என் மலர்
ஆட்டோமொபைல்

ரிலையன்ஸ் மொபிலிட்டி
ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இலவச எரிபொருள் வழங்கும் ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி சார்பில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும், பெருந்தொற்று காலக்கட்டத்தில் பொது மக்களுக்கு உதவும் வகையில் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.
அந்த வகையில் ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி லிமிடெட் சார்பில் மொபைல் பியூவல் பிரவுசர் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருள் நிரப்பப்படுகிறது.

முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் இந்நிறுவனம் கொரோனா சார்ந்த அவசர சேவையை வழங்கும் வாகனங்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கியது. இந்த சேவையை ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி நாடு முழுக்க வழங்கியது.
`மும்பையில் ரிலையன்ஸ் மொபிலிட்டி எரிபொருள் விற்பனை மையங்கள் நகரின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கின்றன. இதன் காரணமாக மொபைல் பியூவல் பிரவுசர் துவங்கப்பட்டு இருக்கிறது,' என ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Next Story