search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹோன்டா சி.பி.ஆர்.400ஆர்."

    ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சி.பி.ஆர்.400ஆர். மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. #HondaCBR400R
    ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 சி.பி.ஆர்.400ஆர் மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹோன்டா சி.பி.ஆர்.400ஆர் மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்பட்ட சி.பி.ஆர்.500ஆர் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது.

    ஹோன்டா சி.பி.ஆர்.500ஆர் மோட்டார்சைக்கிள் கடந்த ஆண்டு நடைபெற்ற EICMA மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சி.பி.ஆர்.400ஆர் தோற்றம், நிறங்கள் மற்றும் என்ஜின் உள்ளிட்டவை 500ஆர் மாடலைத் தழுவி உருவாகி இருக்கிறது. புதிய சி.பி.ஆர். மோட்டார்சைக்கிளை ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    புதிய சி.பி.ஆர்.400ஆர். மாடலில் 399சிசி பேரலெல் ட்வின், லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 46 பி.ஹெச்.பி. பவர் @9000 ஆர்.பி.எம். மற்றும் 38 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.


    கூடுதலாக புதிய மோட்டார்சைக்கிளில் ஸ்லிப்பர் கிளட்ச், ஹோன்டா ரேசிங் வடிவமைப்பில் உருவாகி இருக்கும் புதிய எக்சாஸ்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. ஹோன்டா வலைதளத்தின் படி புதிய சி.பி.ஆர்.400ஆர் மோட்டர்சைக்கிளை மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டினால் லிட்டருக்கு 41 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை எல்.இ.டி. ஸைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மோட்டார்சைக்கிளின் இருசக்கரங்களிலும் ஒற்றை டிஸ்க் பிரேக்கள், வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறமும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    சி.பி.ஆர்.400ஆர் மோட்டார்சைக்கிள் 17-இன்ச் அலாய் வீல் முன்புறம் 120/70-R17 டையரும், பின்புறம் 160/60-R16 டையர் கொண்டிருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட், பியல் கிளேர் வைட் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.  #HondaCBR400R
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலை அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறது. #motorcycle



    இந்தியாவில் பஜாஜ் டாமினர் 400 விலை நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை மாதத்தில் டாமினர் 400 விலை அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டாமினர் 400 மோட்டார்சைக்கிளை ஏ.பி.எஸ். மற்றும் நான் ஏ.பி.எஸ். என இருவித மாடல்களில் அறிமுகம் செய்தது. எனினும், ஏ.பி.எஸ். இல்லாத மாடலின் விற்பனை குறைந்ததால், அதன் விற்பனை நிறுத்தப்பட்டு, தற்சமயம் டாமினர் 400 ஏ.பி.எஸ். வேரியன்ட் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

    இம்முறை பஜாஜ் டாமினர் 400 ஏ.பி.எஸ். மாடலின் விலை ரூ.1000 உயர்த்தப்பட்டு தற்சமயம் 1.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்,, டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் 2016 டிசம்பரில் ரூ.1.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் வெளியிடப்பட்டது. 



    இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பஜாஜ் டாமினர் 2018 எடிஷன் புதிய நிறம் மற்றும் தங்க நிறத்தாலான அலாய் வீல்களுடன் வெளியிடப்பட்டது. எனினும் மோட்டார்சைக்கிளின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    பஜாஜ் டாமினர் 400 மாடலில் 373சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 35 பி.ஹெச்.பி. பவர், 35 என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. டாமினர் 400 மாடலில் ஃபுல் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிஸ்க் பிரேக், ஸ்லிப்பர் கிளட்ச், டூயல் சேனல்-ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    டாமினர் 400 விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் இந்திய சந்தையில் மாதம் 1000 யூனிட்களை தற்சமயம் விற்பனை செய்யும் பஜாஜ், விரவைில் 10,000 யூனிட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. வெளிநாடுகளில் பஜாஜ் டாமினர் 400 நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலை அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    இந்தியாவில் பஜாஜ் டாமினர் 400 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் நான்காவது முறையாக பஜாஜ் டாமினர் 400 விலை அதிகரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மே மாதத்தில் டாமினர் 400 விலை அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய விலை மாற்றத்தின் மூலம் பஜாஜ் டாமினர் 400 ஏ.பி.எஸ். இல்லாத மாடலின் விலை ரூ.1.48 லட்சம் மற்றும் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மாடலின் விலை ரூ.1.62 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்,, டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    பஜாஜ் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் 2016 டிசம்பரில் ரூ.1.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை டாமினர் 400 விலை ரூ.12,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.



    ஜனவரி 2018-இல் பஜாஜ் டாமினர் 2018 எடிஷன் புதிய நிறம் மற்றும் தங்க நிறத்தாலான அலாய் வீல்களுடன் வெளியிடப்பட்டது. எனினும் மோட்டார்சைக்கிளின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

    பஜாஜ் டாமினர் 400 மாடலில் 373சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 35 பி.ஹெச்.பி. பவர், 35 என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. டாமினர் 400 மாடலில் ஃபுல் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிஸ்க் பிரேக், ஸ்லிப்பர் கிளட்ச், டூயல் சேனல்-ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    டாமினர் 400 விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் இந்திய சந்தையில் மாதம் 1000 யூனிட்களை தற்சமயம் விற்பனை செய்யும் பஜாஜ், விரவைில் 10,000 யூனிட்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. வெளிநாடுகளில் பஜாஜ் டாமினர் 400 நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் இந்திய விலை மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய டாமினர் ஆன்டி-லாக் பிரேக்கிங் (ABS) வசதி கொண்ட மாடலின் விலை ரூ.2000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய டாமினர் விலை ரூ.1.6 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பஜாஜ் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கும் புதிய விலை ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாத மாடலின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ.1.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டாமினர் 400 ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாத மாடலின் விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    2018 பஜாஜ் டாமினர் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முந்தைய மாடலை விட அதிகளவு மாற்றங்களுடன் புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. 2018 டாமினர் மாடலில் புதிய நிறம் மற்றும் தங்க நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே டாமினர் 400 மோட்டார்சைக்கிள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக விலை அதிகரிக்கப்பட்டுள்லது. 



    பஜாஜ் டாமினர் 400 மாடலில் 373சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 35 பி.ஹெச்.பி. பவர், 35 என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. டாமினர் 400 மாடலில் ஃபுல் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிஸ்க் பிரேக், ஸ்லிப்பர் கிளட்ச், டூயல் சேனல்-ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    முன்னதாக பஜாஜ் சிடி100 விலை குறைக்கப்பட்டு, இந்த மாடல் இந்தியாவின் விலை குறைந்த மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்றது. அந்த வகையில் பஜாஜ் சிடி100 பேஸ் வேரியண்ட் விலை ரூ.30,714 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்ட

    பஜாஜ் டாமினர் 400 புதிய விலை ஏற்கனவே அந்நிறுவன வலைத்தளத்தில் அப்டேட் செய்ய்ப்பட்டு விட்டது. எனினும் புதிய விலையேற்றத்துக்கான காரணம் அறியப்படவில்லை. மார்ச் 2018-இல் மட்டும் பஜாஜ் நிறுவனம் 1561 டாமினர் யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
    ×