என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
இந்திய சந்தையில் 2021 முதல் அரையாண்டு கால வாகன விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இந்திய சந்தையின் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்கள் பிரிவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா முதலிடம் பிடித்து இருக்கிறது. 2021 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் 60,183 விட்டாரா பிரெஸ்ஸா யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

இதே காலக்கட்டத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ 54,675 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது இரு மாடல்களின் விற்பனையும் 50 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்களில் மூன்றாவது இடத்தை டாடா நெக்சான் பெற்று இருக்கிறது.
மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 பி.ஹெச்.பி. பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் டியோ ஸ்கூட்டர் விலை இந்தியாவில் மாற்றப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா நிறுவனத்தின் டியோ ஸ்கூட்டர் அனைத்து வேரியண்ட்களின் விலையும் இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வின் படி ஹோண்டா டியோ பேஸ் மாடல் விலை ரூ. 64,510 என்றும் DLX விலை ரூ. 67,908 என்றும் டியோ ரெப்சால் எடிஷன் விலை ரூ. 70,408 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அம்சங்கள் தவிர டியோ மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஹோண்டா டியோ மாடலில் 109சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 7.65 பி.ஹெச்.பி. பவர், 9 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
விலை உயர்வு காரணமாக ஹோண்டா டியோ தற்போது டி.வி.எஸ். ஜூப்பிட்டர் மாடலை விட அதிகமாக மாறி இருக்கிறது. இந்திய சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் வாகனங்கள் விலையை உயர்த்தி வரும் நிலையில், தற்போது ஹோண்டா டியோ விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் ஜூலை மாதத்திற்கான சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ஜாஸ், அமேஸ், நான்காம் தலைமுறை சிட்டி, ஐந்தாம் தலைமுறை சிட்டி மற்றும் WR-V போன்ற மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி, சலுகை வழங்கப்படுகிறது. இவை ஜூலை 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.

ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு ரூ. 34,095 வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இவை ஹோண்டா ஜாஸ் அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகிறது. ஹோண்டா அமேஸ் VMT மற்றும் VXMT பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ. 33,998 வரையும், அமேஸ் S MT வேரியண்டிற்கு ரூ. 57,243 வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.
ஹோண்டா சிட்டி நான்கு மற்றும் ஐந்தாம் தலைமுறை மாடல்களுக்கு ரூ. 22 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. ஹோண்டா WR-V மாடலுக்கு ரூ. 34,058 வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.
ஸ்கோடா நிறுவனம் நாடு முழுக்க புதிய விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் நாடு முழுக்க சுமார் 30 விற்பனை மையங்களை அடுத்த ஆறு மாதங்களில் திறக்க திட்டமிட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை 150 ஆக அதிகரிக்க ஸ்கோடா முடிவு செய்துள்ளது.
ஜூலை மாதத்தில் மட்டும் 14 விற்பனை மையங்களை திறக்க ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆகஸ்டு, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மேலும் 16 விற்பனை மையங்களை படிப்படியாக திறக்க இருக்கிறது.

இதுதவிர ஸ்கோடா நிறுவனம் விரைவில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் கோடியக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் 2 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து புதிய மிட்-சைஸ் செடான் மாடலையும் அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல் விலை ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் மூன்றாவது முறையாக மஹிந்திரா மாடல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. புது விலை உயர்வு காரணமாக மஹிந்திரா தார் விலை அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, KUV 100NXT, XUV500 போன்ற மாடல்கள் விலை சற்றே குறைவாக உயர்த்தப்பட்டுள்ளது. மஹிந்திரா XUV500 விலை ரூ. 2912 முதல் அதிகபட்சம் ரூ. 3188 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. KUV100 NXT மாடல் விலை ரூ. 3,016 முதல் ரூ. 3,344 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அல்டுராஸ் ஜி4 விலை ரூ. 3094 அதிகரிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா XUV300 விலை ரூ. 18,970 துவங்கி ரூ. 24,266 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. பொலிரோ மாடல் விலை ரூ. 22,600 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மஹிந்திரா தார் மாடல் விலை ரூ. 1,02,000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மராசோ எம்.பி.வி. விலை ரூ. 30 ஆயிரம் வரையும் ஸ்கார்பியோ விலை ரூ. 40 ஆயிரம் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
பெனலி நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பெனலி இந்தியா நிறுவனம் தனது புதிய குரூயிசர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் ஆகும். முன்பதிவு பெனலி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது விற்பனை மையங்களில் மேற்கொள்ளலாம். இதன் விற்பனை இம்மாதமே துவங்கும் என தெரிகிறது.

புதிய பெனலி 502சி மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் QJ SRV500 மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். புது மாடலின் அம்சங்களை பெனலி இதுவரை வெளியிடவில்லை. எனினும், இந்த குரூயிசர் மாடலில் 500சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த என்ஜின் 46.8 பி.ஹெச்.பி. பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 2021 பெனலி 502சி மாடல் விலை ரூ. 5 லட்சத்தில் இருந்து துவங்கும் என தெரிகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை உயர்த்துவதாக சமீபத்தில் அறிவித்தது. இந்நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடல் விலை ரூ. 7361 துவங்கி அதிகபட்சம் ரூ. 8362 வரை உயர்ந்து இருக்கிறது.

இந்த விலை உயர்வு காரணமாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 துவக்க விலை ரூ. 1,79,782 என மாறி இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2,06,962 ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தொடர் விலை உயர்வு காரணமாக கிளாசிக் 350 விலை ரூ. 2 லட்சத்தை கடந்துள்ளது.
அந்த வகையில் அடுத்த தலைமுறை கிளாசிக் 350 மாடல் விலை மேலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக விலைக்கு ஏற்ப புதிய கிளாசிக் 350 மாடலில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும். இது முற்றிலும் புதிய ஜெ பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இந்த மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
சுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா மாடல் இரண்டாம் கட்ட யூனிட்களும் விற்றுத் தீர்ந்தன.
சுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா மோட்டார்சைக்கிள் ஒரு மணி நேரத்தில் நிறைவுற்று இருக்கிறது. புதிய ஹயபுசா மாடல் பல்வேறு மாற்றங்களுடன் ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முதற்கட்ட யூனிட்கள் விற்பனை துவங்கிய சில நாட்களில் விற்றுத் தீர்ந்தது.

அந்த வகையில் இந்த மாடலின் இரண்டாம் கட்ட யூனிட்கள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்துள்ளது. ஒரு மணி நேரத்தில் 100 சுசுகி ஹயபுசா மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. இந்திய சந்தையில் இத்தகைய வரவேற்பு கிடைத்து இருப்பது, இந்த சூப்பர்பைக் மாடலுக்கு பெரும் மைல்கல் ஆகும்.
2021 சுசுகி ஹயபுசா மாடலில் 1340சிசி இன்-லைன் 4 மோட்டார் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. புது சுசுகி ஹயபுசா மாடல் கவாசகி நின்ஜா 1000SX மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
வாகனங்களில் இருந்து வெளியேறும் காற்று மாசு அளவை குறைக்கும் மைலேஜ் பூஸ்டர் சாதனத்தை தொழில்நுட்ப வல்லுநர் உருவாக்கி இருக்கிறார்.
காற்று மாசை குறைக்கும் நோக்கில், ஐதராபாத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாகனங்களின் மைலேஜை அதிகப்படுத்தும் திறன் கொண்ட மைலேஜ் பூஸ்டரை உருவாக்கி உள்ளார்.
மூத்த தொழில்நுட்ப வல்லுநர் டேவிட் எஷ்கால் 5M மைலேஜ் பூஸ்ட் சாதனத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த சாதனம் வாகனங்களில் இருந்து வெளியேறும் காற்று மாசு அளவை வெகுவாக குறைக்கிறது. மேலும் இது வாகனங்களின் பிக்கப், டார்க் மற்றும் திரஸ்ட் அளவை அதிகப்படுத்தி காற்று மாசு ஏற்படுவதை குறைக்கிறது. இத்துடன் எரிபொருளை சேமிக்கவும் வழி செய்கிறது.

மைலேஜ் பூஸ்டரின் ஐந்து பலன்களை குறைக்கும் வகையில் இந்த சாதனத்திற்கு 5M என பெயர் சூட்டப்பட்டுள்ளது. என்ஜினை திறக்காமலேயே அதன் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த மைலேஜ் பூஸ்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் இருந்து அல்ட்ராசோனிக் கதிர்கள் மற்றும் வாயு அடங்கிய பிளாஸ்மா என்ஜினுள் செலுத்தப்படுகிறது.
'மைலேஜ் பூஸ்டரை உருவாக்கும் பணிகளை 2008 ஆம் ஆண்டு துவங்கினேன். இது வாகனத்தின் மைலேஜை அதிகப்படுத்துவது மட்டுமின்றி சுற்றுச்சூழலில் ஏற்படும் காற்று மாசு அளவையும் குறைக்கும்,' என எஷ்கோல் தெரிவித்தார். இது இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பேருந்து மற்றும் டிரக் போன்றவைகளிலும் பயன்படுத்த முடியும். 100 சிசி முதல் 10 ஆயிரம் சிசி திறன் கொண்ட என்ஜின்களில் இந்த மைலேத் பூஸ்டரை பயன்படுத்தலாம்.
கே.டி.எம். மற்றும் ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலை இந்தியாவில் மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
கே.டி.எம். நிறுவனம் அனைத்து கே.டி.எம். மற்றும் ஹஸ்க்வர்னா மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த ஆண்டு துவங்கியது முதல் இந்நிறுவன மாடல்கள் விலை மூன்றாவது முறையாக உயர்த்தப்படுகிறது. இம்முறை ரூ. 256 துவங்கி ரூ. 11,423 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
புதிய விலை விவரம்:
கே.டி.எம். டியூக் 125 ரூ. 1,70,515
கே.டி.எம். டியூக் 200 ரூ. 1,85,606
கே.டி.எம். டியூக் 250 ரூ. 2,28,736
கே.டி.எம். டியூக் 390 ரூ. 2,87,545
கே.டி.எம். ஆர்.சி. 200 ரூ. 2,08,602
கே.டி.எம். ஆர்.சி. 390 ரூ. 2,77,517
250 அட்வென்ச்சர் ரூ. 2,54,995
390 அட்வென்ச்சர் ரூ. 3,28,286
ஸ்வார்ட்பிளைன் 250 ரூ. 2,10,650
விட்பிளைன் 250 ரூ. 2,10,022
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கே.டி.எம். டியூக் 125 இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 125சிசி மாடல்களில் இரண்டாவது விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளாக இருக்கிறது. டியூக் 390 மாடல் விலை ரூ. 11,358 உயர்த்தப்பட்டு தற்போது ரூ. 2.87 லட்சம் என மாறி இருக்கிறது. டியூக் 200 மற்றும் டியூக் 250 மாடல்கள் விலை முறையே ரூ. 2,022 மற்றும் ரூ. 6,848 உயர்த்தப்பட்டு உள்ளது.
கே.டி.எம். ஆர்.சி. 125 மாடல் விலை ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ஆர்.சி. 390 மாடல் விலை ரூ. 11,358 உயர்த்தப்பட்டு தற்போது ரூ. 2.77 லட்சம் என மாறி இருக்கிறது. ஆர்.சி. 200 விலை ரூ. 2,253 உயர்த்தப்பட்டு இருக்கிறது.
250 அட்வென்ச்சர் மாடல் விலை ரூ. 258 உயர்த்தப்பட்டு இருக்கிறது. 390 அட்வென்ச்சர் மாடல் ரூ. 11,423 உயர்த்தப்பட்டு தற்போது ரூ. 3.28 லட்சம் என மாறி இருக்கிறது.
ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஜூலை மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஜூலை மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. இவை தள்ளுபடி, கார்ப்பரேட் பலன்கள், லாயல்டி மற்றும் எக்சேன்ஜ் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.
ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் சலுகை வழங்கப்படுகிறது. க்விட் மாடலுக்கான முன்பதிவு அந்நிறுவன வலைதளம் அல்லது மை ரெனால்ட் செயலி மூலமாகவும் மேற்கொள்ளலாம்.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் கைகர் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் லாயல்டி சலுகை, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகிறது. ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 10 ஆயிரம் லாயல்டி பலன்கள் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு, ரூ. 25 ஆயிரம் பலன்கள், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரெனால்ட் டஸ்டர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் எக்சேன்ஜ் பலன், ரூ. 15 ஆயிரம் லாயல்டி பலன்கள், ரூ. 30 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஜூலை 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.
யமஹா நிறுவனம் YZF R15 V3.0 மற்றும் MT 15 மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை இந்தியாவில் மீண்டும் உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் இரு மாடல்கள் விலை இந்த ஆண்டு மட்டும் மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. மாடல் மற்றும் நிறத்திற்கு ஏற்ப விலை ரூ. 2500 முதல் 3 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
புதிய விலை விவரம்
யமஹா YZF R15 V3.0
தண்டர் கிரே ரூ. 1,54,600
மெட்டாலிக் ரெட் ரூ. 1,54,600
ரேசிங் புளூ ரூ. 1,55,700
டார்க் நைட் ரூ. 1,56,700

யமஹா MT-15
மெட்டாலிக் பிளாக் ரூ. 1,45,900
டார்க் மேட் புளூ ரூ. 1,45,900
ஐஸ் புளுயோ வெர்மிலான் ரூ. 1,45,900
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
இரு மாடல்களுக்கான விலை உயர்வு குறித்து யமஹா சார்பில் இதுவரை எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. எனினும், உற்பத்திக்கு தேவையான ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த உதிரிபாகங்கள் விலை உயர்ந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணமாக இருக்கும் என தெரிகிறது.
இரு மாடல்களிலும் 155 சிசி லிக்விட் கூல்டு ஒற்றை சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.3 பிஹெச்பி பவர், 14.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது.






