என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஹிமாலயன் மாடல் வினியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஹிமாலயன் மாடல் வினியோகம் இந்தியாவில் துவங்கியது. புதிய மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 2,03,314 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. முந்தைய மாடல் துவக்க விலை ரூ. 1,91,401 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    காஸ்மெடிக் அடிப்படையில் 2021 ஹிமாலயன் மாடல் பைன் கிரீன், கிரானைட் பிளாக் (டூயல் டோன் மேட் மற்றும் கிளாஸ் பிளாக்) மற்றும் மிரேஜ் சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் கிராவல் கிரே, ராக் ரெட் மற்றும் லேக் புளூ நிறங்களிலும் கிடைக்கிறது.

     2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்

    2021 ஹிமாலயன் மாடலில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்ரிப்பர் நேவிகேஷன் அம்சம் கொண்டிருக்கிறது. புதிய டன்-பை-டன் நேவிகேஷன் பாட் மோட்டார்சைக்கிளின் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் அருகில் பொருத்தப்பட்டு இருக்கிறது. 

    2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடலில் 411சிசி சிங்கில் சிலிண்டர் SOHC ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 24.3 பிஹெச்பி பவர், 32 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    யமஹா நிறுவனம் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு பயன்படுத்த பெயர் பதிவு செய்து இருக்கிறது.


    யமஹா நிறுவனம் உற்பத்தி செய்து வரும் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு பயன்படுத்த பெயர் பதிவு செய்து இருக்கிறது. அதன்படி யமஹா தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இ01 மற்றும் இ05 பெயர்களை பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது.

     யமஹா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    ஜப்பானை சேர்ந்து இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான யமஹா இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்களை டோக்கியோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்தது. இ01 மாடல் 125சிசி இன்டர்னல் கம்பஷன் என்ஜினுக்கு இணையானது ஆகும். இ05 மாடல் பேட்டரி ஸ்வாப் செய்யக்கூடிய தொழில்நுட்பம் கொண்டது.

    இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் அடுத்த சில மாதங்களில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஐரோப்பிய சந்தையில் இரு மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என யமஹா நம்பிக்கை தெரிவித்து உள்ளது. இந்தியாவில் உள்ள யமஹா குழுவும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கார் வரைபடங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது புதிய மிட்-சைஸ் எஸ்யுவி மாடல் குஷக் அதிகாரப்பூர்வ வரைபடங்களை வெளியிட்டு உள்ளது. புதிய ஸ்கோடா குஷக் மாடல் மார்ச் 18 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது. சர்வதேச வெளியீட்டிற்கு முன் புதிய எஸ்யுவி ப்ரோடக்ஷன் மாடல் எவ்வாறு காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

    முன்னதாக ஸ்கோடா குஷக் மாடல் விஷன் ஐஎன் எனும் கான்செப்ட் வடிவில் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம்  செய்யப்பட்டது. இது ஸ்கோடா போக்ஸ்வேகன் குழுமம் இந்திய சந்தைக்கென MQB A0 IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் முதல் கார் ஆகும். 

    சந்தையில் க்ஸோடா குஷக் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் களமிறங்க இருக்கிறது. இது கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹேரியர் மற்றும் போக்ஸ்வேகன் டி ராக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ஸ்கோடா குஷக்

    தற்போதைய வரைபடங்களின் படி புதிய எஸ்யுவி முன்புறம் மற்றும் பின்புற பாகங்கள் அம்பலமாகி இருக்கின்றன. புதிய குஷக் மாடலில் ஸ்கோாவின் பாரம்பரிய கிரில், இருபுறங்களில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    முன்புற பம்ப்பர்களில் பெரிய இன்டேக் மற்றும் ஸ்கிட் பிளேட்கள் உள்ளன. இவை காருக்கு பிரம்மாண்ட தோற்றத்தை வழங்குகின்றன. இத்துடன் பிளாட்-பொனெட், கூர்மையான கோடுகள் எஸ்யுவியை சுற்றியிருக்கின்றன. இத்துடன் எல்இடி ராப்-அரவுண்ட் டெயில் லைட்கள், ரூப் ரெயில்கள், ரூப்-மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், எல்இடி ஸ்டாப் லேம்ப் வழங்கப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ மாடல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மராசோ ஆட்டோமேடிக் வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய எம்பிவி மாடல் மாருதி சுசுகி எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    தற்போதைய தகவல்களின் படி மஹிந்திரா நிறுவனம் மராசோ ஆட்டோமேடிக் வேரியண்ட்டை வரும் வாரங்களில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதில் 6 ஸ்பீடு ஏஎம்டி யூனிட் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

     மஹிந்திரா மராசோ

    இந்த ஏஎம்டி யூனிட் எக்ஸ்யுவி300 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் கிராஸ்-பேடென் ஷிப்டர் மற்றும் கிரீப் மோட் கொண்டிருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த வேரியண்ட்டில் பவர் மற்றும் எகானமி என இரண்டு டிரைவ் மோட்களை கொண்டிருக்கும். 

    இதன் பவர் மோட் 122 பிஎஸ் பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும். இதன் எகாமி மோட் 100 பிஎஸ் பவர் வழங்கும் என தெரிகிறது. ஏஎம்டி யூனிட் மராசோ பெட்ரோல் மாடல்களிலும் வழங்கப்படலாம்.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2021 சபாரி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சபாரி பிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டாடா சபாரி விலை ரூ. 14.69 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    இத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சபாரி அட்வென்ச்சர் பெர்சோனா எனும் பெயரில் புதிய ஸ்பெஷல் வேரியண்ட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 20.20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சபாரி பெயரை கிராவிடாஸ் கான்செப்ட் காருக்கு சூட்ட இருப்பதாக தெரிவித்தது. அதன்படி இந்தியாவின் 72-வது குடியரசு தினத்தன்று புதிய சபாரி அறிமுகம் செய்யப்பட்டு முன்பதிவு நாடு முழுக்க நடைபெற்று வருகிறது.

     2021 டாடா சபாரி

    2021 டாடா சபாரி மாடல் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டி பிளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ் என ஆறு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் சற்று உயரமான மேற்கூரை, புதிய வடிவமைப்பில் பின்புற விளக்குகள் ஆகியவை சிறப்பம்சமாக உள்ளது. உயரமான பொனெட் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.

    புதிய சபாரி மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த மாடலில் நான்கு டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.
    ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் இரு மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை உயர்த்தி உள்ளது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை உயர்த்தி உள்ளது. அதன்படி இன்டர்செப்டார் 650 மாடல் விலை ரூ. 2,69,765 என்றும் கான்டினென்டல் ஜிடி 650 விலை ரூ. 2,85,680 என்றும் மாறி இருக்கின்றன. 

    விலை தவிர இரு மாடல்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இரு மாடல்களிலும் 648சிசி, பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 47 பிஹெச்பி பவர், 52 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மாடல்களை அலாய் வீல்களுடன் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றி ராயல் என்பீல்டு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
    பிஎம்டபிள்யூ நிறுவனம் 21 ஆயிரம் மோட்டார்சைக்கிள் யூனிட்களை திரும்ப பெற்று இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் அமெரிக்க சந்தையில் பல்வேறு மாடல்களை திரும்ப பெற்று இருக்கிறது. பியூவல் பம்ப் கோளாறு கண்டறியப்பட்டதால் மோட்டார்சைக்கிள்களை திரும்ப பெறுவதாக பிஎம்டபிள்யூ தெரிவித்து உள்ளது. மொத்தத்தில் 20,936 யூனிட்கள் திரும்ப பெறப்பட்டன.

    திரும்ப பெறப்படும் மோட்டார்சைக்கிள்களில் 10 சதவீதம் மாடல்களின் பியூவல் பம்ப்பில் கோளாறு இருக்கலாம் என பிஎம்டபிள்யூ எதிர்பார்க்கிறது. இந்த கோளாறு: எஸ் 1000 ஆர்ஆர் (2011-2014), எஸ் 1000 ஆர் (2014), ஹெச்பி4 (2013-2014), ஆர் 1200 ஜிஎஸ் அட்வென்ச்சர் (2011-2014), கே 1300 எஸ் (2011-2014), கே 1600 ஜிடி/ஜிடிஎல்/ஜிடிஎல் எக்ஸ்குளூசிவ் (2011-2014), ஆர் 1200 ஆர்/ஆர் 1200 ஆர்டி (2011-2014) மற்றும் ஆர் நைன்டி (2014) உள்ளிட்ட மாடல்களில் கண்டறியப்பட்டு உள்ளது.

     பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள்

    திரும்ப பெறுவதற்கான அறிக்கையில், பியூவல் பம்ப் அல்லது ஆக்சிலரி பியூவல் பம்ப் வாகனம் ஓட்டும் போது உடைந்து எரிபொருளை கீழே லீக் ஆக செய்யலாம் என பிஎம்டபிள்யூ தெரிவித்து உள்ளது. எரிபொருள் லீக் ஆகும் போது, வாகனத்தை இக்னைட் செய்தால், தீப்பிடிக்கும் அபாயம் அதிகம் ஆகும்.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளர்களை தொடர்பு கொண்டு கோளாறு இருக்கும் பியூவல் பம்ப்பை சரி செய்து வழங்கும். இதற்கு பிஎம்டபிள்யூ எவ்வித கட்டணத்தையும் வசூலிக்காது. திரும்ப பெறப்படும் பணிகள் ஏப்ரல்2, 2021 முதல் துவங்கலாம். 
    மஹிந்திரா நிறுவனத்தின் 2021 எக்ஸ்யுவி500 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


    மஹிந்திரா நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை எக்ஸ்யுவி 500 மாடல் ஸ்பை படங்கள் மீண்டும் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த முறை வெளியாகி இருக்கும் படங்களில் இருப்பது எக்ஸ்யுவி500 பெட்ரோல் மாடல் ஆகும். இதில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது.

    மஹிந்திராவின் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் மாடலில் வழங்கப்பட்டு இருந்தது. இதில் பெட்ரோல் என்ஜின் எக்ஸ்யுவி500 மாடலில் 190 பிஎஸ் பவர் வழங்கும் என தெரிகிறது.

     மஹிந்திரா எக்ஸ்யுவி500

    முந்தைய தகவல்களை போன்றே இம்முறை வெளியாகி இருக்கும் படங்களில் புதிய எக்ஸ்யுவி500 மாடலில் பானரோமிக் சன்ரூப் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் எம்ஜி குளோஸ்டர் மாடலில் உள்ளதை போன்ற லெவல் 1 ஆட்டோனோமஸ் தொழில்நுட்பம் வழங்கப்படலாம்.

    இது அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ஆட்டோனோமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற வசதிகளை வழங்குகிறது. புதிய எக்ஸ்யுவி500 மாடலின் அறிமுக நிகழ்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விரைவில் இது நடைபெறும் என தெரிகிறது. 

    புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 மாடல் விலை ரூ. 14 லட்சத்தில் துவங்கும் என தெரிகிறது. புதிய எக்ஸ்யுவி500 மாடல் எம்ஜி ஹெக்டார், டாடா ஹேரியர் மற்றும் டாடா சபாரி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
    ஹூண்டாய் நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஹூண்டாய் நிறுவனம் தனது முதல் ஆல்-எலெக்ட்ரிக் மிட்-சைஸ் கிராஸ் ஒவர் மாடலை பிப்ரவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. ஐயோனிக் 5 என அழைக்கப்படும் புதிய கார் சில ஆண்டுகளுக்கு முன் 45 கான்செப்ட் ஆக அறிமுகம் செய்யப்பட்டது.

    பின் கடந்த மாதம் புதிய ஐயோனிக் 5 படங்களும் வெளியிடப்பட்டன. ஐயோனிக் 5 மாடலில் புதிய எலெக்ட்ரிக் குளோபல் மாட்யூலர் பிளாட்பார்ம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதே பிளாட்பார்ம் ஹூண்டாய் நிறுவனத்தின் எதிர்கால மாடல்களிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது.

     ஹூண்டாய் ஐயோனிக் 5

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய கிராஸ் ஒவர் மாடலின் முன்புற இருக்கை மற்றும் சென்டர் கன்சோல் இருக்கும் கேபின் வடிவமைப்பு தெரியவந்துள்ளது. இந்த காரின் உள்புறம் மறுசுழற்சி செய்யப்பட்ட பைபர், பயோ பெயின்ட், இகோ-பிராசஸ் செய்யப்பட்ட லெதர் கொண்டு உருவாக்கப்படுகிறது.

    ஹூண்டாய் ஐயோனிக்5 மாடலில் வெஹிகில் டு லோட் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இது 110/220V திறன் வினியோகம் செய்யும். இதன் பவர்டிரெயின் பற்றிய விவரங்கள் ரகசியமாக உள்ளன.
    ரெனால்ட் நிறுவனம் ஐந்து புதிய விற்பனை மையங்களை தெலுங்கானாவில் திறந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ரெனால்ட் நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக ஐந்து விற்பனை மையங்களை திறந்துள்ளது. இவை எல்பி நகர், கொம்பள்ளி, மலக்பெட், வாரங்கல் மற்றும் நிசாம்பாத் போன்ற பகுதிகளில் அமைந்துள்ளன. இதுதவிர மேலும் ஏழு புதிய விற்பனை மையங்களை திறக்க ரெனால்ட் முடிவு செய்துள்ளது. 

    தெலுங்கானா மாநிலத்தின் புதிய விற்பனை மையங்களை பிபிஎஸ் மோட்டார்ஸ் எனும் தனியார் நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த நிறுவனம் விற்பனை மட்டுமின்றி வாடிக்கையாளர்கள் வீட்டு வாசலில் சேவை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. 

     ரெனால்ட் கார்

    முன்னதாக ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கைகர் மாடலை அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய ரெனால்ட் கைகர் மாடல் விலை ரூ. 5.45 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.55 லட்சம் ஆகும். 

    இதற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். புதிய ரெனால்ட் கைகர் மாடல் இரண்டு வித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள், நான்கு வேரியண்ட்கள் மற்றும் ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. 
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 180 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பிஎஸ்6 ரக பல்சர் 180 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1,04,768 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பிஎஸ்6 மாடல் தற்சமயம் பிளாக் ரெட் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை ட்வின் டிஆர்எல், டின்ட் செய்யப்பட்ட வைசர் வழங்கப்படுகிறது. காக்பிட் பகுதியில் அதிநவீன, செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் என்ஜின் கவுல், ஸ்ப்லிட்-சீட், 2 பீஸ் கிராப் ரெயில் வழங்கப்பட்டு இருக்கிறது.

     பஜாஜ் பல்சர் 180

    மெக்கானிக்கல் அம்சங்கள் மற்றும் இதர பாகங்கள் பல்சர் 180எப் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி இந்த நேக்கட் ரோட்ஸ்டர் மாடலில் 178.6சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 16.7 பிஹெச்பி பவர், 14.52 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

    சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட ட்வின் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டு உள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 280எம்எம் ஒற்றை டிஸ்க், பின்புறம் 230 எம்எம் சிங்கில் ரோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.

    புதிய பல்சர் 180 பிஎஸ்6 மாடல் ஹோண்டா ஹார்னெட் 2.0, டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர்180 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கார் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஹூண்டாய் நிறுவனத்தின் ஐ20 என் மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அந்த வகையில் புதிய ஹூண்டாய் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    பொதுவாக என் சீரிஸ் கார்கள் அதிக செயல்திறன் வழங்குபவை ஆகும். இந்தியாவில் இதுபோன்ற மாடல்கள் பெயரளவில் நல்ல வரவேற்பை பெற்றாலும், விற்பனையில் இவை மற்ற கார்களுடன் ஒப்பிட முடியாதவை ஆகும். மேலும் இவற்றை வழக்கமான விற்பனை முறைகளில் விற்பனை செய்ய முடியாது.

     ஹூண்டாய் ஐ20 என்

    புதிய ஐ20 என் மாடல் சென்னை சாலைகளில் சோதனை செய்யப்பட்ட போது எடுத்த படங்கள் வெளியாகி உள்ளன. அதில் இந்த கார் டூயல் எக்சாஸ்ட் கொண்டிருக்கும் என்பது தெளிவாகிவிட்டது. மேலும் இது ஸ்போர்ட் பாடி கிட், பெரிய சக்கரங்கள், மேம்பட்ட பிரேக்குகளுடன் வரும் என தெரிகிறது. 

    ஐரோப்பிய சந்தையில் ஐ20 என் மாடல் 1.6 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட GDi என்ஜின் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருந்தது. இது 201 பிஹெச்பி பவர், 275 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    ×