என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்3 மாடல் புது வேரியண்ட் இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30ஐ ஸ்போர்ட்எக்ஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ மாடல் விலை ரூ. 56.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புது வேரியண்ட் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் என்ட்ரி லெவல் மாடலாக அமைந்துள்ளது. புது வேரியண்ட் இந்த பிரிவில் குறைந்த விலை மாடலாக வெளியாகி இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30ஐ மாடல் சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

பிஎம்டபிள்யூ புது வேரியண்ட் ஒற்றை பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் வழங்கப்படுகிறது. புதிய மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய காரை வாங்க பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகை வழங்கப்படுகிறது.
புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30ஐ ஸ்போர்ட்எக்ஸ் வேரியண்ட் 2.0 லிட்டர் ட்வின்பவர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 248 பிஹெச்பி பவர், 360 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
கபிரா மொபிலிட்டி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து உள்ளது.
கோவாவை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் கபிரா மொபிலிட்டி இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை கேஎம் 3000 மற்றும் கேஎம் 4000 என அழைக்கப்படுகின்றன.
இதில் கவாசகி நின்ஜா 300 போன்றே காட்சியளிக்கும் கேஎம் 3000 மாடல் விலை ரூ. 1,26,990 என்றும் இசட்1000 தோற்றம் கொண்டிருக்கும் கேஎம் 4000 மாடல் விலை ரூ. 1,36,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களிலும் முறையே 6kW மற்றும் kW மோட்டார் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த மோட்டார்கள் 4.0 kWh மற்றும் 4.4 kWh பேட்டரிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த பேட்டரிகளை பூஸ்ட் சார்ஜ் மூலம் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 50 நிமிடங்களே ஆகும். இகோ சார்ஜ் பயன்படுத்தும் பட்சத்தில் 6 மணி 30 நிமிடங்கள் ஆகும்.

கேஎம் 3000 மாடல் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 முதல் 120 கிலோமீட்டர் வரை செல்லும். கேம் 4000 மாடல் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 90 முதல் 150 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
இரு மாடல்களிலும் ப்ளூடூத் சார்ந்து இயங்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களும் கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற பகுதிகளை சேர்ந்த 27 விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் புது மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் ரூ. 1.96 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புத்தம் புதிய சிபி350ஆர்எஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய ஹோண்டா சிபி350ஆர்எஸ் மாடல் துவக்க விலை ரூ. 1,96,000 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹோண்டா சிபி350ஆர்எஸ் மாடலின் பியூவல் டேன்க்கில் பிரம்மாண்ட ஹோண்டா பேட்ஜ், 7-y வடிவ அலாய் வீல்கள், அதிநவீன ரோட்ஸ்டர் தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப், கண் வடிவி எல்இடி விண்க்கர்கள், மெல்லிய எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் 350சிசி, ஏர்-கூல்டு 4 ஸ்டிரோக் OHC சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.7 பிஹெச்பி பவர், 30 என்எம் டார்க் செயல்திறன் வழஹ்குகிறது. இதில் உள்ள மேம்பட்ட PGM-FI சிஸ்டம் ஆன்-போர்டு சென்சார்களை கொண்டு என்ஜினுக்கு சீராக எரிபொருள் செலுத்துகிறது.
இத்துடன் ஹோண்டா சிபி350ஆர்எஸ் மாடலில் மேம்பட்ட டிஜிட்டல் அனலாக் மீட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது டார்க் கண்ட்ரோல், ஏபிஎஸ், சைடு-ஸ்டாண்டு இன்டிகேட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் மற்றும் பேட்டரி வோல்டேஜ் போன்ற விவரங்களை வழங்குகிறது.
புதிய ஹோண்டா சிபி350ஆர்எஸ் மாடல் ரியல்-டைம் மைலேஜ், அவரேஜ் மைலேஜ் மற்றும் டிஸ்டன்ஸ் டு எம்ப்டி என மூன்று மோட்களில் பியூவல் ஆற்றல் விவரங்களை காண்பிக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன உற்பத்தியில் புது மைல்கல் கடந்து உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சர்வதேச வாகன உற்பத்தியில் ஐந்து கோடி யூனிட்களை கடந்துள்ளது. மெர்சிடிஸ் மேபக் எஸ் கிளாஸ் மாடல் ஐந்து கோடி யூனிட்டாக உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் ஜெர்மனியில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த மைல்கல் எட்ட 75 ஆண்டுகள் ஆனது என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்து உள்ளது. தற்சமயம் மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது. 2022 ஆண்டு வாக்கில் ஆறு புதிய இகியூ மாடல்களை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டு உள்ளது.
ஒரே ஆலையில் ஐசிஇ மாடல்கள் மற்றும் இகியூ மாடல்கள் என இரண்டையும் உற்பத்தி செய்யும் வகையிலான வசதியை கொண்டுள்ளன.

புது மைல்கல் எட்டியது குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஜார்க் பர்சர் கூறும் போது..,
“மெர்சிடிஸ் பென்ஸ் என்றாலே ஆடம்பரம் தான். இதன் காரணமாகவே இந்த மைல்கல் எட்டியதில் பெரு மகிழ்ச்சியாக உள்ளது. ஐந்து கோடி யூனிட்களை உற்பத்தி செய்தது எங்களது நிறுவனத்திற்கு மிக பெரிய மைல்கல் ஆகும். தொடர் ஈடுபாடு மற்றும் சிறப்பான பணியை செய்து வரும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.”
“வாகன உற்பத்தியில் இவர்களின் அசாத்திய அனுபவம் மற்றும் சிறப்பான பங்களிப்பு மட்டுமே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய வாடிக்கையாளர்கள் கனவை நனவாக்கி வருகிறது. என தெரிவித்தார்.”
போக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ டர்போ எடிஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.
போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் போலோ மற்றும் வென்டோ மாடல்களின் டர்போ எடிஷனை அறிமுகம் செய்தது. புதிய டர்போ எடிஷன் ஸ்டான்டர்டு வேரியண்ட்டை விட பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களை கொண்டிருக்கிறது.
விலையை பொருத்தவரை போலோ டர்போ எடிஷன் மாடல் ரூ. 6.99 லட்சம் என்றும் வென்டோ டர்போ எடிஷன் மாடல் ரூ. 8.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய டர்போ எடிஷன் மாடல் கம்பர்ட்லைன் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மாற்றங்களை பொருத்தவரை புது வேரியண்ட்டில் ஏராளமான காஸ்மெடக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி கிளாஸி பிளாக் ஸ்பாயிலர், ORVM கேப்கள், பென்டர் பேட்ஜ் மற்றும் ஸ்போர்ட் சீட் கவர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

டர்போ எடிஷன் மாடல்கள் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. போக்ஸ்வேகன் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடலான போலோ இரண்டு என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் கிடைக்கிறது. இவை 1.0 லிட்டர் எம்பிஐ என்ஜின் - 76 பிஹெச்பிஸ 95 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இதன் டாப் எண்ட் மாடல் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் 110 பிஹெச்பி பவர், 175 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது புதிய 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது. வென்டோ மாடலில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் வழங்ப்பட்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் இந்திய சந்தையில் ரூ. 5.45 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்தது. புதிய ரெனால்ட் கைகர் மாடல் விலை ரூ. 5.45 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய ரெனால்ட் கைகர் மாடல் முன்பதிவு துவங்கி நாடு முழுக்க நடைபெற்று வருகிறது. புதிய கைகர் மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் ரெனால்ட் கைகர் மாடல் ஆர்எக்ஸ்இ, ஆர்எக்ஸ்எல், ஆர்எக்ஸ்டி மற்றும் ஆர்எக்ஸ்இசட் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இத்துடன் ஐஸ் கூல் வைட், பிளானெட் கிரே, மூன்லைட் கிரே, மஹோகனி பிரவுன், கேஸ்பியன் புளூ மற்றும் ரேடியன்ட் ரெட் என ஆறு நிறங்களில் கிடைக்கிறது. இந்த நிறங்கள் அனைத்தும் டூயல்-டோன் ஆப்ஷனிலும் வழங்கப்படுகிறது. டூயல் டோன் வேரியண்ட் விலை சிங்கில் டோன் மாடலை விட ரூ. 17 ஆயிரம் அதிகம் ஆகும்.
ரெனால்ட் கைகர் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் வழங்கப்படுகின்றன. இந்த என்ஜின் 72 பிஹெச்பி பவர், 96 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் நிறுவனம் புதிய கைகர் மாடலை விற்பனையகங்களுக்கு அனுப்ப துவங்கி உள்ள நிலையில், இந்த மாடலுக்கான வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 160ஆர் லிமிடெட் எடிஷன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் வாகன உற்பத்தியில் பத்து கோடி யூனிட்கள் எனும் மைல்கல் எட்டியது. மைல்கல் உற்பத்தியை கொண்டாடும் வகையில் ஆறு லிமிடெட் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.
அந்த வகையில் எக்ஸ்டிரீம் 160ஆர் 100 மில்லியன் லிமிடெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் பிரத்யேகமாக வைட் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.

இத்துடன் `100 மில்லியன்' வாசகம் அடங்கிய கிராபிக்ஸ் இடம்பெறுகிறது. இவைதவிர புதிய லிமிடெட் எடிஷன் மாடலில் வெறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது. புதிய மாடலில் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது.
ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் மாடலில் 163சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 15 பிஹெச்பி பவர், 14 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் இதன் டூயல் டிஸ்க் வேரியண்ட் விலை ரூ. 1.06 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சிட்ரோயன் நிறுவனம் தனது சி5 ஏர்கிராஸ் மாடலின் முன்பதிவு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
சிட்ரோயன் நிறுவனம் தனது சி5 ஏர்கிராஸ் மாடல் முன்பதிவு மார்ச் 1 ஆம் தேதி துவங்கும் என அறிவித்து இருக்கிறது. புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் பீல் மற்றும் ஷைன் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். இத்துடன் பியல் வைட், குமுலஸ் கிரே, டிஜூசா புளூ மற்றும் பெர்லா நெரா பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.
சி5 ஏர்கிராஸ் மாடலில் கிராஸ்ஓவர் போன்ற ஸ்டான்ஸ், ட்வின்-ஸ்லாட் முன்புற கிரில், டூயல் பீம் எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி பாக் லேம்ப், 18 இன்ச் டூயல் டோன் அலாய் வீல், குரோம் பாக்ஸ் டூயல் எக்சாஸ்ட் பைப் மற்றும் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 175 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
காரின் உள்புறம் பிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீல், மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், எட்டு அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 20 ஆண்டு வாகன விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு பணிகளை துவங்கியது முதல் ஹோண்டா நிறுவனம் 1.5 கோடி யூனிட்களை தென்னிந்தியாவில் மட்டும் விற்பனை செய்து இருக்கிறது.
இந்தியாவின் தென்னிந்தியாவில் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளராக இருப்பதாக ஹோண்டா தெரிவித்து உள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் அந்தமான் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கும்.
விற்பனையில் 1.5 கோடி யூனிட்களை எட்ட ஹோண்டா நிறுவனம் 20 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது. இதில் முதல் 15 ஆண்டுகளில் 75 லட்சம் யூனிட்களும், இரண்டாவது 75 லட்சம் யூனிட்கள் விற்பனைக்கு ஐந்து ஆண்டுகளை எடுத்துக் கொண்டு இருக்கிறது. இது முன்பைவிட மும்மடங்கு அதிவேக வளர்ச்சி ஆகும்.

புது மைல்கல் குறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் யத்வீந்தர் சிங் குலேரியா கூறும் போது..,
தென்னிந்தியாவில் ஹோண்டாவை தங்களின் விருப்பமான வாகன பிராண்டாக ஏற்றுக் கொண்டமைக்கு 1.5 கோடி வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இரண்டு தசாப்தங்களில் இந்த நம்பிக்கை மட்டுமே ஹோண்டா நிறுவனத்தின் பகுதியின் நம்பர் 1 பிராண்டாக மாற்றி இருக்கிறது. தென்னிந்தியா எப்போதுமே ஹோண்டாவிற்கு மிக நெருக்கமான பகுதியாக உள்ளது.
என அவர் தெரிவித்தார்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம் சீரிஸ் கார் மாடல் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய 3 சீரிஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய மாடல் எம்340ஐ என அழைக்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய மாடல் மார்ச் 10 ஆம் தேதி அறிமுகமாகிறது.
புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ மாடலில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 368 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

இந்த கார் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது ஆகும். இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.4 நொடிகளில் எட்டிவிடும். புது பிஎம்டபிள்யூ காரில் எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லைட்கள், குரோம் ஸ்டட் செய்யப்பட்ட கிரில், மேம்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்படுகிறது.
உள்புறம் 2021 பிஎம்டபிள்யூ எம்340ஐ மாடலில் 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஐடிரைவ் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங், 3 சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான பணிகளில் டெஸ்லா இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.
கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் சமீபத்திய அறிவிப்பின் படி டெஸ்லா இந்தியா கர்நாடக மாநிலத்தில் தனது உற்பத்தி ஆலையை கட்டமைக்க இருக்கிறது. முன்னதாக டெஸ்லா நிறுவனம் பெங்களூரு நிறுவனங்கள் பதிவாணையத்தில் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் எனும் பெயரில் நிறுவனத்தை பதிவு செய்தது.
உற்பத்தி ஆலை மட்டுமின்றி டெஸ்லா இந்தியாவின் தலைமை அலுவலகமும் கர்நாடக மாநிலத்திலேயே அமையும் என கூறப்படுகிறது. டெஸ்லா இந்தியா நிறுவனத்தை வெங்கட்ரங்கம் ஸ்ரீராம், டேவிட் ஜான் பெயின்ஸ்டெயின் மற்றும் வைபவ் தனேஜா என மூன்று இயக்குனர்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு இந்திய சந்தையில் வியாபார பணிகளை துவங்கும் என தெரிவித்து இருந்தார். முதற்கட்டமாக இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது வாகனங்களை சிபியு முறையில் கொண்டு வரும் என்றும் எதிர்காலத்தில் ஆய்வு மற்றும் உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் என தெரிகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் முதல் மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 55 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 60 லட்சம் என நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
எம்வி அகுஸ்டா நிறுவனத்தின் 2021 புருடேல் 800 ஆர்ஆர் மற்றும் டிராக்ஸ்டர் ஆர்ஆர் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
எம்வி அகுஸ்டா நிறுவனம் 2021 புருடேல் 800 ஆர்ஆர் மற்றும் டிராக்ஸ்டர் ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய மேம்பட்ட மாடல்களில் எல்இடி ஹெட்லைட், புது டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மேம்பட்ட ட்ரிபில் எக்சாஸ்ட் அவுட்லெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன் டிராக்ஸ்டர் ஆர்ஆர் மாடலில் பார்-எண்ட் மிரர்கள், பாப்டு டெயில், வயர்-ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இரு மாடல்களில் உள்ள டிஎப்டி டிஸ்ப்ளே ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டு எம்வி ரைடு செயலியுடன் இயங்குகிறது.

புருடேல் 800 ஆர்ஆர் மாடல் ஷாக் பியல் ரெட் மற்றும் அவியோ கிரே மற்றும் கார்பன் பிளாக் மெட்டாலிக் மற்றும் அவியோ கிரே மெட்டாலிக் நிறங்களில் கிடைக்கிறது. டிராக்ஸ்டர் ஆர்ஆர் மாடல் மேட் மேக்னம் அவியோ கிரே மற்றும் மேட் மெட்டாலிக் டார்க் கிரே மற்றும் மேட் மேக்னம் சில்வர் மற்றும் மேட் மெட்டாலிக் டார்க் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
இரு மாடல்களிலும் 798சிசி, 3 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 138 பிஹெச்பி பவர், 87 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள்கள் மணிக்கு அதிகபட்சம் 244 கிலோமீட்டர் வேகத்தில் சீறி பாயும் திறன் கொண்டுள்ளன.






