என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • பகானி நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் சூப்பர் கார் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த கார் மொத்தத்தில் ஐந்து யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    இத்தாலியை சேர்ந்த சூப்பர் கார் உற்பத்தயாளரான பகானி, லிமிடெட் எடிஷன் ஹூயாரா கொடலுங்கா (Huayra Codalunga) சூப்பர் காரை அறிமுகம் செய்தது. இந்த மாடல் உலகம் முழுக்க வெறும் ஐந்து யூனிட்களே உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்த ஐந்து யூனிட்களும் ஏற்கனவே விற்றுத் தீர்ந்தன.

    பகானி ஹூயாரா கொடலுங்கா கார் ஹூயாரா கூப் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் நீன்ட டெயில் கொண்டுள்ளது. இதுவும் காரின் என்ஜின் கவர் பகுதியில் உள்ளது. இதில் உள்ள என்ஜின் கவர் முந்தைய கூப் மாடலில் உள்ளதை விட 360 மில்லிமீட்டர் நீளமாக காட்சி அளிக்கிறது.


    எக்ஸ்டெண்டட் என்ஜின் கவர் மட்டும் இன்றி, கொடலுங்கா மாடலில் புதிய முன்புற பம்ப்பர், அகலமான முன்புற ஏர் இன்டேக், ரிவைஸ் செய்யப்பட்ட ஸ்ப்லிட்டர் உள்ளது. இதில் உள்ள ட்வின் சைடு ஏர் இண்டேக்குகள், ட்வின் டர்போ வி12 AMG என்ஜினுள் காற்றை இழுக்கிறது.

    காரின் பின்புறம் நீட்டிக்கப்பட்ட என்ஜின் கவர் ஹூயாரா ஸ்டாண்டர்டு மாடலில் உள்ள டெயில் லைட்களை நீக்கி இருக்கிறது. பின்புறம் கிரில் இல்லை என்பதால், கொடலுங்காவின் டைட்டானியம் எக்சாஸ்ட் சிஸ்டத்தை முழுமையாக பார்க்க முடியும். 

    • ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் தமிழக ஆலை உற்பத்தியில் புது மைல்கல் எட்டியுள்ளது.
    • தமிழகத்தில் ஆம்பியர் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் வெளியிடப்பட்டது.

    கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் ஆம்பியர் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிராண்டு தமிழகத்தின் ராணிபேட்டை ஆலை உற்பத்தியில் 50 ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டு உள்ளது. ராணிபேட்டை உற்பத்தி ஆலை பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் துவங்கியது. ஆலை பணிகள் துவங்கிய ஏழு மாதங்களில் இந்த மைல்கல் எட்டப்பட்டு இருக்கிறது.

    "எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வாடிக்கையாளர்களின் தொடர்ந்து மாறி வருவது, எலெக்ட்ரி்க் வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிப்பது, எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு போன்ற காரணங்களால் தான் இந்த மைல்கல் சாத்தியமானது," என ஆம்பியர் பிராண்டு தெரிவித்து உள்ளது.


    எங்களது பணியாளர்களின் திறமை மீது பெருமை கொள்கிறோம். அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இன்றி இந்த மைல்கல் சாத்தியமாகி இருக்காது. ராணிப்பேட்டை உற்பத்தி ஆலையில் பெரும்பாலான பணியாளர்கள் பெண் ஊழியர்கள் ஆவர். இங்கு பணியாற்றுவோரில் 70 சதவீதம் பேர் பெண்கள் என கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவன சி.இ.ஒ. மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சய் பெல் தெரிவித்தார். 

    • இந்தியாவில் அமலாக இருக்கும் புது சட்டம் பற்றிய தகவலை மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.
    • இது மக்களுக்கு வருவாய் ஈட்டித் தருவதோடு, சாலை ஒழுங்கை பின்பற்ற வைக்கும்.

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி சாலைகள் மற்றும் வீதிகளில் தவறாக பார்க் செய்யப்பட்டு இருக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க புது சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறார்.

    புது சட்டத்தின் கீழ் தவறாக பார்க்கிங் செய்யப்பட்டு இருக்கும் வாகனத்தின் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் எடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பலாம். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தவறை இழைத்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து, அதில் ரூ. 500-ஐ புகைப்படம் எடுத்து அனுப்பிய நபருக்கு வழங்கப்படும்.


    தவறான பார்க்கிங் செய்த நபரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து புகைப்படம் மூலம் தகவல் கொடுத்தவருக்கு ரூ. 500 சன்மானமாக வழங்கப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    புது சட்டம் பற்றிய தகவல்களை மத்திய மந்திரி நிதின் கட்கரியோ அல்லது அமைச்சக அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அந்த வகையில், இந்த சட்டம் இயற்றப்படுவது குறித்த பரிசீலனை நடைபெற்று வருவதாகவே எடுத்துக் கொள்ள வேணஅடும். ஒருவேளை இந்த தட்டம் அமலுக்கு வந்தால், சாலைகளில் பார்க்கிங் தொடர்பாக நடைபெறும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்காலத்தில் முற்றிலுமாக தவிர்க்கப்படும்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சஃபாரி மாடல் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 7 சீட்டர் மாடல்களில் ஒன்று ஆகும்.
    • இந்த மாடல் ஒற்றை பவர்டிரெயின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சஃபாரி 7 சீட்டர் மாடல் இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. எனினும், டாடா சஃபாரி மாடல் ஒற்றை பவர்டிரெயின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மஹிந்திரா XUV700 மாடலுக்கு போட்டியாக விற்பனை செய்யப்படும் நிலையில், டாடா சஃபாரி மாடலுக்கு பவர்டிரெயின் ஆப்ஷ்கள் இல்லாதது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், பச்சை நிற நம்பர் பிளேட்கள் கொண்ட டாடா சஃபாரி மாடல் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் பச்சை நிற நம்பர் பிளேட்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அப்படி எனில் சஃபாரி எலெக்ட்ரிக் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


    மேலும் பச்சை நிற நம்பர் பிளேட் கொண்ட டாடா சஃபாரி மாடல் சோதனை செய்யப்படும் யூனிட் போன்றும் காட்சியளிக்கவில்லை. பச்சை நிற நம்பர் பிளேட் பெற வாகனம் எலெக்ட்ரிக் வெர்ஷனாக உருவாக்கப்பட்டு இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இதுதவிர டாடா மோட்டார்ஸ் உலகின் வேறு எந்த நாடுகளிலும் டாடா சஃபாரி எலெக்ட்ரிக் மாடலையும் அறிமுகம் செய்யவில்லை.

    அந்த வகையில் வெளியாகி இருக்கும் மாடல் ஆட்டோமொபைல் துறையில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டு இருக்க வேண்டும், அல்லது மூன்றாம் தரப்பு நிறுவனம் டாடா சஃபாரி மாடலை எலெக்ட்ரிக் வடிவில் மாற்றி இருக்க வேண்டும். அப்படியெனில் இந்த மாடலுக்கான எலெக்ட்ரிக் கிட் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த யூனிட் முதலீட்டாளர்களுக்காக உருவாக்கப்பட்ட டெமே வாகனமாக இருக்கலாம்.

    Photo Courtesy: autojournalindia

    • கே.டி.எம். நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மோட்டார்சைக்கிளாக 2023 டியூக் 390 இருக்கிறது.
    • சர்வதேச சந்தையில் இந்த மாடல் தொடர் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    கே.டி.எம். நிறுவனத்தின் 2023 டியூக் 390 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் சமீபத்தில் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. இந்த நிலையில், வெளிநாடுகளிலும் 2023 கே.டி.எம். டியூக் 390 மாடல் சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    புதிய மாடல் தற்போதைய டியூக் 390-ஐ விட டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் ஹெட்லைட் கௌல் கூர்மையாக காட்சியளிக்கிறது. ஃபியூவல் டேன்க் மீது பொருத்தப்பட்டு இருக்கும் ஷிரவுட்கள் சற்றே நீண்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதன் பின்புறம் உள்ள சப் ஃபிரேம் முற்றிலும் புதிய யூனிட் ஆகும். இதே போன்ற சப் ஃபிரேம் 790/890 டியூக் மாடல்களில் காணப்படுகிறது.


    இவை தவிர வீல்கள், பிரேக் டிஸ்க், WP சஸ்பென்ஷன் மற்றும் ஸ்விங் ஆம் உள்ளிட்டவை 2022 கே.டி.எம். RC 390 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலிலும் 373சிசி, லிக்விட் கூல்டு சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இது 42.9 பி.ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இந்திய சந்தையில் புதிய 2023 கே.டி.எம். RC 390 மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 14 ஆயிரத்தில் இருந்து துவங்கும் நிலையில், புதிய டியூக் 390 மாடலின் விலையும் சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    Photo Courtesy: Bikewale

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் கார்களை ரிகால் செய்வதாக அறிவித்து உள்ளது.
    • சர்வதேச சந்தையில் சுமார் பத்து லட்சம் கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் ரிகால் செய்வதாக அறிவித்தது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் 2 ஆயிரத்து 179 கார்களை இந்திய சந்தையில் இருந்து ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் செய்யப்படும் கார்கள் 2005 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் GL மற்றும் ML கிளாஸ் எஸ்.யு.வி. மற்றும் R கிளாஸ் எம்.பி.வி.க்கள் ஆகும்.


    வாகனத்தின் பிரேக் பூஸ்டரில் துருப் பிடித்து இருக்கலாம் என்றும், இது பிரேக்கிங்கின் போது அசௌகரியம் அல்லது ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாகவே கார்கள் ரிகால் செய்யப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் உலகம் முழுக்க சுமார் பத்து லட்சம் கார்களை ரிகால் செய்வதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது. அப்போதும் இதே காரணத்தை மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    கார்களின் பிரேக்கிங் சிஸ்டத்தில் உள்ள கோளாறு காரணமாக இத்தனை யூனிட்கள் ரிகால் செய்யப்படுவதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது. "பாதிக்கப்பட்ட கார்களின் சில யூனிட்களில், பிரேக் பூஸ்டர் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் துரு ஏற்பட்டு இருக்கலாம் என கண்டுபிடித்து இருக்கிறோம்," என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    • உலகின் முதல் சோலார் கார் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த கார் மொத்தத்தில் 946 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

    சூரிய ஓளியில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் சோலார் எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட் அப் நிறுவனம் தான் லைட்இயர். இந்த நிறுவனம் சூரிய ஓளியில் இயங்கும் உலகின் முதல் கார் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இது ப்ரோடக்‌ஷன் ரெடி சோலார் எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த சோலார் கார் லைட்இயர் ஒ என அழைக்கப்படுகிறது.

    நெதர்லாந்தை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான லைட்இயர் தனது லைட்இயர் ஒ சோலார் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான முன்பதிவை இந்த ஆண்டு இறுதியில் துவங்க உள்ளது. லைட்இயர் ஒ எலெக்ட்ரிக் கார் 624 கிலோமீட்டர் ரேன்ஜ் கொண்டது ஆகும். லைட்இயர் மாடலில் 5 சதுர அடி அளவில் இறண்டு வளைந்த சோலார் பேனல்கள் உள்ளன.


    இந்த எலெக்ட்ரிக் காரில் 60 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இந்த கார் அதிகபட்சமாக 174 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. லைட்இயர் ஒ மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை பத்து நொடிகளுக்குள் எட்டி விடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வரை செல்லும்.

    இந்த காரில் உள்ள ஆப்டிமைஸ் செய்யப்பட்ட சோலார் ரூஃப் காரை பல மாதங்கள் வரை சார்ஜ் செய்யாமல் இயக்கும் வசதியை வழங்குகிறது. மேலும் இதில் 10.1 இன்ச் செண்டர் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோமோடிவ் மற்றும் கூகுள் நேடிவ் ஒ.எஸ். போன்ற அம்சங்கள் உள்ளது.

    லைட்இயர் ஒ மாடலுக்கு அவ்வப்போது ஓவர்-தி-ஏர் முறையில் அப்டேட்கள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த கார் மொத்தத்தில் 946 யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த காரின் விலை 2 லட்சத்து 63 ஆயிரத்து 262 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 கோடி வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    • கியா இந்தியா நிறுவனத்தின் புதிய செல்டோஸ் மாடல் விரைவில் அறிமுகமாகிறது.
    • இந்த மாடலின் ஸ்பை படங்கள் முதல் முறையாக லீக் ஆகி இருக்கிறது.

    கியா செல்டோஸ் மாடல் வெளிநாடுகளில் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. தற்போது 2022 கியா செல்டோஸ் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்பை படங்கள் முதல் முறையாக லீக் ஆகி உள்ளது.

    இந்த எஸ்.யு.வி. மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. ஒரு மாடலில் அலாய் வீல்களும், மற்றொரு மாடலில் ஸ்டீல் வீல் கவர்களை கொண்டுள்ளது. இத்துடன் செங்குத்தாக இருக்கும் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் உள்ளன. இதே போன்று புது மாடலின் முன்புற கிரில் மற்றும் எல்.இ.டி. டி.ஆர்.எல். உள்ளிட்டவை மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.


    உள்புறம் ஹூண்டாய் அல்கசார் மாடலில் உள்ளதை போன்றே 10ய25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, பானரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன், வெண்டிலேடெட் சீட்கள், ADAS போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    புதிய 2022 செல்டோஸ் மாடலில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல், 140 பி.எஸ். பவர், 115 பி.எஸ். பவர் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல், 115 பி.எஸ். பவர் வழங்கும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோமேடிக் ஆப்ஷன்கள், 6 ஸ்பீடு AT, 7 ஸ்பீடு DCT அல்லது CVT கியர்பாக்ஸ் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

    Photo Courtesy: Rushlane

    • ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை அறிவித்து இருக்கிறது.
    • கார் மாடல்களுக்கு வேற லெவல் பலன்கள் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி கார் மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ. 48 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் ஹூண்டாய் சாண்ட்ரோ, ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஹூண்டாய் ஆரா போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் சாண்ட்ரோ அந்நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஹேச்பேக் மாடல் ஆகும். இந்த மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 28 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு ரூ. 48 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.


    அதிக மைலேஜ் வழங்கும் செடான் மாடல் கார்களில் ஒன்றாக ஹூண்டாய் ஆரா இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 25 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்குகிறது. இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ. 48 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஹூண்டாய் ஆரா மாடலில் கிராண்ட் i10 நியோஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 82 ஹெச்.பி. பவர், 121 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • குறைந்த காலக்கட்டத்தில் அதிக கி.மீ. சாலை அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அசத்தல்.
    • புது சாதனை குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரி பெருமிதம்.

    தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிதாக உலக சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையின் மூலம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தி இருக்கிறது. அமராவதி மற்றும் அகோலா இடையிலான 75 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை ஐந்தே நாட்களில் கட்டி முடித்ததை அடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை பெற்றது.

    தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் பெற்றுருக்கும் தகவலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத் துறை மந்திரி நிதின் கட்கரி தனது ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார். தனது ட்விட்டர் பதிவில் புதிதாக அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை மற்றும் கின்னஸ் சாதனை சான்றிதழ் ஆகியவற்றின் புகைப்படங்களையும் அவர் இணைத்து இருந்தார்.


    கின்னஸ் சாதனை படைத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அமைச்சர் நிதின் கட்கரி தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார். அமராவதி மற்றும் அகோலா இடையே NH 53 தொடர்ச்சியான சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 105 மணி நேரங்கள், 33 நிமிடங்களில் அமைத்து சாதனை படைத்தது.

    அமராவதி மற்றும் அகோலா இடையிலான நெடுஞ்சாலையின் கட்டுமான பணி சனிக்கிழமை காலை 6 மணிக்குத் துவங்கி நேற்று முடிக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலை கொல்கத்தா, ராய்ப்பூர், நாக்பூர், அகோலா, துலே மற்றும் சூரத் ஆகிய நகரங்களை இணைக்கிறது. இந்த சாலையை அமைக்க 800 ஊழியர்கள், 700 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் தனது வாகனங்களை ரிகால் செய்ய முடிவு செய்து இருக்கிறது.
    • இதில் மூன்று கார் மாடல்கள் இடம்பெற்று உள்ளன.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2004 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று கார் மாடல்களை உலகம் முழுக்க ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இவற்றில் 2nd Gen மெர்சிடிஸ் பென்ஸ் ML கிளாஸ் W164, 1St Gen GL கிளாஸ் X164 மற்றும் R கிளாஸ் W251 போன்ற மாடல்களின் 9 லட்சத்து 93 ஆயிரத்து 407 யூனிட்கள் ரிகால் செய்யப்படுகின்றன.


    கார்களின் பிரேக்கிங் சிஸ்டத்தில் உள்ள கோளாறு காரணமாக இத்தனை யூனிட்கள் ரிகால் செய்யப்படுவதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது. "பாதிக்கப்பட்ட கார்களின் சில யூனிட்களில், பிரேக் பூஸ்டர் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் துரு ஏற்பட்டு இருக்கலாம் என கண்டுபிடித்து இருக்கிறோம்," என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

    தற்போது பாதிக்கப்பட்டு இருக்கும் கார் மாடல்கள் இந்திய சந்தையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அவற்றையும் ரிகால் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்யும் என்றே தெரிகிறது. எனினும், இதுபற்றி மெர்சிடிஸ் பென்ஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜூன் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது.
    • டாடா ஹேரியர் மாடலுக்கு அதிகபட்ச சலுகை வழங்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் மற்றும் குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து உள்ளது. இவை ஜூன் மாதம் முழுக்க வழங்கப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்களை வழங்குகிறது.

    அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ, டிகோர், நெக்சான், ஹேரியர் மற்றும் சஃபாரி போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் தற்போது இடம்பெற்று உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் சப் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    மற்ற மாடல்களுடன் ஒப்பிடும் போது டாடா ஹேரியர் மாடலுக்கு அதிகபட்ச சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி டாடா ஹேரியர் மாடலுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. டாடா டியாகோ ஹேச்பேக் மற்றும் டிகோர் சப் காம்பேக்ட் செடான் மாடல்களுக்கு ரூ. 23 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு,வி. மாடல் டாடா நெக்சானுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் CNG மாடல்களுக்கு எந்த விதமான சலுகைகளையும் வழங்கவில்லை. இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் முன்னணி உற்பத்தியாளராக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. 

    ×