search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மஹிந்திரா எக்ஸ்யுவி500
    X
    மஹிந்திரா எக்ஸ்யுவி500

    புதிய தலைமுறை எக்ஸ்யுவி500 இந்திய வெளியீட்டு விவரம்

    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புதிய எக்ஸ்யுவி500 மாடல் அந்த மாதத்தில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை எக்ஸ்யுவி500 நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாடல் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 

    இந்த நிலையில், புதிய தலைமுறை எக்ஸ்யுவி500 மாடல் இந்த ஆண்டின் இரண்டு அல்லது மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என மஹிந்திரா நிறுவன தலைமை செயல் அதிகாரி வீஜே நக்ரா தெரிவித்தார். 

     மஹிந்திரா எக்ஸ்யுவி500

    புதிய 2021 மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடலில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 152 பிஹெச்பி பவர், 360 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படலாம்.

    மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடலில் செங்குத்தான மல்டி-ஸ்லாட் கிரில், பிளஷ் பிட்டிங் டோர் ஹேண்டில்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், எல் வடிவ எல்இடி டிஆர்எல்கள், புது வடிவமைப்பு கொண்ட அலாய் வீல் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×