என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
ரெவோல்ட் ஆர்வி400 மாடலுக்கான முன்பதிவில் இரண்டு மணி நேரத்தில் ரூ. 50 கோடி மதிப்பிலான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ரெவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருப்பதாக ரெவோல்ட் மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. அதிக முன்பதிவு காரணமாக இரண்டே மணி நேரங்களில் மீண்டும் முன்பதிவை நிறுத்தியதாக அந்நிறுவனம் தெரிவித்தது. இந்த காலக்கட்டத்தில் ரூ. 50 கோடி மதிப்பிலான யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் விலை குறைக்கப்பட்டதே அதிக வரவேற்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசு பேம் 2 திட்டத்தில் மேற்கொண்ட மாற்றங்கள் காரணமாக இந்த மோட்டார்சைக்கிள் விலை குறைக்கப்பட்டது. இந்தியா முழுக்க சுமார் 35 நகரங்களில் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை திறந்துள்ளதாக ரெவோல்ட் தெரிவித்தது.
சமீபத்திய முன்பதிவில் டெல்லி, மும்பை, பூனே, சென்னை, ஆமதாபாத் மற்றும் ஐதராபாத் என இந்தியாவின் ஆறு நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர். எப்போதும் போல் இந்த முறையும் ரெவோல்ட் ஆர்வி400 மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என ரெவோல்ட் மோட்டார்ஸ் தெரிவித்தது.
போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் குர்கா ஆப்-ரோடு எஸ்யுவி மாடல் அந்த மாதத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய தலைமுறை குர்கா ஆப்-ரோடு எஸ்யுவி மாடலின் வெளியீட்டை உணர்த்தும் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி புதிய குர்கா எஸ்யுவி மாடல் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகிறது.

புதிய போர்ஸ் குர்கா மாடல் பண்டிகை காலக்கட்டத்திற்கு முன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. புதிய போர்ஸ் குர்கா எஸ்யுவி மஹிந்திரா தார் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. மஹிந்திரா தார் மாடல் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் போர்ஸ் குர்கா காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த எஸ்யுவி மாடலில் பிஎஸ்6 ரக 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படலாம்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வாகன ஆவணங்களுக்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து ஆவணங்களுக்கான கால அவகாசத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் மீண்டும் நீட்டித்து இருக்கிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் போன்ற மோட்டார் வாகன ஆவணங்கள் செல்லுபடி காலத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் பலமுறை நீட்டித்து வந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் கால அவகாசம் நிறைவடைவய இருந்தது.
தற்போது நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் இந்த கால அவகாசத்தை செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பந்தய களத்தில் வேகமாக வந்த காரின் முன் குறுக்கிட்ட அணில் வீடியோ ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது.
கார் பந்தய களத்தில் விபத்து நடைபெறுவது சகஜம். பல்வேறு விபத்துகளில் ஓட்டுனர்கள் உயிர் தப்பும் சம்பவங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. ஆனால் தற்போது பந்தய களத்திற்கு துளியும் சம்மந்தமில்லாத அணில் ஒன்று விபத்தில் சிக்காமல் உயிர்தப்பிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
That was nuts. @RyanHunterReay avoiding a different type of traffic on the streets of Belle Isle. #INDYCAR // #DetroitGP // @detroitgppic.twitter.com/lC6FL4IF1H
— NTT INDYCAR SERIES (@IndyCar) June 13, 2021
டெட்ராயிட் கிராண்ட் ப்ரிக்ஸ் கார் பந்தய களத்தில், ரியான் ஹன்டர் லீவி காரின் முன் அணில் ஒன்று வேகமாக குறுக்கிட்டது. வேகமாக வந்த கார் அணில் மீது மோதிவிடுமோ என்ற வகையில் வீடியோ காட்சிகள் இடம்பெற்று இருந்தன. எனினும், அணில் மீது கார் மோதவில்லை.
பந்தய களத்தில் குறுக்கிட்ட அணில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது. காரில் சிக்காமல் இருக்க வேகமாக தாவி குதித்த அணில் அருகில் இருந்த சுவர் ஓட்டையில் நுழைந்து தப்பி சென்றது. இந்த சம்பவத்தின் வீடியோ ட்விட்டர் தளத்தில் வெளியாகி இருக்கிறது. காரை வேகமாக ஓட்டிவந்த பந்தய வீரர் அணிலை பார்த்தாரா என உறுதியாக தெரியவில்லை.
சுசுகி நிறுவனத்தின் பர்க்மேன் ஸ்டிரீட் 200 ஸ்கூட்டர் மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
2022 சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 200 ஸ்கூட்டர் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் புது நிற ஆப்ஷன் பெற்று இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் பியல் வைட் மற்றும் புது டைட்டன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. தற்போது புதிதாக மேட் ஸ்டெல்லார் புளூ நிறத்திலும் கிடைக்கிறது.

பர்க்மேன் ஸ்டிரீட் 200 ஸ்கூட்டர் பெரிய விண்ட்ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இதன் அன்டர்சீட் ஸ்டோரேஜ் 41 லிட்டர்களாக இருக்கிறது. மேலும் இதன் பூட்போர்டு உயர்த்தப்பட்டு, பேடட் ஸ்டெப்-சீட் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் வசதி கொண்டுள்ளது.
சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 200 மாடலில் 12V DC பவர் அவுட்புட் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட லிக்விட் கூல்டு, 200 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் கொண்டுள்ளது. இத்துடன் சிவிடி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
டொயோட்டா நிறுவனத்தின் பிடாடி ஆலையில் ஒவ்வொரு நாளும் 50 சிலிண்டர்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் தனது பிடாடி உற்பத்தி ஆலையின் கம்யூனிட்டி ஹெல்த் சென்டரில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்திக்கென டொயோட்டா அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையம் நவம்பர் மாத வாக்கில் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
இதற்கென டொயோட்டா நிறுவனம் ரூ. 12 கோடி முதலீடு செய்து இருக்கிறது. இந்த ஆலை ஒவ்வொரு நாளும் 50 சிலிண்டர்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் ராம்நகரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட இருக்கிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இந்தியாவில் திடீரென குறைந்து இருக்கிறது.
மத்திய அரசு சமீபத்தில் பேம் 2 திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களின் விலை குறைந்துள்ளது. ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

புது விலை விவரம்
ஏத்தர் 450 பிளஸ் - ரூ,1,13,416
ஏத்தர் 450எக்ஸ் - ரூ. 1,32,426
ஜூன் 11 ஆம் தேதி வெளியான மத்திய அரசு அறிவிப்பின் படி ஜூன் 12 முதல் ஏத்தர் மாடல்கள் விலை மாற்றப்பட்டது. மத்திய அரசின் பேம் 2 திட்டத்தின் படி ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ஏத்தர் 450 பிளஸ் மற்றும் 450எக்ஸ் மாடல்கள் விலை ரூ. 14,500 குறைக்கப்பட்டு இருக்கிறது.
லெக்சஸ் நிறுவனத்தின் புதிய NX என்ட்ரி லெவல் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லெக்சஸ் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் எஸ்யுவி-யான NX மாடலின் இரண்டாம் தலைமுறை வேரியண்டை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. லெக்சஸ் நிறுவனத்தின் அதிக வரவேற்பு பெற்ற மாடல்களில் ஒன்றாக NX இருந்து வருகிறது.
சமீபத்தில் லெக்சஸ் காட்சிப்படுத்திய LF-Z EV கான்செப்டை தழுவி புதிய NX மாடல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. புதிய இரண்டாம் தலைமுறை லெக்சஸ் NX முற்றிலும் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கிறது. பக்கவாட்டில் புது கார் பெரிய ஏர் டேம்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் மெல்லிய ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டிஆர்எல்கள் உள்ளன. இந்த காரின் முன்புறம் பெரிய ஸ்பின்டில் கிரில் உள்ளது. இதில் உள்ள நீண்ட பொனெட் காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது. மேலும் இதன் கூர்மையான கிரீஸ்கள் புது காரை முந்தைய மாடலை விட வித்தியாசமானதாக மாற்றுகிறது.
லெக்சஸ் NX மாடல் 2.5 லிட்டர் பெட்ரோல், 2.5 லிட்டர் பெட்ரோல் பிளக்-இன் ஹைப்ரிட், 2.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் 2.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் என பலவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அதிரடி திட்டம் ஒன்றை மாஸ்கோ மேயர் அறிவித்து இருக்கிறார்.
ரஷ்யா நாட்டில் கொரோனாவைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு புத்தம் புது கார் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கார்கள் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. ரஷ்யாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதை தொடர்ந்து இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாஸ்கோ நகரின் மேயர் செர்கி சோப்யாயின் இந்த திட்டத்தை அறிவித்தார். புத்தம் புது கார் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்பதால் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவர் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று முதல் 18 வயதுக்கும் மேற்பட்டோர் கொரோனாவைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக் கொள்வோர் முற்றிலும் புது காரை பரிசாக வெல்வதற்கான போட்டியில் பங்கேற்க முடியும். இந்த திட்டம் ஜூலை 11 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
அடுத்த நான்கு வாரத்தில் குறைந்தபட்சம் ஐந்து கார்கள் ஒவ்வொரு வாரமும் வழங்கப்பட இருக்கிறது. மொத்தத்தில் இந்த திட்டத்தின் கீழ் 20 வாகனங்கள் வழங்கப்பட இருக்கின்றன. ரஷ்யாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் மாஸ்கோ ஒன்றாகும்.
இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு புதிய விதிமுறைகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் பல்வேறு காரணங்களால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இது இந்திய சாலை போக்குவரத்து துறையில் பெரும் பிரச்சினையாக உள்ளது. விபத்துகளை குறைக்க திறமையான டிரைவர்களை உருவாக்க அங்கீகாரம் பெற்ற ஓட்டுனர் பயிற்சி மையங்களை நாடு முழுக்க உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் டிரைவர்கள் ஓட்டுனர் உரிமத்துக்காக ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாகனங்களை இயக்கி காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த பயிற்சி மையங்களுக்கான விதிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது. புதிய விதிமுறைகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

அதன்படி இந்த பயிற்சி மையங்களில் உயர்தர பயிற்சியை உறுதி செய்வதற்காக சிமுலேட்டர்கள், பிரத்யேக ஓட்டுனர் பயிற்சி தடங்கள் இருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டம் 1988 மற்றும் மேம்பட்ட பாடப்பிரிவுகள் இந்த மையங்களில் கற்பிக்கப்பட இருக்கின்றன.
இந்த மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்கள், ஓட்டுனர் உரிமம் பெற ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாகனங்களை இயக்க வேண்டிய அவசிம் இல்லை. இதன் மூலம் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாகும். இந்த மையங்கள் தொழில் சார்ந்த சிறப்பு பயிற்சியையும் வழங்க அனுமதிக்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஜூன் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் விற்பனையாளர்கள் ஜூன் மாதத்திற்கான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச பேக்கேஜ் வடிவில் வழங்கப்படுகின்றன.
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மாடலுக்கு ரூ. 1.5 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களின் டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இரு மாடல்களின் மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகின்றன. ஹூண்டாய் சான்ட்ரோ இரா மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சான்ட்ரோ ஹேட்ச்பேக் மற்ற வேரியண்ட்களுக்கு கூடுதலாக ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹூண்டாய் ஐ20 டீசல் மற்றும் iMT டர்போ வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் பிளெயிட் எலெக்ட்ரிக் கார் மணிக்கு 321 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
டெஸ்லா நிறுவனம் மாடல் எஸ் பிளெயிட் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது. நிகழ்வு தொடங்கும் முன் மேடையிலேயே புது எலெக்ட்ரிக் காரை டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஓட்டினார்.

புதிய டெஸ்லா மாடல் எஸ் பிளெயிட் துவக்க விலை 1,29,999 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 95 லட்சம் ஆகும். புதிய எலெக்ட்ரிக் கார் வினியோகம் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த கார் ஜூன் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருந்தது. எனினும், வினியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
டெஸ்லா மாடல் எஶ் பிளெயிட் மாடல் 1020 பிஹெச்பி திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 321 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 627 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.






