search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    • டிரைடன்ட் 660 ஸ்பெஷல் எடிஷன் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த பைக்கிலும் 660சிசி, இன்லைன் மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டிரையம்ப் நிறுவனம் தனது டிரைடன்ட் டிரிபில் டிரிபியூட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இது டிரைடன்ட் 660 மாடலின் ஸ்பெஷல் எடிஷன் மாடல் ஆகும். புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் பிரத்யேக பெயின்ட் மற்றும் விசேஷ அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. 1970-க்களில் அதிக வெற்றிகளை பெற்ற ஸ்லிப்பரி சாம் ரேஸ் பைக்கை நினைவு கூறும் வகையில், டிரைடன்ட் 660 ஸ்பெஷல் எடிஷன் மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டிரைடன்ட் டிரிபில் டிரிபியூட் மாடல் டிஸ்டின்டிவ் வைட் மற்றும் மெட்டாலிக் புளூ, ஆங்காங்கே ரெட் ஸ்டிரீக் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இத்துடன் 67 எண்ணின் கிராஃபிக் இடம்பெற்று இருக்கிறது. மேலும் இந்த நிறத்திற்கு ஒற்றுப்போகும் நிறத்தில் ஃபிளை ஸ்கிரீன் மற்றும் பெல்லிபேன் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இந்த மாடலை ஸ்டான்டர்டு எடிஷனில் இருந்து வித்தியாசமானதாக மாற்றுகிறது.

     


    மெக்கானிக்கல் வகையில், டிரையம்ப் டிரைடன்ட் 660 மாடலில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த பைக்கிலும் 660சிசி, இன்லைன் மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 81 ஹெச்.பி. பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்த பைக்கின் டியுபுலர் ஃபிரேமுடன் ஷோவா யு.எஸ்.டி. ஃபோர்க் மற்றும் பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் இரட்டை 310mm டிஸ்க்குகள், பின்புறம் 255mm டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.

    டிரைடன்ட் மாடலில் இரண்டு ரைடிங் மோட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல், நேவிகேஷன் வசதி, ஆல்-எல்.இ.டி. லைட்டிங் மற்றும் ஆட்டோ கேன்சலிங் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் டிரைடன்ட் 660 மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 12 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
    • 18 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.

    போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது குர்கா 5-டோர் எஸ்.யு.வி. மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. போர்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி.-க்களில் ஒன்றாக குர்கா மாடல் விளங்குகிறது. முன்னதாக இந்த மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

    இந்த நிலையில், போர்ஸ் குர்கா 5 கதவுகள் கொண்ட மாடல் இந்திய சந்தையில் 2023 அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய குர்கா 5-டோர் வேரியண்ட் அதன் தற்போதைய 3-டோர் வேரியண்டை விட புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த மாடலில் 18 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.

    புதிய குர்கா மாடலின் கேபின் லே-அவுட் மாற்றமின்றி 3-டோர் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. குர்கா 5-டோர் மாடல் இரண்டடுக்கு இருக்கைகளுடன் ஐந்து இருக்கைகள் மற்றும் மூன்றடுக்கு இருக்கைகளுடன் ஆறு இருக்கைகள் மற்றும் ஏழு பேர் அமரும் வகையில் கேப்டன் இருக்கை போன்ற ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    போர்ஸ் குர்கா 5-டோர் மாடலில் மெர்சிடிஸ் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதே போன்ற செட்டப் குர்கா 3-டோர் வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. விலையை பொருத்தவரை இந்த மாடல் தற்போதைய 3-டோர் வெர்ஷனை விட ரூ. 1.5 லட்சம் வரை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    • இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • ஐந்து வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்று டாடா நெக்சான். நெக்சான் மாடல் காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் தொடர்ந்து கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. சமீபத்தில் இதன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.

    அதிகளவு மாற்றங்களுடன் புதிய தோற்றம் மற்றும் அம்சங்களை நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் மாடலின் வேரியண்ட்களை மாற்றியமைத்து புதிதாக ஐந்து வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

     


    டாடா நெக்சான் புதிய வேரியண்ட்களின் விலை ரூ. 10 லட்சம் என்று துவங்குகிறது. நெக்சான் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் AMT வெர்ஷன்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. முன்னதாக டாடா நிறுவனம் நெக்சான் டார்க் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ. 11 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டது.

    பெட்ரோல் வெர்ஷன்களில் நெக்சான் ஸ்மார்ட் பிளஸ், பியூர், பியூர் எஸ் வேரியண்ட்களில் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. டீசல் வெர்ஷனில் பியூர் மற்றும் பியூர் எஸ் வேரியண்ட்களில் ஆட்டோமேடிக் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

    தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களில் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்குவது தவிர டாடா நெக்சான் மாடல்களில் வெறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் ணற்றும் 6 ஸ்பீடு AMT மற்றும் 7 ஸ்பீடு DCA டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    • புதிய ஸ்விட்ச் கியர் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
    • நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட CB125R மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முந்தைய வெர்ஷனுடன் ஒப்பிடும் போது இந்த மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் கணிசமான அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன.

    அதன்படி முற்றிலும் புதிய CB125R மாடலில் 5 இன்ச் அளவில் கலர் TFT ன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிது. இந்த யூனிட் CB1000R மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனை முற்றிலும் புதிய ஸ்விட்ச் கியர் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

     


    மேம்பட்ட ஹோண்டா CB125R மோட்டார்சைக்கிள் மேட் சைனோஸ் கிரே மெட்டாலிக், பியல் கூல் வைட், பியல் கூல் வைட், ரீஃப் சீ புளூ மெட்டாலிக் மற்றும் பியல் ஸ்பிலெண்டர் ரெட் என்று நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய மோட்டார்சைக்கிளின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில், 2024 ஹோண்டா CB125R மாடலில் 125சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 15 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் தொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இத்துடன் ஷோவா எஸ்.எஃப்.எஃப். முன்புற ஃபோர்க்குகள், நான்கு பிஸ்டன்கள் கொண்ட கேலிப்பர்கள், 296mm முன்புற டிஸ்க் பிரேக், IMU மூலம் கட்டுப்படுத்தப்படும் லீன் சென்சிடிவ் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. 2024 ஹோண்டா CB125R மாடலின் விலை தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படலாம். இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதும் சாத்தியமற்ற ஒன்றாக தெரிகிறது.

    • டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.
    • காரில் வேறு எந்த மாற்றமும் இல்லை.

    ஸ்கோடா நிறுவனம் தனது கோடியக் எஸ்.யு.வி.-இன் வேரியன்ட்களை மாற்றியுள்ளது. முன்னதாக மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த கோடியக் தற்போது டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். மேலும், இதன் அம்சங்களும் மாற்றப்பட்டுள்ளன.

    ஸ்கோடா கோடியக் L&K வேரியண்ட் ரூ. 41 லட்சத்து 99 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இதன் விலை தற்போது ரூ. 2 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 39 லட்சத்து 99 ஆயிரம் என மாற்றப்பட்டு இருக்கிறது. விலை, வேரியண்ட் மாற்றப்பட்டது தவிர காரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     


    கோடியக் மாடலில் 190 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4-வீல் டிரைவ் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலாக கோடியக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் டொயோட்டா பார்ச்சூனர், ஜீப் மெரிடியன், ஹூண்டாய் டக்சன் மற்றும் எம்.ஜி. குளோஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • பயனர்களுக்கு ரூ. 27 ஆயிரம் மதிப்பிலான பலன்களை வழங்குகிறது.
    • 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்கப்படுகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது விடா V1 ப்ரோ வாங்குவோருக்கு புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது. ஹீரோவின் எலெக்ட்ரிக் வாகன பிரிவு விடா பிராண்டு விடா அட்வான்டேஜ் பேக்கேஜ் அறிவித்து இருக்கிறது. இதில் பயனர்களுக்கு ரூ. 27 ஆயிரம் மதிப்பிலான பலன்களை வழங்குகிறது.

    ஏற்கனவே விடா V1 ப்ரோ பயன்படுத்துவோர் புதிய அட்வான்டேஜ் பேக்கேஜை எவ்வித கட்டணமும் இன்றி ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் பெற முடியும். இதில் இரண்டு பேட்டரிகளுக்கும் ஐந்து ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்கப்படும்.

     


    இத்துடன் 2 ஆயிரத்திற்கும் அதிக சார்ஜிங் பாயிண்ட்களை இலவசமாக பயன்படுத்தும் வசதி, விடா வொர்க்ஷாப்களில் இலவச சர்வீஸ், 24x7 ரோடு சைடு அசிஸ்டன்ஸ், மை விடா செயலியில் உள்ள அனைத்து கனெக்டிவிட்டி மற்றும் பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய விடா V1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 26 ஆயிரத்து 200, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 165 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    • வாடிக்கையாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
    • பரிசோதனையில் 34-க்கு 20.86 புள்ளிகளை பெற்றது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனம் தனது eC3 எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தியது. இந்த சோதனையின் முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    முன்புறம் ஓட்டுநர் மற்றும் பயணி இருக்கைகளில் ஏர்பேக், பெல்ட் லோடு லிமிட்டர் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் சிட்ரோயன் eC3 குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் ஓரு நட்சத்திர குறியீடையும் பெறாவில்லை. இது சிட்ரோயன் வாடிக்கையாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

     


    சிட்ரோயன் eC3 மாடல் பெரியவர்கள் பாதுகாப்புக்கான பரிசோதனையில் 34-க்கு 20.86 புள்ளிகளை பெற்றது. சிறுவர்கள் பாதுகாப்புக்கான பரிசோதனையில் 49-க்கு 10.55 புள்ளிகளையே பெற்றது. இந்த கார் அதன் ஓட்டுநர் மற்றும் அவரின் அருகாமையில் அமரும் பயணிக்கு தலை மற்றும் கழுத்து பகுதிகளில் நல்ல பாதுகாப்பை வழங்கியதாக குளோபல் NCAP தெரிவித்தது.

    எனினும், பக்காவாட்டுகளில் தலை பகுதிக்கு பாதுகாப்பு அளிப்பதை ஆப்ஷனாகவும் சிட்ரோயன் வழங்கவில்லை. காரின் ஒட்டுமொத்த உருவம் திடமாக இருந்தது என்று குளோபல் NCAP தெரிவித்துள்ளது.

    இவைதவிர சிட்ரோயன் eC3 எலெக்ட்ரிக் ஹேச்பேக் காரில் ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. போன்ற பாதுகாப்பு அம்சங்கள், ரிவர்ஸ் பார்கிங் சென்சார்கள், ரியர் டோர் மேனுவல் சைல்டு லாக், ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ஸ்பீடு சென்சிடிவ் ஆட்டோ டோர் லாக் வசதியும் வழங்கப்படுகிறது.

    • பி.எம்.டபிள்யூ. காப்புரிமையில் தெரியவந்துள்ளது.
    • மோட்டார்சைக்கிள்களில் கொண்டுவர திட்டமிடுகிறது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனது எதிர்கால மோட்டார்சைக்கிள் மாடல்களில் கிம்பலில் மவுன்ட் செய்யக்கூடிய எல்.இ.டி. ஹெட்லைட் வழங்க இருக்கிறது. இது தொடர்பான விவரங்கள் பி.எம்.டபிள்யூ. காப்புரிமையில் தெரியவந்துள்ளது.

    காப்புரிமை விவரங்களின் படி எல்.இ.டி. ஹெட்லைட் 3-ஆக்சிஸ் கிம்பலில் மவுன்ட் செய்யப்பட்டு இருக்கிறது. ஒளிப்பதிவு துறையில் கேமரா ஆடினாலும், காட்சிகள் ஆடாமல் பார்த்துக் கொள்ளவே கிம்பல் பயன்படுத்தப்படுகிறது. இதே பாணியை பி.எம்.டபிள்யூ. தனது மோட்டார்சைக்கிள் மாடல்களில் கொண்டுவர திட்டமிடுகிறது.

     


    மோட்டார்சைக்கிள் எந்த பக்கம் திரும்பினாலும் அல்லது கடுமையாக பிரேகிங் செய்யும் போதும் பி.எம்.டபிள்யூ. சிஸ்டத்தில் எல்.இ.டி. ஹெட்லைட் எந்த பக்கமும் அசையாது. இதுதவிர ஹெட்லைட் கார்னெரில் மட்டும் ஒளியை பாய்ச்சும். இதனால் ரைடிங்கின் போது அதிக பாதுகாப்பு கிடைக்கும்.

    இந்த ஹெட்லைட் சிஸ்டம் முழுவதும் இனெர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட் (IMU) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதே போன்ற யூனிட் தான் மோட்டார்சைக்கிளின் இதர பாதுகாப்பு வசதிகளான கார்னரிங் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னெரிங் ஏ.பி.எஸ். உள்ளிட்டவைகளையும் கட்டுப்படுத்துகிறது. புதிய கிம்பல் ஹெட்லைட் சிஸ்டம் பி.எம்.டபிள்யூ. உற்பத்தி செய்யும் எதிர்கால GS சீரிஸ் மாடல்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • முந்தைய கார் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே கிடைத்தது.
    • புதிய கார் மணிக்கு 100 கிமீ வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடும்.

    ஜெர்மனியை சேர்ந்த ஆடம்பர கார் உற்பத்தியாளர் பி.எம்.டபிள்யூ. இந்திய சந்தையில் தனது 620d M ஸ்போர்ட் சிக்னேச்சர் கார் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபிள்யூ. M காரின் விலை ரூ. 78 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டும் கிடைத்த நிலையில், இந்த வெர்ஷன் டீசல் பவர்டிரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.

    புதிய பி.எம்.டபிள்யூ. காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய 620d M ஸ்போர்ட் சிக்னேச்சர் எடிஷன் மாடல்- மினரல் வைட், டான்சனைட் புளூ, ஸ்கை ஸ்கிரேப்பர் கிரே மற்றும் கார்பன் பிளாக் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை இரட்டை 12.3 இன்ச் ஸ்கிரீன்கள்- ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரியர்வியூ கேமரா, பார்க் அசிஸ்ட், ரிமோட் கண்ட்ரோல் பார்க்கிங் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், ஸ்மார்ட்போன் ஹோல்டர், பேடில் ஷிஃப்டர்கள், பானரோமிக் சன்ரூஃப், 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. 620d M ஸ்போர்ட் சிக்னேச்சர் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 188 ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் கம்ஃபர்ட், கம்ஃபர்ட் பிளஸ், ஸ்போர்ட் , இகோ ப்ரோ மற்றும் அடாப்டிவ் என ஐந்துவித டிரைவிங் மோட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    • ஹூண்டாய் தொடர்பு கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • வாகனங்களை ஹூண்டாய் இலவசமாக சரிசெய்து கொடுக்கும்.

    ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா செடான் மாடலின் தேர்வு செய்யப்பட்ட iVT மாடல்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் செய்யப்பட வேண்டிய கார்களை பயன்படுத்துவோரை ஹூண்டாய் தொடர்பு கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    காரில் உள்ள எலெக்ட்ரிக் ஆயில் பம்ப் கண்ட்ரோலரில் பிரச்சினை ஏற்பட்டதே ரிகால் செய்வதற்கான காரணம் ஆகும். பிரச்சினை சரி செய்வதற்காக அருகாமையில் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்கள் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும்.

    பாதிக்கப்பட்ட வாகனங்களை ஹூண்டாய் இலவசமாக சரிசெய்து கொடுக்கும். முன்னதாக கியா நிறுவனம் தனது செல்டோஸ் எஸ்.யு.வி.-யை இதே பிரச்சினையை சரி செய்வதற்காக 4 ஆயிரத்து 300 யூனிட்களை ரிகால் செய்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஹூண்டாய் தனது முற்றிலும் புதிய வெர்னா மாடலை அறிமுகம் செய்தது. இந்த கார் EX, S, SX மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    • இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஹெட்-அப் டிஸ்ப்ளேவை பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

    ஆடி நிறுவனத்தின் முற்றிலும் புதிய கியூ6 இ டிரான் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆடியின் புதிய எலெக்ட்ரிக் கார் பி.பி.இ. பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் டூயல் மோட்டார் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த கார் மாடல் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கியூ6 இ டிரான் மாடல் ஆடியின் முற்றிலும் புதிய டிசைன் மற்றும் ஸ்ப்லிட் ஹெட்லைட் செட்டப் கொண்டிருக்கிறது. இந்த காரின் முன்புறம் க்ளோஸ்டு ஆஃப் கிரில், அழகிய தோற்றம் கொண்ட டி.ஆர்.எல்.கள், முன்புறம் அகலமான ஏர் இன்டேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த காரில் ஆடியின் முற்றிலும் புதிய டிஜிட்டல் லைட் சிக்னேச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இந்த காரின் உள்புறம் பானரோமிக் டிஸ்ப்ளே, 11.9 இன்ச் ஆடி விர்ச்சுவல் காக்பிட், 14.5 இன்ச் MMI டச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஸ்டீரிங் வீலில் பட்டன்களுக்கு மாற்றாக டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. பயனர்கள் விரும்பும் பட்சத்தில் இந்த எஸ்.யு.வி.-யில் ஆக்மென்டெட் ரியாலிட்டி ஹெட்-அப் டிஸ்ப்ளேவை பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.


     

    பவர்டிரெயினை பொருத்தவரை ஆடி கியூ6 இ டிரான் மாடலில் 382 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் டூயல் மோட்டார் செட்டப் உள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இதில் உள்ள 100 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 625 கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்று இருக்கிறது.

    • புது வால்வோ காரின் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.
    • மணிக்கு அதிகபட்சம் 180 கி.மீ. வேகத்தில் செல்லும்.

    வால்வோ கார் இந்தியா நிறுவனம் தனது XC40 ரிசார்ஜ் சிங்கில் வேரியண்டுக்கான முன்பதிவுகளை துவங்கியது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வேரியண்டின் விலை ரூ. 54 லட்சத்து 95 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும். முன்பதிவு வால்வோ இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.

    புதிய வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் XC40 ரிசார்ஜ் டூயல் மோட்டார், ஆல்வீல் டிரைவ் வேரியண்டின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.


     

    புதிய வேரியண்ட்-இல் பிக்சல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், 360 டிகிரி கேமரா, ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் வழங்கப்படவில்லை. மாற்றாக இந்த காரில் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 2-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், 12 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் உள்ளது.

    இத்துடன் பார்க் அசிஸ்ட், 19 இன்ச் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூஃப், முன்புறம் பவர்டு இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜிங் போன்ற வசதிகள் உள்ளன. பாதுகாப்பிற்கு 7 ஏர்பேக், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், கிராஸ் டிராஃபிக் அலர்ட்கள், ரியர் கொலிஷன் வார்னிங் போன்ற வசதிகளை வழங்கும் ADAS சூட் உள்ளது.


     

    இதில் உள்ள வால்வோ ஒற்றை மோட்டார் 238 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.

    வால்வோ XC40 ரிசார்ஜ் புதிய வேரியண்டில் 69 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 475 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என சான்று பெற்றுள்ளது.

    ×