என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் களமிறங்க இருக்கின்றன. முன்னதாக நெதர்லாந்தை சேர்ந்த எடெர்கோ எனும் நிறுவனத்தை கடந்த ஆண்டு ஓலா கைப்பற்றியது. விரைவில் ஓலா தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்நிலையில், வெளியீட்டுக்கு முன் புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள் முதல் முறையாக இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. எனினும், இதன் வெளிப்புறம் எடெர்கோ ஆப் ஸ்கூட்டர் போன்று இருக்கும் என தெரிகிறது.

ஸ்பை படங்களில் உள்ள ஸ்கூட்டரின் ஹெட்லேம்ப், பிரத்யேக டெலிஸ்கோபிக் போர்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் எடெர்கோ ஆப் ஸ்கூட்டர் பல்வேறு அம்சங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் எடெர்கோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சில மாற்றங்கள் மற்றும் அப்டேட்கள் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்றதாக ஸ்கூட்டரை மாற்றும் என தெரிகிறது. மேலும் விலையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள சில பாகங்களை மாற்றலாம் என்றும் கூறப்படுகிறது.
பென்ட்லி நிறுவனத்தின் கான்டினென்டல் ஜிடி மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
பென்ட்லி நிறுவனத்தின் கான்டினென்டல் ஜிடி மாடல் உற்பத்தியில் 80 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் வலதுபுற டிரைவ் வசதி கொண்ட கான்டினென்டல் ஜிடி வி8 ஆரஞ்சு பிளேம் பினிஷ் மற்றும் பிளாக்லைன் அம்சங்கள், ஸ்டைலிங் ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது.
இதுதவிர வி8 மோட்டாருக்கு மாற்றாக கான்டினென்டல் ஜிடி மாடலை 6.0 லிட்டர் டபிள்யூ12 என்ஜினுடன் பெறும் வசதி வழங்கப்படுகிறது.

பென்ட்லியின் அதி நவீன காலக்கட்டத்தை துவக்கும் வகையில் 2003 ஆம் ஆண்டு வாக்கில் முதல் மாடலாக கான்டினென்டல் ஜிடி அறிமுகம் செய்யப்பட்டது. பின் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரம் யூனிட்கள் வரை உலகம் முழுக்க டெலிவரி செய்யப்பட்டன.
ஹோண்டா நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹோண்டா நிறுவனம் புதிய மோட்டார்சைக்கிளை பிப்ரவரி 16 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கென அந்நிறுவனம் டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரின் படி புதிய மோட்டார்சைக்கிள் ஸ்கிராம்ப்ளர் ரக மாடலாக இருக்கும் என தெரிகிறது.
புதிய மோட்டார்சைக்கிளில் சிபி300ஆர் மாடலில் உள்ளதை போன்ற டெயில் லேம்ப், க்ரோம் சஸ்பென்ஷன் செட்டப் வழங்கப்படுகிறது. இவைதவிர புதிய மோட்டார்சைக்கிளில் பிளாக்டு-அவுட் உபகரணங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிளில் 348சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிபி350 மாடலில் வழங்கியதை போன்ற செயல்திறன் புதிய மாடலிலும் வழங்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் புதிய மாடலில் ஹோண்டா செலக்டபில் டார்க் கண்ட்ரோல், ப்ளூடூத் சார்ந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்இடி லைட்டிங் வழங்கப்படலாம் என தெரிகிறது.
2021 ஜனவரி மாதத்திற்கான டொயோட்டா நிறுவனத்தின் வாகன விற்பனை விவரம் வெளியாகி உள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 2021 ஜனவரி மாதத்தில் 11,126 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 92 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு ஜனவரியில் டொயோட்டா நிறுவனம் 5,804 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
டொயோட்டா மற்றும் சுசுகி நிறுவனங்கள் இடையேயான ஒப்பந்தம் காரணமாக ஒட்டுமொத்த விற்பனை 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இருநிறுவனங்கள் கூட்டணியில் வெளியான முதல் மாடல் டொயோட்டா கிளான்ஸா மாருதியின் பலேனோ ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவானது.

இதைத் தொடர்ந்து அர்பன் குரூயிசர் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் 2020 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இரு மாடல்களும் டொயோட்டா நிறுவனம் புது பிரிவுகளில் களமிறங்க உதவியாக அமைந்தன.
இதுதவிர டொயோட்டா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல்களை அறிமுகம் செய்து இருந்தது.
இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்கள் விலையை உயர்த்தி உள்ளது. ஜாவா, ஜாவா பார்டி டூ, பெராக் என மூன்று மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
மூன்று மாடல்களின் விலையும் முன்பை விட ரூ. 2,897 உயர்த்தப்பட்டு உள்ளது. முன்னதாக பல்வேறு வாகன உற்பத்தியாளர்களும் தங்களின் வாகன விலையை உயர்த்தி இருக்கின்றன. தற்சமயம் அந்த வரிசையில் ஜாவா நிறுவமும் இணைந்துள்ளது.
உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு பெரும்பாலான நிறுவனங்கள் காரணமாக கூறி வருகின்றன.

புதிய விலை விவரம்
ஜாவா பார்டி டூ சிங்கில் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.63 லட்சம்
ஜாவா பார்டி டூ டூயல் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.72 லட்சம்
ஜாவா 300 சிங்கில் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.76 லட்சம்
ஜாவா 300 டூயல் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1.85 லட்சம்
ஜாவா பெராக் மாடல் விலை ரூ. 1.97 லட்சம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.
சார்ஜா கோர்பக்கான் பகுதியில் அபூர்வமான பழங்கால கார் கண்காட்சி தொடங்கியது. இதன் விவரங்ளை பார்ப்போம்.
சார்ஜாவில் பழமையான கார்களை சேகரிப்பவர்களை ஒன்றிணைத்து பல்வேறு ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கு திட்டங்களை செயல்படுத்துவதற்காக கடந்த 2008-ம் ஆண்டில் சார்ஜா பழமையான கார்கள் மன்றம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த மன்றத்தை சார்ஜா ஆட்சியாளர் மேதகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி திறந்து வைத்தார்.
இதன் மூலம் பழமையான கார்களின் கண்காட்சி, கருத்தரங்கம், விளையாட்டு போட்டிகள் என பல்வேறு செயல்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சார்ஜா முதலீடு மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் ஆதரவில் இந்த மன்றம் செயல்பட்டு வருகிறது.
அமீரகத்தின் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக தற்போது பழங்கால கார்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி மாதத்திற்கு ஒருநாள் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 நாட்கள் வெள்ளிக்கிழமை அன்று இந்த பழமையான கார்கள் கண்காட்சி சார்வில் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
அதன் படி முதலாவது நாளாக நேற்று கோர்பக்கான் கடற்கரை பகுதி அருகே இந்த பழங்கால கார்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் தற்போது புழக்கத்தில் இல்லாத 50 பழங்கால கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 1923-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்ட கார்கள் இதில் இடம்பெற்று பார்வையாளர்களை கவர்ந்தது.
இதற்கு அடுத்தபடியாக வருகிற 19-ந் தேதி, மார்ச் 26-ந் தேதி மற்றும் ஏப்ரல் 2 ஆம் தேதி ஆகிய நாட்களில் இந்த பழங்கால கார் கண்காட்சி நடைபெற உள்ளது.
இறுதி–யாக நடைபெறும் கண்–காட்சியானது கொடி தீவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கார் கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்கள், உணவகங்கள் உள்ளிட்டவைகள் பார்வையாளர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் புதுவித விற்பனையில் முறையில் கிடைக்கிறது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இசட்எஸ் எலெக்ட்ரிக் வாகனத்தை சந்தா முறையில் வழங்குகிறது. எம்ஜி சப்ஸ்கிரைப் எனும் திட்டத்தின் கீழ் ஜூம்கார் மற்றும் ஒரிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இசட்எஸ் மாடலை 36 மாதங்களுக்கு பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிது.

இதற்கான மாத கட்டணம் ரூ. 49,999 ஆகும். அறிமுக சலுகையாக இந்த கட்டணத்தில் 36 மாதங்களுக்கு எம்ஜி இசட்எஸ் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த சலுகை மும்பை, பூனே, டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் துவங்கப்பட்டு இருக்கிறது. விரைவில் மற்ற நகரங்களிலும் இது விரிவாக்கம் செய்யப்படுகிறது.
புதிய திட்டத்தின் கீழ் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் மாடல் 12, 24, 18, 30 அல்லது 36 மாதங்கள் என பல்வேறு ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியாகோ லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ. 5.79 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் எக்ஸ்டி வேரியண்டை தழுவி உருவாகி இருக்கிறது.
புதிய லிமிடெட் எடிஷன் மாடல் பிளேம் ரெட், பியல்சென்ட் வைட் மற்றும் டேடோனா கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. வெளிப்புறம் 14 இன்ச் அலாய் வீல்கள் கிளாஸ் பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இவை தவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

உள்புறம் 5 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஹார்மன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ரிவர்ஸ் பார்கிங் சென்சார் மற்றும் டிஸ்ப்ளே வசதி வழங்கப்படுகிறது. புதிய டியாகோ மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் டாப் எண்ட் மாடல்களில் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் வசதி வழங்கப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் இந்தியா 17 மாதங்களில் இரண்டு லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
கியா கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியா, கார் உற்பத்தியில் இரண்டு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. 2020 ஜூலை மாதத்தில் ஒரு லட்சம் யூனிட்டுகள் என்னும் கார் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்த பிறகு, அடுத்த 6 மாத காலத்திற்குள் 2 லட்சம் கார்கள் விற்பனை என்ற சாதனையை எட்டியுள்ளது.
செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் ஆகியவற்றின் உற்பத்தியாளரான இந்நிறுவனம், நாட்டில் விற்பனை நடவடிக்கைகள் தொடங்கி 17 மாதங்களுக்குள் 2 லட்சம் கியா வாகனங்களை இந்தியா முழுவதும் அதன் டீலர்ஷிப்களுக்கு வெற்றிகரமாக அனுப்பி உள்ளது.

டாப்-எண்ட் வேரியண்ட்கள், அதாவது செல்டோஸ் மற்றும் சொனெட்டு மாடல்களின் ஜிடிஎக்ஸ் மற்றும் கார்னிவல் லிமோசின் வேரியண்ட் ஆகியவை மொத்த கார்களில் 60 சதவீதம் விற்பனைக்கு பங்களித்துள்ளன. கியா இந்திய ஆட்டோமொபைல் துறையில் முதல் 5 வாகன உற்பத்தியாளர்கள் பட்டியலில் இடம்பெற்று வருகிறது.
விற்பனை பட்டியலில் செல்டோஸ் 149,428 யூனிட்டுகளுடன், 2020 செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட சொனெட் 45,195 யூனிட்களும், கார்னிவல் மொத்தம் 5409 யூனிட்களும் விற்பனையாகி உள்ளன.
சுசுகி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஹயபுசா மாடல் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சுசுகி நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஹயபுசா சூப்பர் பைக் மாடலுக்கான டீசர் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. டீசரின் படி புதிய மாடல் உலகின் அதிவேக பைக் என்ற பெருமையை தக்கவைத்துக் கொள்ளும் என தெரிகிறது. இந்த பைக் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் சீறிபாயும் காட்சிகள் டீசரில் இடம்பெற்று உள்ளன.
மேலும் இந்த மாடலின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்பீடோமீட்டருக்கு அனலாக் டையல் மற்றும் சிறிய டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது இதர ரைடு விவரங்களை வழங்கும்.

ஒட்டுமொத்த வடிவமைப்பு பழைய மாடலை தழுவியே மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், புதிய மாடலில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும். தற்சமயம் புதிய மாடலின் என்ஜின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன.
புதிய மாடலில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது. அடுத்த தலைமுறை சுசுகி ஹயபுசா பிப்ரவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இதன் விற்பனை துவங்குகிறது.
போக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டைகுன் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
போக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி டைகுன் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்து விரிவாக்க பணிகளை துவங்குகிறது. புதிய டைகுன் மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு துவங்குகிறது.
இந்நிலையில், வெளியீட்டுக்கு முன் போக்ஸ்வேகன் டைகுன் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. புதிய டைகுன் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இந்த கார் சோதனை செய்யப்படுகிறது. இந்த கார் தோற்றத்தில் குஷக் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

எனினும், டெயில் லேம்ப் இரு மாடல்களிலும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது டைகுன் மாடலின் தனித்துவ அம்சமாக இருக்கிறது. இதுதவிர அலாய் வீல்களும் இரு மாடல்களிலும் வித்தியாசமாக உள்ளன. டைகுன் மாடல் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது.
புதிய போக்ஸ்வேகன் டைகுன் மாடல் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ-பெட்ரோல் யூனிட்களுடன் கிடைக்கிறது. இதில் 1.0 லிட்டர் யூனிட் என்ட்ரி லெவல் மாடல்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலின் உற்பத்தி துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கி உள்ளது. இந்த மாடல் தமிழ் நாட்டில் உள்ள திருவள்ளூர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் சி5 ஏர்கிராஸ் அந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடல் ஆகும். மேலும் இந்தியாவில் இது முதல் மாடல் ஆகும்.
இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் வெளியீடு முதல் காலாண்டில் துவங்குகிறது. புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் உற்பத்தி துவங்கி உள்ள நிலையில், இந்த கார் 2.5 லட்சம் கிலோமீட்டர்களுக்கும் மேல் பல்வேறு நிலைகளில் சோதனை செய்யப்பட்டதாக சிட்ரோயன் தெரிவித்து உள்ளது.

புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 175 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
காரின் உள்புறம் பிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல், மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.






