என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சபாரி மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புத்தம் புதிய சபாரி மாடலுக்கான முன்பதிவை துவங்கி உள்ளது. புதிய சபாரி மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 30 ஆயிரம் ஆகும். வாடிக்கையாளர்கள் டாடா வலைதளம் அல்லது விற்பனையகம் சென்று புதிய சபாரி மாடலை முன்பதிவு செய்யலாம்.

    இந்தியாவில் புதிய சபாரி மாடலுக்கான வினியோகம் பிப்ரவரி 22 ஆம் தேதி துவங்க இருக்கிறது. புதிய சபாரி மாடல் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டி பிளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ் என ஆறு வேரியன்ட்களில் கிடைக்கிறது. 

     டாடா சபாரி

    இந்த மாடலில் சற்று உயரமான மேற்கூரை, புதிய வடிவமைப்பில் பின்புற விளக்குகள் ஆகியவை சிறப்பம்சமாக உள்ளது. உயரமான பொனெட் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.

    புதிய சபாரி மாடல் 2 லிட்டர், 4 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டது. இது 168 பிஹெச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடலுக்கு சந்தையில் போட்டியாக எம்ஜி ஹெக்டார் பிளஸ் உள்ளது.
    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஓசூரில் கட்டமைத்து இருக்கும் புதிய ஆலையில் உற்பத்தி பணிகளை துவங்கி இருக்கிறது.


    பெங்களூரை சேர்ந்த பிரீமியம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஏத்தர் எனர்ஜி ஓசூரில் கட்டமைத்த புதிய ஆலையில் உற்பத்தி பணிகளை துவங்கி இருக்கிறது. இந்த ஆலையில் 450எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    புது ஆலையில் உற்பத்தி துவங்கி இருப்பதால், ஏத்தர் எனர்ஜி இந்தியாவில் மேலும் சில பகுதிகளில் விற்பனையை அதிகப்படுத்த முடியும். தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி ஒரு வருடம் கழித்து ஓசூர் ஆலையில் உற்பத்தி பணிகள் துவங்கி உள்ளன.

    ஓசூரில் உள்ள புதிய உற்பத்தி ஆலை 4 லட்சம் சதுர அடி பரப்பளவு நிலத்தில் அமைந்துள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிக வேலைவாய்ப்புகளை இந்த ஆலை உருவாக்கும் என ஏத்தர் எனர்ஜி தெரிவித்து இருந்தது.
    பெனலி நிறுவனத்தின் புதிய டிஆர்கே 502எக்ஸ் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    பெனலி இந்தியா தனது இரண்டாவது பிஎஸ்6 மோட்டார்சைக்கிள், டிஆர்கே 502 அட்வென்ச்சர் டூரர் மாடலை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் வெளியீட்டை தொடர்ந்து டிஆர்கே 502எக்ஸ் பிஎஸ்6 மாடலை வெளியிட பெனலி திட்டமிட்டு உள்ளது.

    டிஆர்கே 502எக்ஸ் பிஎஸ்6 மாடல் இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாகும் என பெனலி இந்தியா நிர்வாக இயக்குனர் விகாஸ் ஹபாக் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

    பெனலி டிஆர்கே 502எக்ஸ் ஆப்-ரோடு சார்ந்த மாடல் ஆகும். இது ஸ்போக்டு வீல், பெரிய என்ஜின் கார்டு, ஹை-மவுண்ட் செய்யப்பட்ட எக்சாஸ்ட், பின்புறம் லக்கேஜ் ரேக், டிஆர்கே 502 மாடலை விட அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.

    சஸ்பென்ஷனிற்கு 50எம்எம் யுஎஸ்டி போர்க், பின்புறம் மோனோ-ஷாக் செட்டப் வழங்கப்படுகிறது. இதே செட்டப் 502எக்ஸ் மாடலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320எம்எம் டிஸ்க், பின்புறம் 260எம்எம் டிஸ்க் ரோட்டார்கள் வழங்கப்படுகிறது.
    ரெனாலாட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் கார் விற்பனையகம் வந்தடைந்துள்ளது.


    ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் தனது கைகர் பி-எஸ்யுவி மாடலின் சர்வதேச வெளியீட்டை சமீபத்தில் இந்தியாவில் செய்தது. வரும் மாதங்களில் புதிய ரெனால்ட் கைகர் விற்பனை இந்தியாவில் துவங்க இருக்கிறது. புதிய கைகர் மாடலில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய ரெனால்ட் கைகர் மாடல் விற்பனையகம் வந்தடைந்து உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி முதற்கட்டமாக ரெனால்ட் கைகர் டாப் எண்ட் மாடல் விற்பனையகம் வந்துள்ளது.

     ரெனால்ட் கைகர்

    புதிய கைகர் மாடலில் அதிக செயல்திறன் மற்றும் சிறந்த டிரைவிங் அனுபவத்துக்காக டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. மேலும் இந்த காரில் மல்டிசென்ஸ் டிரைவ் முறைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    காரின் உட்பகுதியில் ஸ்மார்ட் கேபின் உள்ளது. அதனைத்தவிர தொழில்நுட்பம், செயல்பாடு மற்றும் அதிக இடவசதியிலும் தனித்துவம் கொண்ட காராக இருக்கிறது.
    2021 மஹிந்திரா எக்ஸ்யுவி300 புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மஹிந்திரா நிறுவனம் தனது பிரபல காம்பேக்ட் எஸ்யுவி மாடலான எக்ஸ்யுவி300 பெட்ரோல் ஆட்டோஷிப்ட் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஆட்டோஷிப்ட் வசதி எக்ஸ்யுவி300 டாப் எண்ட் டபிள்யூ8 (ஒ) வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி300 பெட்ரோல் ஆட்டோஷிப்ட் வேரியண்ட் விலை ரூ. 9.95 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய டாப் எண்ட் வேரியண்ட் டூயல்-டோன் ரெட் மற்றும் அக்வா-மரைன் நிறங்களில் கிடைக்கிறது. பேஸ் வேரியண்ட் புதிதாக கேலக்ஸி கிரே நிறத்தில் கிடைக்கிறது.

     2021 மஹிந்திரா எக்ஸ்யுவி300

    ஆட்டோஷிப்ட் மற்றும் புதிய நிறம் தவிர எக்ஸ்யுவி300 டபிள்யூ8 (ஒ) வேரியண்ட் மஹிந்திராவின் புதிய புளூசென்ஸ் பிளஸ் கனெக்டெட் தொழில்நுட்ப வசதியை பெறுகிறது. புதிய கனெக்டெட் தொழில்நுட்பத்தில் 40-க்கும் அதிக வசதிகளை கொண்டுள்ளது.

    இதில் லொகேஷன் சார்ந்த வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், ரிமோட் வெஹிகில் கண்ட்ரோல் மற்றும் இதர இன்போடெயின்மென்ட் கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன. புதிய எக்ஸ்யுவி300 தற்சமயம் இசிம் வசதியை கொண்டுள்ளது. இது செயலி மூலம் ஸ்மார்ட்போனுடன் இணைந்து செயல்படுகிறது.
    இந்தியாவில் ஹோண்டா கார் மாடல்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் அனைத்து மாடல்களின் விலையையும் இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. அதன்படி ஹோண்டா ஜாஸ், டபிள்யூஆர்-வி, அமேஸ் மற்றும் ஐந்தாம் தலைமுறை சிட்டி போன்ற மாடல்கள் விலை உயர்ந்து உள்ளது.

    அதிகபட்சமாக கார் மாடல்கள் விலை ரூ. 20 ஆயிரம் வரை உயர்ந்து இருக்கிறது. இது ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப வேறுபடும். கார் உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பதை விலை உயர்வுக்கு காரணமாக ஹோண்டா கார்ஸ் தெரிவித்து இருக்கிறது.

     ஹோண்டா கார்

    ஹோண்டா ஜாஸ் மாடல் அனைத்து வேரியண்ட்களும் ரூ. 5 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. தற்சமயம் இதன் துவக்க விலை ரூ. 7.55 லட்சம் என மாறி இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.79 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஹோண்டா அமேஸ் மாடல் டீசல் சிவிடி வேரியண்ட் தவிர மாற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 5 ஆயிரம் வரை உயர்ந்து இருக்கிறது. அமேஸ் பெட்ரோல் மாடல் விலை ரூ. 6.22 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8.84 லட்சம் என்றும் டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 7.68 லட்சத்தில் துவங்கி ரூ. 9.99 லட்சம் என மாறி இருக்கிறது.

    ஹோண்டா டபிள்யூஆர்-வி பெட்ரோல் மாடல் புதிய விலை ரூ. 8.55 லட்சத்தில் துவங்கி ரூ. 9.75 லட்சம் என்றும் டீசல் வேரியண்ட் விலை ரூ. 9.85 லட்சத்தில் துவங்கி ரூ. 11.05 லட்சம் என மாறி இருக்கிறது. புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி என்ட்ரி லெவல் விலை ரூ. 10 ஆயிரமும், டாப் எண்ட் விலை ரூ. 20 ஆயிரமும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதன்படி புதிய ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடல் விலை ரூ. 10.99 லட்சத்தில் துவங்கி ரூ. 14.64 லட்சம் என மாறி இருக்கிறது. டீசல் வேரியண்ட் விலை ரூ. 12.49 லட்சத்தில் துவங்கி ரூ. 14.84 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூப்பிட்டர் மாடல் புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் 110சிசி ஜூப்பிட்டர் ஸ்கூட்டரை புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்கூட்டர் தற்சமயம் இன்டெலிகோ தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இது காற்று மாசை குறைப்பதோடு, எரிபொருள் சேமிக்கவும் உதவும் என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    புதிய இன்டெலிகோ தொழில்நுட்பம் ஜூப்பிட்டர் டாப் எண்ட் மாடலான இசட்எக்ஸ் டிஸ்க் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தியாவில் புதிய வேரியண்ட் விலை ரூ. 72,347 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டர் ஸ்டிரெயிட் புளூ மற்றும் ராயல் வைன் நிறங்களில் கிடைக்கிறது.

     டிவிஎஸ் ஜூப்பிட்டர்

    இன்டெலிகோ தொழில்நுட்பம் போக்குவரத்து நெரிசல் சமயங்களில் நீண்ட நேரம் என்ஜின் இயங்கும் சூழலில் என்ஜினை தானாக ஆப் செய்துவிடும். பின் மீண்டும் ஸ்டார்ட் செய்ய திராட்டிள் செய்தாலே போதுமானது. இதுபோன்ற அம்சம் பெற்ற முதல் டிவிஎஸ் வாகனமாக ஜூப்பிட்டர் இருக்கிறது.

    புதிய தொழில்நுட்பம் தவிர இந்த ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி இந்த ஸ்கூட்டரில் அதே என்ஜின், மெக்கானிக்கல் அம்சங்கள், உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டிவிஎஸ் ஜூப்பிட்டர் மாடலில் 110சிசி சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 7.3 பிஹெச்பி பவர், 8.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் சிவிடி டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் 220எம்எம் டிஸ்க், பின்புறம் 130எம்எம் டிரம் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.
    சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தனது ஜிக்சர் 250 சீரிஸ் மாடல்களின் விலையை திடீரென மாற்றி உள்ளது.

    சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது ஜிக்சர் 250 மற்றும் ஜிக்சர் எஸ்எப் 250 மாடல்களின் விலையை இந்தியாவில் உயர்த்தி உள்ளது. விலை உயர்வின் படி ஜிக்சன் 250 துவக்க விலை ரூ. 1,67,700 என மாறி உள்ளது. முன்னதாக இந்த மாடல் விலை ரூ. 1,65,627 ஆக இருந்தது.

    ஜிக்சர் எஸ்எப் 250 மாடல் விலை ரூ. 1,76,326 இல் இருந்து தற்சமயம் ரூ. 1,78,400 ஆக உயர்ந்து இருக்கிறது. ஜிக்சர் எஸ்எப் 250 மோட்டோ ஜிபி எடிஷன் விலை ரூ. 1,79,200 என மாறி இருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 1,77,127 ஆக மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     சுசுகி ஜிக்சர் எஸ்எப் 250

    விலை உயர்வு தவிர இந்த மாடல்களில் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இவற்றில் எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    இரு மாடல்களிலும் 249சிசி, ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை 26.13 பிஹெச்பி பவர், 22.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 250சிசி தவிர சுசுகி நிறுவனம் தனது 155சிசி ஜிக்சர் சீரிஸ் விலையையும் மாற்றி அமைத்து இருக்கிறது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது நான்காவது மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இது எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் ஆகும். புதிய இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்சமயம் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் வேரியண்ட் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட் இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், நிசான் கிக்ஸ் மற்றும் ரெனால்ட் டஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     எம்ஜி மோட்டார்

    புதிய எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் அதன் எலெக்ட்ரிக் மாடலில் உள்ளதை போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பெட்ரோல் வேரியண்ட்டில் பானரோமிக் சன்ரூப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை வழங்கப்படுகிறது.

    எம்ஜி இசட்எஸ் மாடலில் 1.5 லிட்டர் மோட்டார் மற்றும் 1.3 லிட்டர் டைரக்ட்-இன்ஜெக்ஷன் டர்போ யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இரு என்ஜின்களும் முறையே 118 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 161 பிஹெச்பி பவர், 230 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும்.

    இரு என்ஜின்களுடன் முறையே 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படலாம்.
    சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் மாடலான சி5 ஏர்கிராஸ் எஸ்யுவி-யை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் விற்பனை இந்தியாவில் துவங்குகிறது. முன்னதாக இதன் விற்பனை கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமானது குறிப்பிடத்தக்கது.

    கிராஸ்ஓவர் டிசைன், பல்வேறு அம்சங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் உருவாகி இருக்கிறது. இந்தியாவில் இந்த கார் பிரீமியம் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் களமிறங்குகிறது. இது 2021 ஜீப் காம்பஸ், போக்ஸ்வேகன் டி ராக் மற்றும் ஸ்கோடா குஷக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்

    சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 175 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இந்த மாடல் பீல் மற்றும் ஷைன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இத்துடன் பல்வேறு சிங்கில் மற்றும் டூயல்-டோன் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த மாடலில் பானரோமிக் சன்ரூப், டூயல் சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஆம்பியன்ட் லைட்டிங், ஏர் பியூரிபையர், ஸ்ப்லிட் ஏசி வென்ட் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
    ஹூண்டாய் நிறுவனம் 2021 ஜனவரி மாத விற்பனை நிலவரத்தை வெளியிட்டு இருக்கிறது.


    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஜனவரி 2021 மாதத்தில் மட்டும் 60,105 யூனிட்களை ஒட்டுமொத்தமாக விற்பனை செய்து இருக்கிறது. இவற்றில் 52,005 யூனிட்கள் உள்நாட்டிலும், 8100 யூனிட்கள் வெளிநாடு சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

    அதன்படி ஹூண்டாய் நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை 23.8 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் 42,002 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. ஏற்றுமதியை பொருத்தவரை 19 சதவீதம் சரிவை சந்தித்து உள்ளது. 

     ஹூண்டாய் கார்

    விற்பனை அறிக்கை பற்றி ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு இயக்குனர் தருன் கார்க் கூறும் போது..,

    “2021 ஆண்டு துவக்கத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் இரட்டை இலக்க வளர்ச்சியுடன் சிறப்பாக துவங்கி உள்ளது. புத்தம் புதிய கிரெட்டா, புதிய வெர்னா மற்றும் புதிய ஐ20 போன்ற மாடல்கள் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.”

    “இந்தியாவில் உலகத்தரம் மிக்க தொழில்நுட்பம் மற்றும் சேவைகளின் வெளிப்பாடாக ஹூண்டாய் பிராண்டு உருவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொறுப்புள்ள கார்ப்பரேட்டாக இந்திய பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த ஹூண்டாய் முயற்சி செய்யும்.”

    என தெரிவித்தார்.
    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லட் 350 மோட்டார்சைக்கிள் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மோட்டார்சைக்கிளை பாரஸ்ட் கிரீன் எனும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 பாரஸ்ட் கிரீன் விலை ரூ. 1.33 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய நிறம் புல்லட் 350 ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இது பிளாக், ஆனிக்ஸ் பிளாக் மற்றும் புல்லட் சில்வர் போன்ற நிற வேரியண்ட்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. புல்லட் இஎஸ் வேரியண்ட்டில் இந்த நிறம் வழங்கப்படவில்லை.

     ராயல் என்பீல்டு புல்லட் 350

    பாரஸ்ட் கிரீன் நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் புல்லட் 350 அதிக பிரபலமான மாடலாக இருந்து வருகிறது. முன்னதாக புல்லட் 350 மாடல் கடந்த ஆண்டு துவக்கத்தில் அப்டேட் செய்யப்பட்டு பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டது.

    அந்த வகையில் இந்த மாடலில் 346சிசி, சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு யூனிட் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ×