என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
ஸ்கோடா நிறுவனத்தின் மூன்று புது எஸ்யுவி மாடல்கள் வெளியீடு திட்டமிட்டப்படி நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 2021 ஆக்டேவியா மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வந்தது. இம்மாதம் அறிமுகமாக இருந்த நிலையில், 2021 ஸ்கோடா ஆக்டேவியா வெளியீடு ஓத்துவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு பெருமளவு அதிகரித்து வருவதால், இதன் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு இயக்குனர் ஜாக் ஹாலின்ஸ் தெரிவித்து இருக்கிறார்.
`சமயங்களில் சிறு இடைவெளி எடுத்துக் கொண்டு, உறுதியுடன் வருவது மிகவும் அவசியமானது. ஸ்கோடா ஆட்டோ புதிய ஆக்டேவியா வெளியீட்டை தற்போதைய நிலைமை மாறும் வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. வெளியீடு சார்ந்த திட்டங்களை தொடர்ந்து தெரிவிப்போம். பாதுகாப்பாக இருந்து, வைரஸ் தொற்றை எதிர்த்து ஒன்றாக பாடுபடுவோம்.' என ஜாக் ஹாலிஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
மாருதி சுசுகி சியாஸ் மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட டொயோட்டா கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
டொயோட்டா மற்றும் மாருதி சுசுகி நிறுவனங்கள் கூட்டணியில் பலேனோ மாடலை தழுவி கிளான்சா, விட்டாரா பிரெஸ்ஸா மாடலை தழுவி அர்பன் குரூயிசர் மாடல்கள் இந்திய சந்தையில் இதுவரை வெளியாகி இருக்கின்றன. இருநிறுவனங்கள் இடையிலான கூட்டணி 2017 ஆம் ஆண்டு துவங்கியது.

இரு மாடல்களை தொடர்ந்து மாருதி சுசுகியின் சியாஸ் செடான் மாடல் டொயோட்டா பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய செடான் மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மற்ற இரு மாடல்களை போன்றே புதிய மாடலிலும் டொயோட்டா பேட்ஜ், ஸ்டீரிங் வீல் மற்றும் மல்டி-இன்போ டிஸ்ப்ளே மட்டும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இந்த கார் சியாஸ் தற்போது வழங்கும் பெரும்பாலான அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
மஹிந்திரா நிறுவனம் தனது பிஎஸ்6 கார் மாடல்களுக்கு இந்த மாதம் வழங்கி வரும் சலுகை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது பிஎஸ்6 மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி கார் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 3.06 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் புதிய தார் மாடல் தவிர அனைத்து கார்களுக்கும் வழங்கப்படுகின்றன.
சலுகைகள் எக்சேன்ஜ் போனஸ், தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் சலுகை உள்ளிட்டவைகளாக வழங்கப்படுகின்றன. இவை கேயுவி100 என்எக்ஸ்டி துவங்கி பிளாக்ஷிப் எஸ்யுவி மாடலான அல்டுராஸ் ஜி4 என பெரும்பாலான மாடல்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை ஏப்ரல் 30 வரை வழங்கப்படுகின்றன.
சலுகை விவரங்கள்:
மஹிந்திரா கேயுவி100 என்எக்ஸ்டி - அதிகபட்சம் ரூ. 62,055
தள்ளுபடி ரூ. 38,055 வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 20 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 4 ஆயிரம் வரை
மஹிந்திரா எக்ஸ்யுவி300 - அதிகபட்சம் ரூ. 44,500
தள்ளுபடி ரூ. 10 ஆயிரம் வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 25 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 4,500
கூடுதல் பலனகள் ரூ. 5 ஆயிரம் வரை

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 - அதிகபட்சம் ரூ. 3.06 லட்சம்
தள்ளுபடி ரூ. 2.2 லட்சம் வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 50 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 16 ஆயிரம்
கூடுதல் பலனகள் ரூ. 20 ஆயிரம் வரை
மஹிந்திரா மராசோ - அதிகபட்சம் ரூ. 41 ஆயிரம்
தள்ளுபடி ரூ. 20 ஆயிரம் வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 15 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 6 ஆயிரம் வரை
மஹிந்திரா ஸ்கார்பியோ - அதிகபட்சம் ரூ. 36,542
தள்ளுபடி ரூ. 7,042
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 15 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 4,500
கூடுதல் பலனகள் ரூ. 10 ஆயிரம் வரை
மஹிந்திரா எக்ஸ்யுவி500 - அதிகபட்சம் ரூ. 85,800
தள்ளுபடி ரூ. 36,800 வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 25 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 9 ஆயிரம் வரை
கூடுதல் பலனகள் ரூ. 15 ஆயிரம் வரை
மஹிந்திரா பொலிரோ - அதிகபட்சம் ரூ. 17,500
தள்ளுபடி ரூ. 3,500 வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 10 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 4 ஆயிரம் வரை
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலக ஊழியர்கள் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்தபடி பணியாற்றி வருகின்றனர்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு ஆலை மற்றும் சர்வதேச பாகங்கள் மையம் நான்கு நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும். உள்ளூரில் கொரோனா பாதிப்பு நிலையை பொருத்து ஏப்ரல் 22 முதல் மே 1 வரை சீரற்ற முறையில் இந்த நடவடிக்கை தொடரும் என ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து உள்ளது.
உற்பத்தி ஆலை மூடப்பட்டு இருந்தாலும், கார்ப்பரேட் அலுவலக பணிகள் தொடர்ந்து நடைபெறும். கார்ப்பரேட் அலுவலக ஊழியர்கள் ஏற்கனவே வீட்டில் இருந்தபடி பணியாற்றி வருகின்றனர். சுழற்சி முறையில் குறைந்த ஊழியர்களை மட்டும் அலுவலகம் வர ஹீரோ உத்தரவிட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் எஸ்யுவி இ ப்ரோடோடைப் மாடல் விவரங்களை அதிகாரப்பூர்வாக வெளியிட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கிராஸ்-ஒவர் கான்செப்ட் மாடலை 2021 ஆட்டோ ஷாங்காய் நிகழ்வில் காட்சிப்படுத்தி இருக்கிறது. புதிய மாடல் எஸ்யுவி இ ப்ரோடோடைப் என்றே அழைக்கப்படுகிறது. முன்னதாக ஹோண்டா நிறுவனம் இ கான்செப்ட் மாடலை இதேபோன்றே காட்சிப்படுத்தி இருந்தது.
சமீபத்தில் ஹோண்டா ஹெச்ஆர்-வி ஹைப்ரிட் மாடலை ஹோண்டா அறிமுகம் செய்தது. புதிய எஸ்யுவி இ ப்ரோடோடைப் தோற்றத்தில் ஹெச்ஆர்வி மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. எனினும், புது மாடலில் மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இலுமினேட் செய்யப்பட்ட ஹோண்டா லோகோ, சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது.

இதன் பம்ப்பரில் எல்இடி ஸ்ட்ரிப்கள் உள்ளன. இத்துடன் பெரிய வீல்கள், பின்புறம் அதிக எல்இடி ஸ்ட்ரிப்கள், ரூப் மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. சீன சந்தையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து எலெக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டு வருகிறது.
இதே நிகழ்வில் பிரீஸ் PHEV ப்ரோடோடைப், ஹோண்டாவின் முதல் பிளக்-இன் ஹைப்ரிட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் ஹோண்டாவின் மூன்றாம் தலைமுறை கனெக்ட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா என் மாடல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதியின்றி அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தனது கோனா என் மாடலை ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இது ஹூண்டாய் நிறுவனத்தின் நான்காவது என் சீரிஸ் மாடல் ஆகும்.

புதிய கோனா என் மாடலில் 2.0 லிட்டர் T-GSi என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 275 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் வெலோஸ்டர் என் மற்றும் ஐ30என் போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த மாடலில் FWD மட்டும் வழங்கப்படும் என்றும் இதனுடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் மாடல் கார் புது மாற்றங்களுடன் டொயோட்டா பிராண்டிங் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாருதி சுசுகி சியாஸ் மாடலை டொயோட்டா ரி-பேட்ஜ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. யாரிஸ் செடான் மாடலுக்கு மாற்றாக சியாஸ் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரு நிறுவனங்கள் கூட்டணியில் வெளியாகும் மூன்றாவது மாடலாக இது இருக்கும்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், சியாஸ் மாடல் கிரிலில் டொயோட்டா பேட்ஜ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை கொண்டு டொயோட்டா நிறுவனம் சியாஸ் மாடலை ரி-பேட்ஜ் செய்யலாம் என கூறப்படுகிறது.
தற்போது செடான் பிரிவில் டொயோட்டா நிறுவனம் யாரிஸ் மாடலை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் சியாஸ் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல் அறிமுகமாகும் பட்சத்தில் யாரிஸ் விற்பனை இந்திய சந்தையில் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனம் 2021 டிரைபர் மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனை விவரங்களை பார்ப்போம்.
ரெனால்ட் நிறுவனத்தின் 2021 டிரைபர் மாடல் விற்பனையில் 75 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இந்தியாவில் புதிய டிரைபர் மாடல் ஆகஸ்ட் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் சந்தையில் 4.79 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.
2021 டிரைபர் மாடல் புது அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின் மேம்பட்ட மாடல் விலை ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி ரூ. 15 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. புதிய டிரைபர் மாடல் டூயல்-டோன் நிறத்திலும் கிடைக்கிறது. எனினும், இது டாப் எண்ட் RXZ வேரியண்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.

புதிய ரெனால்ட் டிரைபர் மாடல் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 71 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், ஏஎம்டி ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு அதிகபட்சம் 19 கிலோமீட்டர் வரை செல்லும்.
இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி பிஎம்டபிள்யூ முதலிடம் பிடித்து இருக்கிறது.
ஆடம்பர கார் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களாக பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இருக்கின்றன. மார்ச் மாதத்தில் 826 யூனிட்களை விற்பனை செய்த பிஎம்டபிள்யூ இந்திய ஆடம்பர கார் விற்பனையில் முன்னணி இடம்பிடித்து இருக்கிறது.
இந்த பட்டியலில் முதலிடத்தை மெர்சிடிஸ் பென்ஸ் வெறும் 14 யூனிட்கள் குறைவாக விற்பனை செய்ததால் இழந்துள்ளது. பென்ஸ் நிறுவனம் மார்ச் மாதத்தில் 812 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்த பட்டியலில் மூன்றாவது இடம்பிடித்து இருக்கிறது. இந்த நிறுவனம் 214 யூனிட்களை விற்பனை செய்தது.

இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏ கிளாஸ் லிமோசின், இ கிளாஸ் பேஸ்லிப்ட் என புது மாடல்களை அறிமுகம் செய்தது. இதேபோன்று பிஎம்டபிள்யூ நிறுவனம் 6 சீரிஸ் ஜிடி மாடலை அறிமுகம் செய்தது. இந்த கார் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
புதிய 6 சீரிஸ் ஜிடி மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 255பிஹெச்பி/400 என்எம் டார்க், 188பிஹெச்பி/400 என்எம் டார்க் மற்றும் 261பிஹெச்பி/620 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவன கார்களின் பியூவல் பம்ப் கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து கார்களை ரீகால் செய்யும் பணி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது கார்களை ரீகால் செய்வதாக கடந்த ஆண்டு அறிவித்தது. இதுவரை 77 ஆயிரம் யூனிட்களை ஹோண்டா ரீகால் செய்து இருக்கிறது. பியூவல் பம்ப் பாகத்தில் கோளாறு கண்டறியப்பட்டதே கார்கள் ரீகால் செய்வதற்கான காரணம் ஆகும்.

இந்த பிரச்சினையில் அமேஸ், 4-ம் தலைமுறை சிட்டி, டபிள்யூஆர்-வி, ஜாஸ், சிவிக், பிஆர்-வி மற்றும் சிஆர்-வி போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. மாடலை பொருத்து ஜனவரி 2019 முதல் செப்டம்பர் 2019 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன.
கார்களின் பியூவல் பம்ப் கோளாறு நாளடைவில் என்ஜினுக்கு தேவையான எரிபொருள் வினியோகத்தை தடைப்படுத்தலாம். இதன் காரணமாக வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் போக வாய்ப்புகள் உண்டு. இதுதவிர கம்பஷன் வழிமுறை சார்ந்த மற்ற பாகங்களையும் இது சேதப்படுத்தும்.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் யூனிட்களில் கோளாறு இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் 31,346 மோட்டார்சைக்கிள் யூனிட்களை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. இந்த யூனிட்களில் ஹெட்லைட் பல்பு கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய தகவல்களின்படி இந்த யூனிட்கள் அனைத்தும் அமெரிக்காவில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை விற்பனை செய்யப்பட்ட ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டெர் பிரிவில் 14 மாடல்களில் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளது. இத்துடன் மாற்று ஹெட்லைட்களாக விற்கப்பட்ட 800 யூனிட்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புள்ள மாடல்களில் ஹெட்லைட் அதிக சூடாகி டிப் பகுதியில் துளையிடும் வாய்ப்பு இருக்கிறது.

இத்துடன் ஹெட்லைட்டை லோ- ஹை பீம்களுக்கு ஸ்விட்ச் செய்யும் போது சீரற்ற முறையில் இயங்குவது, சமயங்களில் முற்றிலும் இயங்காமல் போவது போன்ற குறைபாடும் ஏற்படுகிறது.
பாதிக்கப்பட்ட 14 ஸ்போர்ட்ஸ்டர் மாடல்கள் - XL1200C (2019), XL1200CX (2019-2020), XL1200NS (2019-2021), XL1200X (2019-2021), XL1200XS (2019), XL883L (2019) மற்றும் XL883N (2019-2021) ஆகும். இந்த மாடல்களை பயன்படுத்துவோரை ஹார்லி டேவிட்சன் தொடர்பு கொண்ட ஹெட்லைட் பல்பு ஷீல்டை முற்றிலும் இலவசமாக மாற்றி தருகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது கார் மாடல்களில் அந்த வசதியை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களில் சிஎன்ஜி வசதியை வழங்க இருக்கிறது. எந்தெந்த மாடல்களில் சிஎன்ஜி வசதி வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், டியாகோ, டிகோர் மாடல்கள் சிஎன்ஜி மையங்களில் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
இரு ப்ரோடோடைப்களும் தற்போது விற்பனை செய்யப்படும் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதையொட்டி சமீப காலங்களில் சிஎன்ஜி மாடல்கள் சிறந்த மாற்றாக மாறி வருகின்றன.

ஏற்கனவே ஹூண்டாய் மற்றும் மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள் சிஎன்ஜி வசதியை வழங்கி வருகின்றன. இந்திய சந்தையில் பயணிகள் வாகன விற்பனையில் டாடா மோட்டார்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. சிஎன்ஜி வசதி அறிமுகம் செய்யும் பட்சத்தில் வாகன விற்பனை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.
டாடா டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் சிஎன்ஜி கிட் பொருத்த சிறந்த தேர்வாக இருக்கும். இரு மாடல்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 84 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.






