என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
ஹோண்டா நிறுவனத்தின் பிளாக்ஷிப் மோட்டார்சைக்கிள் மாடலான கோல்டு விங் டூர் முதற்கட்ட யூனிட்கள் இந்தியாவில் விற்றுத்தீர்ந்தன.
ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் 2021 கோல்டு விங் டூர் மாடலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்தியா கொண்டுவரப்பட்ட முதற்கட்ட யூனிட்கள் முன்பதிவு துவங்கிய ஒரே நாளில் விற்றுத்தீர்ந்தது. ஹோண்டாவின் பிளாக்ஷிப் கோல்டு விங் டூர் மாடல் ஜப்பானில் உருவாக்கப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்திய சந்தையில் கோல்டு விங் டூர் மாடல் துவக்க விலை ரூ. 37.20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். ஹோண்டா கோல்டு விங் டூர் மாடலில் 1833சிசி லிக்விட் கூல்டு, 4 ஸ்டிரோக், 24 வால்வ் SOHC பிளாட்-6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
"நாங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்த பிளாக்ஷிப் மாடலான கோல்டு விங் டூர் முதற்கட்ட யூனிட்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன என்பதை பெருமையாக தெரிவித்துக் கொள்கிறோம்," என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் யத்வீந்தர் சிங் குலெரியா தெரிவித்தார்.
கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களுக்கு வழங்கும் இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டிக்கான அவகாசத்தை நீட்டித்துள்ளது.
மாருதி சுசுதி நிறுவனம் இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி சலுகைக்கான கால அவகாசத்தை மீண்டும் நீட்டித்து இருக்கிறது. அதன்படி இலவச சர்வீஸ் மற்றும் வாரண்டி ஜூலை 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகனங்களுக்கு வாரண்டி, நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் கார் பராமரிப்பு சேவை உள்ளிட்டவைகளுக்கான கால அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தது. தற்போது இவற்றுக்கான கால அவகாசத்தை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
அதன்படி மார்ச் 15, 2021 முதல் மே 31, 2021 வரையிலான காலக்கட்டத்தில் நிறைவுற்ற இலவச சர்வீஸ் உள்ளிட்ட சேவைகளுக்கான கால அவகாசம் ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக டொயோட்டா, எம்ஜி மோட்டார், ஸ்கோடா, மஹிந்திரா, டாடா போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
ஹூண்டாய் நிறுவனத்தின் மாதாந்திர வாகன விற்பனை நிலவரம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஜூன் மாதத்தில் மட்டும் 54,474 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இதில் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்களும் அடங்கும். முன்னதாக இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் வாகன உற்பத்தியில் ஒரு கோடி யூனிட்களை கடந்தது.

ஒட்டுமொத்த வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் இருக்கிறது. கடந்த மாத விற்பனையில் வருடாந்திர அடிப்படையில் ஹூண்டாய் நிறுவனம் 103.1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஹூண்டாய் 26,820 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
கடந்த மாதம் மட்டும் உள்நாட்டில் 40,496 யூனிட்களை ஹூண்டாய் விற்பனை செய்து இருக்கிறது. இது முந்தைய ஆண்டைவிட 89.9 சதவீதம் அதிகம் ஆகும். இதேபோன்று கடந்த மாதம் 13,978 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 154.1 சதவீதம் அதிகம் ஆகும்.
ஹூண்டாய் நிறுவனம் வாகனங்கள் உற்பத்தியில் புது மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹூண்டாய் நிறுவனம் தனது சென்னை ஆலையில் இருந்து ஒரு கோடியாவது யூனிட்டை வெளியிட்டுள்ளது. ஒரு கோடியாவது யூனிட் ஹூண்டாய் நிறுவனத்தின் அல்காசர் மாடலாக வெளியாகி இருக்கிறது. சென்னை ஆலையில் ஹூண்டாய் உற்பத்தி பணிகள் 1998 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இந்த நிலையில், உற்பத்தியில் ஒரு கோடி யூனிட்களை கடக்க 23 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது. புது மைல்கல் எட்டியதை கொண்டாடும் வகையில் ஒரு கோடியாவது யூனிட்டை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். தென் கொரியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹூண்டாய் இந்தியாவின் முன்னணி வாகன ஏற்றுமதியாளராக இருக்கிறது.
இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான புதிய ஹூண்டாய் அல்காசர் மாடல் இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை கடந்துள்ளது. கிரெட்டா மாடலை போன்றே புதிய அல்காசர் மாடலும் வெற்றி பெறும் என ஹூண்டாய் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய M340i மாடலுக்கான முன்பதிவு இந்தியாவில் மீண்டும் துவங்கி உள்ளது.
பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் M340i மாடலை இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த கார் விலை ரூ. 62.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். மொத்தத்தில் 40 யூனிட்களே விற்பனைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், இவை அனைத்தும் வெளியான ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தன.

தற்போது பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிய M340i மாடலுக்கான முன்பதிவு மீண்டும் துவங்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த மாடல் டன்சனைட் புளூ மற்றும் டிராவிட் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
புதிய பி.எம்.டபிள்யூ. M340i மாடல் 3 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த யூனிட் 387 பிஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ஆடி நிறுவனத்தின் இ டிரான் எஸ்யுவி மற்றும் ஸ்போர்ட்பேக் மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது.
ஆடி நிறுவனம் தனது இ டிரான் எஸ்யுவி மற்றும் ஸ்போர்ட்பேக் மாடல்களுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இரு மாடல்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 5 லட்சம் ஆகும். முன்பதிவு ஆடி வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. இந்திய சந்தையில் ஆடி இ டிரான் மாடல் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாகிறது.
இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்படுகின்றன. எனினும், இவற்றின் டிசைன் சற்றே வேறுப்பட்டு இருக்கும். இந்தியாவில் புதிய இ டிரான் எஸ்யுவி துவக்க விலை ரூ. 1 கோடி, எக்ஸ்-ஷோரூம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடி இ டிரான் மாடலில் 125kW மற்றும் 140kW என இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. இவை இணைந்து 408 பிஹெச்பி பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. எலெக்ட்ரிக் மோட்டார்கள் 95kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டு இயக்கப்படுகிறது.
இந்த பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 448 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. டிசி பாஸ்ட் சார்ஜர் கொண்டு இதில் உள்ள பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே ஆகிறது. ஸ்போர்ட்ஸ் மோடில் இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
மாருதி சுசுகி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சந்தா முறையை மேலும் சில நகரங்களுக்கு நீட்டித்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தனது வாகன சந்தா முறை சேவையை மேலும் நான்கு நகரங்களுக்கு நீட்டித்து இருக்கிறது. தற்போது ஜெய்பூர், இந்தூர், மங்களூரு மற்றும் மைசூரு போன்ற நகரங்களுக்கு மாருதி சுசுகி சந்தா முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. புது அறிவிப்பின் மூலம் மாருதி சந்தா முறை நாட்டின் 19 நகரங்களில் கிடைக்கிறது.

சந்தா முறையில் மாருதி சுசுகி அரினா மற்றும் நெக்சா சேனல்களை சேர்ந்த ஏராளமான மாடல்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து பயன்படுத்தலாம். மாருதி சுசுகி அரினாவில் இருந்து வேகன்ஆர், ஸ்விப்ட், டிசையர், விட்டாரா பிரெஸ்ஸா, எர்டிகா போன்ற மாடல்கள் கிடைக்கின்றன.
நெக்சாவில் இருந்து இக்னிஸ், பலேனோ, சியாஸ், எஸ் கிராஸ் மற்றும் எக்ஸ்எல்6 போன்ற மாடல்கள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை செயல்படுத்த மாருதி சுசுகி நிறுவனம் ஆரிக்ஸ், ALD ஆட்டோமோடிவ் மற்றும் மைல்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி மாடலில் சில புது அம்சங்களை வழங்கி இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி காரில் சில புது அம்சங்களை வழங்கி இருக்கிறது. அதன்படி நெக்சான் இவி மாடலில் தற்போது புது அலாய் வீல்கள், புது டேஷ்போர்டு லே-அவுட், இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்போடெயின்மென்ட் ஸ்கிரீனில் இருந்த பட்டன்கள் நீக்கப்பட்டுள்ளன.

புதிய அப்டேட்டின் படி பட்டன்களால் இயக்கப்பட்டு வந்த அம்சங்களை இனி டச் ஸ்கிரீன் மூலமாகவே இயக்கலாம். இத்துடன் நெக்சான் இவி மாடலில் டூயல்-டோன் 5 ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. முன்னதாக 8 ஸ்போக் அலாய் வழங்கப்பட்டு இருந்தது.
ஏப்ரல் 2021, வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் பயணிகள் எலெக்ட்ரிக் வாகனமாக டாடா நெக்சான் இவி இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் டாடா நெக்சான் இவி டார்க் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
லூசிட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் துவக்க விலை 70 ஆயிரம் டாலர்கள் ஆகும்.
லூசிட் மோட்டார்ஸ் நிறுவனம் தனது லூசிட் ஏர் மாடலுக்கான முன்பதிவு 10 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. புதிய லூசிட் ஏர் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் காருக்கான முதல் போட்டியாக பார்க்கப்படுகிறது.

லூசிட் ஏர் எலெக்ட்ரிக் கார் துவக்க விலை 70 ஆயிரம் டாலர்கள் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை 1,69,900 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ``லூசிட் ஏர் மாடல் உற்பத்தியில் சில சிக்கல்கள் இருந்தது, தற்போது இவை அனைத்தும் சீராகும் நிலை ஏற்பட்டுள்ளது," என லூசிட் மோட்டார்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பீட்டர் ராலின்சன் தெரிவித்தார். இவர் டெஸ்லா மாடல் எஸ் கார் திட்டத்தின் முன்னாள் தலைவராக இருந்தார்.
லூசிட் ஏர் முதற்கட்ட யூனிட்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் வினியோகம் செய்யப்படும் என ராலின்சன் தெரிவித்தார். லூசிட் ஏர் மாடலின் டிரீம் எடிஷன் முதலில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார். டிரீம் எடிஷன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 809 கிலோமீட்டர்கள் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் நாட்டின் இரு நகரங்களில் சந்தா முறையை அறிமுகம் செய்துள்ளது.
வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் கார் சந்தா முறையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த சந்தா முறை சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டு இருக்கிறது. இன்னும் இந்த திட்டம் நாடுமுழுக்க அறிமுகம் செய்யப்படவில்லை.

வால்வோ இந்தியாவின் புதிய கார் சந்தா முறை டெல்லி மற்றும் குர்கிராமில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சந்தா முறை குறைந்தபட்சம் 12 மாதங்களில் இருந்து துவங்குகிறது. புது திட்டம் Subscribe to Safety பெயரில் கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் பல்வேறு வால்வோ கார்களை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் வால்வோ எஸ்90 செடான் மாடல் மட்டும் இடம்பெறவில்லை.
புதிய சந்தா முறையில் வாடிக்கையாளர்கள் முதற்கட்டமாக சிறு தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். மாதாந்திர சந்தா கட்டணம் பராமரிப்பு, இன்சூரன்ஸ், பதிவு மற்றும் சாலை வரி உள்ளிட்டவைகளுக்கும் சேர்த்தே வசூலிக்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்த CB350 RS மோட்டார்சைக்கிள் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யும் CB350 RS மோட்டார்சைக்கிள் ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜப்பானில் இந்த மோட்டார்சைக்கிள் GB350 பெயரில் அறிமுகமாகி இருக்கிறது. ஜூலை 15 ஆம் தேதி இந்த மாடல் ஜப்பான் விற்பனை மையங்களை சென்றடையும்.

ஜப்பானில் இந்த மோட்டார்சைக்கிள் ஹோண்டா GB350 மற்றும் ஹோண்டா GB350 S என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உயர் ரக S வேரியண்ட் புது நிறத்தில் கிடைக்கும். இத்துடன் சில பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படுகிறது.
ஹோண்டா GB350 மாடலிலும் 349சிசி ஏர்-கூல்டு, லாங்-ஸ்டிரோக், சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 20.8 பிஹெச்பி பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் வாகன விற்பனையை அதிகப்படுத்த கார்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாகன விற்பனையை அதிகப்படுத்த அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. அதன்படி கார் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 3.01 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் புதிய தார் மாடல் தவிர அனைத்து கார்களுக்கும் வழங்கப்படுகின்றன.
சலுகைகள் எக்சேன்ஜ் போனஸ், தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் சலுகை வடிவில் வழங்கப்படுகின்றன. இவை கேயுவி100 என்எக்ஸ்டி துவங்கி பிளாக்ஷிப் எஸ்யுவி மாடலான அல்டுராஸ் ஜி4 என பெரும்பாலான மாடல்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்படுகின்றன.
சலுகை விவரங்கள்:
மஹிந்திரா கேயுவி100 என்எக்ஸ்டி - அதிகபட்சம் ரூ. 61,055
தள்ளுபடி ரூ. 38,055 வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 20 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 3 ஆயிரம் வரை
மஹிந்திரா எக்ஸ்யுவி300 - அதிகபட்சம் ரூ. 44,000
தள்ளுபடி ரூ. 5 ஆயிரம் வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 25 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 4,000
கூடுதல் பலனகள் ரூ. 10 ஆயிரம் வரை
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 - அதிகபட்சம் ரூ. 3.01 லட்சம்
தள்ளுபடி ரூ. 2.2 லட்சம் வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 50 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 11,500
கூடுதல் பலனகள் ரூ. 20 ஆயிரம் வரை

மஹிந்திரா மராசோ - அதிகபட்சம் ரூ. 40,200 வரை
தள்ளுபடி ரூ. 20 ஆயிரம் வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 15 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 5,200 வரை
மஹிந்திரா ஸ்கார்பியோ - அதிகபட்சம் ரூ. 36,042
தள்ளுபடி ரூ. 17,042
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 15 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 4,000
மஹிந்திரா எக்ஸ்யுவி500 - அதிகபட்சம் ரூ. 1.89 லட்சம் வரை
தள்ளுபடி ரூ. 1.13 லட்சம் வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 50 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 6,500 வரை
கூடுதல் பலனகள் ரூ. 20 ஆயிரம் வரை
மஹிந்திரா பொலிரோ - அதிகபட்சம் ரூ. 16,500
தள்ளுபடி ரூ. 3,500 வரை
எக்சேன்ஜ் போனஸ் ரூ. 10 ஆயிரம் வரை
கார்ப்பரேட் தள்ளுபடி ரூ. 3 ஆயிரம் வரை






