search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    போக்ஸ்வேகன் டைகுன்
    X
    போக்ஸ்வேகன் டைகுன்

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் போக்ஸ்வேகன் டைகுன்

    போக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டைகுன் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    போக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி டைகுன் எஸ்யுவி மாடலை அறிமுகம்  செய்து விரிவாக்க பணிகளை துவங்குகிறது. புதிய டைகுன் மாடல் இந்தியாவில் இந்த ஆண்டு துவங்குகிறது.

    இந்நிலையில், வெளியீட்டுக்கு முன் போக்ஸ்வேகன் டைகுன் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. புதிய டைகுன் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இந்த கார் சோதனை செய்யப்படுகிறது. இந்த கார் தோற்றத்தில் குஷக் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

     போக்ஸ்வேகன் டைகுன்

    எனினும், டெயில் லேம்ப் இரு மாடல்களிலும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது டைகுன் மாடலின் தனித்துவ அம்சமாக இருக்கிறது. இதுதவிர அலாய் வீல்களும் இரு மாடல்களிலும் வித்தியாசமாக உள்ளன. டைகுன் மாடல் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது.

    புதிய போக்ஸ்வேகன் டைகுன் மாடல் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ-பெட்ரோல் யூனிட்களுடன் கிடைக்கிறது. இதில் 1.0 லிட்டர் யூனிட் என்ட்ரி லெவல் மாடல்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×