுசுகி குறைந்த அளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்து வருகிறது. தற்போதைய சூழலில் கிடைக்கும் ஆக்சிஜன் அனைத்தும் உயிர்களை காப்பாற்றவே பயன்படுத்தப்பட வேண்டும்.' என மாருதி சுசுகி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    ஆக்சிஜன் உற்பத்திக்காக மாருதி சுசுகி ஏற்கனவே திட்டமிட்டிருந்த வருடாந்திர பராமரிப்பு பணிகளை ஒத்திவைத்துள்ளது. முன்னதாக பராமரிப்பு பணிகளுக்காக மே 1 முதல் மே 9 வரை ஆலைகளை மூட மாருதி சுசுகி திட்டமிட்டு இருந்தது.
    இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை ஒட்டி எம்ஜி மோட்டார் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்து இருக்கிறது. நாடு முழுக்க கொரோனா தொற்று அதிகரித்து வருவதை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புது அறிவிப்பை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் எம்ஜி மோட்டார் ஆலை ஏப்ரல் 29 துவங்கி மே 5 வரை மூடப்படுகிறது.

     ட்விட்டர் ஸ்கிரீன்ஷாட்

    கொடிய வைரசிடம் இருந்து தனது ஊழியர்களை காப்பாற்றும் நோக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதுதவிர தேவ்நந்தன் கேஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜன் வினியோகத்தை அதிகப்படுத்த இருப்பதாக எம்ஜி மோட்டார் தெரிவித்து உள்ளது.

    முன்னதாக எம்ஜி கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களை அதனை டெலிவரி பெற இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என எம்ஜி மோட்டார் தெரிவித்தது.
    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஹன்டர் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய கிளாசிக் ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஹன்டர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350சிசி பிரிவில் அறிமுகமாக இருக்கிறது.

     கோப்புப்படம்

    இந்த மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ஜெ பிளாட்பார்மில் உருவாகும் என தெரிகிறது. சமீபத்தில் ராயல் என்பீல்டு அறிமுகம் செய்த Meteor 350 மாடலும் இதே பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஸ்பை படங்களின் படி புது மாடல் ஒற்றை சீட் கொண்டிருக்கிறது. மேலும் பிலாக் அலாய் வீல்கள், அகலமான ஹேன்டில்பார் வழங்கப்பட்டுள்ளது. 

    இத்துடன் வட்ட வடிவ ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் மற்றும் இன்டிகேட்டர்கள் உள்ளன. வட்ட வடிவ ஹெட்லேம்ப் கிளஸ்டர் எல்இடி டே-டைம் ரன்னிங் லைட் கொண்டிருக்கிறது. இதன் வெளிப்புற தோற்றம் Meteor 350 போன்றே காட்சியளிக்கிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.

    கியா மோட்டார் கார்ப்பரேஷன் புது லோகோவை அறிமுகம் செய்தது. புது லோகோ அறிமுகம் செய்யப்பட்டதோடு, பிராண்டு பெயரை கியா மோட்டார்ஸ்-இல் இருந்து கியா இந்தியா என மாற்றி இருக்கிறது. மேலும் ஏழு எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கியா இந்தியா தெரிவித்துள்ளது.

     கியா இந்தியா லோகோ

    உலகின் முன்னணி பிராண்டாக கியா இருக்கிறது. இந்திய சந்தையில் 2018 ஆம் ஆண்டு கியா நிறுவனம் களமிறங்கியது. ஆந்திர பிரதேச மாநிலத்தின் அனந்தப்பூர் பகுதியில் கியா தனது ஆலையை நிறுவி இருக்கிறது. 2018 இந்திய ஆட்டோ எக்ஸ்போ விழாவில் தனது எஸ்பி கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது.

    இந்த காம்பேக்ட் எஸ்யுவி மாடலை ஆகஸ்ட் 2019-இல் கியா செல்டோஸ் பெயரில் அறிமுகம் செய்தது. பின் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடலாக கியா செல்டோஸ் மாறியது. இதைத் தொடர்ந்து கியா சொனெட் மற்றும் கியா கார்னிவல் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 250 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விரைவில் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.


    பஜாஜ் டாமினர் 250 மோட்டார்சைக்கிள் விரைவில் புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஏற்கனவே இந்திய விற்பனையகங்களை வந்தடைந்துள்ளது. 

    இந்த மோட்டார்சைக்கிள் தற்போது அரோரா கிரீன் மற்றும் வைன் பிளாக், கேன்யான் ரெட் மற்றும் சார்கோல் பிளாக் நிறங்களில் அறிமுகமாகிறது. புது நிறங்கள் டாமினர் 400 மாடலில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. இரு டாமினர்களை வித்தியாசப்படுத்தும் அம்சங்களில் நிறம் மற்றும் பேட்ஜிங் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது.

     பஜாஜ் டாமினர் 250

    புது நிறங்கள் தவிர பஜாஜ் டாமினர் 400 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் தொடர்ந்து 249சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் விலையும் சமீபத்தில் மாற்றப்பட்டது. தற்போது இதன் விலை ரூ. 1.70 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என மாறியுள்ளது. 

    இந்திய சந்தையில் பஜாஜ் டாமினர் 250 மாடல் யமஹா FZ25 மற்றும் ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளைன் 250 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    போர்டு நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை அதிரடியாக மாற்றப்பட்டு விட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    போர்டு இந்தியா நிறுவனம் பிகோ, ஆஸ்பையர், பிரீஸ்டைல், இகோஸ்போர்ட் மற்றும் என்டேவர் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது. புதிய விலை ஏப்ரல் முதல் அமலாகி இருக்கிறது. 

    இகோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யுவி டைட்டானியம் பிளஸ், எஸ்இ மற்றும் எஸ் வேரியண்ட்கள் தவிர அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 20 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன்படி இகோஸ்போர்ட் பெட்ரோல் மாடல் விலை ரூ. 8.19 லட்சம் என்றும் டீசல் மாடல் விலை ரூ. 8.89 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    போர்டு கார்

    பிகோ மற்றும் பிரீஸ்டைல் மாடல்கள் விலை ரூ. 18 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இரு மாடல்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    பிளாக்ஷிப் புல்-சைஸ் எஸ்யுவியான என்டேவர் மாடல் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி விலை ரூ. 70 ஆயிரமும், டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி மற்றும் ஸ்போர்ட் 4x4 ஏடி வேரியண்ட்கள் விலை ரூ. 80 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஆஸ்பையர் மாடல் விலை ரூ. 3 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சீரிஸ் கார்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளை துவங்கி உள்ளது.

    டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புது மாடல்களுக்கு BZ பெயர்களை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி விண்ணப்பித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் மத்திய வர்த்தகம் மற்றும் காப்புரிமை பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது.

     டொயோட்டா BZ4X

    டொயோட்டாவின் புது BZ சீரிஸ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கானது ஆகும். டொயோட்டா BZ சீரிசில் 2025 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் ஏழு புதிய எலெக்ட்ரிக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. சமீபத்தில் டொயோட்டா BZ4X கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது BZ சீரிசில் முதல் மாடல் ஆகும்.

    இந்திய சந்தையில் பயன்படுத்த BZ, BZ, BZ1X, BZ2, BZ2X, BZ3, BZ3X, BZ4, BZ4X, BZ5 மற்றும் BZ5X போன்ற பெயர்களுக்கு பதிவு செய்துள்ளது. இவை கடந்த ஆண்டு மே முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுக்கான கால அவகாசம் 2030 வரை பொருந்தும்.
    ×