search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஸ்கோடா குஷக்
    X
    ஸ்கோடா குஷக்

    புது காரின் வரைபடங்களை வெளியிட்ட ஸ்கோடா

    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கார் வரைபடங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இதன் விவரங்களை பார்ப்போம்.


    ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது புதிய மிட்-சைஸ் எஸ்யுவி மாடல் குஷக் அதிகாரப்பூர்வ வரைபடங்களை வெளியிட்டு உள்ளது. புதிய ஸ்கோடா குஷக் மாடல் மார்ச் 18 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகமாகிறது. சர்வதேச வெளியீட்டிற்கு முன் புதிய எஸ்யுவி ப்ரோடக்ஷன் மாடல் எவ்வாறு காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

    முன்னதாக ஸ்கோடா குஷக் மாடல் விஷன் ஐஎன் எனும் கான்செப்ட் வடிவில் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம்  செய்யப்பட்டது. இது ஸ்கோடா போக்ஸ்வேகன் குழுமம் இந்திய சந்தைக்கென MQB A0 IN பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் முதல் கார் ஆகும். 

    சந்தையில் க்ஸோடா குஷக் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் களமிறங்க இருக்கிறது. இது கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹேரியர் மற்றும் போக்ஸ்வேகன் டி ராக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ஸ்கோடா குஷக்

    தற்போதைய வரைபடங்களின் படி புதிய எஸ்யுவி முன்புறம் மற்றும் பின்புற பாகங்கள் அம்பலமாகி இருக்கின்றன. புதிய குஷக் மாடலில் ஸ்கோாவின் பாரம்பரிய கிரில், இருபுறங்களில் ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    முன்புற பம்ப்பர்களில் பெரிய இன்டேக் மற்றும் ஸ்கிட் பிளேட்கள் உள்ளன. இவை காருக்கு பிரம்மாண்ட தோற்றத்தை வழங்குகின்றன. இத்துடன் பிளாட்-பொனெட், கூர்மையான கோடுகள் எஸ்யுவியை சுற்றியிருக்கின்றன. இத்துடன் எல்இடி ராப்-அரவுண்ட் டெயில் லைட்கள், ரூப் ரெயில்கள், ரூப்-மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர், எல்இடி ஸ்டாப் லேம்ப் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×