என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் டைகர் 850 ஸ்போர்ட் மாடலை அறிமுகம் செய்தது.
     

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய டைகர் 850 ஸ்போர்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் விலை ரூ. 11.95 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது டிரையம்ப் நிறுவனத்தின் புதிய என்ட்ரி-லெவல் அட்வென்ச்சர்-டூரர் மாடல் ஆகும்.

    டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மாடல் கிராபைட் / டையபில் ரெட் மற்றும் கிராபைட் / கேஸ்பியன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட் ஷீல்டு, ப்யூவல் டேன்க், ரேடியேட்டர் ஷிரவுட் மற்றும் எல்இடி லைட்கள் டைகர் 900 மாடலில் உள்ளதை போன்று வழங்கப்பட்டு இருக்கிறது.

     டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட்

    புதிய டிரையம்ப் டைகர் 850 ஸ்போர்ட் மாடலில் 888சிசி லிக்விட் கூல்டு இன் லைன் 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 85 பிஹெச்பி பவர், 82 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது டைகர் 900 மாடலை விட 10 பிஹெச்பி மற்றும் 5 என்எம் குறைவு ஆகும். 

    இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ரெயின் மற்றும் ரோட் என இருவித ரைடிங் மோட்களை கொண்டுள்ளது.

    போக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ மற்றும் வென்டோ மாடல்களுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    இந்தியாவில் செயல்படும் தேர்வு செய்யப்பட்ட போக்ஸ்வேகன் விற்பனையாளர்கள் போலோ மற்றும் வென்டோ மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் இவற்றை கார்ப்பரேட் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் தள்ளுபடி வடிவில் பெற்று கொள்ள முடியும்.

    அந்த வகையில் ஹேட்ச்பேக் மாடலான போக்ஸ்வேகன் போலோ மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் மற்றும் ரூ. 15 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மாடல் 1.0 லிட்டர் எம்பிஐ என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     போக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ

    செடான் மாடலான வென்டோ டிஎஸ்ஐ ஹைலைன் பிளஸ் வேரியண்ட் ரூ. 9.99 லட்சம் எனும் சிறப்பு விலையில் கிடைக்கிறது. இத்துடன் ரூ. 40 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மாடல் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜினுடன் கிடைக்கிறது.

    இந்த என்ஜின் 109 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. போக்ஸ்வேகன் டி ராக், டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல்களுக்கு இந்த மாதம் எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. 
    யமஹா நிறுவனத்தின் 2021 FZ மற்றும் FZS மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.

    யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது 2021 FZ சீரிஸ் மாடல்கள்- FZ-Fi மற்றும் FZS-Fi மோட்டார்சைக்கிள்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. 2021 யமஹா FZ மற்றும் FZS மோட்டார்சைக்கிள்களில் சிறு மாற்றங்கள் மற்றும் புது அம்சங்கள் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இந்தியாவில் 2021 யமஹா FZ-Fi மாடல் விலை ரூ. 1.03 லட்சம் என்றும் யமஹா FZS-Fi மாடலின் விலை ரூ. 1.07 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     2021 யமஹா FZS

    2021 யமஹா FZ-Fi மாடல்- ரேசிங் புளூ மற்றும் மெட்டாலிக் பிளாக் என இரண்டு புதிய நிறங்களிலும், FZS-Fi மாடல் மேட் ரெட் நிறத்தில் கிடைக்கின்றன. இவை தவிர இரு மாடல்களும் தற்சமயம் கிடைக்கும் நிறங்களிலும் வழங்கப்படுகிறது. இத்துடன் 2021 FZS-Fi மாடலில் புதிதாக 3டி சின்னம் வழங்கப்படுகிறது.

    இவற்றுடன் 2021 FZS-Fi மாடலில் யமஹாவின் ப்ளூடூத் சார்ந்து இயங்கும் யமஹா மோட்டார்சைக்கிள் கனெக்ட் எக்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு ஸ்மார்ட் வசதிகளை வழங்குகிறது. இவைதவிர புதிய மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 

    2021 யமஹா FZ மற்றும் FZS மாடல்களில் 149சிசி பிஎஸ்6 ரக சிங்கில் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 12.4 பிஹெச்பி பவர், 13.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஹைனெஸ் சிபி350 மோட்டார்சைக்கிள் இந்திய விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது.

    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது பிரீமியம் 350சிசி குரூயிசர் மாடலான ஹைனெஸ் சிபி350 விற்பனையில் 10 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்த மைல்கல் விற்பனை துவங்கிய மூன்றே மாதங்களில் எட்டப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மாடல் வினியோகம் அக்டோபர் 21, 2020 துவங்கியது. புதிய ஹைனெஸ் சிபி350 மாடல் ஹோண்டா நிறுவனத்தின் பிங்விங் விற்பனை மையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஹோண்டா தற்சமயம் 5 பிங்விங் விற்பனை மையங்களையும், 18 பிங்விங் டீலர்ஷிப்களை இந்தியா முழுக்க வைத்திருக்கிறது.

     ஹோண்டா ஹைனெஸ் சிபி350

    இந்திய சந்தையில் ஹைனெஸ் சிபி 350 டிஎல்எக்ஸ் மற்றும் டிஎல்எக்ஸ் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1.85 லட்சம் மற்றும் ரூ. 1.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஹோண்டா ஹைனெஸ் 350 மாடலில் 348.36சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.5 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 2021 போன்வில் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 போன்வில் மோட்டார்சைக்கிள்களை பிப்ரவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. வெளியீட்டு தேதி அறிவிப்பை டீசர் வீடியோ மூலம் டிரையம்ப் தெரிவித்து இருக்கிறது.

    டீசர் வீடியோவில் ஸ்பீடுமாஸ்டர், பாபர், போன்வில் டி120, போன்வில் டி100, ஸ்டிரீட் ட்வின் மற்றும் ஸ்பீடு ட்வின் என ஆறு மாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன. இவற்றில் ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் மற்றும் திரக்ஸ்டன் 2021 வெர்ஷன் இடம்பெறவில்லை.

     2021 டிரையம்ப் போன்வில்

    புதிய மாடல்கள் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், இதனால் மோட்டார்சைக்கிள் மாடல்களின் செயல்திறன் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. 

    சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து புதிய மாடல்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் விற்பனையை அதிகப்படுத்தவும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் திட்டமிட்டு வருகிறது.
    ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 ஹிமாலயன் மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 ஹிமாலயன் மாடலின் இந்திய வெளியீட்டு தேதி அறிவித்து இருக்கிறது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து உள்ளது. அதன்படி 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடல் பிப்ரவரி 11 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

    முன்னதாக இந்த மாடல் விற்பனையகம் வந்தடைந்ததை குறிக்கும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. மேலும் இந்த மாடலுக்கான முன்பதிவு மற்றும் வினியோகம் விரைவில் துவங்கும் என தெரிகிறது. 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடலில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படும் என கூறப்படுகிறது.

     ராயல் என்பீல்டு ஹிமாலயன்

    புதிய மாடலின் ஒட்டுமொத்த வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் இன்றி, வெளிப்புறங்களில் சிறு மாறுதல்கள் செய்யப்படும் என தெரிகிறது. அதன்படி முன்புறம் பியூவல் டேன்க் மீது இருக்கும் மெட்டல் பிரேம் அளவில் சிறியதாகவும், சற்று முன்புறம் வைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் விண்ட்-ஸ்கிரீன் சற்று உயரமாகவும், அகலமாகவும் உள்ளது.

    காஸ்மெடிக் மாற்றங்களை பொருத்தவரை புதிய மாடல் கிரானைட் கிரே மற்றும் பைன் கிரீன் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்படலாம்.  இந்த மாடலில் 411சிசி, சிங்கில் சிலிண்டர் SOHC ஏர் கூல்டு பிஎஸ்6 என்ஜின் வழங்கப்படுகிறது. இது 24.3 பிஹெச்பி பவர், 32 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    சென்னையில் உள்ள ஆலையில் ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் உற்பத்தி துவங்கி இருக்கிறது.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது புதிய காம்பேக்ட் எஸ்யுவி- கைகர் மாடலின் உற்பத்தியை சென்னை ஆலையில் துவங்கி இருக்கிறது. புதிய கைகர் மாடலுக்கான முன்பதிவு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ரெனால்ட் கைகர் மாடலின் இந்திய விலை விவரங்கள் பிப்ரவரி 15 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய கைகர் மாடல் வினியோகம் விரைவில் துவங்கலாம் என கூறப்படுகிறது.

     ரெனால்ட் கைகர்

    புதிய கைகர் மாடல் நாடு முழுக்க சுமார் 500-க்கும் அதிக விற்பனையகங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாக ரெனால்ட் தெரிவித்து உள்ளது. கைகர் மாடல் விற்பனைகத்தில் நிறுத்தப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

    புதிய கைகர் மாடலில் அதிக செயல்திறன் மற்றும் சிறந்த டிரைவிங் அனுபவத்துக்காக டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. மேலும் இந்த காரில் மல்டிசென்ஸ் டிரைவ் முறைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    காரின் உட்பகுதியில் ஸ்மார்ட் கேபின் உள்ளது. அதனைத்தவிர தொழில்நுட்பம், செயல்பாடு மற்றும் அதிக இடவசதியிலும் தனித்துவம் கொண்ட காராக இருக்கிறது.
    சுசுகி நிறுவனத்தின் லிமிடெட் எடிஷன் சூப்பர்பைக் விற்பனை துவங்கிய மூன்றே நாட்களில் விற்று தீர்ந்தது.


    சுசுகி நிறுவனம் புதிய ஹயபுசா சர்வதேச வெளியீட்டு நிகழ்வின் போது லிமிடெட் எடிஷன் மாடலையும் அறிமுகம் செய்தது. இது மொத்தத்தில் பத்து யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு அறிவிக்கப்பட்டன.

    புதிய லிமிடெட் எடிஷன் மாடலை முன்பதிவு செய்வதற்கான காலக்கெடு மார்ச் 15 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. எனினும், இவை விற்பனை துவங்கிய மூன்றே நாட்களில் விற்று தீர்ந்தன. லிமிடெட் எடிஷன் மாடல் பிளாக் மற்றும் கோல்டு வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளன.

     சுசுகி ஹயபுசா

    மேலும் இவற்றில் கார்பன் மிரர் கவர்கள், கார்பன் டேன்க் பேட், ரிம் ஸ்டிரைப் மற்றும் பிரத்யேக அனோடைஸ் செய்யப்பட்ட லீவர்கள் மற்றும் சீட் கவர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. 

    புதிய தலைமுறை ஹயபுசா மாடலில் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் 1340சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் ரைடு-பை-வயர் எலெக்டிரானிக் திராட்டிள் சிஸ்டம், ரிவைஸ்டு இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 264 கிலோ எடை கொண்டிருக்கும் புதிய சுசுகி ஹயபுசா லிட்டருக்கு 14.9 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேன்ஜ் ரோவர் கார் மாடல் விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது.


    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் சர்வதேச விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இதனை லேண்ட் ரோவர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள அக்கவுண்ட்களில் தெரிவித்து உள்ளது.

    சர்வதேச சந்தையில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2021 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் துவக்க விலை ரூ. 89.13 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.43 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் மொத்தம் ஏழு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த மாடலில் பெரிய ஏர் டேம், கூர்மையான எட்ஜ் மற்றும் பிளாக்டு-அவுட் அம்சங்கள் என பல்வேறு ஸ்போர்ட் ஸ்டைலிங் கொண்டிருக்கிறது.

     ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட்

    இந்த பிரீமியம் எஸ்யுவி மாடல் 296 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 2.0 லிட்டர் 4 சிலிண்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின், 394 பிஹெச்பி பவர், 550 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 3.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் MHEV என்ஜின் மற்றும் 296 பிஹெச்பி பவர், 650 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் 3.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    அனைத்து  என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ரேன்ஜ் ரோர் ஸ்போர்ட் எஸ்விஆர் வேரியண்ட் 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் 567 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    ஹோண்டா நிறுவனத்தின் 2021 ஆப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் இந்திய வினியோக விவரங்களை பார்ப்போம்.


    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 2021 ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் மாடலை ரூ. 15.96 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த மாடலின் வினியோகம் இந்தியாவில் துவங்கி இருக்கிறது.

    2021 ஹோண்டா அப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் மாடலின் முதல் யூனிட் வினியோகம் மும்பையில உள்ள பிரீமியம் விற்பனையகத்தில் தனி விழாவாக நடத்தப்பட்டது. இதில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் யத்விந்தர் சிங் குலேரியா கலந்து கொண்டார்.

    புதிய அட்வென்ச்சர் ட்வின் மோட்டார்சைக்கிள் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதுதவிர இவை பல்வேறு புதிய நிறங்களிலும் கிடைக்கின்றன.

     2021 ஆப்ரிக்கா ட்வின்

    மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் டார்க்னெஸ் பிளாக் மெட்டாலிக் நிறத்திலும், டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் பியல் கிளேர் வைட் டிரைகலர் நிறத்திலும் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    2021 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் 1084சிசி, பேரலெல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 98 பிஹெச்பி பவர், 103 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பாதுகாப்பிற்கு இந்த மாடலில் வீலி கண்ட்ரோல், கார்னெரிங் ஏபிஎஸ், ரியர் லிப்ட் கண்ட்ரோல் போன்றவை வழங்கப்பட்டு உள்ளது.
    ஜாகுவார் நிறுவனத்தின் புதிய ஐ பேஸ் எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது முழு எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலான ஐ பேஸ் மார்ச் 9 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து உள்ளது. புதிய ஐ பேஸ் மாடலுக்கான முன்பதிவு நவம்பர் மாதம் துவங்கியது. இதன் வினியோகம் மார்ச் மாத வாக்கில் துவங்க இருக்கிறது.

    ஜாகுவார் ஐ பேஸ் மாடல் எஸ், எஸ்இ மற்றும் ஹெச்எஸ்இ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த கார் புஜி வைட், கலெட்ரா ரெட், சன்டோரினி பிளாக், யுலொங் வைட், இன்டஸ் சில்வர், பிரென்ஸ் ரெட், கைசியெம் புளூ, பொராஸ்கோ கிரே, போர்டோபினோ புளூ, பரலூன் பியல் பிளாக் மற்றும் அருபா போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

     ஜாகுவார் ஐ பேஸ்

    புதிய ஜாகுவார் ஐ பேஸ் மாடலில் 90 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் 389 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும்.

    இதில் உள்ள 90 கிலோவாட் பேட்டரி எட்டு வருடங்கள் அல்லது 1,60,000 கிலோமீட்டர் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஐந்து வருடங்களுக்கு சர்வீஸ் பேக்கேஜ், ஐந்து ஆண்டுகளுக்கு ஜாகுவார் ரோட்-சைடு அசிஸ்டண்ஸ், 7.4 கிலோவாட் ஏசி வால் மவுண்ட் செய்யப்பட்ட சார்ஜர் வழங்கப்படுகிறது.
    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது 2021 இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் மேம்பட்ட இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய 2021 இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் துவக்க விலை ரூ. 21 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய மாடல் எக்சைட் மற்றும் எக்ஸ்குளூசிவ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 20,99,800 மற்றும் ரூ. 24,18,000 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் ஐஸ்மார்ட் சிஸ்டம் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     2021 எம்ஜி இசட்எஸ்

    இந்த தொழில்நுட்பம் 2021 ஹெக்டார் சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 35-க்கும் அதிக வாய்ஸ் கமாண்ட்களை புரிந்து கொண்டு பதில் அளிக்கிறது. மேலும் இதை கொண்டு காரின் பல்வேறு அம்சங்களை குரல்வழியே இயக்க முடியும். இத்துடன் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ் முந்தைய மாடலை விட அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    2021 எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் மாடலில் 44.5 kWh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 143 பிஹெச்பி பவர், 353 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய ஹை-டெக் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 419 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. இசட்எஸ் எலெக்ட்ரிக் காருடன் 50 kW DC பாஸ்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இது காரை 0 முதல் 80 சதவீத சார்ஜ் செய்ய 50 நிமிடங்களை எடுத்து கொள்கிறது. வழக்கமான ஸ்டான்டர்டு ஏசி சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய ஆறு முதல் எட்டு மணி நேரத்தை எடுத்து கொள்கிறது.
    ×