என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
இருசக்கர வாகன உற்பத்தியாளான ராயல் என்பீல்டு நிறுவனம் தமிழக அரசுக்கு கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி உதவி வழங்கி இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனாவைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள ராயல் என்பீல்டு நிறுவனம் ரூ. 2 கோடி நிதி உதவி வழங்கி இருக்கிறது. இந்த தொகை மாநிலத்தின் சுகாதார துறை சார்ந்த பணிகளை மேம்படுத்த செலவிடப்பட இருக்கிறது.
ராயல் என்பீல்டு சார்பாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வினோத் கே தசாரி ரூ. 2 கோடிக்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மூன்று உற்பத்தி ஆலைகள் திருவொற்றியூர், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் ஆகிய பகுதிகளில் இயங்கி வருகிறது.

ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் ராயல் என்பீல்டு தமிழ் நாட்டின் சூழல் அறிந்து தொடர்ந்து உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளது. கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு கொடுத்திருக்கும் தொகையை கொண்டு ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்கள், பிபிஇ கிட் போன்ற மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட இருக்கின்றன. இத்துடன் இந்த தொகையை மற்ற செலவீனங்களுக்கும் பயன்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மகனின் ஆசையை நிறைவேற்ற தந்தை மரத்தாலேயே எலெக்ட்ரிக் திறன் கொண்ட லம்போர்கினி காரை உருவாக்கி இருக்கிறார்.
குழந்தைகள் ஆசையை நிறைவேற்ற, பெற்றோர் விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுப்பர். அவர்களுக்கு கார் பிடித்தால், கார் பொம்மையை வாங்கி பரிசளிப்பர். வியட்நாமை சேர்ந்த டுரோங் வேண் டௌ மரவேலை செய்து வருகிறார்.
இவர் தனது மகனின் ஆசையை நிறைவேற்ற லம்போர்கினி சியான் ரோட்ஸ்டர் மாடலை மரத்தாலேயே உருவாக்கி இருக்கிறார். இந்த கார் முழுமையாக இயங்குகிறது. தான் உருவாக்கிய காரை மகனுக்கு பரிசளிக்கும் போது எடுத்த புகைப்படத்தை அவர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த கார் எப்படி உருவாக்கப்பட்டது, இதனை உருவாக்க எவ்வளவு நேரம் செலவானது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வீடியோ ஒன்று யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் சிறிய எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குகிறது. இது மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
முதலில் காருக்கான பிளாட்பார்மை டுரோங் உருவாக்கினார். பின் அதில் சக்கரங்களை பொருத்தி, பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் அதனை இயக்கினார். இதைத் தொடர்ந்து காரின் பொனெட், சைடு பேனல்கள், கதவுகளை வடிவமைத்து பொருத்தினார்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஷைன் மாடல் விலையை இந்தியாவில் உயர்த்தியது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஷைன் பிஎஸ்6 மாடல் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. ஹோண்டா ஷைன் பிஎஸ்6 மாடல் விலை முன்பை விட ரூ. 1072 உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த இரு மாதங்களில் இந்த மாடலின் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வின் படி ஹோண்டா ஷைன் பிஎஸ்6 மாடல் விலை ரூ. 71,550 முதல் துவங்குகிறது. இதன் டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ. 76,346 என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. விலை உயர்வு தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஹோண்டா ஷைன் பிஎஸ்6 மாடலை வங்குவோருக்கு தற்போது கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 3500 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜூன் 30, 2021 வரை வழங்கப்படுகிறது.
ஷைன் பிஎஸ்6 மாடலில் 125சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.72 பிஹெச்பி பவர், 10.9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி சார்பில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும், பெருந்தொற்று காலக்கட்டத்தில் பொது மக்களுக்கு உதவும் வகையில் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.
அந்த வகையில் ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி லிமிடெட் சார்பில் மொபைல் பியூவல் பிரவுசர் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருள் நிரப்பப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் இந்நிறுவனம் கொரோனா சார்ந்த அவசர சேவையை வழங்கும் வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கியது. இந்த சேவையை ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி நாடு முழுக்க வழங்கியது.
`மும்பையில் ரிலையன்ஸ் மொபிலிட்டி எரிபொருள் விற்பனை மையங்கள் நகரின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கின்றன. இதன் காரணமாக மொபைல் பியூவல் பிரவுசர் துவங்கப்பட்டு இருக்கிறது,' என ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
1888 பிஹெச்பி பவர் கொண்ட ரிமேக் நிவெரா எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் உற்பத்தி துவங்கியது.
ரிமேக் நிவெரா எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் மாடலின் உற்பத்தி துவங்கியுள்ளது. ரிமேக் நிவெரா மாடல் 1888 பிஹெச்பி பவர், 2360 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த காரில் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் காரின் நான்கு சக்கரங்களுக்கு தனித்தனியாக திறன் வழங்குகின்றன.

பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்களை போன்று இல்லாமல், இந்த காரில் உள்ள மோட்டார்கள் வித்தியாசமாக இருக்கின்றன. முன்புற சக்கரங்களில் உள்ள மோட்டார்கள் 670 பிஹெச்பி பவர், 560 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பின்புற மோட்டார்கள் 1206 பிஹெச்பி பவர், 1800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
முற்றிலும் வித்தியாசமான பவர்டிரெயின் ரிமேக் நிவெரா மாடலை ரியர்-வீல் டிரைவ் வாகனத்தை இயக்குவது போன்ற அனுபவத்தை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 1.97 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு 412 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் புதிய கார் வாங்குவோருக்கு அசத்தலான சலுகையை அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஆட்டோமொபைல் துறையில் சரிந்த வாகன விற்பனையை வேகப்படுத்தி மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அசத்தலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை புதிய கார் வாங்குவோரை கவரும் வகையில் உள்ளது.
மஹிந்திரா வாகனங்கள் விலையை குறைப்பது மட்டுமின்றி வாகனம் வாங்கும் அனுபவத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும் வகையில் இருக்கிறது. புது சலுகைகளில் 'Own Now and Pay after 90 days' சலுகையும் ஒன்று. இது மஹிந்திராவின் பல்வேறு மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது.

இதில் வாடிக்கையாளர்கள் மஹிந்திராவின் எந்த மாடலையும் மாத தவணையில் வாங்கிக் கொண்டு அதற்கான தவணையை 90 நாட்களுக்கு பின் செலுத்த துவங்கலாம். இந்த சலுகை கொரோனா காலக்கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
புது மஹிந்திரா கார் வாங்குவோர் முடிந்தால் அவர்களின் அருகாமையில் உள்ள விற்பனை மையங்களுக்கு நேரடியாக சென்றும், ஆன்லைன் தளம் மூலமாகவும் புது கார் வாங்கலாம்.
கொரோனாவைரஸ் தொற்று பரவல் காரணமாக உற்பத்தி ஆலை பணி திட்டத்தை மாற்றிய ஹூண்டாய்.
ஹூண்டாய் நிறுவனம் தனது சென்னை ஆலையில் மூன்றாவது ஷிப்ட் பணிகளை நிறுத்தி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 31 முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை மூன்றாவது ஷிப்ட் பணிகளை ஹூண்டாய் நிறுத்தி உள்ளது.

ஒரு ஷிப்ட் பணிகளை நிறுத்துவதன் மூலம் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்றாலும், இதன் மூலம் கொரோனா தொற்று எண்ணிக்கையை குறைக்க முடியும். முன்னதாக சென்னை உற்பத்தி ஆலை ஒரு வார காலத்திற்கு முழுமையாக மூடப்பட்டு இருந்தது.
ஊரடங்கு காரணமாக பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலையை மூடின. ஆலையை மூடியதால் ஆக்சிஜன் விநியோகம் செய்யும் நிறுவனங்கள், தங்களின் முழு ஆக்சிஜனையும் கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு வழங்கின.
ஹூண்டாய் நிறுவனத்தின் என் லைன் பெர்பார்மன்ஸ் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது சக்திவாய்ந்த என் லைன் ரக மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. என் லைன் மாடல்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் கார்களின் சக்திவாய்ந்த வேரியண்ட் ஆகும்.
முன்னதாக பலமுறை என் லைன் மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படும் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில், ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடல் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இந்த கார் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்ந்ததாக கூறப்படுகிறது.

பெரிய அலாய் வீல்கள், பின்புறம் டூயல் எக்சாஸ்ட் டிப்கள், வடிவம் மற்றும் தோற்றத்தில் ஐ20 என் லைன் சற்றே வித்தியாசமாக இருக்கிறது. இதன் முன்புறம் பெரிய கிரில், ரிவைஸ்டு பம்ப்பர், பெரிய ஏர் இன்டேக், முன்புற கிரிலில் என் லைன் பேட்ஜிங் கொண்டிருக்கிறது.
புதிய ஹூண்டாய் ஐ20 என் லைன் மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது 120 பிஹெச்பி பவர், 172 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. என்ஜின் மற்றும் பவர்டிரெயின் விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் மாடல் குளோபல் கிராஷ் டெஸ்ட்டில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் டிரைபர் மாடல் குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் மற்றும் இபிடி, சீட் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

குளோபல் என்கேப் வெளியிட்டு இருக்கும் அறிக்கையின்படி ரெனால்ட் டிரைபர் கிராஷ் டெஸ்டில் பெரியவர்கள் அமர்ந்து இருக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் 17-க்கு 11.62 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதற்கு நான்கு நட்சத்திர குறியீடுகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
சிறுவர்கள் அமர்ந்து இருக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் 49-க்கு 27 புள்ளிகளை பெற்றது. இதற்கு மூன்று நட்சத்திர குறியீடுகள் வழங்கப்பட்டன. 7 பேர் பயணிக்கக்கூடிய டிரைபர் மாடலில் கூடுதல் பொருட்களை ஏற்றி சோதனை செய்யும் திறன் கொண்டிருக்கவில்லை.
உலகில் கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பெரும் பணக்காரர்கள் அதை வாங்க கோடிகளை கொட்டிக்கொடுக்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகின் பல்வேறு நாடுகள் மீண்டு வரத்துவங்கி உள்ளன. இந்த நிலையில், ஆடம்பர வாகனங்கள் விற்பனை இதுவரை இல்லாத அளவு அதிகரித்து இருக்கிறது. லம்போர்கினி, பெராரி மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் என முன்னணி நிறுவனங்கள் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு வாகனங்கள் விற்பனை பெரும் சரிவை சந்தித்தது. உலகின் பெரும் பணக்காரர்களுக்கு இருந்த ஒரே கவலை, வெளியில் பழையபடி சுற்ற முடியாதது தான். இவர்கள் தங்களின் செலவீனங்களை ஒத்திவைத்தனர் என சந்தை ஆய்வு நிறுவனத்தின் பெலிப் முனோஸ் தெரிவித்தார்.

2020 இறுதி காலாண்டில் ஆடம்பர கார்களின் விற்பனை அதிகரிக்க துவங்கியது. வோக்ஸ்வேகன் குழுமத்தின் லம்போர்கினி நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதல் முறையாக 2019 ஆண்டில் 7430 வாகனங்களை விற்பனை செய்தது. இத்தாலி நாட்டை சேர்ந்த லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் எஸ்யுவி மாடல் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.
இதே போன்று மற்ற முன்னணி நிறுவன மாடல்களும் இதுவரை இல்லாத அளவு முன்பதிவு செய்யப்படுகின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் ஆடம்பர வாகனங்கள் விற்பனை வெகுவாக அதிகரிக்க துவங்கி உள்ளது.
ரெனால்ட் நிசான் சென்னை உற்பத்தி ஆலையில் மீண்டும் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.
ரெனால்ட் மற்றும் நிசான் உற்பத்தி ஆலை பணிகள் விரைவில் துவங்கப்பட இருக்கிறது. இம்முறை பணிகள் சுழற்சி அடிப்படையில் பணிகள் நடைபெற இருக்கிறது. சில தினங்களாக ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா அச்சம் காரணமாக பணிக்கு திரும்ப மாட்டோம் என அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதவிர கொரோனா கட்டுப்பாட்டு விதிகளான சமூக இடைவெளி ஆலையில் பின்பற்ற இயலாது என ஊழியர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து மெட்ராஸ் உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஆலையை சோதனை செய்ய உத்தரவிட்டு இருக்கிறது.

ரெனால்ட் நிசான் ஆட்டோமோடிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆலையில் சோதனை நடத்த மூத்த அதிகாரிகளை அங்கு அனுப்ப தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக ரெனால்ட் நிசான் தெரிவித்துள்ளது.
மேலும் ஆலையில் பணிகளை மீண்டும் துவங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ரெனால்ட் நிசான் தெரிவித்துள்ளது. இம்முறை பணிகள் படிப்படியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊழியர்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதாக அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
லெக்சஸ் நிறுவனத்தின் எல்சி கன்வெர்டிபில் மாடல் 12 மணி நேரங்கள் உறைபனியில் நிறுத்தப்பட்டு, பின் இயக்க முயற்சி செய்யப்பட்டது.
லெக்சஸ் எல்சி கன்வெர்டிபில் மாடல் நீல நிற வானம் மற்றும் சூரிய வெளிச்சத்தை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் லெக்சஸ் சோதனை ஒன்றை செய்து பார்க்க முடிவு செய்தது.
காரின் உறுதித்தன்மையை நிரூபிக்க லெக்சஸ் மிகவும் விசித்திர சோதனையை எல்சி கன்வெர்டிபில் மாடலில் மேற்கொண்டது. அதன்படி லெக்சஸ் எல்சி கன்வெர்டிபில் 12 மணி நேரம் உறைபனியில் நிறுத்தப்பட்டது. இதற்கென தொழில்துறை நிறுவனங்களில் உள்ள கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

லெக்சஸ் எல்சி கன்வெர்டிபில் மாடலில் உள்ள நான்கடுக்கு ரூப் திறக்கப்பட்ட நிலையில், உறைபனியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காரின் உள்புறம் முழுமையாக குளிரூட்டப்பட்டது. குளிர்ந்த நிலையில், காரின் ஹீட்டெட் சீட், ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை இயங்கும் என லெக்சஸ் நிறுவன மூத்த பொறியாளர் தெரிவித்தார்.
உறைபனியில் இருந்து எடுக்கப்பட்டதும், கார் இயக்கப்பட்டது. இதற்கான சோதனை பகுதி அதிக வளைவுகள், உயரமான பகுதி, தாழ்வான பகுதிகளை கொண்டிருந்தது. உறைபனியில் இருந்து எடுக்கப்பட்ட பின் காரை முதல் முறை ஸ்டார்ட் செய்ததுமே, என்ஜின் ஆன் ஆனது.






