search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோண்டா ஆக்டிவா
    X
    ஹோண்டா ஆக்டிவா

    தென்னிந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டிய ஹோண்டா

    ஹோண்டா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 20 ஆண்டு வாகன விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு பணிகளை துவங்கியது முதல் ஹோண்டா நிறுவனம் 1.5 கோடி யூனிட்களை தென்னிந்தியாவில் மட்டும் விற்பனை செய்து இருக்கிறது.

    இந்தியாவின் தென்னிந்தியாவில் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளராக இருப்பதாக ஹோண்டா தெரிவித்து உள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் அந்தமான் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கும்.

    விற்பனையில் 1.5 கோடி யூனிட்களை எட்ட ஹோண்டா நிறுவனம் 20 ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது. இதில் முதல் 15 ஆண்டுகளில் 75 லட்சம் யூனிட்களும், இரண்டாவது 75 லட்சம் யூனிட்கள் விற்பனைக்கு ஐந்து ஆண்டுகளை எடுத்துக் கொண்டு இருக்கிறது. இது முன்பைவிட மும்மடங்கு அதிவேக வளர்ச்சி ஆகும்.

     ஹோண்டா மோட்டார்சைக்கிள்

    புது மைல்கல் குறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் யத்வீந்தர் சிங் குலேரியா கூறும் போது..,

    தென்னிந்தியாவில் ஹோண்டாவை தங்களின் விருப்பமான வாகன பிராண்டாக ஏற்றுக் கொண்டமைக்கு 1.5 கோடி வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இரண்டு தசாப்தங்களில் இந்த நம்பிக்கை மட்டுமே ஹோண்டா நிறுவனத்தின் பகுதியின் நம்பர் 1 பிராண்டாக மாற்றி இருக்கிறது. தென்னிந்தியா எப்போதுமே ஹோண்டாவிற்கு மிக நெருக்கமான பகுதியாக உள்ளது. 

    என அவர் தெரிவித்தார்.  
    Next Story
    ×