என் மலர்
ஆட்டோமொபைல்

ராயல் என்பீல்டு கிளாசிக் 350
விலை உயர்வு எதிரொலி - புது உச்சம் தொட்ட கிளாசிக் 350
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை உயர்த்துவதாக சமீபத்தில் அறிவித்தது. இந்நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடல் விலை ரூ. 7361 துவங்கி அதிகபட்சம் ரூ. 8362 வரை உயர்ந்து இருக்கிறது.

இந்த விலை உயர்வு காரணமாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 துவக்க விலை ரூ. 1,79,782 என மாறி இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 2,06,962 ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தொடர் விலை உயர்வு காரணமாக கிளாசிக் 350 விலை ரூ. 2 லட்சத்தை கடந்துள்ளது.
அந்த வகையில் அடுத்த தலைமுறை கிளாசிக் 350 மாடல் விலை மேலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக விலைக்கு ஏற்ப புதிய கிளாசிக் 350 மாடலில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும். இது முற்றிலும் புதிய ஜெ பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இந்த மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
Next Story






