என் மலர்
செய்திகள்

மரத்தால் செய்யப்பட்ட லம்போர்கினி
மகனுக்காக மரத்தாலேயே லம்போர்கினி கார் உருவாக்கிய தந்தை
மகனின் ஆசையை நிறைவேற்ற தந்தை மரத்தாலேயே எலெக்ட்ரிக் திறன் கொண்ட லம்போர்கினி காரை உருவாக்கி இருக்கிறார்.
குழந்தைகள் ஆசையை நிறைவேற்ற, பெற்றோர் விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுப்பர். அவர்களுக்கு கார் பிடித்தால், கார் பொம்மையை வாங்கி பரிசளிப்பர். வியட்நாமை சேர்ந்த டுரோங் வேண் டௌ மரவேலை செய்து வருகிறார்.
இவர் தனது மகனின் ஆசையை நிறைவேற்ற லம்போர்கினி சியான் ரோட்ஸ்டர் மாடலை மரத்தாலேயே உருவாக்கி இருக்கிறார். இந்த கார் முழுமையாக இயங்குகிறது. தான் உருவாக்கிய காரை மகனுக்கு பரிசளிக்கும் போது எடுத்த புகைப்படத்தை அவர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த கார் எப்படி உருவாக்கப்பட்டது, இதனை உருவாக்க எவ்வளவு நேரம் செலவானது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வீடியோ ஒன்று யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் சிறிய எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குகிறது. இது மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
முதலில் காருக்கான பிளாட்பார்மை டுரோங் உருவாக்கினார். பின் அதில் சக்கரங்களை பொருத்தி, பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் அதனை இயக்கினார். இதைத் தொடர்ந்து காரின் பொனெட், சைடு பேனல்கள், கதவுகளை வடிவமைத்து பொருத்தினார்.
Next Story






