search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்
    X
    சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்

    இந்தியாவில் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் உற்பத்தி துவக்கம்

    இந்தியாவில் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலின் உற்பத்தி துவங்கி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கி உள்ளது. இந்த மாடல் தமிழ் நாட்டில் உள்ள திருவள்ளூர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் சி5 ஏர்கிராஸ் அந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் மாடல் ஆகும். மேலும் இந்தியாவில் இது முதல் மாடல் ஆகும்.

    இந்திய சந்தையில் புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் பிப்ரவரி 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் வெளியீடு முதல் காலாண்டில் துவங்குகிறது. புதிய சி5 ஏர்கிராஸ் மாடல் உற்பத்தி துவங்கி உள்ள நிலையில், இந்த கார் 2.5 லட்சம் கிலோமீட்டர்களுக்கும் மேல் பல்வேறு நிலைகளில் சோதனை செய்யப்பட்டதாக சிட்ரோயன் தெரிவித்து உள்ளது.

     சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்

    புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 175 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    காரின் உள்புறம் பிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல், மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    Next Story
    ×