search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டெஸ்லா எலெக்ட்ரிக் கார்
    X
    டெஸ்லா எலெக்ட்ரிக் கார்

    கர்நாடகாவில் உற்பத்தி ஆலை அமைக்க டெஸ்லா இந்தியா தீவிரம்

    கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தி ஆலை அமைப்பதற்கான பணிகளில் டெஸ்லா இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.


    கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் சமீபத்திய அறிவிப்பின் படி டெஸ்லா இந்தியா கர்நாடக மாநிலத்தில் தனது உற்பத்தி ஆலையை கட்டமைக்க இருக்கிறது. முன்னதாக டெஸ்லா நிறுவனம் பெங்களூரு நிறுவனங்கள் பதிவாணையத்தில் டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் எனும் பெயரில் நிறுவனத்தை பதிவு செய்தது.

    உற்பத்தி ஆலை மட்டுமின்றி டெஸ்லா இந்தியாவின் தலைமை அலுவலகமும் கர்நாடக மாநிலத்திலேயே அமையும் என கூறப்படுகிறது. டெஸ்லா இந்தியா நிறுவனத்தை வெங்கட்ரங்கம் ஸ்ரீராம், டேவிட் ஜான் பெயின்ஸ்டெயின் மற்றும் வைபவ் தனேஜா என மூன்று இயக்குனர்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     டெஸ்லா எலெக்ட்ரிக் கார்

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு இந்திய சந்தையில் வியாபார பணிகளை துவங்கும் என தெரிவித்து இருந்தார். முதற்கட்டமாக இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது வாகனங்களை சிபியு முறையில் கொண்டு வரும் என்றும் எதிர்காலத்தில் ஆய்வு மற்றும் உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் என தெரிகிறது. 

    டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் முதல் மாடலாக அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 55 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 60 லட்சம் என நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×