என் மலர்
ஆட்டோமொபைல்

சுசுகி ஹயபுசா
புதிய சுசுகி ஹயபுசா டீசர் வெளியீடு
சுசுகி நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஹயபுசா மாடல் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சுசுகி நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஹயபுசா சூப்பர் பைக் மாடலுக்கான டீசர் வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. டீசரின் படி புதிய மாடல் உலகின் அதிவேக பைக் என்ற பெருமையை தக்கவைத்துக் கொள்ளும் என தெரிகிறது. இந்த பைக் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் சீறிபாயும் காட்சிகள் டீசரில் இடம்பெற்று உள்ளன.
மேலும் இந்த மாடலின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஸ்பீடோமீட்டருக்கு அனலாக் டையல் மற்றும் சிறிய டிஎப்டி டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது இதர ரைடு விவரங்களை வழங்கும்.

ஒட்டுமொத்த வடிவமைப்பு பழைய மாடலை தழுவியே மேற்கொள்ளப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், புதிய மாடலில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும். தற்சமயம் புதிய மாடலின் என்ஜின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன.
புதிய மாடலில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என தெரிகிறது. அடுத்த தலைமுறை சுசுகி ஹயபுசா பிப்ரவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இதன் விற்பனை துவங்குகிறது.
Next Story






