என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    சுசுகி நிறுவனத்தின் 2021 ஹயபுசா மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 ஹயபுசா மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சுசுகி ஹயபுசா மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புது அம்சங்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    புதிய சூப்பர்பைக் எல்இடி லைட்டிங் கொண்டிருக்கிறது. இதன் இன்டிகேட்டர்கள் பொசிஷன் லேம்ப்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் பேரிங் கூர்மையான காண்டொர் கொண்டிருக்கிறது. இது மோட்டார்சைக்கிளுக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் குரோம் பிளேட் செய்யப்பட்ட எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டு உள்ளன.

     2021 சுசுகி ஹயபுசா

    2021 சுசுகி ஹயபுசா மாடலில் புதிய டிஎப்டி டிஸ்ப்ளே, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய ஸ்விட்ச் கியர் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் லான்ச் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல், கார்னெரிங் ஏபிஎஸ், ஹில்-ஹோல்டு கண்ட்ரோல், 6 ஆக்சிஸ் ஐஎம்யு, 3 லெவல் என்ஜின் பிரேக்கிங் வசதிகளை கொண்டுள்ளது.

    இத்துடன் 10-லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஆண்டி-வீலி கண்ட்ரோல், சுசுகி இன்டெலிஜண்ட் ரைடு சிஸ்டம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றுடன் முந்தைய மாடல்களை போன்றே அலுமினியம் பிரேம் கொண்டிருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிளில் 1340சிசி இன்-லைன், 4 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் முன்பதிவில் தொடர்ந்து அசத்தி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை தார் மாடல் காரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்தது. அறிமுகமானது முதல் இந்த மாடல் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஜனவரியில் மட்டும் புதிய தார் மாடலை வாங்க 6 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்றது. 

    இந்நிலையில், புதிய மஹிந்திரா தார் மாடல் இதுவரை சுமார் 39 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருப்பதாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. புதிய தார் மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

     மஹிந்திரா தார்

    இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா தார் மாடல் விலை ரூ. 9.80 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மஹிந்திரா தார் மாடல் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. 2020 மஹிந்திரா தார் மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 130 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இத்துடன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படுகிறது. இது 150 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.
    மாசிராட்டி நிறுவனத்தின் 2021 ஜிப்லி ஹைப்ரிட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    மாசிராட்டி நிறுவனத்தின் புதிய ஜிப்லி ஹைப்ரிட் செடான் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஹைப்ரிட் 2013 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படும் ஸ்போர்ட்ஸ் செடான் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    எனினும், புதிய வெர்ஷனில் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஆடம்பர செடான் மாடல் வி6, வி8 மற்றும் புதிய மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2021 மாசிராட்டி ஜிப்லி மாடல் துவக்க விலை ரூ. 1.15 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     2021 மாசிராட்டி ஜிப்லி ஹைப்ரிட்

    புதிய ஜிப்லி ஹைப்ரிட் மாடலில் மேம்பட்ட கிரில், புதிய டெயில் லேம்ப் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் முன்புறம் எல்இடி அடாப்டிவ் மேட்ரிக்ஸ் ஹெட்லைட் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் உள்புறம் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    புதிய மாடலில் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டண்ஸ் சிஸ்டம் மற்றும் ஸ்கைஹூக் சஸ்பென்ஷன் மற்றும் பிரெம்போ பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 2021 மாசிராட்டி ஜிப்லி மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் பெர்டோல் மைல்டு ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட்டு உள்ளது. 

    இந்த என்ஜின் 325 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.7 நொிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 255 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டு இருக்கிறது.
    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்கள் விலையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது.


    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் 2021 ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்களின் விலையை இரண்டாவது முறையாக உயர்த்தி உள்ளது. முன்னதாக ஜனவரி 1 ஆம் தேதி முதல் இதன் விலை உயர்த்தப்பட்டது. கார் உற்பத்தி செலவீனம் அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    2021 எம்ஜி ஹெக்டார் பேஸ் வேரியண்ட்களான ஸ்டைல் மற்றும் சூப்பர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இவை தொடர்ந்து ரூ. 12.90 லட்சம் மற்றும் ரூ. 13.89 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மிட் ரேன்ஜ் ஸ்மார்ட் வேரியண்ட் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

     எம்ஜி ஹெக்டார்

    அதன்படி எம்ஜி ஹெக்டார் ஸ்மார்ட் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 15.75 லட்சம் மற்றும் ரூ. 17.02 லட்சம் என மாறி இருக்கின்றன. டாப் எண்ட் ஷார்ப் வேரியண்ட்களின் விலையும் ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    ஹெக்டார் பிளாஸ் ஸ்டைல் மற்றும் சூப்பர் வேரியண்ட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் ஸ்மார்ட் எம்டி டீசல் வேரியண்ட் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் டாப் எண்ட் ஷார்ப் வேரியண்ட் விலையும் ரூ. 10 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஸ்மார்ட் எம்டி மற்றும் டீசல் எம்டி 7 சீட் வேரியண்ட் விலை ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்படுகிறது.
    பெனலி நிறுவனத்தின் 2021 இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    பெனலி நிறுவனம் 2021 இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய 2021 பெனலி இம்பீரியல் 400 விலை ரூ. 1.89 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகமான இம்பீரியல் மாடலின் பிஎஸ்6 வெர்ஷன் ஆகும். 

    புதிய இம்பீரியல் 400 அந்நிறுவனத்தின் இந்திய விற்பனையை ஊக்குவிக்கும் என பெனலி நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இதன் விலை விற்பனையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது. 2021 பெனலி இம்பீரியல் 400 மாடலுடன் இரண்டு ஆண்டுகளுக்கு வரம்பற்ற கிலோமீட்டர்களுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது.

     பெனலி இம்பீரியல் 400

    இத்துடன் 24x7 Roadside Assistance வசதியும் வழங்குகிறது. புதிய மோட்டார்சைக்கிள் ரெட்ரோ-டிசைன் கொண்டுள்ளது. இதில் வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள், டியர்-டிராப் பியூவல் டேன்க், ஸ்போக் வீல் மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    2021 பெனலி இம்பீரியல் 400 மோட்டார்சைக்கிளில் 374சிசி சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 19 பிஹெச்பி பவர், 29 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் கோளாறு காரணமாக ரீகால் செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    மஹிந்திரா நஇறுவனம் தனது புதிய தலைமுறை தார் மாடலை திரும்ப பெறுவதாக அறிவித்து இருக்கிறது. செப்டம்பர் 7 முதல் டிசம்பர் 25, 2020 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட தார் டீசல் வேரியண்ட்கள் திரும்ப பெறப்படுவதாக மஹிந்திரா அறிவித்து உள்ளது.

    குறிப்பிட்ட தேதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட மஹிந்திரா தார் மாடல் என்ஜினில் கேம்ஷாப்ட்டில் கோளாறு கண்டறியப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்துவோரை தனித்தனியாக அழைத்து கோளாறு சரி செய்து தரப்படும் என மஹிந்திரா தெரிவித்து இருக்கிறது. 

     மஹிந்திரா தார்

    2021 மஹிந்திரா தார் மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 130 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    இத்துடன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படுகிறது. இது 150 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. 
    ஆடி நிறுவனத்தின் இ டிரான் ஜிடி மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளரான ஆடி புதிய இ டிரான் ஜிடி மாடலை பிப்ரவரி 9 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த கார் ஆர்க்டிக் பகுதியில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. 

    அதிநவீன ஸ்டைலிங் மட்டுமின்றி புதிய ஆடி இ டிரான் மேம்படுத்த பாதுகாப்பு அம்ங்களான அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மாணிட்டரிங், லேண் கீப் அசிஸ்ட், ஆட்டோ எமர்ஜன்சி பிரேக்கிங் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கும் என தெரிகிறது.

     ஆடி இ டிரான்

    இதுதவிர முதற்கட்டமாக ஸ்டான்டர்டு மாடலும் பின் ஆர்எஸ் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆடி இ டிரான் ஜிடி மாடல் 582 பிஹெச்பி திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.5 நொடிகளில் எட்டிவிடும்.

    இதன் ஆர்எஸ் வெர்ஷன் 628 பிஹெச்பி பவர் வழங்கும் என்றும் இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.0 நொடிகளில் எட்டிவிடும் என கூறப்படுகிறது. இதன் ஸ்டான்டர்டு மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 401 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிகிறது. 

    இதில் வழங்கப்படும் பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 20 நிமிடங்களே ஆகும் என கூறப்படுகிறது. இந்த கார் உள்புறம் பிரீமியம் இருக்கை, பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் 2021 பார்ச்சூனர் மற்றும் லெஜண்டர் மாடல்களின் முதல் மாத முன்பதிவு விவரங்களை பார்ப்போம்.


    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது புதிய பார்ச்சூனர் மற்றும் லெஜண்டர் மாடல்கள் 5 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. ஜப்பானை சேர்ந்த டொயோட்டா இந்தியாவில் 2021 பார்ச்சூனர் மாடல்களை ஜனவரி 6 ஆம் தேதி அறிமுகம் செய்தது.

    இந்திய சந்தையில் புதிய பார்ச்சூனர் மாதல் துவக்க விலை ரூ. 29.98 லட்சம் என்றும் டாப் எண்ட் லெஜண்டர் வேரியண்ட் விலை ரூ. 37.58 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் லெஜண்டர்

    2021 டொயோட்டா பார்ச்சூனர் மாடலின் முன்புறம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. லெஜண்டர் வெர்ஷனில் பிரம்மாண்ட முன்புறம், மெல்லிய கிரில், பெரிய ஏர் டேம், எல்இடி பாக் லேம்ப்கள் வழங்கப்படுகிறது.

    பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 177 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய ஐ கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    டிவிஎஸ் நிறுவனத்தின் ஐ கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லியில் இதன் விலை ரூ. 1.08 லட்சம், ஆன்-ரோடு என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பெங்களூரில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ. 8 ஆயிரம் குறைவு ஆகும்.

    புதிய ஐ கியூப் மாடல் புல் எல்இடி லைட்டிங் மற்றும் புல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிவிஎஸ் SmartXonnect தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஜியோ-பென்சிங், ரிமோட் பேட்டரி சார்ஜிங் இன்டிகேஷன், நேவிகேஷன் அசிஸ்ட், ஓவர்-ஸ்பீடு அலெர்ட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

     டிவிஎஸ் ஐ கியூப்

    ஸ்மார்ட்போனுடன் இணைத்து கொண்டால் இதன்  டிஸ்ப்ளே அழைப்புகள், குறுந்தகவல் போன்ற விவரங்களை காண்பிக்கும். இத்துடன் இரவு மற்றும் பகல் நேரத்தில் டிஸ்ப்ளேவை தெளிவாக பார்க்க டே அண்ட் நைட் மோட் வழங்கப்படுகிறது. டிவிஎஸ் ஐ கியூப் மாடலில் 4.4 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த மோட்டார் மணிக்கு அதிகபட்சம் 78 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 2.25 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. 
    கூகுள் மற்றும் போர்டு கூட்டணியில் உருவாகும் கனெக்டெட் தொழில்நுட்பம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    போர்டு மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து புதுவித கனெக்டெட் வெஹிகில் அனுபவத்தை வழங்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க இருக்கின்றன. இது குறித்த ஒப்பந்தம் 2023 ஆம் ஆண்டு துவங்கி ஆறு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

    மேலும் அனைத்து போர்டு மற்றும் லிங்கன் வாகனங்களில் ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் தொழில்நுட்ப சேவைகள் வழங்கப்படும். அனைத்து வாகனங்களிலும் கூகுள் செயலிகள், பில்ட்-இன் சேவைகளான மேப்ஸ், வாய்ஸ் போன்றவை வழங்கப்பட இருக்கின்றன.

    இத்துடன் போர்டு நிறுவனம் தனது தரவுகளை கையாள்வது, செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லெர்னிங் போன்ற பிரிவுகளில் கூகுள் கிளவுட் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
    மாருதி சுசுகி கார் மாடல்களுக்கு ரூ. 67 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட மாருதி சுசுகி மற்றும் நெக்சா விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை வழங்கி வருகின்றனர். இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீ வடிவில் வழங்கப்படுகின்றன.

    அதன்படி மாருதி சுசுகி டிசையர் மாடல் ரூ. 8 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் சலுகையுடன் கிடைக்கிறது. ஸ்விப்ட் மற்றும் விடாரா பிரெஸ்ஸா மாடல்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.

    மாருதி சுசுகி செலரியோ, ஈகோ மாடல்களுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் ரூ. 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆல்டோ 800 மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.

    வேகன்ஆர் மாடலுக்கு ரூ. 13 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், எர்டிகா மாடலுக்கு ரூ. 4 ஆயிரம் வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடி மட்டும் வழங்கப்படுகிறது.

     மாருதி கார்

    மாருதி சுசுகி எஸ் கிராஸ் மாடல் சிக்மா வேரியண்ட்டிற்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 37 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    சியாஸ் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எக்ஸ்எல்6 மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    இக்னிஸ் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பலேனோ மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    போர்ஷ் நிறுவனத்தின் 2021 பனமெரா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


    போர்ஷ் நிறுவனத்தின் 2021 பனமெரா மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய சீரிஸ் பனமெரா, பனமெரா ஜிடிஎஸ், பனமெரா டர்போ எஸ் மற்றும் பனமெரா டர்போ எஸ்இ ஹைப்ரிட் என நான்கு மாடல்களில் கிடைக்கிறது. இவற்றின் துவக்க விலை ரூ. 1.45 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மாடல்களில் பெரிய ஏர் இன்டேக் கிரில், பக்கவாட்டில் பெரிய கூலிங் வென்ட்கள், முன்புறம் சிங்கில் பார் லைட் யூனிட் வழங்கப்பட்டு இருக்கின்றன. டர்போ எஸ் மாடலில் சற்றே பெரிய ஏர் இன்லெட்கள் வழங்கப்பட்டு உள்ளன. பின்புறம் லைட் ஸ்ட்ரிப், எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

     2021 போர்ஷ் பனமெரா

    பனமெரா மாடல்களில் 2.9 லிட்டர் வி6 பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 325 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பனமெரா ஜிடிஎஸ் மாடலில் வி8 என்ஜின் 473 பிஹெச்பி பவர், 620 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    டர்போ எஸ்இ ஹைப்ரிட் வேரியண்ட் வி8 பை-டர்போ மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இணைந்து 552 பிஹெச்பி பவர், 750 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதனுடன் வழங்கப்பட்டுள்ள 17.9 கிலோவாட் பேட்டரி புல் எலெக்ட்ரிக் மோடில் 59 கிலோமீட்டர்கள் வரை செல்கிறது.
    ×