என் மலர்
நீங்கள் தேடியது "Ampere Electric"
- ஆம்பியர் நிறுவனத்தின் முதல் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.
- இந்த ஸ்கூட்டரில் 4 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது.
ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - ஆம்பியர் நெக்சஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய நெக்சஸ் மாடல் ஆம்பியர் நிறுவனத்தின் முதல் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.
ஆம்பியர் நெக்சஸ் மாடல் EX மற்றும் ST என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் சான்ஸ்கர் அக்வா, ஸ்டீல் கிரே, இந்தியன் ரெட் மற்றும் லூனார் வைட் என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 4 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்கூட்டர் பவர் மோடில் மணிக்கு 93 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் தறன் கொண்டிருக்கிறது. சிட்டி மோடில் இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 63 கிலோமீட்டர்களும், இகோ மோடில் மணிக்கு அதிகபட்சம் 42 கிலோமீட்டர்கள் வேகத்திலும் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஸ்கூட்டரின் பேட்டரி அளவு 20 சதவீதத்திற்கும் கீழ் குறையும் போது லிம்ப் ஹோம் மோட் செயல்படுத்தப்படுகிறது.
இத்துடன் ரிவர்ஸ் மோட் வசதியும் உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3 கிலோவாட் ஹவர், IP67 தர பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 136 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது. இத்துடன் 15A மற்றும் 25A என இரண்டு சார்ஜிங் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.
- ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் தமிழக ஆலை உற்பத்தியில் புது மைல்கல் எட்டியுள்ளது.
- தமிழகத்தில் ஆம்பியர் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் வெளியிடப்பட்டது.
கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் ஆம்பியர் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன பிராண்டு தமிழகத்தின் ராணிபேட்டை ஆலை உற்பத்தியில் 50 ஆயிரமாவது யூனிட்டை வெளியிட்டு உள்ளது. ராணிபேட்டை உற்பத்தி ஆலை பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் துவங்கியது. ஆலை பணிகள் துவங்கிய ஏழு மாதங்களில் இந்த மைல்கல் எட்டப்பட்டு இருக்கிறது.
"எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வாடிக்கையாளர்களின் தொடர்ந்து மாறி வருவது, எலெக்ட்ரி்க் வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிப்பது, எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு போன்ற காரணங்களால் தான் இந்த மைல்கல் சாத்தியமானது," என ஆம்பியர் பிராண்டு தெரிவித்து உள்ளது.

எங்களது பணியாளர்களின் திறமை மீது பெருமை கொள்கிறோம். அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு இன்றி இந்த மைல்கல் சாத்தியமாகி இருக்காது. ராணிப்பேட்டை உற்பத்தி ஆலையில் பெரும்பாலான பணியாளர்கள் பெண் ஊழியர்கள் ஆவர். இங்கு பணியாற்றுவோரில் 70 சதவீதம் பேர் பெண்கள் என கிரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவன சி.இ.ஒ. மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சய் பெல் தெரிவித்தார்.






