search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பிஎம்டபிள்யூ கார்
    X
    பிஎம்டபிள்யூ கார்

    இந்திய ஆடம்பர கார் விற்பனையில் அசத்திய பிஎம்டபிள்யூ

    இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி பிஎம்டபிள்யூ முதலிடம் பிடித்து இருக்கிறது.


    ஆடம்பர கார் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களாக பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் இருக்கின்றன. மார்ச் மாதத்தில் 826 யூனிட்களை விற்பனை செய்த பிஎம்டபிள்யூ இந்திய ஆடம்பர கார் விற்பனையில் முன்னணி இடம்பிடித்து இருக்கிறது. 

    இந்த பட்டியலில் முதலிடத்தை மெர்சிடிஸ் பென்ஸ் வெறும் 14 யூனிட்கள் குறைவாக விற்பனை செய்ததால் இழந்துள்ளது. பென்ஸ் நிறுவனம் மார்ச் மாதத்தில் 812 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்த பட்டியலில் மூன்றாவது இடம்பிடித்து இருக்கிறது. இந்த நிறுவனம் 214 யூனிட்களை விற்பனை செய்தது.

     பிஎம்டபிள்யூ கார்

    இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏ கிளாஸ் லிமோசின், இ கிளாஸ் பேஸ்லிப்ட் என புது மாடல்களை அறிமுகம் செய்தது. இதேபோன்று பிஎம்டபிள்யூ நிறுவனம் 6 சீரிஸ் ஜிடி மாடலை அறிமுகம் செய்தது. இந்த கார் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    புதிய 6 சீரிஸ் ஜிடி மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 255பிஹெச்பி/400 என்எம் டார்க், 188பிஹெச்பி/400 என்எம் டார்க் மற்றும் 261பிஹெச்பி/620 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×