search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோண்டா கார்
    X
    ஹோண்டா கார்

    இந்தியாவில் ஹோண்டா கார் விலையில் மாற்றம்

    இந்தியாவில் ஹோண்டா கார் மாடல்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் அனைத்து மாடல்களின் விலையையும் இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. அதன்படி ஹோண்டா ஜாஸ், டபிள்யூஆர்-வி, அமேஸ் மற்றும் ஐந்தாம் தலைமுறை சிட்டி போன்ற மாடல்கள் விலை உயர்ந்து உள்ளது.

    அதிகபட்சமாக கார் மாடல்கள் விலை ரூ. 20 ஆயிரம் வரை உயர்ந்து இருக்கிறது. இது ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப வேறுபடும். கார் உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பதை விலை உயர்வுக்கு காரணமாக ஹோண்டா கார்ஸ் தெரிவித்து இருக்கிறது.

     ஹோண்டா கார்

    ஹோண்டா ஜாஸ் மாடல் அனைத்து வேரியண்ட்களும் ரூ. 5 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது. தற்சமயம் இதன் துவக்க விலை ரூ. 7.55 லட்சம் என மாறி இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.79 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஹோண்டா அமேஸ் மாடல் டீசல் சிவிடி வேரியண்ட் தவிர மாற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 5 ஆயிரம் வரை உயர்ந்து இருக்கிறது. அமேஸ் பெட்ரோல் மாடல் விலை ரூ. 6.22 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 8.84 லட்சம் என்றும் டீசல் வேரியண்ட்களின் விலை ரூ. 7.68 லட்சத்தில் துவங்கி ரூ. 9.99 லட்சம் என மாறி இருக்கிறது.

    ஹோண்டா டபிள்யூஆர்-வி பெட்ரோல் மாடல் புதிய விலை ரூ. 8.55 லட்சத்தில் துவங்கி ரூ. 9.75 லட்சம் என்றும் டீசல் வேரியண்ட் விலை ரூ. 9.85 லட்சத்தில் துவங்கி ரூ. 11.05 லட்சம் என மாறி இருக்கிறது. புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி என்ட்ரி லெவல் விலை ரூ. 10 ஆயிரமும், டாப் எண்ட் விலை ரூ. 20 ஆயிரமும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதன்படி புதிய ஹோண்டா சிட்டி பெட்ரோல் மாடல் விலை ரூ. 10.99 லட்சத்தில் துவங்கி ரூ. 14.64 லட்சம் என மாறி இருக்கிறது. டீசல் வேரியண்ட் விலை ரூ. 12.49 லட்சத்தில் துவங்கி ரூ. 14.84 லட்சம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×