என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புது அப்டேட் வழங்கி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது 450எக்ஸ் ஸ்கூட்டருக்கு 13-வது ஒடிஏ அப்டேட் வழங்கி வருகிறது. இந்த அப்டேட் ஏத்தர்ஸ்டேக் ஆட்டம் என  அழைக்கப்படுகிறது. புது அப்டேட் ஸ்கூட்டரில் ப்ளூடூத் சார்ந்து இயங்கும் மியூசிக் மற்றும் கால் அம்சங்களை வழங்குகிறது. 

     எத்தர் 450எக்ஸ்

    இந்த அம்சம் கொண்டு ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரின் டேஷ்போர்டு ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து கொள்ள முடியும். பின் ஆல்பம் ஆர்ட், பாடல்களின் பெயர் மற்றும் பாடியவர் விவரங்களை டிஸ்ப்ளேவை பார்க்க முடியும். மேலும் வாகனம் ஒட்டும் போதே பாடல்களை மாற்றவோ, நிறுத்தவோ செய்யலாம். இது பல்வேறு முன்னணி ஸ்டிரீமிங் மற்றும் பாட்காஸ்ட் சேவைகளுக்கான ஆதரவை கொண்டுள்ளது.

    இத்துடன் அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது உள்ளிட்ட அம்சங்களை ஸ்கூட்டரின் டேஷ்போர்டிலேயே மேற்கொள்ளலாம். மியூசிக் மற்றும் கால் தவிர புது அப்டேட் ஏத்தர் செயலியும் மாற்றப்பட்டு இருக்கிறது. மேம்பட்ட செயலி முழுமையாக மாற்றப்பட்டு தற்போது மிகவும் தெளிவான இன்டர்பேஸ் கொண்டுள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2021 எக்ஸ்யுவி500 புது வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எஸ்யுவி மாடல் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டது. எனினும், அவ்வாறு அறிமுகமாகவில்லை. பின் இந்த மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய எக்ஸ்யுவி500 மாடல் இந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் விற்பனை செப்டம்பர் மாத வாக்கில் துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது. வினியோகம் நவம்பர் மாத வாக்கில் துவங்கும் என தெரிகிறது. 

     மஹிந்திரா எக்ஸ்யுவி500

    வெளியீட்டுக்கு முன் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யுவி400 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இந்த மாடலின் பொனெட்டில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. 

    புதிய 2021 மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடலில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 152 பிஹெச்பி பவர், 360 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படலாம்.
    கேடிஎம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    கேடிஎம் நிறுவனம் அடுத்த தலைமுறை ஆர்சி சீரிஸ் மாடல்களை உருவாக்கும் பணிகளில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடல் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது புதிய ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன.

    அதன்படி புதிய கேடிஎம் ஆர்சி 390 உற்பத்திக்கு கிட்டத்தட்ட தயாராகி விட்டதாக தெரிகிறது. இந்த மாடல் அசத்தலான டிசைன், மேம்பட்ட குஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     கேடிஎம் ஆர்சி 390

    2021 கேடிஎம் ஆர்சி 390 மாடலில் புதிய முன்புறம் தோற்றம் பெறுகிறது. டூயல் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் தற்போது பெரிய எல்இடி ஹெட்லேம்ப்களாக மாறி டூயல்-ப்ரோஜக்டர்களை கொண்டிருக்கிறது. இதன் பேரிங்கும் முன்பு இருந்ததை விட வித்தியாசமாக மாற்றப்பட்டு சற்று கூர்மையாக காட்சியளிக்கிறது.

    புதிய ஆர்சி  390 மாடலில் 373.2 சிசி, சிங்கில் சிலிண்டர், பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்படுகிறது. இது 44 பிஹெச்பி பவர், 36 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2021 ஆர்சி 200 மாடலில் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட 199 சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இது 25 பிஹெச்பி பவர், 19.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    இந்தியாவில் மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் நீட்டித்து இருக்கிறது.


    இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பு காரணமாக ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் போன்ற மோட்டார் வாகன ஆவணங்கள் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் பலமுறை நீட்டித்து வந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் கால அவகாசம் முடிவடைவதாக இருந்தது.

    தற்போது நாட்டின் பல பகுதிகளில் நோய் பரவல் அதிகரித்து வரும் நிலையிலும் தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ள நிலையிலும் இந்த கால அவகாசத்தை ஜூன் மாதம் 30-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே இந்த கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததன் பெயரில் மத்திய அரசு தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது முழு எலெக்ட்ரிக் கார் எஸ் கிளாஸ் மாடலை தழுவி உருவாகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் ஏப்ரல் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது விஷன் EQS கான்செப்டை தழுவி உருவாகி இருக்கிறது. 

     மெர்சிடிஸ் பென்ஸ் EQS

    புதிய பென்ஸ் எலெக்ட்ரிக் மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் ன்றும் இது 108kWh பேட்டரி பேக் மற்றும் 469 பிஹெச்பி வழங்கும் மோட்டார் வழங்கப்படுகிறது. புதிய பென்ஸ் EQS மாடல் தானியங்கி டிரைவர் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு முறைகளை கொண்டிருக்கும் என தெரிகிறது. 

    இந்த கார் உள்புறம் MBUX ஹைப்பர் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இது பயனர் அமரும் பகுதியில் சிறிய ஸ்கிரீனை வழங்குகிறது. சர்வதேச சந்தையை தொடர்ந்து புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQS எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
    போர்டு நிறுவனத்தின் எதிர்கால கார் மாடல்களில் பயன்படுத்தப்பட இருக்கும் என்ஜின் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.


    போர்டு இந்தியா நிறுவனம் தனது எதிர்கால கார் மாடல்களில் மஹிந்திரா நிறுவன என்ஜின்களை பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் BX772 குறியீட்டு பெயர் கொண்ட காம்பேக்ட் எஸ்யுவி, BX744 குறியீட்டு பெயரில் உருவாகும் புது சப்-4 மீட்டர் எஸ்யுவிக்களில் மஹிந்திரா என்ஜின் இடம்பெறாது என தெரிகிறது.

     போர்டு கார்

    இரு எஸ்யுவி மாடல்களும் 2022-23 நிதியாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இரு மாடல்களிலும் மஹிந்திரா உற்பத்தி செய்த என்ஜின் வழங்கப்பட இருந்தது. எனினும், தற்போதைய தகவல்களின்படி இரு நிறுவனங்களும் என்ஜின் பயன்பாட்டு விவகாரத்தில் தங்களின் முடிவை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் தனது வாகனங்களில் சொந்த என்ஜின்களை வழங்க போர்டு முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. `டிசம்பர் 31, 2020 அன்று  போர்டு மற்றும் மஹிந்திரா இணைந்து முந்தைய கூட்டு வியாபார திட்டத்தை தொடர வேண்டாம் என முடிவு செய்துள்ளன.' என்று போர்டு இந்தியா செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
    ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.

    ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் கைகர், டஸ்டர், டிரைவர் மற்றும் க்விட் என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது இவற்றின் விலையை உயர்த்துவதாக ரெனால்ட் அறிவித்து இருக்கிறது. உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதை விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    முன்னதாக 2021 ஜனவரி மாதத்தில் ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ரூ. 40 ஆயிரம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போதைய விலை உயர்வு ஏப்ரல் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது. சமீபத்தில் ரெனால்ட் நிறுவனம் 2021 டிரைபர் மாடலை டூயல்-டோன் நிறங்களில் அறிமுகம் செய்தது.

    புது காரில் ஸ்டீரிங் வீல்-மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர புதிய டிரைபர் மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    பென்ட்லி நிறுவனம் அதிக திறன் கொண்ட தனது புதிய ஆடம்பர சூப்பர்கார் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பென்ட்லி நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஆடம்பர சூப்பர்கார் மாடலான, கான்டினென்டல் ஜிடி அறிமுகம் செய்தது. புதிய கார் கான்டினென்டல் ஜிடி ஸ்பீடு என அழைக்கப்படுகிறது. இந்த கார் அதிக திறன் கொண்டிருப்பதால், இந்த பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

    புதிய ஜிடி ஸ்பீடு மாடலில் 6.0 லிட்டர் டபிள்யூ12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 650 பிஹெச்பி பவர், 900 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது அதிகபட்சமாக 335 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

     பென்ட்லி கான்டினென்டல் ஜிடி ஸ்பீடு

    தோற்றத்தில் புதிய கார் எந்த மாற்றமும் இன்றி பெரிய செவ்வக வடிவம் கொண்ட முன்புற கிரில், இரட்டை வட்ட-வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளன. இதன் ரேடியேட்டர் கிரில் பகுதி டார்க் டின்ட் கொண்டுள்ளது. காரின் முன்புற பென்டர் குரோம் பினிஷ் செய்யப்பட்டு ஸ்பீடு பேட்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த கார் 22 இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. மேலும் இவற்றை பிரைட் சில்வர், டார்க் டின்ட் அல்லது கிளாஸ் பிளாக் பினிஷ்களில் தேர்வு செய்து கொள்ளும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

    முன்னதாக பென்ட்லி நிறுவனம் தனது மேம்பட்ட பென்ட்யகா மாடலை இந்திய சந்தையில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இந்த காரின் துவக்க விலை ரூ. 4.10 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் குறைந்த விலை டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளை வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளை ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. இது டிரையம்ப் நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் ஆகும். இந்தியாவில் இதன் விலை ரூ. 6 முதல் 7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

    டிரைடென்ட் 660 மாடலில் ப்ளூடூத் மாட்யூல் வசதியுடன் கூடிய டிஎப்டி ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனுடன் இணைந்து கொண்டு செயல்படும். மேலும் கூடுதல் தொகைக்கு கோப்ரோ கேமரா கண்ட்ரோல் செய்வதற்கான வசதியும் இந்த மாடலுடன் வழங்கப்படுகிறது. 

     டிரையம்ப் டிரைடென்ட் 660

    புதிய டிரையம்ப் டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிளில் 660 சிசி இன்-லைன் மூன்று சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 80 பிஹெச்பி பவர், 64 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.

    இத்துடன் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் எல்இடி லைட்டிங் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில் டிஎப்டி டிஸ்ப்ளே, ஆப்ஷனல் மை டிரையம்ப் கனெக்டிவிட்டி சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் டிரைடென்ட் 660 மோட்டார்சைக்கிள் காவசகி இசட்650 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5.94 லட்சம் ஆகும்.
    டேட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    டேட்சன் நிறுவனம் மார்ச் மாதத்திற்கான சலுகை, தள்ளுபடி மற்றும் பலன்களை அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்து டேட்சன் மாடல்களுக்கும் இந்த சலுகை மற்றும் பலன்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி டேட்சன் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன.

     டேட்சன் கார்

    இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. என்ட்ரி லெவல் டேட்சன் ரெடி-கோ மாடலுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், அரசு மற்றும் பொது துறை ஊழியர்களுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    டேட்சன் கோ மற்றும் டேட்சன் கோ பிளஸ் காம்பேக்ட் எம்பிவி மாடல்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் ரூ. 20 ஆயிரம் கேஷ் போனஸ், ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. டேட்சன் கோ மாடல் விலை ரூ. 4.02 லட்சத்திலும், கோ பிளஸ் மாடல் விலை ரூ. 4.25 லட்சம் முதல் துவங்குகிறது.
    சிட்ரோயன் நிறுவனத்தின் புது விற்பனை மையங்கள் ஆறு நகரங்களில் திறக்கப்பட்டு இருக்கிறது.


    இந்தியா முழுக்க விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறக்கும் பணிகளில் சிட்ரோயன் நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது. சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எஸ்யுவி மாடலாக சி5 ஏர்கிராஸ் ஏப்ரல் 7  ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    இந்த நிலையில், சிட்ரோயன் நிறுவனம் தனது முதல் விற்பனையகத்தை ஆமதாபாத் நகரில் திறந்தது. தற்போது, பூனே, ஐதராபாத், கொல்கத்தா, டெல்லி, கொச்சி மற்றும் குருகிராம் என ஆறு புது நகரங்களில் சிட்ரோயன் தனது விற்பனை மையங்களை திறந்துள்ளது. 

     சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்

    புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 175 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் பீல் மற்றும் ஷைன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். இத்துடன் பியல் வைட், குமுலஸ் கிரே, டிஜூசா புளூ மற்றும் பெர்லா நெரா பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.
    இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கும் பழைய வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.


    மத்திய சாலை பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் 15 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள பழைய வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது. புதிய கட்டணம் அக்டோபர் 1, 2021 முதல் அமலுக்கு வருகிறது. 

    அதன்படி 15 ஆண்டுகள் பழைய காரை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். 15 ஆண்டுகள் பழைய இருசக்கர வாகனத்திற்கு ரூ. 1000 பதிவு கட்டணம் ஆகும். இறக்குமதி செய்யப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கான கட்டணம் முறையே ரூ. 10 ஆயிரம் மற்றும் ரூ. 40 ஆயிரம் ஆகும். 

     கோப்புப்படம்

    பதிவு சான்றிதழை புதுப்பிக்க தாமதம் ஏற்பட்டால், அபராதம் வசூலிக்கப்படும். தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ. 300 அபராதம் செலுத்த வேண்டும். கார்களுக்கான அபராதம் ஒவ்வொரு மாதத்திற்கும் ரூ. 500 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    15 ஆண்டுகளுக்கும் பழைய வாகனங்களுக்கான புதுப்பித்தல், பதிவு மட்டுமின்றி வாகனங்களின் தகுதி சான்று (FC) பெறுவதற்கான கட்டணம் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 400 முதல் ரூ. 500 ஆக மாற்றப்பட்டு இருக்கிறது. கார்களுக்கான கட்டணம் ரூ. 800 முதல் ரூ. 1000 ஆகும். 

    தகுதி சான்றை புதுப்பிப்பதற்கான கட்டணம் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 1000, கார்களுக்கு ரூ. 7500 ஆகும். புதிய கட்டண முறைக்கான அறிவிப்பு, கடந்த வாரம் தன்னார்வ வணிக மற்றும் பொதுத்துறை வாகனங்கள் நவீனமயமாக்கல் திட்டம் மக்களவையில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெளியாகி இருக்கிறது.
    ×