என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
அப்ரிலியா SXR 125 மேக்சி ஸ்கூட்டர் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
அப்ரிலியா நிறுவனம் தனது SXR 125 மேக்சி ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய SXR 125 மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. அப்ரிலியா SXR 125 முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும்.

விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய அப்ரிலியா ஸ்கூட்டர் இந்திய விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய அப்ரிலியா SXR 125 மாடல் விலை ரூ. 1.16 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என கூறப்படுகிறது. இது SXR 160 மாடலை விட ரூ. 9 ஆயிரம் குறைவு ஆகும்.
அறிமுகமானதும் புதிய அப்ரிலியா SXR 125 மாடல் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலுக்கு போட்டியாக அமையும். டிவிஎஸ் என்டார்க் ரேஸ் எடிஷன் இந்த மாடலுக்கு போட்டியாக இருக்காது என்றாலும் இது அப்ரிலியா SXR 125 மாடலை விட ரூ. 38 ஆயிரம் விலை குறைவு.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்த எஸ்-சிஎன்ஜி ரக வாகன விவரங்களை வெளியிட்டுள்ளது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் 2020-21 நிதியாண்டில் மட்டும் 1.57 லட்சம் எஸ்-சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. எஸ்-சிஎன்ஜி வாகன விற்பனையில் இது மற்ற நிறுவனங்கள் இதுவரை எட்டாத மைல்கல் ஆகும்.

தற்போது ஆல்டோ, செலரியோ, வேகன்ஆர், எஸ் பிரெஸ்ஸோ, இகோ, எர்டிகா மற்றும் டூர் எஸ் போன்ற மாடல்களில் மாருதி சுசுகி சிஎன்ஜி வசதியை வழங்குகிறது. பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி சூப்பர் கேரி வர்த்தக வாகனத்திலும் இதே வசதியை மாருதி சுசுகி வழங்கி வருகிறது.
2016-17 மற்றும் 2017-18 நிதியாண்டில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 70 ஆயிரம் எஸ் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்தது. பின் இரண்டு நிதியாண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சம் யூனிட்களாக அதிகரித்தது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெக்டார் சீரிஸ் மாடல்கள் விலை இந்தியாவில் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஹெக்டார் மாடலை தொடர்ந்து மூன்றடுக்கு இருக்கைகள் ஹெக்டார் வேரியண்டை எம்ஜி ஹெக்டார் பிளஸ் பெயரில் அறிமுகம் செய்தது. இத்துடன் முற்றிலும் மின்சக்தியில் இயங்கும் எம்ஜி இசட்எஸ் இவி மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
தற்போது ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. எம்ஜி ஹெக்டார் மாடல் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் விலை ரூ. 28 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் கொண்ட ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்களின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஸ்டைல், சூப்பர் மற்றும் ஸ்மார்ட் வேரியண்ட்களின் விலை ரூ. 38 ஆயிரமும், ஷார்ப் வேரியண்ட் விலை ரூ. 43 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
எம்ஜி ஹெக்டார் பிளஸ் பெட்ரோல் ஹைப்ரிட் வேரியண்ட்களின் விலை ரூ. 28 ஆயிரமும், சூப்பர் ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்களின் விலை ரூ. 43 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021 முதல் காலாண்டிற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் 2021 முதல் காலாண்டில் மட்டும் 5,90,999 கார்களை விற்பனை செய்து இருக்கிறது. சீனா மற்றும் அமெரிக்க சந்தைகளில் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பென்ஸ் நிறுவனம் வாகன விற்பனையில் 22.3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஐரோப்பியாவில் விற்பனையான நான்கு பென்ஸ் மாடல்களில் ஒன்று xEV மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் ஒட்டுமொத்த விற்பனையில் பத்து சதவீதம் இடம்பிடித்துள்ளன. பென்ஸ் நிறுவனத்தின் EQA மாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 20 ஆயிரம் முன்பதிவுகளை பெற்று இருக்கிறது. இதுதவிர மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் EQS, EQB மற்றும் EQE என மூன்று புது மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
நிசான் நிறுவனம் தனது பிளாக்ஷிப் எஸ்யுவி மாடலுக்கு இந்திய சந்தையில் அசத்தலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
நிசான் நிறுவனம் தனது கிக்ஸ் பிளாக்ஷிப் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகை மற்றும் பலன்களை வழங்குகிறது. நிசான் கிக்ஸ் வேரியண்டிற்கு ஏற்ப சலுகை பலன்கள் வேறுபடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ரூ. 50 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை, ரூ. 20 ஆயிரம் கேஷ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வாடிக்கையாளர் சிபில் ஸ்கோர் பொருத்து வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் நிசான் கிக்ஸ் மாடல் - XL, XV, XV பிரீமியம் மற்றும் XV பிரீமியம் ஒ என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9.49 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 14.64 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிவேகமாக விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் இந்திய விற்பனையில் 9 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இந்திய சந்தையில் இந்த மாடல் 2015 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் இது மாருதி சுசுகி நெக்சா எக்ஸ்பீரியன்ஸ் பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாவது மாடல் ஆகும். இந்திய சந்தையில் 9 லட்சம் யூனிட்கள் விற்பனையை அதிவேகமாக கடந்த நான்கு சக்கர வாகனம் பலேனோ என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது.

இந்தியாவில் அறிமுகமான ஒரே ஆண்டிற்குள் இந்த மாடல் ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது. பின் மற்றொரு ஆண்டிற்குள் 2 லட்சம் யூனிட்கள் விற்பனையானது. 2018 ஆண்டு பலேனோ மாடல் 5 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. 2019 ஆண்டு இந்த எண்ணிக்கை 7 லட்சமாக உயர்ந்தது.
அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் அதிவேகமாக விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக பலேனோ இருக்கிறது. பலேனோ ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் 2021 ஆரா மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
தென் கொரியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்திய சந்தையில் ஆரா சப்-காம்பேக்ட் செடான் மாடலை ரூ. 5.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலின் விலையை ஹூண்டாய் உயர்த்தி இருக்கிறது.
விலை உயர்வின் படி ஹூண்டாய் ஆரா மாடல் விலை ரூ. 5.96 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.34 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. விலை உயர்வுடன் 2021 ஆரா மாடலில் சில அம்சங்கள் நீக்கப்பட்டு இருக்கிறது.

2021 ஆரா மாடலில் புது ரியர் விங் ஸ்பாயிலர், எல்இடி ஸ்பாட்லைட் வழங்கப்படுகிறது. இதன் ஏஎம்டி வேரியண்ட்களில் 15 இன்ச் ஸ்டீல் ஸ்டைல் ரிம்கள் கன்மெட்டல் பினிஷூடன் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் ஏற்கனவே வழங்கப்பட்ட ஆம்கிஸ் ஆடியோ சிஸ்டம் நீக்கப்பட்டு இருக்கிறது. இதன் பேஸ் மாடலான இ வேரியண்டில் 13 இன்ச் ஸ்டீல் ரிம் கொண்ட ஸ்பேர் வீல் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் ஆரா மாடல் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்றுவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை 83 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன், 120 பிஹெச்பி பவர், 172 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 75 பிஹெச்பி பவர், 190 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு 7 சீட் எஸ்யுவி அல்காசர் மாடலில் பல்வேறு அசத்தலான அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
ஆட்டோமொபைல் சந்தையில் 2021 ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 7 சீட் எஸ்யுவியாக அல்காசர் இருக்கிறது. கடந்த மாதம் அல்காசர் மாடலின் வரைபடங்களை ஹூண்டாய் வெளியிட்டது. அந்த வரிசையில் தற்போது இந்த காரின் அம்சங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி புதிய ஹூண்டாய் அல்காசர் மாடலின் வீல்பேஸ் 2760 எம்எம் ஆக இருக்கிறது. புதிய ஹூண்டாய் கார் 2.0 லிட்டர் பெட்ரோல், யு2 1.5 விஜிடி என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 155 பிஹெச்பி மற்றும் 112 பிஹெச்பி திறன் வழங்குகின்றன. இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
முந்தைய தலைமுறை என்ஜினை விட புதிய என்ஜின் 7 பிஹெச்பி கூடுதல் திறன் மற்றும் சிறப்பான மைலேஜ் வழங்கும் என ஹூண்டாய் தெரிவித்து உள்ளது. ஹூண்டாய் அல்காசர் மாடல் இகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவித டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் புது அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் தனது புதிய லோகோவை சர்வதேச சந்தையில் வெளியிட்டது. தற்போது இந்த லோகோ இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை புது டீசர் மூலம் கியா தெரிவித்து இருக்கிறது.
சர்வதேச சந்தையில் ஜனவரி 6 ஆம் தேதி புது லோகோ அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் இது ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகமாகிறது. தற்போதைய லோகோவை சுற்றி சிவப்பு நிற அவுட்லைன் உள்ளது. புதிய லோகோ சில்வர் நிறம் கொண்டிருக்கிறது. புதிய கார் வெளியாகும் போது காரின் நிறத்தையே லோகோவில் பயன்படுத்த கியா முடிவு செய்துள்ளது.

இதேபோன்ற வழிமுறையை பிஎம்டபிள்யூ ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் கார்களுக்கு பிரத்யேக தோற்றத்தை வழங்க முடியும். செல்டோஸ் கிராவிட்டி எடிஷன் காஸ்மெடிக் மாற்றங்களுடன் வெளியாகும் என தெரிகிறது. இத்துடன் கியா சொனெட் மாடலும் புதிய லோகோவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய எக்ஸ்யுவி500 மாடல் அந்த மாதத்தில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை எக்ஸ்யுவி500 நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில், புதிய தலைமுறை எக்ஸ்யுவி500 மாடல் இந்த ஆண்டின் இரண்டு அல்லது மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என மஹிந்திரா நிறுவன தலைமை செயல் அதிகாரி வீஜே நக்ரா தெரிவித்தார்.

புதிய 2021 மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடலில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 152 பிஹெச்பி பவர், 360 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படலாம்.
மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடலில் செங்குத்தான மல்டி-ஸ்லாட் கிரில், பிளஷ் பிட்டிங் டோர் ஹேண்டில்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டிஆர்எல்கள், புது வடிவமைப்பு கொண்ட அலாய் வீல் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சுசுகி நிறுவனத்தின் புதிய ஹயபுசா மாடல் இந்த மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
2021 சுசுகி ஹயபுசா மாடல் இந்திய சந்தையில் ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா டீசர் ஒன்றை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளது. புதிய ஹயபுசா மாடலின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
சர்வதேச சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாடல்களில் ஒன்றாக 2021 சுசுகி ஹயபுசா இருக்கிறது. 1999 ஆண்டு உலகின் அதிவேகமாக செல்லும் மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை ஹயபுசா பெற்றது. இந்த மாடல் மணிக்கு 312 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருந்தது.
2008 ஆம் ஆண்டு வரை உலகின் அதிவேக மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை ஹயபுசா தக்கவைத்து கொண்டிருந்தது. அதிவேக மோட்டார்சைக்கிள் எனும் போது அனைவரின் மனதில் எழும் முதல் மாடலாக ஹயபுசா இருக்கிறது. தற்போது இந்த மோட்டார்சைக்கிள் புது அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.

2021 ஹயபுசா மாடலில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு முழுமையான மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை 2021 ஹயபுசா மாடலில் டூ-டோன் நிறங்கள், எல்இடி ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் சேடில், ட்வின்-சைடு எக்சாஸ்ட் உள்ளது.
இந்த மாடல் யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையிலான 1340சிசி, இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் ரைடு-பை-வயர் எலெக்டிரானிக் திராட்டிள் சிஸ்டம், ரிவைஸ்டு இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் மெக்கானிசம் கொண்டுள்ளது. இந்த சூப்பர்பைக் லிட்டருக்கு 14.9 கிலோமீட்டர் வரை செல்லும் என சுசுகி தெரிவித்து இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்களின் புதிய விலை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா, பார்ச்சூனர், லெஜண்டர் மற்றும் கேம்ரி மாடல்களின் புதிய விலை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
அதன்படி கேம்ரி மாடல் முன்பை விட ரூ. 1,18,000 அதிகமாகி தற்போது ரூ. 40.59 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆடம்பர செடான் மாடல் 2.5 லிட்டர் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் கொண்டுள்ளது. இன்னோவா க்ரிஸ்டா பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 26 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா பெட்ரோல் மற்றும் டீசல் மாடல் புதிய விலை முறையே ரூ. 16.52 லட்சம் மற்றும் ரூ. 16.90 லட்சம் என மாறி இருக்கிறது. பார்ச்சூனர் எஸ்யுவி மாடல் விலை ரூ. 36 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் முன்பை விட ரூ. 72 ஆயிரம் அதிகமாகி இருக்கிறது. இதன் புதிய துவக்க விலை ரூ. 38.30 லட்சம் ஆகும்.
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் கிளான்சா, அர்பன் குரூயூசர், வெல்பயர் போன்ற மாடல்களின் விலை தற்போது மாற்றப்படவில்லை.






