search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பென்ட்லி கான்டினென்டல் ஜிடி ஸ்பீடு
    X
    பென்ட்லி கான்டினென்டல் ஜிடி ஸ்பீடு

    பென்ட்லி நிறுவனத்தின் புதிய சூப்பர்கார் அறிமுகம்

    பென்ட்லி நிறுவனம் அதிக திறன் கொண்ட தனது புதிய ஆடம்பர சூப்பர்கார் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பென்ட்லி நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஆடம்பர சூப்பர்கார் மாடலான, கான்டினென்டல் ஜிடி அறிமுகம் செய்தது. புதிய கார் கான்டினென்டல் ஜிடி ஸ்பீடு என அழைக்கப்படுகிறது. இந்த கார் அதிக திறன் கொண்டிருப்பதால், இந்த பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

    புதிய ஜிடி ஸ்பீடு மாடலில் 6.0 லிட்டர் டபிள்யூ12 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 650 பிஹெச்பி பவர், 900 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது அதிகபட்சமாக 335 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

     பென்ட்லி கான்டினென்டல் ஜிடி ஸ்பீடு

    தோற்றத்தில் புதிய கார் எந்த மாற்றமும் இன்றி பெரிய செவ்வக வடிவம் கொண்ட முன்புற கிரில், இரட்டை வட்ட-வடிவ எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளன. இதன் ரேடியேட்டர் கிரில் பகுதி டார்க் டின்ட் கொண்டுள்ளது. காரின் முன்புற பென்டர் குரோம் பினிஷ் செய்யப்பட்டு ஸ்பீடு பேட்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த கார் 22 இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. மேலும் இவற்றை பிரைட் சில்வர், டார்க் டின்ட் அல்லது கிளாஸ் பிளாக் பினிஷ்களில் தேர்வு செய்து கொள்ளும் வசதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

    முன்னதாக பென்ட்லி நிறுவனம் தனது மேம்பட்ட பென்ட்யகா மாடலை இந்திய சந்தையில் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இந்த காரின் துவக்க விலை ரூ. 4.10 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×