என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஹோண்டா நிறுவனத்தின் 2021 ஹெச்ஆர் வி மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


    ஹோண்டா நிறுவனம் புதிய தலைமுறை ஹெச்ஆர் வி மாடலை ஜப்பானில் அறிமுகம் செய்தது. புதிய மிட்-சைஸ் எஸ்யுவி மூன்றாம் தலைமுறை மாடல் முந்தைய வெர்ஷன்களை விட அளவில் பெரியதாக உள்ளன. 

    புதிய காரின் வெளிப்புறம் ஒற்றை நிறத்தால் ஆன ஹெக்சகன் வடிவ முன்புற கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளன. முன்புற பம்ப்பரின் கீழ் சில்வர் நிற ஸ்கிட் பிளேட் வழங்கப்படுகிறது. காரின் பக்கவாட்டில் குறைந்தளவு டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது.

     2021 ஹோண்டா ஹெச்ஆர் வி

    2021 ஹெச்ஆர் வி மாடலில் 5-ஸ்போக் அலாய் வீல், பிளார்டு வீல் ஆர்ச்கள், பிளாஸ்டிக் கிளாடிங் வழங்கப்பட்டு இருக்கிறது. பின்புறம் ராப்-அரவுண்ட் ஸ்ப்லிட் ரக எல்இடி டெயில் லேம்ப்கள், டூயல்-டோன் பம்ப்பர் இடம்பெற்றுள்ளன. உள்புறம் பிளாக் நிற தீம், புளோட்டிங் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஏர்கான் கண்ட்ரோல்கள் உள்ளன.

    புதிய ஹெச்ஆர் வி மாடல் 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் என்ஜின் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. புதிய ஹோண்டா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், அறிமுகமானால் இந்த மாடல் கியா செட்லோஸ், ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹேரியர் மற்றும் எம்ஜி ஹெக்டார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
    போஷ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இணைந்து வாகன மென்பொருள் உருவாக்க புது கூட்டணி அமைத்துள்ளன.


    போஷ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இணைந்த வாகனங்களுக்கான மென்பொருள் பிளாட்பார்மை உருவாக்க இருப்பதாக அறிவித்து உள்ளன. தற்போது வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் தானியங்கி வாகன தொழில்நுட்பங்கள் துறையில் களமிறங்க இருப்பதை ஒட்டி போஷ் புதிய கூட்டணியை அமைக்கிறது.

    கிளவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய மென்பொருள் வாகனங்களின் கண்டோரல் யூனிட் மற்றும் கணினிகளுக்கு மென்பொருள் கிடைக்க செய்யும் என போஷ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த தொழில்நுட்பம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அஸ்யூர் மற்றும் போஷ் நிறுவனத்தின் சாப்ட்வேர் மாட்யூல்களை சார்ந்து உருவாகிறது. 

    இரு நிறுவனங்கள் இணைந்து தற்போதைய மென்பொருளை பயன்படுத்தி சொந்தமாக மென்பொருள் அப்டேட்களை வழங்க இருக்கின்றன. கடந்த வாரம் போக்ஸ்வேகன் நிறுவனம் மைக்ரோசாப்ட் உடன் இணைந்து கிளவுட் கம்ப்யூட்டிங் சார்ந்து மென்பொருள் சேவைகளை உருவாக்க இருப்பதாக அறிவித்தது.
    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் புதிய பெயரில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இசட்எஸ் எஸ்யுவி மாடலின் பெட்ரோல் வேரியண்ட்டை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய இசட்எஸ் பெட்ரோல் மாடல் ஆஸ்டர் எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது.

    புது வேரியண்ட் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காரின் பவர்டிரெயினுக்கு மாற்றாக பெட்ரோல் மோட்டார் கொண்டிருக்கிறது. புதிய மாடல்- 111பிஎஸ்/160 என்எம் டார்க் வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட், 120பிஎஸ்/150 என்எம் டார்க் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 160பிஎஸ்/230என்எம் டார்க் வழங்கும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    என்ஜின் மட்டுமின்றி புதிய மாடலில் மேம்பட்ட கிரில், எல்இடி ஹெட்லேம்ப், ஆங்குலர் டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது. முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள் எலெக்ட்ரிக் மாடலில் உள்ளதை விட வித்தியாசமாக உள்ளது. அலாய் வீல், டெயில் லேம்ப் மற்றும் இதர பாகங்களில் எலெக்ட்ரிக் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. 

    இந்தியாவில் புதிய எம்ஜி இசட்எஸ் மாடல் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது. மேலும் இது எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும்.
    பெனலி நிறுவனத்தின் 2021 லியோன்சினோ 500 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    பெனலி இந்தியா நிறுவனம் 2021 லியோன்சினோ 500 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பெனலி லியோன்சினோ 500 மாடல் விலை ரூ. 4.60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய 2019 வெர்ஷனை விட ரூ. 20 ஆயிரம் குறைவு ஆகும்.

    2021 பெனலி லியோன்சினோ 500 மாடலில் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் பெனலி நிறுவனத்தின் மூன்றாவது மோட்டார்சைக்கிள் மாடலாக புதிய லியோன்சினோ 500 அமைகிறது.

     2021 பெனலி லியோன்சினோ 500

    முன்னதாக டிஆர்கே 502 மற்றும் இம்பீரியல் 400 உள்ளிட்ட மாடல்கள் பிஎஸ்6 விதிகளுக்கு பொருந்தும் என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட்டன. இவைதவிர 2021 ஆண்டில் மேலும் சில பிஎஸ்6 மாடல்களை அறிமுகம் செய்வதாக பெனலி தெரிவித்து இருக்கிறது.

    புதிய பெனலி லியோன்சினோ 500 மாடலின் முன்பதிவு ஆன்லைன் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இதன் வினியோகம் துவங்கும் என தெரிகிறது.

    2021 பெனலி லியோன்சினோ 500 மாடலில் DOHC 500சிசி ட்வின்-சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 46 பிஹெச்பி பவர், 46 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

    மெக்லாரன் நிறுவனத்தின் புதிய சூப்பர்கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    மெக்லாரன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அர்டுரா மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது மிட்-என்ஜின்டு பிளக்-இன் ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். 

    புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ வி6 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 577 பிஹெச்பி பவர், 584 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 94 பிஹெச்பி பவர், 225 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

     மெக்லாரன் அர்டுரா

    அந்த வகையில் மெக்லாரன் அர்டுரா மாடல் 671 பிஹெச்பி பவர், 804 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை மூன்றே நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 330 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்கிறது.

    பேட்டரியை பொருத்தவரை 2021 மெக்லாரன் அர்டுரா மாடலில் 7.4 kWh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி காரினை எலெக்ட்ரிக் மோடில் 30 கிலோமீட்டர்களை பயணிக்க செய்கிறது. இந்த மோடில் கார் மணிக்கு அதிகபட்சம் 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதனை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 2.5 மணி நேரம் ஆகும். 
    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் இந்திய சந்தையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இந்தியாவில் 1996 முதல் ஹூண்டாய் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் செப்டம்பர் 1998 ஆம் ஆண்டு தனது பணிகளை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் பணிகளை துவங்கியது.

    இந்த ஆலையில் இருந்து முதல் வாகனமாக சான்ட்ரோ வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹூண்டாய் ஐ20 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. 2020 நிலவரப்படி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் 17.4 சதவீத பங்குககளை கொண்டிருக்கிறது.

     ஹூண்டாய் கார்

    இத்துடன் 25 ஆண்டுகளில் இந்தியாவில் 90 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஹூண்டாய் நிறுவனம் 7.5 லட்சம் யூனிட்களை வினியோகம் செய்கிறது. தற்சமயம் நாடு முழுக்க 1154 விற்பனை மற்றும் 1298 சர்வீஸ் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. 

    கடந்த ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் ஏற்றுமதியில் 30 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. தற்சமயம் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் இருந்து 88 நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்கிறது. இவற்றில் 14  சதவீத கார்கள் பசுமை ரெயில்வே வழியில் அனுப்பப்பட்டு வருகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் குஷக் மாடல் சர்வதேச வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஸ்கோடா நிறுவனம் தனது குஷக் மாடலை மார்ச் 18 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய குஷக் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ், கியா செல்டோஸ் மற்றும் எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    புதிய குஷக் மாடல் போக்ஸ்வேகன் குழுமத்தின் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ இவோ பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படலாம் என தெரிகிறது. குஷக் மாடல் போக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB AO-IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஸ்கோடா கார் பட்டாம்பூச்சி வடிவ கிரில், எல்இடி ஹெட்லேம்ப் யூனிட்கள், பாக் லைட்கள், ஸ்கிட் பிளேட், டைமண்ட் கட் அலாய் வீல், ரூப் ரெயில் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 
    ஜீப் நிறுவனத்தின் 2021 ராங்லர் மாடல் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஜீப் இந்தியா நிறுவனம் 2021 ராங்லர் மாடலை மார்ச் 15 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. தற்சமயம் ராங்லர் மாடல் சிபியு முறையில் இந்தியாவில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 63.94 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    சமீபத்தில் ஜீப் நிறுவனம் தனது ராங்லர் மற்றும் கிராண்ட் செரோக்கி மாடல்களை இந்தியாவில் உள்ள ரங்கூன் ஆலையில் உற்பத்தி செய்வதாக அறிவித்தது. அந்த வகையில் புதிய ராங்லர் சிகேடி வகையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

     ஜீப் ராங்லர்

    புதிய ராங்லர் மாடல் ஐந்து கதவு கொண்டிருக்கும் என்றும், 18-இன்ச் அலாய் வீல்கள், ஏழு-ஸ்லாட்கள் கொண்ட கிரில், டிராப்-டவுன் விண்ட்ஷீல்டு மற்றும் கழற்றக்கூடிய கதவுகள் மற்றும் ரூப் வழங்கப்படும் என தெரிகிறது. உள்புறம் மேம்பட்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்டீரியோ சிஸ்டம், கழுவக்கூடிய இன்டீரியர்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    ராங்லர் என்பதால் இது சிறப்பான ஆப்-ரோடு திறன், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கும். புதிய மாடலிலும் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மோட்டார், 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 268 பிஹெச்பி பவர், 400 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    கவாசகி நிறுவனம் 2021 W175 மோட்டார்சைக்கிளை புதிய நிறத்தில் விரைவில் வெளியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


    கவாசகி நிறுவனம் W175 மோட்டார்சைக்கிளை புதிய நிறத்தில் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் எபோனி மற்றும் வைட் நிறங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் இந்த மாடல் மெட்டாலிக் ஓசன் புளூ நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மாடலின் பியூவல் டேன்க் நீல நிறத்திலும் பென்டர்களின் மேல் பின்ஸ்டிரைப், அன்டர்சீட் பேனல்களில் 175 பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. கவாசகி W175 மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது.

    இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் இது அந்நிறுவனத்தின் குறைந்த விலை மாடலாக அறிமுகமாகும் என தெரிகிறது. கவாசகி W175 மாடலில் வட்ட வடிவ ஹெட்லேம்ப், ஒற்றை இருக்கை அமைப்பு மற்றும் ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

     2021 கவாசகி W175

    2021 கவாசகி W175 மாடலில் 177சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 12.9 பிஹெச்பி பவர், 13.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    புதிய கவாசகி W175 மாடல் ராயல் என்பீல்டு கிளாசிக் 350, ஜாவா ஸ்டான்டர்டு மற்றும் பெனலி இம்பீரியல் 400 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 2 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டு கார் மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கம் முதல் இதுவரை சபாரி, அல்ட்ரோஸ் ஐ டர்போ மற்றும் டியாகோ லிமிடெட் எடிஷன் போன்ற மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. வரும் வாரங்களில் டாடா சபாரி மாடல் விலை விவரங்கள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

    இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ மற்றும் டிகோர் மாடலின் சிஎன்ஜி வேரியண்ட்டை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இரு கார் மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புது மாடல்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் சோதனை செய்யப்படுகிறது.

     டாடா டிகோர்

    புதிய சிஎன்ஜி வேரியண்ட் டியாகோ மற்றும் டிகோர் புது தலைமுறை மாடல்களை சார்ந்து உருவாகி இருக்கின்றன. இவற்றின் மிட்-ரேன்ஜ் மாடல்களில் சிஎன்ஜி கிட் பொருத்தப்படும் என தெரிகிறது. ஸ்பை படங்களில் புது வேரியண்ட் அலாய் வீல்கள் மட்டுமே காட்சியளிக்கிறது. 

    தற்போதைய டியாகோ மற்றும் டிகோர் மாடல்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 84 பிஹெச்பி பவர், 113 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஏஎம்டி யூனிட் வழங்கப்படுகிறது. 
    ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை தமிழகத்தில் உருவாகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் உலகத் தரம் மிக்க உற்பத்தி ஆலையை உருவாக்க ரூ. 700 கோடியை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை தமிழகத்தில் உள்ள ராணிபேட்டையில் கட்டமைக்க இருக்கிறது.

    புதிய உற்பத்தி ஆலை தொடர்பாக ஆம்பியர் எலெக்ட்ரிக் மற்றும் தமிழ் நாடு அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. புதிய ஆலை இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் செயல்பாட்டுக்கு வரும் என ஆம்பியர் எலெக்ட்ரிக் தெரிவித்து உள்ளது.

     ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    14 லட்சம் சதுர அடி பரப்பளவு நிலத்தில் இந்த உற்பத்தி ஆலை கட்டமைக்கப்படுகிறது. இது இந்தியாவில் மிகப்பெரும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலை ஆகும். முதற்கட்டமாக இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. 

    எதிர்காலத்தில் இதே ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் பத்து லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யவும் முடியும். இந்த ஆலையில் மேம்பட்ட ஆட்டோமேஷன் வழிமுறை பின்பற்றப்பட இருக்கிறது.  

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய சி கிளாஸ் மாடல் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஐந்தாம் தலைமுறை சி கிளாஸ் மாடலை பிப்ரவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய மாடல் டிஜிட்டல் முறையில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய சி கிளாஸ் மாடல் MRA2 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.

    முன்னதாக இந்த மாடலின் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் புதிய மாடலில் ஒற்றை ஸ்லாட் கிரில், எல்இடி லைட்டிங், செனான் ஹெட்லைட்கள் வழங்கப்படுகிறது. பின்புறத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதுவித டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன.

     மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ்

    சமீபத்திய இ கிளாஸ் வரிசையில் புதிய சி கிளாஸ் மாடலிலும் இரண்டாம் தலைமுறை MBUX வழங்கப்படுகிறது. இது சென்டர் கன்சோலில் பொருத்தப்படுகிறது. இந்த மாடலின் கேபின் சமீபத்திய பென்ஸ் செடான் மாடல்களில் உள்ளதை போன்றே உருவாக்கப்படுகிறது.

    புதிய மாடலின் இதர அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றிய முழு விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம். புதிய சி கிளாஸ் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இத்துடன் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் மைல்டு ஹைப்ரிட் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படலாம்.
    ×