search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marazzo"

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மராசோ கார் 8 சீட்டர் வேரியன்ட இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #Mahindra #Marazzo



    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது மராசோ காரின் 8-சீட்டர் வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளது. புதிய மராசோ M8 8-சீட்டர் வேரியன்ட் விலை ரூ.13.98 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் வழக்கமான 7 சீட்டர் வேரியன்ட்டை விட ரூ.8000 விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    புதிய மாடலில் 7-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 17-இன்ச் அலாய் வீல், டி.ஆர்.எல்., ஃபாக்ஸ் லெதர் சீட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. சில மஹிந்திரா விற்பனையாளர்கள் ஏற்கனவே இந்த மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கிவிட்டன.



    மஹிந்திரா மராசோ மாடலில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு நான்கு-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 128 பி.ஹெச்.பி. பவர். 320 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மராசோ காரின் பெட்ரோல் வெர்ஷன் மற்றும் AMT வேரியன்ட் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொன் பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா காருக்கு போட்டியாக மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. #MahindraMarazzo



    மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் இந்தியாவில் அறிமுகம் செயய்ப்பட்டது. இந்தியாவில் M2, M4, M6 மற்றும் M8 என நான்கு வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் மராசோவின் முழு வடிவமைப்பு சுறாவை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. 

    புதிய மராசோ காரில் ட்வின்-சேம்பர் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள், சுறா பற்களை போன்ற முன்பக்க கிரில், ஃபாக் லேம்ப்க்ள், அதரடியான பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஃபாக் லேம்ப் ஹவுசிங் பிளாஸ்டிக் அக்சென்ட் செய்யப்பட்டுள்ளது. 

    பக்கவாட்டில் 17 இன்ச் அலாய் வீல்கள், ORVM, இன்டகிரேட் செய்யப்பட்ட சிக்னல் இன்டிகேட்டர்கள், பின்புறம் ஷார்க் போன்ற எல்.இ.டி. டெயில் லைட்கள், ஹை ஸ்டாப் லேம்ப் மற்றும் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட பம்ப்பர் கொண்டுள்ளது. உள்புறம் சுத்தமான, அழகிய டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் அனைத்தும் கருப்பு நிறம் செய்யப்பட்டு, இருக்கைகள் மற்றும் டோர் ட்ரிம்களில் பெய்க் நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    இத்துடன் 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏசி வென்ட்கள், எம்.பி.வி. மாடல்களில் முதல் முறையாக சரவுன்ட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் கேபினில் டூயல்-பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 3-ஸ்போக் ஸ்டீரிங் வீல் மற்றும் விமானங்களில் உள்ளதை போன்ற ஹேன்ட்பிரேக் லீவர் வழங்கப்பட்டுள்ளது.



    ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய வகையில் இருவிதங்களில் கிடைக்கும் மராசோ வீல்-மவுன்ட் செய்யப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. 

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் டூயல் ஏர்பேக்ஸ், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்கள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், ISOFIX உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப்-என்ட் மாடல்களில் பின்புறம் பார்க்கிங் சென்சார்கள் மற்று் கேமரா, கார்னரிங் லேம்ப்கள் மற்றும் எமெர்ஜென்சி கால் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய மராசோ மாடலில் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்கியூ செயல்திறன், 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா மராசோ லிட்டருக்கு 17.6 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மஹிந்திரா மராசோ மாடல் மரைனர் மரூன், ஷிம்மரிங் சில்வர், அக்வா மரைன், ஓசியனிக் பிளாக், போசைடொனஅ பர்ப்பிள் மற்றும் ஐஸ்பர்க் வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய மராசோ மாடலின் விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்கி, டாப்-என்ட் மாடலின் விலை ரூ.13.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×