என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
நிசான் நிறுவனத்தின் கார் மாடலுக்கு ரூ. 95 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்யுவி மாடலுக்கு ரூ. 95 ஆயிரம் வரையிலான சலுகையை அறிவித்து இருக்கிறது. இவை எக்சேன்ஜ் சலுகை, தள்ளுபடி மற்றும் லாயல்டி பலன்களாக வழங்கப்படுகிறது. இந்த சலுகை பிப்ரவரி 28 ஆம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது.
அதன்படி நிசான் கிக்ஸ் மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 20 லாயல்டி பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் என்ஐசி உள்ள விற்பனை மையங்கள் அல்லது வேரியண்ட் மற்றும் பகுதிக்கு ஏற்ப வேறுபடும்.

நிசான் கிக்ஸ் மாடலில் கேஸ்கேடிங் கிரில், எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், சில்வர் நிற ஸ்கிட் பிளேட்கள், 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறம் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதில் டூயல் டோன் இன்டீரியர் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரல் அங்கீகார வசதி மற்றும் நிசான் கனெக்ட் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் 2021 இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் மாடலை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து மற்றொரு புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் திட்டமிட்டு வருகிறது.
இதுபற்றிய விவரங்களை எம்ஜி மோட்டார் இந்தியா மூத்த நிர்வாக அதிகாரியான கௌரவ் குப்தா தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். புதிய மாடலுக்கென எம்ஜி மோட்டார் நிறுவனம் பெரிய பேட்டரியை பயன்படுத்த இருப்பதாகவும், இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என அவர் தெரிவித்தார்.

எனினும், எம்ஜி இசட்எஸ் மாடலில் வழங்கப்பட்ட பேட்டரியை புதிய மாடலிலும் வழங்கப்படுமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. புதிய பேட்டரியை தேர்வு செய்யும் போது இதுபற்றிய முடிவு எட்டப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய எம்ஜி இசட்எஸ் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1300 யூனிட்களை எம்ஜி மோட்டார் இந்தியா விற்பனை செய்து உள்ளது. இதன் வெற்றியை தொடர்ந்தே எம்ஜி மோட்டார் மற்றொரு எலெக்ட்ரிக் கார் மாடலை நீண்ட தூரம் செல்லும் வகையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ புது வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் சத்தமின்றி இந்திய சந்தையில் ஸ்கார்பியோ எஸ்யுவி-யின் பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கார்பியோ வேரியண்ட் எஸ்3 பிளஸ் ஆகும். இது முந்தைய என்ட்ரி லெவல் மாடலின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.
புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்3 பிளஸ் வேரியண்ட் விலை ரூ. 11.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எஸ்5 மாடலை விட ரூ. 68 ஆயிரம் குறைவு ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த மாடலுக்கான முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனை மையங்களில் துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பேஸ் மாடலில் எஸ்5 வேரியண்ட்டில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
எனினும், சைடு-ஸ்டெப், ஸ்பீடு சென்சிங் டோர் லாக், வினைல் சீட், பம்ப்பரில் பாடி கிளாடிங் உள்ளிட்டவை புது வேரியண்ட்டில் இடம்பெறவில்லை. புதிய மாடலில் 17 இன்ச் ஸ்டீல் வீல்கள், மேனுவல் சென்ட்ரல் லாக்கிங், டில்ட் அட்ஜஸ்ட் ஸ்டீரிங், மேனுவல் HVAC, என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ரியர் பார்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம்5 பேஸ்லிப்ட் மாடல் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து எம்5 செடான் மாடல் நீக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு மாற்றாக விரைவில் எம்5 பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட எம்5 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வந்தது. புதிய மாடலில் 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த என்ஜின் 592 பிஹெச்பி பவர், 750 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. புதிய எம்5 மாடலின் வெளிப்புறம் மேம்பட்ட பம்ப்பர்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், ட்வின் எல் வடிவ எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகின்றன.
இத்துடன் புதிய அலாய் வீல்கள், கார்பன் பைபர் ரூப், ஸ்மோக்டு எல்இடி டெயில் லைட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. உள்புறம் 12.3 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மாடல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது கிளாசிக் 350 சீரிஸ் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு காரணமாக இதன் துவக்க விலை ரூ. 1,61,235 இல் இருந்து ரூ. 1,67,235 என மாறி இருக்கிறது.
மாற்றப்பட்ட புதிய விலை விவரம்
கிளாசிக் 350 (ஆஷ்/செஸ்ட்ந்ட்/ரெடிட்ச் ரெட்/பியூர் பிளாக்/எம்.சில்வர்) விலை ரூ. 1,67,235
கிளாசிக் 350 பிளாக் ரூ. 1,75,405
கிளாசிக் 350 கன் கிரே ஸ்போக் வீல் ரூ. 1,77,294
கிளாசிக் 350 சிக்னல் ஏர்போன் புளூ ரூ. 1,85,902
கிளாசிக் 350 கன் கிரே அலாய் வீல் ரூ. 1,89,360
கிளாசிக் 350 ஆரஞ்சு எம்பெர்/மெட்டாலியோ சில்வர் ரூ. 1,89,360
கிளாசிக் 350 ஸ்டெல்த் பிளாக் / குரோம் பிளாக் ரூ. 1,92,608

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. புதிய விலை உயர்வு இந்த மாதமே அமலுக்கு வருகிறது. விலை உயர்வு தவிர கிளாசிக் 350 மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலில் 346சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 19.1 பிஹெச்பி பவர், 28 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ மாடலின் புது வேரியண்ட் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மராசோ மாடல் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. தற்சமயம் மராசோ எம்பிவி மாடல் ஒற்றை பிஎஸ்6 டீசல் என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வழங்கப்படுகிறது.
ஏஎம்டி கியர்பாக்ஸ் பெறும்பட்சத்தில் புதிய மராசோ மாடலில் 6 ஸ்பீடு மரெலி யூனிட் வழங்கப்படலாம். இதே யூனிட் எக்ஸ்யுவி300 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் கிராஸ்-பேடென் ஷிப்டர் மற்றும் கிரீப் மோட் கொண்டிருக்கும் என தெரிகிறது.

மேலும் இந்த வேரியண்ட்டில் பவர் மற்றும் எகானமி என இரண்டு டிரைவ் மோட்களை கொண்டிருக்கும். இதன் பவர் மோட் 122 பிஎஸ் பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும். இதன் எகாமி மோட் 100 பிஎஸ் பவர் வழங்கும் என தெரிகிறது. ஏஎம்டி யூனிட் மராசோ பெட்ரோல் மாடல்களிலும் வழங்கப்படலாம்.
இந்தியாவில் பாஸ்டேக் பயனாளிகள் இனி இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பாஸ்டேக் பயன்படுத்துவோர் இனி குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ரத்து செய்வதாக தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் பாஸ்டேக் கணக்கில் முழு தொகையும் காலியாகும் வரை பயனர்கள் சுங்க சாவடிகளை கடக்க முடியும்.
பாஸ்டேக் வழங்கும் வங்கிகள் சார்பில் பாஸ்டேக் அக்கவுண்ட்டை செயல்பாட்டில் வைத்திருக்க குறைந்த பட்ச தொகையை கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்ற விதியை கட்டாயமாக்கி இருந்தது. இதன் காரணமாக சுங்க சாவடிகளில் போதுமான பேலன்ஸ் வைத்திருக்கும் பயனர்களுக்கு கால தாமதம் ஏற்பட்டது.

தற்சமயம் குறைந்தபட்ச தொகை நீக்கப்பட்டு இருப்பதால், பயனரின் பாஸ்டேக் அக்கவுண்ட்டில் தொகை முழுமையாக தீரும் வரை சுங்க சாவடிகளை கடந்து பயணிக்க முடியும். இவ்வாறு சுங்க சாவடிகளை கடக்கும் போது பயனரின் கணக்கில் இருந்து தொகை தீர்ந்து போனால் இது நெகடிவ் ஆக பதிவு செய்யப்படும். பின் தொடர்ந்து பாஸ்டேக் பயன்படுத்த பயனர்கள் அக்கவுண்ட்டில் தொகையை சேர்க்க வேண்டும்.
பிப்ரவரி 15 ஆம் தேதி துவங்கி நாடு முழுக்க சுங்க சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயமாக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து சுங்க சாவடி பரிமாற்றங்களை 100 சதவீதம் பணமில்லா பரிவர்த்தனைகளாக பெற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
தற்சமயம் நாடு முழுக்க 2.54 கோடி பாஸ்டேக் பயனர்கள் உள்ளனர். இவற்றில் நாள் ஒன்றுக்கு ரூ. 89 கோடி வசூலிக்கப்படுகிறது. இது நாடு முழுவதும் செயல்படும் சுங்க சாவடிகளில் வசூலாகும் தொகையில் 80 சதவீதம் ஆகும்.
ஜாவா நிறுவனத்தின் 2021 பார்டி டூ மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 ஜாவா பார்டி டூ மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில்அறிமுகம் செய்தது. 2021 ஜாவா பார்டி டூ மாடல் விலை ரூ. 1.84 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் பல்வேறு புது அம்சங்கள், சிறு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு மூன்று புதிய நிறங்களில் வழங்கப்படுகிறது.
2021 ஜாவா பார்டி டூ மாடல் சிரியஸ் வைட், ஆல் ஸ்டார் பிளாக் மற்றும் ஒரியன் ரெட் என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது. இதுதவிர பியூவல் டேன்க் மீது ரேசிங் ஸ்டிரைப்களுடன் 42 எண் மற்றும் கிளாசிக் லெஜண்ட்ஸ் லோகோ இடம்பெற்று இருக்கிறது.

2021 ஜாவா பார்டி டூ மாடலில் புதிய விண்ட்ஷீல்டு, பார் எண்ட் மிரர், சவுகரியான சீட், புது வடிவமைப்பு கொண்ட ஸ்டான்டு, அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டையர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஹெட்லேம்ப் கிரில், பிளை ஸ்கிரீன் உள்ளிட்டவை அக்சஸரீயாக வழங்கப்படுகிறது.
இவைதவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி புதிய மாடலிலும் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே 293சிசி சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு பிஎஸ்6 ரக யூனிட் ஆகும். இந்த என்ஜின் 26 பிஹெச்பி பவர், 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் 2021 ஹெக்டார் பெட்ரோல் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்களை 8 ஸ்பீடு சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனுடன் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் பெட்ரோல் என்ஜின்களுடன் வழங்கப்படுகிறது.
சிவிடி டிரான்ஸ்மிஷன் ஹெக்டார் மற்றும் ஹெக்டார் பிளஸ் மாடல்களின் ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டார் பெட்ரோல் சிவிடி வேரியண்ட் ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட் விலை முறையே ரூ. 16.52 லட்சம் மற்றும் ரூ. 18.10 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதேபோன்று எம்ஜி ஹெக்டார் பிளஸ் பெட்ரோல் சிவிடி வேரியண்ட் ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் வேரியண்ட் விலை முறையே ரூ. 17.22 லட்சம் மற்றும் ரூ. 18.90 லட்சம் என நிர்ணயம் ெய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய சிவிடி டிரான்ஸ்மிஷன் டிசிடி கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் வெர்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. சிவிடி மற்றும் டிசிடி வேரியண்ட் விலை ஒரே மாதிரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. எனினும், சிவிடி மாடல்கள் அதிக மைலேஜ், கூடுதல் சவுகரியம் மற்றும் தலைசிறந்த அனுபவத்தை வழங்கும் என எம்ஜி மோட்டார் இந்தியா தெரிவித்து இருக்கிறது.
2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2021 ஹயபுசா மாடலினை சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. மூன்றாம் தலைமுறை சுசுகி ஹயபுசா சூப்பர்பைக் வரும் மாதங்களில் இந்தியா உள்பட பல்வேறு சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்திய சந்தையில் 2021 சுசுகி ஹயபுசா சூப்பர்பைக் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்திய சந்தைக்கு புதிய ஹயபுசா மாடல் சிகேடி முறையில் கொண்டு வரப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு செய்வதன் மூலம் 2021 ஹயபுசா மாடல் விலையை சந்தையில் போட்டியை உண்டாக்கும் வகையில் நிர்ணயம் செய்ய முடியும். இந்தியாவில் முந்தைய ஹயபுசா மாடல் விலை ரூ. 13.75 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போதைய அப்டேட் மற்றும் அம்சங்கள் அடிப்படையில் இதன் விலை ரூ. 18 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 2021 சுசுகி ஹயபுசா மாடலுக்கான முன்பதிவு சில விற்பனையகங்களில் துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், சுசுகி சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ முன்பதிவு துவங்கப்படவில்லை. மேலும் இதன் வெளியீடு பற்றியும் சுசுகி சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஹிமாலயன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 2021 ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2021 ஹிமாலயன் மாடல் விலை ரூ. 2.01 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலில் பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும் 2021 ஹிமாலயன் மாடல் மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது. புதிய 2021 ஹிமாலயன் மாடலுக்கான முன்பதிவு நாடு முழுக்க அனைத்து விற்பனை மையங்களிலும் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு அந்நிறுவனத்தின் வலைதளத்திலும் மேற்கொள்ள முடியும்.
2021 ஹிமாலயன் மாடலின் வினியோகம் விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மேம்பட்ட சீட்கள், நீண்ட தூர பயணத்தின் போது அதிக சவுகரியம் வழங்க ஏதுவான மாற்றங்களை கொண்டிருக்கின்றன.

காஸ்மெடிக் அடிப்படையில் 2021 ஹிமாலயன் மாடல் பைன் கிரீன், கிரானைட் பிளாக் (டூயல் டோன் மேட் மற்றும் கிளாஸ் பிளாக்) மற்றும் மிரேஜ் சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் கிராவல் கிரே, ராக் ரெட் மற்றும் லேக் புளூ நிறங்களிலும் கிடைக்கிறது.
2021 ஹிமாலயன் மாடலில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்ரிப்பர் நேவிகேஷன் அம்சம் கொண்டிருக்கிறது. புதிய டன்-பை-டன் நேவிகேஷன் பாட் மோட்டார்சைக்கிளின் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் அருகில் பொருத்தப்பட்டு இருக்கிறது.
2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடலில் 411சிசி சிங்கில் சிலிண்டர் SOHC ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 24.3 பிஹெச்பி பவர், 32 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் வாகனங்கள் இப்படி விற்பனை செய்யப்படுவதற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரும் மாடல்களில் பாதுகாப்பு தரத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் சில வாகன உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருவதற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவித்து இருக்கிறது. இதுபோன்ற செயல்களை கைவிட வாகன உற்பத்தியாளர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
பாரபட்சம் காட்டுவதை நிறுத்திவிட்டு இந்தியாவில் வாகன பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. வாகனங்களில் லொகேஷன் டிராக்கிங் செய்யும் சாதனங்களை பொருத்துவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய சாலை பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் செயலாளர் கிரிதர் அர்மான் தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் போது..,
சில வாகன உற்பத்தியாளர்கள் மட்டுமே வாகன பாதுகாப்பு முறைகளை சரியாக பின்பற்றுகின்றனர். அதுவும் விலை உயர்ந்த டாப் எண்ட் மாடல்களில் மட்டுமே இவை வழங்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களிலும் பாதுகாப்பு தரத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் வாகன உற்பத்தியாளர்கள் பெரும் பங்காற்றுகின்றனர். இந்த நிலையில் சில நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வரும் போது பாதுகாப்பு தரத்தை குறைக்கும்செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






