search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019 ஹோன்டா சி.பி.ஆர்.400ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்
    X

    2019 ஹோன்டா சி.பி.ஆர்.400ஆர் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

    ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சி.பி.ஆர்.400ஆர். மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. #HondaCBR400R
    ஹோன்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 சி.பி.ஆர்.400ஆர் மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹோன்டா சி.பி.ஆர்.400ஆர் மோட்டார்சைக்கிள் அப்டேட் செய்யப்பட்ட சி.பி.ஆர்.500ஆர் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது.

    ஹோன்டா சி.பி.ஆர்.500ஆர் மோட்டார்சைக்கிள் கடந்த ஆண்டு நடைபெற்ற EICMA மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சி.பி.ஆர்.400ஆர் தோற்றம், நிறங்கள் மற்றும் என்ஜின் உள்ளிட்டவை 500ஆர் மாடலைத் தழுவி உருவாகி இருக்கிறது. புதிய சி.பி.ஆர். மோட்டார்சைக்கிளை ஹோன்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

    புதிய சி.பி.ஆர்.400ஆர். மாடலில் 399சிசி பேரலெல் ட்வின், லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 46 பி.ஹெச்.பி. பவர் @9000 ஆர்.பி.எம். மற்றும் 38 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது.


    கூடுதலாக புதிய மோட்டார்சைக்கிளில் ஸ்லிப்பர் கிளட்ச், ஹோன்டா ரேசிங் வடிவமைப்பில் உருவாகி இருக்கும் புதிய எக்சாஸ்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது. ஹோன்டா வலைதளத்தின் படி புதிய சி.பி.ஆர்.400ஆர் மோட்டர்சைக்கிளை மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டினால் லிட்டருக்கு 41 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை எல்.இ.டி. ஸைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. மோட்டார்சைக்கிளின் இருசக்கரங்களிலும் ஒற்றை டிஸ்க் பிரேக்கள், வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்புறமும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

    சி.பி.ஆர்.400ஆர் மோட்டார்சைக்கிள் 17-இன்ச் அலாய் வீல் முன்புறம் 120/70-R17 டையரும், பின்புறம் 160/60-R16 டையர் கொண்டிருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட், பியல் கிளேர் வைட் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.  #HondaCBR400R
    Next Story
    ×